அன்புள்ள மின்மினிக்கு...பார்த்து எடுத்த உன் முகச் சாயலின் நிறமிக் காட்டுக்குள்... மேகக் குளிர்தலின் கனிவோடு.. ஓடி வருகிறேன்..... வரிகளின் சம்போகமென....நலம்....காண.... பின் உன் நிழல் காண.

lovers kiss 320கனவுகளைக் கொண்டு இல்லாமல் செய்து கொள்ளும் சித்திரப் பிறழ்வின் வெளிப்பாடுகளைப் போலதான்... ஒரு திரும்புதலின் சொர்க்கமென இக் கடிதம்...

நீ படிப்பதற்கும் நான் எழுதுவதற்கும் உள்ள இடைவெளி முழுக்க நிறைந்து ததும்பும்.. தழுவல்களை எங்கனம் வரி கட்டுவேன்.... வாழ்வின் பிம்பங்களை முழுதாய் மடை திறக்கும் உன் ஞாபகக் குரலின் பின்னனிக் கனவுக்குள் நான் எதுவாய் உனைத் தொடர்வேன்...சிறகுக்கு.... சிறகு முளைத்த வயதுக்குள் உன் தத்ரூபங்கள்.... தவங்களின் நெகிழ்வாகவே எனக்கு படுகிறது ...விதி கடந்த உன் வெளி..... நட்சத்திரம் செய்வதாக நம்புகிறேன்..... காலத்தின் கதவுக்குள் உன் ஜன்னல்... திறந்து கொண்டே இருப்பதாக கற்பனை செய்கிறேன்....முதுமைக்குள் காலடி வைக்கும் நேரம் இது.. இளமையின் பிம்பமாய் இலைகளின் சூட்சுமமாய்.. ஒளிகளின் தூவலாய்..... நீ எங்கோ மறைந்து கொண்டிருக்கிறாய்.  அது தீரா தீர்க்கத்தின் நிறையை மீண்டும் மீண்டும்.... நான் பார்க்கும்.. எந்தக் காட்சிக்குள்ளும் நிரப்பிக் கொண்டேயிருக்கிறது.. 

உனக்கு தெரியுமா.. ஆன்மாவின் பயணத்தை சற்று நடை மாற்றி விடும் தீவிர சிந்தனைக்குள் நீ காட்சிகளின் விரிப்புகளாய்.. குவிதலின் சிறகுகளாய் நிறைந்தும் வழிந்தும் இருப்பது....

உன் தடாக கரையெங்கும்...தவிப்புகளின் நிழல் அவிழ்ந்து கொண்டே இருக்க வரம் பெற்றிருக்கின்றன, என் பைத்தியம் பிடித்த மரங்கள். இன்னும் உரக்க கத்தி சாகும் வரத்தை நானே வைத்துக் கொண்டு இருப்பதில்தான் அக மூடிக் கனவுக்குள் உன்னை பொத்தி வைக்க முடிகிறது....

திரவமற்ற பிறைக்குள்.. நிலவற்ற நிறத்தின் சாயலை இன்னும் நீயே என் கனவாக்குகிறாய்... காதலின் சுவடுகளை இப்படித்தான் நான் அழித்துக் கொண்டு இருக்க நீ எழுதிக்  கொண்டிருக்கிறாய்.  எப்படியும்... அப்படியாகும் எதற்குள்ளும் ..... உன் எதுவும்.. எனதாக்கி பின் உனதாகவும் ஆகி விடுவதை நான்.. எதுவாக்கவும் முயலுவதில்லை......அதுவாகவே இருந்து விடுகிறது.... உன் என் என் உனது.  

நரைத்துக் கிடக்கும்... ஞாபகக் காட்சிக்குள் நிறம் செய்தே வயதாகும் சூரியனையும்.. நீ ஒளித்துக் கொண்டு திரிகிறாய்.. மின்மினி...

உயிர் பிசையும்.. சூழ் கொண்ட மகரந்த வடிதலின் வலுவற்ற வலுவின் கோரப் பிடிக்குள்.. கட்டுண்டு முரண்டு பிடிக்கும்... முத்தக் கூம்பின் பிறழ் தேசம்.... நம்பியே செய்யப் படுவது தீர்த்தக் கரைக்கும் முந்தைய யோசனை. நிமிட்டும் உருளைகளின் உராய்வுக்குப் பின் ஓர் இரவை உன் கூந்தல் திறந்து விடும் லயிப்பு...... இன்னும் அலமாரிக் கற்புக்குள் யோனிக் கசிவென... சொட்டுகிறது.......என் நாட்குறிப்பு.  நதியின் நிறத்துக்குள் தன்னை அமிழ்த்துக் கொள்ளும்... சூட்சுக் குறியீட்டுக்குள்.. அளாவிய ஆகாயக் கரைகள்... கசிந்துருகுதல்.. காணுதல் சிறப்பே.  மலைத்து மழை நாட்களின் உடைப்பை... உறிந்தே உப்புவது..... மோட்சமென... உன் மார்புச் சூட்டில்..... பிறழ்கிறது.... நவீன உளிகள்........

