நூல் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்

“தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையும், இலங்கையின் சிங்கள - பவுத்த மேலாதிக்க வாதத்தினையும், அதற்கு அடிப்படையான பவுத்த நிறுவனத்தையும் பற்றி விளங்கிக் கொள்ளாமல், இலங்கைத் தீவின் எதிர்காலத்தைப் பற்றி விளங்கிக் கொள்ள முடியாது. தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை சரியான பாதையில் திட்டமிட்டு முன்னேற்றிச் செல்வதற்கு, இவற்றைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.''

மு. திருநாவுக்கரசு, பக்கங்கள் : 32, விலை : ரூ. 10, புதுமலர், பேசி : 94433 07681

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்

“குட்டிச் சிறைகளாகக் குடும்பங்கள். கைதிகளாகப் பெண்கள். முட்கம்பி வேலிகளாகப் பண்பாட்டு விழுமியங்கள். சிறைக் காவலர்களாக ஆண்கள்... குட்டிச் சிறைகளில் வதைபடும் பெண்களின் வாழ்வு, குமுறல்களும் கூக்குரல்களும் நனவிலியில் அழுகிய பண்பாடாய் நாறுகிறது. நாடு நகரெங்கும் மூலைமுடுக்கெல்லாம் சுதந்திரமாக வீசும் ஆண்களின் மூத்திர நாற்றம் போலவே பண்பாடெங்கும் ஆண்களின் ஆதிக்கம் மூச்சடைக்கிறது.''

முனைவர் பெ. நிர்மலா, பக்கங்கள் : 144, விலை : ரூ. 75, பல்கலைப் பதிப்பகம், சென்னை - 600 024, பேசி : 044 - 24815474

பாசறை முரசு

“சென்ற நூற்றாண்டுகளில் செம்மாந்து வாழ்ந்த தமிழன், இன்று ஏன் இப்படி நிலை தாழ்ந்து போனான்? அவனிடம் தமிழன் என்ற உணர்வு இல்லை. கடவுள், மதம், சாதி, சாத்திரம், சோதிடம் ஆகிய மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறான் அல்லது ஒரு கட்சிக்கு அடிமையாகி சிந்தனை இழக்கிறான். தமிழ்ப் பண்பாடு என்பது சாதி சமயம் சார்ந்த பண்பாடாகவே உள்ளது. இந்நிலை தொடருமேயானால், எதிர்காலத்தில் தமிழினம் ஒன்று இருந்ததாக அடையாளமே இல்லாமல் போய் விடும்.''

மு. பாலன், பக்கங்கள் : 32, விலை : ரூ. 10, அஞ்சலை இல்லம் சென்னை - 11, பேசி : 98417 81220

"இந்து' தேசியம்

“இந்து, தேசம், தேசியம், தேசபக்தி ஆகிய சொற்களின் பொருள் எளிய தமிழனை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன. மனித சமத்துவத்துக்கு எதிரான இந்து என்ற சொல்லும் அது உணர்த்தும் கருத்தாக்கமும் அரசியல் அங்கீகாரம் பெற்று, தமிழனை எழுச்சி பெறவிடாமல் தடுக்கின்றன. இந்திய தேசியத்தின் கருவிலேயே "இந்து' என்ற கருத்தாக்கம் ஊடுருவிய கதையினை இந்தச் சிறிய நூல் நினைவுபடுத்துகிறது. நோய் முதல் தெரியாமல் நோயிலிருந்து விடுபட முடியாதல்லவா?''

தொ. பரமசிவன், பக்கங்கள் : 32, விலை : ரூ. 20, யாதுமாகி பதிப்பகம் திருநெல்வேலி - 7, பேசி : 94434 86285

ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் தன் வரலாறு

“20.1.1922 இல் எம்.சி. ராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு, ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 25.3.1922 இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த, சீனிவாசன் 25.8.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.''

பக்கங்கள் : 64, விலை : ரூ. 25 , தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம், சென்னை - 6, பேசி : 94443 21902

பிறத்தியாள்

“தத்துவம் வாழ்க்கையை விளக்குகிறது எனில், கவிதை வாழ்க்கையை விசாரணை செய்கிறது எனலாம். இவ்விசாரணை எந்திர கதியில் தட்டையாக நடப்பதன்று. அறத்தின் மீதான வேட்கை, துணிவு, அழகியல், வெகுளித்தனம் என்பதாக மனித உலகின் நல்ல விசயங்கள் எல்லாமும் அதன் போக்கில் வெளிப்படும். ஒரு கவிதையில் இருந்து அறவுணர்வையும், அழகியலையும் கழித்து விட்டால் வார்த்தைகளின் எலும்புக்கூடுகள் பரத்தி வைக்கப்பட்டிருப்பதையே நாம் காண முடியும்.''

பானுபாரதி, பக்கங்கள் : 80, விலை : ரூ. 50, கருப்புப் பிரதிகள், சென்னை - 5 ,     பேசி : 94442 72500

Pin It