கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

amit shah and tamizhisai

நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பல், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற நாள் முதல் புது உத்வேகமும், உற்சாகமும் பெற்று தனது நாசகார செயல்களை விரைவுபடுத்தி வருகின்றது. தன் கண்முன்னால் பார்ப்பனிய சித்தாந்தத்துக்கு விரோதமான எதையுமே அனுமதிக்க இயலாத, அதற்காக கொலையும் செய்ய தனக்கு அதிகாரம் உள்ளதாக நினைக்கும் பாசிச குற்றக்கும்பலாக ஆர்.எஸ்.எஸ். இன்று இந்தியா முழுவதும் தனது விஷ வித்துக்களை விதைத்து வந்திருக்கின்றது. மாநில சுயாட்சியை மயிரளவுக்குக் கூட மதிக்காத இந்தக் கும்பல் மாநிலம் விட்டு மாநிலம் போய்க் கூட தனது அயோக்கியத்தனத்தை அரங்கேற்றம் செய்துவருகின்றது. எங்கு என்ன காலித்தனம் செய்தாலும், மோடி நம்மை காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கைதான் இந்தத் தறுதலைக் கும்பலை தலைகால் தெரியாமல் ஆடவைக்கின்றது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பலால் அனைத்து மாநிலங்களிலும் தன்னுடைய கைவரிசையை அப்படி எளிதாகக் காட்டிவிட முடிவதில்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இன்னமும் பார்ப்பன பயங்கரவாததற்கு எதிரான போரில் முதன்மையாக செயல்பட்டுக் கொண்டு இருப்பவை. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிகள் இந்த மாநில மக்கள் மீது கடுமையான வன்மத்துடன் இருக்கின்றார்கள்.

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்தியதற்காக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை சார்ந்த மாணவர்களைத் தாக்கியதாக இருக்கட்டும், இன்று ராஜஸ்தானில் மாடுகள் வாங்கப்போன தமிழக கால்நடைத்துறை அதிகாரிகளையும், ஓட்டுநர்களையும் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பல் தாக்கியதாக இருக்கட்டும் - இவை அனைத்துமே தனது இயலாமையின் கோர வெளிப்பாடுகள்தான். கேரள அரசு இறைச்சிக்காக மாடுகளைச் சந்தையில் விற்க பார்ப்பன பயங்கரவாத மோடி அரசு விதித்த தடைக்கு எதிராக தீவிரமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றது. அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என இரண்டுமே மோடி அரசின் உத்திரவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆத்திரம் தான் கேரள மாணவரை ஐஐடியில் வைத்து தாக்க ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிகளைத் தூண்டியது. இப்போது தமிழ்நாட்டில் மாட்டிறைச்சிக்கு ஆதரவாக தீவிரமான போராட்டங்கள் நடைபெறுவதால் தனது காலித்தனத்தைத் தமிழ்நாட்டில் அரங்கேற்ற முடியாமல் தாங்கள் ஆளும் ராஜஸ்தானில் அரங்கேற்றி இருக்கின்றனர்.

சென்னையில் 15/06/2017 அன்று பூரண மதுவிலக்கு வேண்டி பார்ப்பன பாஜக நடத்திய பேரணியில் பேசிய அதன் தமிழகத் தலைவி பார்ப்பன பாதம் நக்கி தமிழிசை, 'மு.க.ஸ்டாலின் மாட்டிறைச்சியை விரும்புகின்றார், மக்களுக்குப் பசும்பாலை கொடுக்க பாஜக விரும்புகின்றது' என்று கூறியிருக்கின்றார். ஆனால் ராஜஸ்தானில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி நாடு அரசு கால்நடைப் பண்ணைக்கு மத்திய அரசின் தேசிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் மாடுகள் வாங்கி வரப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ் காலிகளால் கால்நடைத் துறை அதிகாரிகளும், ஓட்டுநர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்படி செய்தால் தமிழசை தமிழ் மக்களுக்கு பசும் பாலை அல்ல, பசு மூத்திரத்தைக்கூட கொடுக்க வழியில்லாமல் போய்விடும். ஆர்.எஸ்.எஸ் காலிகள் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வாயைத் திறந்தால் வண்டி வண்டியாக பொய்யையும், பித்தலாட்டத்தையும் பேசுவதைத் தவிர இந்தக் கொலைகார கூட்டத்திற்கு வேறு எதுவுமே தெரிவதில்லை. ஒரு பக்கம் மோடி பசு பாதுகாவலர்களை எச்சரிப்பதும், மற்றொரு பக்கம் அவர்களைத் தூண்டிவிட்டு தனது ஆர்.எஸ்.எஸ் அஜன்டாவை நிறைவேற்றிக் கொள்வதுமான நாடகத்தை மீக லாவகமாக நடத்திக் கொண்டிருக்கின்றார்.

