நரேந்திரமோடியும் பாபா ராம்தேவும் 

 ராஹுல் பாடியா –டாம் லாசெட்டர் ஆகியோரால் 22 மே 2017ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை

தமிழில்: செ. நடேசன்

 யோகா குரு ராம்தேவ் 2014ல் நரேந்திர மோடி பிரதமராக அதிகாரத்துக்கு வர உதவுமாறு தனது ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சாரத்துக்காக வீதிகளுகு அனுப்பினார். அப்போது முதலே அவரது நுகர்பொருள் தயாரிப்பு சாம்ராஜ்யத்தின் விற்பனை வர்த்தகமும் பெருகியது.

இந்தியா – ஹரித்துவார் 

 நரேந்திர மோடி, தன்னருகே கால்களை மடித்து வெறும்காலோடு நீண்டு தளர்ந்துதொங்கிய காவி உடை அணிந்த, நீண்ட தாடியோடு அமர்ந்திருந்த ஒருவரின் காதோடு காதாக மெதுவாகப்பேச அவர் பக்கம் சாய்ந்தார். இது புதுடெல்லீயில் 2014 மார்ச் 23 அன்று பிற்பகலில், இந்தியாவின் தேர்தல்கள் நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன் நடந்த்து.

 modi and ramdevசில நிமிடங்களுக்குப்பிறகு, அந்த யோகா குருவான புகழ்பெற்ற பாபா ராம்தேவ் தன்முன் திரண்டிருந்த மக்களிடம் ஒலிபெருக்கியில் மோடிக்காக வாக்குகள் சேகரிக்குமாறு வலியுறுத்தினார். “ நீங்கள் மற்ற மக்களையும் இதைப் புரிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். செய்வீர்களா?” “ நீங்கள் வீடுகளில் உட்கார்ந்திருக்க மாட்டீர்கள். உட்கார்ந்திருப்பீர்களா?” அந்தக் கூட்டத்திலிருந்தவர்கள் திருப்பி முழங்கினார்கள்,”இல்லை”

 நரேந்திரமோடி பல்லெல்லாம் தெரிய சிரித்தார். ராம்தேவும் சிரித்தார்.இந்த அரசியல்வாதியும், பலகோடி டாலர்கள் நுகர்பொருள் விற்பனை நிறுவனத்தை நிறுவிய பாபா ராம்தேவுமாக இருவரும் இந்த உலகத்தில் மிகவேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதாரத்தின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்பும் அமைப்பின் உயர்மட்ட்த்தலைவரைச் சந்திக்கச்சென்றார்கள். நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருபேரணி நடைபெற்றது.

 மோடி தனது பிரச்சாரத்தில் ஒருபகுதியாக ‘பொருளாதாரத்தைச் சீரமைபது’ ‘ஊழலை வேரறுப்பது, என அளித்த வாக்குறுதிகள் அவரை வெற்றியை நோக்கி முன்னேறவைத்த்து. வணிகத்துக்கு ஆதரவான அவரது பேச்சும், மொழியும் பரந்த அளவில் அவருக்குப் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்த்து. ஆனால், அது ‘’இந்தியா இந்துக்களால், இந்துக்களுக்காக ஆளப்படவேண்டும்’ என்ற அவரது ‘இந்து தேசியம்’ என்ற செய்தியையும் பறைசாற்றியது. இது அவரை வெற்றியை நோக்கி உந்திச்செல்ல வைத்த்து.

 மோடியும், ராம்தேவும் இந்து வலதுசாரிகளின் தயாரிப்பே என்பதும்,, இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் வெற்றிக்க்கு உற்துணையாக இருந்தார்கள் என்பதும் தேர்தலுக்கு முன்பு எந்தவகையிலும் வெளிப்படவில்லை. யோகா குரு மிகவிரைவில் திடீரென அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பிரபலங்களில் ஒருவரானார்.

அவரது நிறுவனத்தின் மரபுசார்ந்த உணவுகளும், உடல் ஆரோக்கியத்துக்கான துணப் பொருள்களும் இந்த நாட்டில் மிகவிரைவான வளர்ச்சிபெற்ற வகைகளின் அடையாளங்சளாகின. அவர் தன்னை தாம் ஒருதொலைக்காட்சியின் புகழ்பெற்ற யோகா குருவாக தன்னைப் பின்பற்றுபவர்களைக் கவர்ந்தார். தனது நுகர்பொருள் சாம்ராஜ்ஜியத்திலிருந்து அதற்கான வழிவகைகளை வளர்த்துக்கொண்டார். அதன்மூலம் வாக்காளர்களைத் திரட்டி, 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க.வோடு தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டார். அந்த ஒருங்கிணைப்பு மிகப்பெரிய அளவில் வெளிப்படையாகத் தெரிந்த்தைவிட மிகவும் இறுக்கமானதாக இருந்த்து.

