கீற்றில் தேட...

ரோஜா பூக்கள்
சூடிவந்து கூந்தல் காட்டுகிறாள்.
வண்ணத்துப் பூச்சிகள்
பிடித்துவந்து அவளெதிரே பறக்கவிடுகிறேன்

அவளுக்குப் பிடித்தமான நானும்...
எனக்கு பிடித்தமான அவளும்...
பிடித்தமானவைகளையே பேசிக்கொண்டிருந்தோம்.

பிடிக்காதவைகளையும்
பேச நேர்ந்திருந்தால்
பிரிய நேர்ந்திருக்காது.