காசு, பணம் வேண்டி
கடல் கடந்து நாங்கள்...
காலம் கழிக்கிறோம்.
உறவுகளை ஊரில் விட்டு
வேரறுந்த மரம்போல...
ஆனால், விழாமல் நிற்கிறோம்.
வேதனைகளை நெஞ்சில் புதைத்து
போலிப்புன்னகை முகத்தில் தவழவிட்டு...
வாலிப பருவத்தை
பாலைவன வெம்மை சுட்டெரிக்க...
வயோதிக பருவத்தை
உறவுகளுடன் கழித்திட
காலம் எப்போது கனியும் என்ற
ஏக்கத்துடனும்...
செய்ய வேண்டிய கடமைகள்
முடிவுறுமோ என்ற
சோகத்துடனும்...
தொலைந்து போன புன்னகையைத் தேடி.
- வி.களத்தூர் நிலாப்ரியன் (