 இதற்குப்பிரதியுபகாரமாக பா.ஜ.க.வின் முக்கியபிரமுகர்கள், பண்டைய புகழில் பெருமைகொள்வது, அந்நியரின் செல்வாக்கின்மீது சந்தேகம் கொள்வது என்ற ராம்தேவின் இந்தியப் பார்வையை ஏற்றுக்கொண்டார்கள். ‘இந்துவே முதன்மை’ என்று நம்பவைக்கப்பட்ட அறியாமையில் உள்ள சாதாரண மக்களிடம் இந்த இரட்டை ஏக்கத்தை ஏற்படுத்தி அவர்களது ஆதரவைப்பெறமுடியும் என்று நம்பினார்கள்

 ராய்ட்டர் நிறுவனம் மாநில அரசுகளின்ஆவணங்களைப் பரிசீலித்த்திலும், அரசு அதிகாரிகளையும் ரியல் எடேட் பிரதிநிதிகளுடன் நட்த்திய நேர்காணலிலும் , மோடி ஆட்சிக்கு வந்ததுமுதல் ராம்தேவின் நிறுவனம் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களில் நிலங்களைக் கையகப்படுத்தியபோது கட்டணம் ஏதுமின்றி 4 கோடியே 60 இலட்சம் டாலர்களைவிட அதிகம்சலுகை பெற்றது தெரியவந்தது. ’பதஞ்சலி’ என்ற அந்த நிறுவனம் மற்ற நிலங்களையும் கட்டணமின்றியே இலவசமாக்க் கைப்பற்றியது. புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம் மற்றும் பா.ஜ.க. தலைவர்களிடமிருந்து சிலவகையான அதிகாரபூர்வ அங்கீகாரத்தையும் அந்த நிறுவனம் பெற்றது.

 மோடியின் இந்தியாவில்.இந்த நிறுவனம் உள்ளார்ந்த வேலைகளிலும், பணம் சம்பந்தப்பட்டவற்றிலும் ஒரு பங்குதார்ராக இருந்த்து. இதை, அவரால் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ’மதசார்பற்ற உலகப்பார்வை’ மேற்பரப்பிலிருந்து அகற்றப்பட்ட்து உறுதிப்படுத்துகிறது. .

 புதுடெல்லியில் நடைபெற்ற பேரணிக்கு மூன்று வாரங்களுக்குப்பின்பு, ராம்தேவின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளை மூத்த பா.ஜ.க. தலைவர்களின் கையொப்பமிடப்பட்ட ஒரு ‘சம்பத் பத்ரா’ அதாவது உறுதிமொழியை யூ டியூப்பில் வீடியோவாக வெளியிட்ட்து.

 ராய்ட்டர் நிறுவனத்தால் பரிசீலனைக்குள்ளாக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்ட அந்த ஆவணத்தில் 9 உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தன.அந்த உறுதிமொழியில் இந்துயிஸத்தில் புனிதமாக்க் கருதப்பட்ட ‘பசு பாதுகாப்பு, இந்திய மக்களின் வாழ்க்கைமுறையை இந்துதேசியவாதிகளின் வார்த்தைகளின்படி ’அதுதான் உண்மையான இந்தியன்’ என சுதேசி மயமாக்குவது ஆகியவை இடம்பெற்றிருந்தன. அந்த உறுதிமொழி இந்த நம்பிக்கைகளை நீதிமன்றங்களுக்கும், அரசுகளுக்கும், கலாச்சார நிறுவன்ங்களுக்கும் கல்விக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியது. அந்தவீடியோவில் தற்போதைய அயலுறவுத்துறை, நிதி, உள்நாட்டுப்பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றிருந்தார்கள். அந்த உறுதிமொழிபற்றிக் கேட்டபோது எந்த ஒரு அமைச்சரும் பதிலளிக்க முன்வரவில்லை.

 “புகழ்பெற்ற பா.ஜ.க.தலைவர்கள் இந்த உறுதிமொழியின்மீது தங்கள் கையொப்பங்களை இட்டுள்ளார்கள். ஏனென்றால், பல இலட்சக்கணக்கானவர்களிடம் நான் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை காரணமாக அரசாங்கத்தில் ஒருமாற்றத்தை மக்கள் காணவேண்டும் என்று நான் விரும்பினேன் நாங்கள் இந்த 9 இலட்சியங்களை உருவாக்கினோம்” என்று ராம்தேவ் அந்த வீடியோவில் கூறினார்.

 இதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே.அத்வானி முதலில் அந்த ஆவணம்பற்றித் தெரியாது என மறுத்தார். பின்னர் அவரே, அத்ற்கும் ராம்தேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். “அது கட்சியின் செயல்திட்டம். அதில் எல்லா மூத்த தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளார்கள்’ என அத்வானியின் தனி உதவியாளர் தீபக் சோப்ரா கூறினார்.

 அந்த ஆவணத்தை நன்கு அறிந்த பதஞ்சலி நிறுவனத்தின் அலுவலர்களில் ஒருவர் ‘ராம்தேவின் ஆதரவைப் பெறவேண்டுமானால், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் அந்த ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும்’ என்ற ராம்தேவின் நிபந்தனையை ஏற்று அதில் கையொப்பமிட்டார்கள் என தெரிவித்தார்.