நாட்டில் இவ்வளவு மோசமான நிலை நிலவுகின்றது. மக்கள் யாரிடம் சென்று முறையிடுவது? நீதி மன்றம் போனால் அங்கே ‘மயில்’ நீதிபதிகளே அதிகம் வீற்று இருக்கின்றார்கள். சரி குடியரசுத் தலைவரிடம் இந்த அயோக்கியத்தனங்களை சொல்லி முறையிடலாம் என்றால் குடியரசு தலைவர் கொலைகாரனும் பிரபல செக்ஸ் சாமியாருமான சங்காராச்சாரி ஜெயேந்திரனின் காலை கழுவி குடித்துக்கொண்டு இருக்கின்றார். அடுத்த குடியரசுத் தலைவராக ஆர்.எஸ்.எஸ் காலிகள் யாரையாவது நிறுத்த வேண்டும் என்று காவிக் கூட்டம் விரும்புவதால் அந்தக் காலி நானாகவே ஏன் இருக்ககூடாது என சங்கராசாரியாரிடம் சிபாரிசுக்காக பிரணாப் முகர்ஜி வந்திருக்கின்றார். ஒரு ஜனநாயக நாட்டின் குடியரசுத் தலைவரே இப்படி கண்ட கண்ட மாமா பயல்களின் காலில் எல்லாம் பதவிக்காக விழும் நிலையில் இருக்கும் போது அந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? ஆர்.எஸ்.எஸ்.காரன் பிஜேபியில் மட்டும் அல்லாமல் அவன் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் ஊடுறுவி இருக்கின்றான் என்பதைத்தான் பிரணாப் முகர்ஜியின் செயல்பாடுகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

இனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தச் சட்ட அமைப்பை நம்பி தமது உணவு சுதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா என்று. பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மறைந்துகொண்டு சாமானிய பொதுமக்களையும், மதச்சிறுபான்மையின மக்களையும், தலித்துகளையும் குறிவைத்துத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிகளுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்றால் அது நிச்சயம் சட்டத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் முடியாது. அதற்கு வெளியேதான் முடியும். ஏனென்றால் இன்று பசு பாதுகாவலர்கள் ஒருபக்கம் மாடுகளை கொண்டு செல்வதை வன்முறையான வழிமுறைகள் மூலம் தடுக்கின்றார்கள் என்றால், இன்னொருபக்கம் காவல்துறைதான் அதைப் பெருமளவு தடுத்துவருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள மாட்டுச்சந்தைகளில் மாடுகள் வாங்கவரும் வெளிமாநில வியாபாரிகளைத் தமிழக காவல்துறை திட்டமிட்டே எல்லைப் பகுதியிலேயே மிரட்டி அவர்களை துரத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றார்கள். ஆர்.எஸ்.எஸ் காக்கியும் தமிழக போலீஸ் காக்கியும் ஒன்றாக இணைந்து செயல்படுவதையே இது காட்டுகின்றது.

நடந்துகொண்டிருக்கும் பாஜக அடிவருடி அரசு திட்டமிட்டு இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து ஊக்கிவித்து வருகின்றது. பெரியாரின் மண்ணை காவி பயங்கரவாதிகளுக்குப் பட்டா போட்டு எழுதிக் கொடுத்துவிட்டு தனது கொள்ளையடித்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள அது திட்டமிட்டு இருகின்றது. நாளை தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பல் சட்டமன்றத்திலேயே தனது சாகாவை நடந்தினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கெனவே சூத்திரச்சி தமிழிசை இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்றத்தில் காவிகொடி பறக்கும் என்று கூறியதில் இருந்தே இதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

எனவே சிறுபான்மையின மக்களும், தலித்துகளும், முற்போக்கு இயக்கங்களும் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அனைவரையும் கொண்ட ஒரு படையைக் கட்டியமைக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மட்டுமே ஆயுதப்பயிற்சி செய்வதற்கு எதாவது அரசமைப்பு சட்டம் அனுமதி வழங்கியுள்ளதா என்ன? அதனால் நாமும் ஒரு படையை கட்டி அதற்குக் குஸ்தி சொல்லிக் கொடுகின்றேன், கம்பு சுத்த சொல்லிக் கொடுக்கின்றேன் என்ற பேரில் பயிற்சி அளித்து நாமும் நமக்கான ஒரு படையை உடனடியாக எழுப்ப வேண்டும். அது ஒன்றுதான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன அடிவருடி பொறுக்கிக் கும்பலிடம் இருந்து சிறுபான்மையின மக்களையும், தலித்துக்களையும், ஏழை விவசாயிகளையும் காப்பாற்ற ஒரே வழி. வேறு மாற்றுவழிகள் அனைத்தும் பயனற்றவை என்பதைத்தான் மோடி ஆட்சியில் தொடர்ச்சியாக நடந்துவரும் நிகழ்வுகள் காட்டுகின்றன. எனவே பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான படையை உடனடியாக கட்டியமைக்கும் வேலையை அனைவரும் முன்கை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

- செ.கார்கி