நிலைக் கண்ணாடி அசையும்....உன் சிமிட்டுதலில்... இன்னும்... பாதரசம்... உண்கிறேன்.... இறவாக் காடுகளின் வசம்.. உன் பாதக் கூச்சத்தின் ஒலிகள்... கடவுளின் கரம் கோர்த்து சாத்தானின் வாசம்.. நெய்யும்... பால் ஈர்ப்பு கவனத்துக்குள்.. யாருமற்ற பருவை முளைக்க விடுகிறது... பதின் பருவத்து... மறைவுப் பிளவு.  ஓடி ஓடி... அமர்ந்து கொள்ளும் உன் இருப்பின் சுவர்களை பெயர்த்தெடுத்த என் தீட்சண்யங்கள்.. மூழ்கி சாவதை விரும்புகிறது... இன்னும் சொட்டு.. கூந்தல் நீரை.  சித்திரம் நகரும் என.... பேசும் புனைவுக் கதிரொளிகளின் திரிபுக் கூடல்.. உன் புன்னகை என என்றோ சொல்லியதை..... இன்றும் நாம் நம்புகிறேன்... வைத்த புள்ளிகள்..... நீண்டு.. திசை செய்யும் காலத்தின் சுவடுகளை... கலைந்து விட்டு எழும் சித்திரமென இன்னும் நீயே வேண்டும்... வா.. சொர்க்கத்தின் வாழ்வுதனை திறக்கும் பூட்டுக்களை.... உடை... உன் உடை காணும்.. ஓவியத்தின் சுழற்சியை நான் நீட்டித்துக் கொண்டே ஒரு தொடுவானம் செய்கிறேன்....

உனைத் தேடி துவண்டு... மீண்டும் தேடும்... உற்சாகம்.. உன் காலடிகள் போற்றும்.. ஆற்று மணலின்.. சூட்டுக்குள் நிரம்பத் தின்று சுருண்டு விழும் மரணத்தின் அருகாமையை..... அணைக்கிறேன்.  அனிச்சமலர் சூடி.. ஆத்திரக்காரியாக...அணைபடும் மோகினி நீட்டும் பச்சை நாக்கின் வழிதலை நக்கித் தின்னும் ஒரு அடர் வன வெளிர் நிறத் துணுக்காய் நான் மாறி விடும்.. சூழலை... நீயே புதைத்து செல்கிறாய்.. புதைபடுதலின் நிமித்தம் என் குழி.. உதறி தெறிக்கும்... பனிக் கூம்புகளின் உடைதலில்... சீக்கிரம்..... நனைதல் முறை என்று ஆடை அவிழ்த்துக் கிடக்கிறேன்.  ஆன்ம புணர்தலின் ஊடாக.. நீ நானாகவும் ஆகி விடுதலின் சாமர்த்திய சாகுபடியை.....சமன் பட்ட முரணால் அறுத்தெடுக்கிறேன்.  விளைவது எல்லாமே... விதி என்று நீ சொல்.  நம்புகிறேன்.... வெம்பிய பொழுதுக்கு கொம்பு சீவி விட்டு குறிஞ்சு மலர் வளர்க்கிறேன்....வளர்ந்த கரைகளில்தானே.. நதி மூழ்கி உன்னைக் கண்டேன்...

நிகழ்த்துக் கலையின் ஒத்திசைவைப் போல... அசைந்து விட்ட ஓவியக் காடுகளில் தலை விரித்தே கிடக்கிறது... நம் பிரிவு.  நயனம் அரட்டும்.. கிரீச் கலவரங்களில்.....மரம் ஒன்றுக்கு.....காவல் காத்துக் கிடக்கின்றன..... நம் முத்தங்கள். வழி நீண்டு.. வழியாகி.. வழி தேடும்... தாண்டுதலின் நோக்கம்.. பயணங்கள் என்பதை நானும் உரக்க சொல்கிறேன்.. நீயும் உரக்க கேட்கிறாய்.  அதி நவீன தோட்டாவின் வேகத்தோடு அணைத்தலின் சாத்தியக் கூறுகளோடு.. எங்கேனும் நீ ஒளிந்து கிடப்பது வாடிக்கையே.  மீண்டும் மீண்டும்.. தேடித் தொலைந்து.... தொலைந்து தேடி....கண்டு பிடிக்க முடியாத தருணத்தில் நீண்ட கற்பனையை காகிதமாக்கி..... எழுதா சொற்களின் நிறம் பூசி.. கொட்டித் தீர்த்து விடும்.. குரல்வளை நெறிதலின் வலியோடு... முடித்துக் கிடக்கிறது இக் கடிதமும்.. 

முகவரியற்று தொலைவதில் இது எத்தனையாவது கடிதம்.  கண்டவர்..... படிக்காமலும் கிழித்துப் போடலாம். அதன் நோக்கம் அப்படியே ஆகட்டும் என்பதோடு... அறுத்துக் கொண்டு சாகிறது.. என் தூரத்து... தவிப்பு.

- கவிஜி

Pin It