 பா.ஜ.க.ஆட்சிக்கு வந்ததிலிருந்து ராம்தேவின் வியாபாரம் பல்கிப்பெருகியது. அவரது நுகர்பொருள் நிறுவனத்தின் வருமானம் செங்குத்தாக உயர்ந்த்து. அந்த நிறுவனத்தின் நிதிஅறிக்கையிபடி 15 கோடியே 60 இலட்சம் டாலரிலிருந்து 2013 மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் 32 கோடியே 20 இலட்சம் டாலர்கள் என உயர்ந்த்து. மே மாத துவக்கத்தில் ராம்தேவ் ’இந்த நிதியாண்டின் வருமானம் 100 கோடியே 60 இலட்சம் டாலர்கள் என எகிறியது என்றார்.

 பற்பசையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நெய், வெண்ணெய், வரையான வீட்டு உபயோகப்பொருள்கள் அந்த நிறுவனத்தின் தயாரிப்புக்களாகும். அரிசி, பிஸ்கட்,சட்னி ஆகியவை உள்ளைட்ட இதன் உணவுவகைகள் ’ இந்த நாட்டின் குக்கிராமங்கள் முதல் பகட்டான நகரங்கள் வரை ஒவ்வொரு மூலையிலும் காணப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப்படை உணவகங்களிலும், நாட்டின் பாராளுமன்றத்திலும்கூடப் பரிமாறப்பட்டன.

 பதஞ்சலி தயாரிப்புக்களின் விளம்பரங்களில் அவை ’இந்தியாவின் பழையமரபுகளில் வேர்கொண்டுள்ள ஆயுர்வேத தயாரிப்புக்கள்’ என்று பொருள்படும்வகையில் வாசகங்கள் அமைந்திருந்தன. இந்த விளம்பரங்கள் பதஞ்சலியின் தயாரிபுக்களுக்கான மோடியின் ஆதரவை வெளிப்படுத்தும்வகையில் அவரது பேச்சின் சில அம்சங்களாக,’ நுகர்வோருக்கு நாட்டுப்பற்றை எடுத்துக்கூறி அவர்கள் அந்நிய நிறுவன்ங்களின் பொருள்களுக்குபணம் செலவிடுவதைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுத்தன.

 “கிழக்கிந்தியக் கம்பெனி நமது நாட்டை 200 ஆண்டுகள் சுரண்டிச்சூறையாடியது போல” என்பது அந்த விளம்பரங்களில் ஒன்று பிரிட்டிஷ் நிறுவனம் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவைச் சுரண்டி அதைக் காலனி ஆக்கியது என்று குறிப்பிட்டு , அதுபோல ”பன்னாட்டு நிறுவன்ங்கள் நமது நாட்டின் சந்தையைக் கைப்பற்றி ஆபத்தான இரசாயன நச்சுப்பொருள்களை விற்பதன்மூலம் நம்மைச் சுரண்டுகின்றன. ஜாக்கிரதை” என்று ஒரு விளம்பரம் எச்சரித்த்து.!

 ராம்தேவ் உடனடியாக மோடி பற்றிய தகவல்களைப் பரவவிட்டார். ஆனால், பிரதமர் மோடியுடனான அவரது உறவுபற்றிய விளக்கங்களைத் தரத் தயங்கினார். “மோடி-ஜி ஒரு நெருங்கிய நண்பர்” என மரியாதையைக் குறிக்கும் “ஜி” என்ற அடைமொழியை இணைத்து, இமயமலையின் அடிவாரத்திலுள்ள தனது சொந்த ஊரான ஹரித்துவாரில் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் கூறினார். ஹரித்துவாரில் உள்ள அவரது வீட்டின் உயரமான சுற்றுச்சுவர்களுக்குமேல் ஓங்கி நெடுநெடுவென வளர்ந்துள்ள மரங்கள் இருந்தன. கறுப்புநிற ஆடை அணிந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தார்கள்.

 ராம்தேவ் இவ்வாறு கூறியது பற்றிய கேள்விகளுக்கு மோடியோ, அவரது அலுவலகமோ எந்தவிதமான பதிலும் தரவில்லை

 2014ல் மோடியின் வெற்றியில் தனது பங்கு பற்றி ராம்தேவ் கூறினார்.” ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்துகொள்வது சரியான வடிவம் அல்ல” அவர் மேலும் கூறினார்:” நான் அதிகமாக எதையும் கூறப்போவதில்லை. மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கான தளத்தை நான் உருவாக்கினேன். அது நடந்த்து”

 2014ல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து பதஞ்சலி நிறுவனம் பெருமளவுக்கு 2000 ஏக்கர் நிலங்களை தொழிற்சாலைகள் கட்டவும், ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தவும், தனது நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கான மூலிகைகளைத் தனக்கு வழங்கும் சங்கிலித்தொடர்புகளை ஏற்படுத்தவும் வாங்கியது. .இந்த்த்தகவல் அரசின் நில ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் பேட்டிகள் மூலம் தெரியவந்தது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தன்னிடமிருந்த கனிசமான நிலங்களையும் விற்றுக்கொண்டிருந்த்து. இந்த நிறுவனம் தற்போது வாங்கியுள்ள 100 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நான்கு பரிவர்த்தனைகளில் இரண்டு மோடியின் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களில் நடந்தது. மூன்றாவது பரிவர்த்தனை பா.ஜ.க.வுடன் கூட்டணிசேர்ந்துள்ளகட்சி ஆளும் மாநிலத்தில் நடந்துள்ளது.

 பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் பதஞ்சலி நிறுவனம் நிலத்தின் சந்தைவிலையில் 77% சலுகை பெற்றுள்ளது. இந்த்த் தகவல் அரசுகளின் நில ஆவணங்கள், அதிகார்களின் பேட்டிகள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் அளித்தவற்றிலிருந்து தொகுக்கப்பட்டதாகும். இந்த நிலங்களை வாங்கும்போது பதஞ்சலி நிறுவனம் ‘இந்தியாவில் ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கானவர்கள் வேலைக்குச் செல்லும் வயதை அடைந்து வருகிறார்கள் தற்போது இந்தியாவின் முக்கியத்தேவைகளாக உள்ள வேலைவாய்ப்பை புதிய தொழிற்சாலைகளை கட்டுவதன்மூலம் உருவாக்கு வோம்” என உறுதியளித்திருந்த்து.

 இந்தியாவில் நிலஉரிமை மாற்றங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக –குறிப்பாக இந்தவகைச்செயல்பாடுகள் -சில ஏக்கர்கள் அளவிலேயே மறைமுகமாக நடைபெற்று வருகின்றன என அதிகாரபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒருசில வெளிப்படையாகவும் நடந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பதஞ்சலி நிறுவனம் 40 ஏக்கர் நிலத்தை அதற்குரிய ரூ.1 கோடியில் 80% சலுகை விலையில் கடந்த ஆண்டில் பா.ஜ.க.ஆளும் மத்தியப்பிரதேசத்தில் பெற்றுள்ளது. இந்தத்தகவல் அரசு அதிகாரிகளின் பேட்டிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தரகர்களின் பேட்டிகளில் வெளியானது.

 பிரதமர் அலுவலகமோ அல்லது ராம்தேவ் உள்ளிட்ட பதஞ்சலி நிர்வாகமோ இது சம்பந்தமாக எழுத்துமூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

 கடந்த நவம்பரில் மத்திய இந்திய நகரமான நாக்பூரில்’பதஞ்சலி உணவு தயாரிப்பு நிறுவன’த்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் நிதின் கட்காரி நேரில் கலந்துகொண்டார் கட்காரி ராம்தேவ் வெளியிட்ட வீடியோவில் உறுதிமொழிகளில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர். அடிக்கல் நாட்டும் நிழ்ச்சியின் வீடியோ பதிவு பதஞ்சலியின் நிர்வாக இயக்குநரான ஆச்சாரிய பாலகிருஷ்ணா, நிதின் கட்காரியின் பக்கம் திரும்பி “இந்த இட்த்துக்கு வரும்வகையில் எங்களுக்கு ஒரு ரோடு வேண்டும்” என்று கேட்ட்தைக் காட்டியது.

 வெண்ணிற சோஃபாவில் அமர்ந்திருந்த அமைச்சர் நிதின் கட்காரி சிரித்தார். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் ரோடு பற்றி நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்: நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள்: நாங்கள் ஒபந்தப்புள்ளிகளை வெளியிடுவோம்” என்றார்.

 நிதின் கட்காரிக்கும் மாநிலமுதல்வர் தேவேந்திர பட்ணாவிஸுக்கும் நடுவில் அமர்ந்திருந்த ராம்தேவ் சிரித்துக்கொண்டே கைதட்டி வரவேற்றார்.

 கட்காரி இது தொடர்பான எந்தக்கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை

 “சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு வெளியே உள்ள நிலம் மிகவும் குறைந்த அடிமாட்டு விலையில் பதஞ்சலி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட்து. ஏனென்றால், அது வளர்ச்சிபெறாமல் இருந்த்து. அந்த இட்த்துக்குச் செல்வதற்கான சாலைவசதியும் இல்லை” என்று ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பட்ணாவிஸ் எழுத்துமூலம் பதிலளித்தார்.

 அந்த இட்த்தை ஒருமுறை பார்வையிட்டபோது, அந்த இட்த்தின் சிறிய சுவருக்கு அடுத்த பக்கத்தில் ஒரு காவல் நிலையமும், ஒரு தீயணைப்பு நிலையமும் இருந்த்தையும், சாலைக்கு அடுத்தபகம் ஒரு நகராட்சி பூங்காவும் இருந்த்தையும் காணமுடிந்த்து . போடப்பட்டுவரும் ஒரு சாலையின் பின்புறம் இருந்த இடம் பதஞ்சலி நிறுவனத்தைச் சார்ந்தது. அந்தப்பகுதியை மேற்பார்வையிட்டுவரும் அரசு வளர்ச்சித்துறையின் பிரதிநிதி கூறினார்: ”இந்த ஒப்பந்தம் பொருள்களை உள்ளூரிலிருந்து வாங்குவது, புதிய ஆற்றல்களில் 2,000 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது, அருகிலுள்ள கிராமங்களிலிருந்து 5,000 பேருக்கு வேலைதருவது என்ற கடமைப்பொறுப்பை உள்ளடக்கியிருந்தது” என்று தெரிவித்தார். தீபக் ஜோஷி என்ற அந்த அலுவலர்,’பதஞ்சலி ஒரு இந்திய நிறுவனம்: ஒரு ஆயுர்வேத நிறுவனம். எனவே பல மாநில அரசுகள் இலவசமாக நிலங்களை அளிக்கின்றன” என்றார்.

 மிகப்பெரியபரிவர்த்தனையாக 2014 அக்டோபர்- நவம்பரில் கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வளர்ச்சிபெறாத 1,200 ஏக்கர் நிலங்கள் பதஞ்சலி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்த நிலமாற்றங்கள் போடோலேண்ட் எல்லைப்பகுதிக்குழு என்ற அந்தப்பகுதியைக் கவனித்துக்கொள்ளும் ஒரு தன்னாட்சி அமைப்பால் நடத்தப்பட்டது. அந்த அமைப்பு போடோ மக்கள் முன்னணி (BDF) ன் கட்டுப்பாட்டில் உள்ளது. BDF அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து 2014ல் வெளியேறியது. 2016 ஜனவரியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. அந்தக்குழுவின் துணைத்தலைவரும் BDF ன் பிரமுகருமானகம்பா போர்கோயரி ‘துவக்கத்திலிருந்தே அது பா.ஜ.க.வை ஆதரிக்கும் என்பது தெரியும்’ என்று கூறினார்.

 ராய்ட்டர் நிறுவனத்தால் பெறப்பட்ட அந்தமாநிலத்தின் சட்டத்துறை ஆவணங்களின்படி இந்த 1,200 ஏக்கர் நிலங்களும்’விலையில்லாமல் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டவை’ ஆகும். பதஞ்சலி நிர்வாக இயக்குநர்கள் பாலகிருஷ்ணா, ராம்தேவ் ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ள “பதஞ்சலி யோகா பீடம்” என்ற அறக்கட்டளைக்கு பசுக்களின் கன்றுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற நிபந்தனையின் பேரில் அந்த நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.இந்த ஏற்பாடு பதஞ்சலி நிறுவனத்தை இயற்கைத் தயாரிப்புக்களை விரிவுபடுத்த, மருத்துவ மூலிகைகளைப் பெருமளவுக்குத் திரட்டிக்கொள்ள அனுமதித்தது. இந்த உடன்பாடு பதஞ்சலி நிறுவனம் அந்த நிலங்களைப் பாதுகாக்கும் என்ற தன்னாட்சிக்குழுவின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருந்தது என்றார் போர்கோயரி.

 இந்தவகையான நிலம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் அந்த இடத்துக்கான மதிப்பைக்குறிப்பிடுவது வழக்கத்தில் இல்லாதது.

 உத்தரப்பிரதேசத்தில் ராம்தேவின் நிறுவனம் கையகப்படுத்திய இணைந்த நிலம் பா.ஜ.கவாலோ அல்லது ஆளும்கட்சிக்கு ஆதரவான நிர்வாகத்தாலோ கண்காணிக்கப்படவில்லை. 300 ஏக்கர் நிலம் சந்தை விலையைவிட 25% குறைவாக 2016 நவம்பரில் வாங்கப்பட்டது. இவ்வாறு சலுகை அளிப்பது வழக்கமான நடைமுறைதான் என்கிறார் அந்தத் தொழிற்பகுதியின் முதன்மைச் செயல் அலுவலர்!

 பதஞ்சலி நிறுவனமும், அதற்கு சற்று குறைவான அளவில் மற்ற இந்திய நிறுவனங்களும் உள்ளூர் வழக்குமொழியில் கூறப்படும் ‘கடவுள் மனிதர்” மற்றும் ஆன்மீகத் தலைவர்களோடும் தொடர்புகொண்டு மோடி அரசின்கீழ் ஆதரவையும், வரிவெட்டுக்களையும் பெற்றன. இதனால் எழுச்சிபெற்ற அனத நிறுவனங்களின் செலவளங்கள் அவற்றின் வெளிநாட்டு எதிராளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல் தோன்றின.

 யுனிலீவர் நிறுவனத்தின் முதலீட்டு உறவுகளின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்டீவன்சன். தமது சொந்த நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கையை அளித்தபோது இந்தியாவில் தனது சொந்த சந்தையில் பதஞ்சலி உள்ளிட்டவற்றிடமிருந்து வந்த தீவிரமான உள்ளூர் போட்டிகள்பற்றி வெளிப்படையாகப் பேசினார். இந்துஸ்தான் லீவரின் முதன்மை நிதி அலுவலர் பி.பி.பாலாஜி இந்த மாதத்தில் அந்த நிறுவனம் ஏற்கனவே உள்ள தமது நிறுவனம்மூலம் இயற்கைத்தயாரிப்புக்களை அறிமுகம் செய்யும் எனக்கூறினார்.

 இந்த ஆண்டின் துவக்கத்தில் இன்னொருதுறையில் உலகின் மாபெரும் விதைகள் விற்பனை நிறுவனமான மன்சாண்டோவுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தில் பா.ஜ.க.வின் தத்துவார்த்த அமைப்பு (ஆர்.எஸ்.எஸ்.) முக்கியக்கருவியாக இருந்தது. அது இந்திய நிறுவனங்க்ளுக்கு ஆதரவாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகள்பற்றிய ராய்ட்டர் நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த மன்சாண்டோ நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ’இருதரப்புப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண ’பிரச்சனைக்குரிய இந்த நிறுவன்ங்கள் கொள்கைமுடிவுகளில் தலையிட்ட்து துரதிர்ஷ்டவசமானது’ என்று குறிப்பிட்டது.

 மோடி ஆட்சிக்குவந்த அரையாண்டுக்குள் அவரது நிர்வாகம் இந்திய மருந்துகள் பற்றித் தெளிவில்லாமலிருந்த ஓர் அரசுத்துறையை மரபுரீதியான இந்திய மருந்துகளின்துறையாக மாற்றியமைத்து அதை மற்ற விஷயங்களோடு மருந்துச்சந்தையில் தலைமையிடத்தில் உள்ள பதஞ்சலி நிறுவனத்தின் யோகா பயிற்சியையும், ஆயுர்வேதத் தாயாரிப்புக்களையும் பிரபலமாக்கும் பணியில் அர்ப்பணிக்கச் செய்தது.

 அந்த அமைச்சகம் இப்போது பதஞ்சலி நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புக்களையும் ஒழுங்கமைக்கிறது. அது ராம்தேவுடனும், அவரது அமைப்புடனும் பெரும்திரள் யோகா பயிற்சிநேரத்தில் அதன் தயாரிப்புக்களை முன்கொண்டு செல்லுதல் மற்றும் ஆன் லைன் பயிற்சி அளித்தல் பணிகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சருடன் புதுடெல்லியின் மத்தியப்பகுதிகளில் ஈடுபட்டுவருகிறது.

 நிதி அமைச்சகம் யோகாவை, ’ஒருஅறச்சிந்தனைக்ண்ட நோக்கம்’ என்று விளக்கமளித்தோடு அதன்மீதான வரிச்சுமையையும் குறைத்தது. இவ்வாறு வரியைக்குறைத்த்து ஆளும்கட்சி தனது மனக்கண்ணில் காணும் ஒருவகையான ‘இந்து தேசம்’ என்ற கருத்தாக்கத்துக்கு ஆதரவளிக்கும் பதஞ்சலி குழுமங்களுக்குப் பெரிதும் பயன்தருவதாக அமைந்தது. நிதியமைச்சகம் அருண்ஜெட்லியின் தலைமையில் உள்ளது. இவர் 2014 தேர்தலுக்குமுன் உறுதிமொழியில் கையொப்பமிட்டவர்கலில் ஒருவர். அருண்ஜெட்லியோ, ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாகிகளோ இந்தக்கொள்கைபற்றிய கேள்விகளுக்கு எந்தப்பதிலும் தரவில்லை.

 மோடியின் அரசு தனது அரசியல் முன்னோடிகளின் மதசார்பற்ற விருப்புரிமையைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இதை கட்சியின் மற்ற தலைவர்கள் 80% இந்துக்களும் 14% முஸ்லீம்களும் உள்ள தேசத்தில் ‘கலாச்சாரப்புரட்சி’ என்று குறிப்பிட்டார்கள்.

 மாநிலத்தேர்தல்களில் உறுதியான வெற்றிகளைப்பெற்றுவரும்போது கட்சியையும், அதன் த்த்துவத்தையும் பின்பற்றுபவர்கள் தங்களது ‘இந்து தேசியம்’ பற்றிய திட்ட்த்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். களத்தில் இதற்கான இயக்கம் முஸ்லீம்களையும் பிற சிறுபான்மையினரையும் இந்து கும்பல்கள் அடிப்பது, கொல்வது போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளாக நட்ந்துவருகின்றன.

 பசு பாதுகாவலர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக்க்கூட மோடி பேசினார்.

மோடியும், ராம்தேவும் பலவற்றில் ஒத்த பொதுத்தன்மை கொண்டவர்கள். ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்தவரின் மகனான மோடியைப்போலவே ராம்தேவும் மிக ஏழ்மையன பின்புலத்தைக் கொண்டவர். ஒரு விவசாயியின் மகனான அவர் 1960களின் மத்தியில் வட இந்தியாவில் பிற்ந்தவர்

 கட்டுமானப்பிரிவில் உள்ள ஒரு வியாபாரியான ஜீவராஜ் பட்டேல் தான் ராம்தேவை முதன்முதலாக 1992ல் சந்தித்த்தாக் கூறினார்.அப்போது ‘சுவாமி’ சிறிய யோகா முகாம்களை நடத்துவதோடு மருத்துவ மூலிகைகளைக் கலக்கியும் வந்தார். அவர் ஹரித்துவாரில் உள்ள ஒரு ஆன்மீக மறைவிட்த்தில் ஒரு ஆசிரமத்தில் வாழ்ந்துவந்தார்.

. பத்ஞ்சலியின் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா, தாமும் ராம்தேவும் தங்கள் முதல் வியாபார முயற்சியை 1995ல் துவக்கியதாகவும், அதன்பிறகு ஆயுர்வேத மருந்துகளையும் அதன் சேர்மாணங்களையும் எவ்வாறு செய்வது என்று கற்றுக்கொண்ட்தாகவும் கூறினார். அவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.3,500/ வைத்திருந்த்தாகவும், ரூ.10,000/ஐ கடனாகப் பெற்றதாகவும் தெரிவித்தார்.

 அவர்கள் இருவரும் நெருப்பைப் பற்றவைத்து மரபுசார்ந்த பழக்கூழ் (ஜாம்) தயாரிக்க சேர்மாணங்களை கலந்தார்கள். அதன்பிறகு அந்தக் கொப்பரைகளை தங்கள் வீடுகளுக்குக் கைவண்டியில் கொண்டுசெல்ல பண்ம இல்லாத்தால் தங்கள் தலைகளில் சுமந்து சென்றார்கள் என பாலகிருஷ்ணா விவரித்தார்.

 “ஆஸ்தா” என்ற ஆன்மீக தொலைக்காட்சி இல்லாமலிருந்திருந்தால் ராம்தேவ் ஓர் உள்ளூர்வாசிகாக மட்டுமே இருந்திருப்பார். 2001ல் அந்த்த்தொலைக்காட்சி நிறுவனம் புதுமுகங்களைக் கண்டுபிடிக்க தனது குழுவை அனுப்பியது என்றார் ஆஸ்தாவின் தலைமைச்செயல்பாட்டாளரான அஜீத் குப்தா. அவர்கள் ராம்தேவைக் கண்டார்கள்.

 “அவரது மொழிநடை நேரடியானது. அவரது யோகா நிலைகளில் ஒன்றான வயிற்று ஆசனங்களால் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்றார் குப்தா. ராம்தேவின் பல நிகழ்ச்சிகள் ஆஸ்தாவில் ஒளிபரப்பப்பட்டன. பார்வையாளர்களிடமிருந்து அவரக்காண வேண்டுகோள்கள் வந்தன என அப்போது விற்பனை மேலாளராக இருந்த வேத்சர்மா கூறினார். ராம்தேவ் ஒரு நட்சத்திரமாக வளர்ந்துவந்தார்.

இன்று ராம்தேவ் அவராலும், பாலகிருஷ்ணாவாலும் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனத்தின் பொதுமுகமாக இந்தியா முழுவதும் காணப்படுகிறார். பதஞ்சலியின் மிகப்பெரிய விநியோகஸ்தரான ஆதித்ய பிட்டியா ராம்தேவை ‘சூபர் முதலாளி’ என்று அழைக்கிறார். என்றாலும், அந்தக்கூட்டுநிறுவனத்தின் நிதிவரவுசெலவு தாக்கல் அறிக்கைகளில் ராம்தேவின் பெயர் இல்லை. அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணத்தின் 2011 வலைப்பக்கத்தில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 1999 முதல் அந்த நிறுவனத்தின் அறக்கட்டளை ஒன்றின் தலைவர் என்ற முறையில் ராம்தேவ் கையொப்பமிட்டுவந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்குமுன் அதே அறக்கட்டளையின் வரவு-செலவு அறிக்கையில் அவரது கையொப்பம் காணப்பட்டது. ராம்தேவ் தனது சார்பில் கையொப்பமிடும் அதிகாரத்தை பாலகிருஷ்ணாவுக்கு அளித்துள்ளதாக ராய்ட்டர் நிறுவனத்திடம் தெரிவித்தார்.

 அண்மையில் ஹரித்துவாரில் பாலகிருஷ்ணா தனது அலுவலகத்தில் ராம்தேவ் தியானத்தில் அமர்ந்துள்ள ஒரு பெரிய பட்ம் தனக்குப்பின்புறம் இருக்குமாறு இருந்த சாய்வுமேஜையில் அமர்ந்திருந்தார். பாலகிருஷ்ணா,’ எங்களிடம் எந்த்த் திட்டமும் இல்லை” என்றும்,’ எங்களடம் சுவாமிஜி உள்ளார்’ என்றும் ராம்தேவைக் குறிப்பிட்டுக் கூறினார், ஒரு நிறுவன அமைப்பின் தந்திரோபாயங்கலை நிறைவேற்றும் நிர்வாகி என்ற பொருளில்.

 பாலகிருஷ்ணா தனது கால்களில் இருந்த சாதாரண செருப்பைச் சுட்டிக்காட்டினார். அதன் விலை ரூ.400/ என்றார். அவரோ அல்லது ராம்தேவோ சம்பளம் எதுவும் பெறுவதில்லை என்றும் கூறினார். பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 250 இலட்சம் டாலர்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் நிறுவனம். இது அவரை 130கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டின் 48ஆவது பணக்கார்ர இந்தியராக ஆக்கியுள்ளது. ராம்தேவின் சொத்துக்கள்பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவரவில்லை.

 டஜன் கணக்கான பதஞ்சலி நிறுவனங்களின் நிதிக்கணக்குகளை ஆய்வுசெய்த ராய்ட்டர் நிறுவனம் மிகப்பெருமளவிலான இலாப்ப்பங்குகளை பாலகிருஷ்ணாவுக்கும் ராம்தேவின் சகோதர்ர் ராம்பரத்துக்கும் மற்ற பிற உரிமையாளர்களுக்கும் பணமாக அளிக்கப்பட்ட்து என்பதைக் கண்டுபிடித்த்து. ஒரு நிறுவனத்தில் மட்டும் பாலகிருஷ்ணாவும், சிறுபான்மை பங்குதார்ர்களும் 5 ஆண்டுகளில் 180 இலட்சம் டாலர்களைப் பெற்றார்கள். ராம்தேவின் சகோதர்ர் கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு நிறுவனத்தில் ஓராண்டுக்கான இலாப்ப்பங்கீடுகள் இலாபத்தில் 60% என அறிவிக்கப்பட்டது. இந்த இலாப்ப்பங்கீடுகள் நிறுவனத்தின் அசல் முதலீட்டாளர்களுக்கு அவர்களது முதலீட்டைத் திருப்பித்தருவதற்காகப் பயன்படுத்தப் பட்ட்து என பாலகிருஷ்ணா ராய்ட்டர் நிறுவனத்திட்ம் கூறினார். “ நான் அந்த நிறுவனத்திலிருந்து பணத்தை இலாபப்பங்கீடு என்ற வடிவத்தில் அசலைத் திருப்பித்தர எடுத்தேன்” எனவே இன்று எங்கள் நிறுவனம் துப்புரவாக எங்களுக்கே சொந்தமாகவும், சுத்தமாகவும் உள்ளது” என்றார் அவர்!

 இவ்வாறு இலாப்ப்பணம் அசலாகத் திருப்பி அளிக்கபட்ட்தைப் பற்றிய எழுத்துமூலமான கேள்விகளுக்கு ராம்தேவின் சகோதர்ரோ அல்லது அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளோ பதிலளிக்கவில்லை!2011ல் அப்போதய ஆளும்கட்சிக்கு எதிரான ஊழல் எதிர்ப்புப்போராட்ட்த்தில் ராம்தேவ் இணைந்துகொண்டபோது அவர் அரசியலில் குதித்தார். 2013ல் அவர் இந்தியாவை வழி நட்த்தும் மனிதர் என மோடியை ஆதரித்துதொடர்ச்சியான பொது அறிவிப்புக்களை வெளியிட்டார். இதுதாம் மோடிக்கு ஆதரவாக ராம்தேவால் நடத்தபட்ட பல்முனைப் பிரச்சாரத்தின் துவக்கமாக இருந்தது. இதுபற்றிய முழுவிவரங்கள் முன்பு தெரிவிக்கப்படவில்லை.

 வரையறுக்கப்பட்ட தனியார் சமூகப்புரட்சி ஊடகம் மற்றும் ஆய்வகம் (Social Revolution Media and Research Pvt.Ltd) என்ற ஒரு தகவல் தொடர்பு அமைப்பு பஞ்சலியின் குடையின்கீழ் உள்ள இரண்டு இயக்குநர்களால் துவக்கப்பட்டது. அது பா.ஜ.க.வின் தகவல் தொழில் நுட்பப்பிரிவுடன் வாராந்திரக் கூட்டங்களை நட்த்தியது. அதன் மூலம் டிவிட்டர் மற்றும் பிற சமூகத்தளங்களில் செய்திகளை ஒருங்கிணைத்த்து என்று தகவல் தொடர்பு அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலர் சந்தாணு குப்தா விவரித்தார்.

 அவர் ராம்தேவ் அமைப்பின் உறுப்பினர்கள் எவ்வாறு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களாக மோடிக்காக வாக்கு சேகரிக்க பல்வேறு இடங்களுக்கும் அனுப்ப்ப்பட்டார்கள் என்பதையும் விளக்கினார்.

 மும்பையில் பதஞ்சலி அறக்கட்டளையின் யோகா ஆசிரியரான நரேந்திர சாஸ்திரி, தான் அதிகாலை முதல் நள்ளிரவுவரை வீடுகளில் அழைப்புமணிகளை அடித்து மோடியை ஆதரிக்கும் பிரசுரங்களை விநியோகம் செய்த்தை எடுத்துக்கூறினார்.

 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப்பிறகு புதுடெல்லியில் ஒரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு மூத்த பா.ஜ.க.தலைவர்கள் ராம்தேவுக்கு நன்றிதெரிவிக்க கலந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே உறுதிமொழியில் கையொப்பமிட்டிருந்த்து ராம்தேவின் வீடியோவில் காட்டப்பட்ட்து.

 இந்த மே மாத்த்தில் ஹரித்துவாரில் ஒரு வித்தியாசமான மேடையில் நடைபெற்ற பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் துவக்கவிழாவில் மோடி, ராம்தேவுக்கு மரியாதை தெரிவிக்கும் உணர்வில் தனது கைகளைத் தட்டினார். ராம்தேவ் இந்த உணர்வுகளைத் திருப்பிச் செலுத்தும்வகையில் தனது தலையை உயர்த்தி ஒரு பரந்த புன்முறுவலைச் செய்தார்.

 வீட்டிலிருந்தே இந்தநிகழ்ச்சியை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களிடம் மோடி, “பாபா ராம்தேவ் பாரதத்தின் ஆயுர்வேதத்தை- இதியாவின் பண்டைய மருத்துவத்தை உலகின்முன் எடுத்துச்செல்வார்” என்று பிரகடனம் செய்தார்.

 ___________________________________

மூலம்: ராஹுல் பாட்டியா – டாம் லாசெட்டர்.

Pin It