1. அறிவிக்கப்படுள்ள இந்த NEET தேர்வு OBC/SC/ST மக்களுக்கு எதிரான பார்ப்பனிய சதிக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். அதாவது மக்கள் அனைவருக்கும் நல்லது, தேசத்துக்கு நல்லது என்று புருடா விட்டு அதன் மூலம் பார்பனர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவது என்பது இதுவே.

supreme court 2552. இந்த NEET என்பது National Eligibility cum Entrance Exam என்பதன் சுருக்கம் ஆகும். அதில் உள்ள eligibility என்ற வார்த்தை மிக மிக ஆபத்தானதாகும். ஏனெனில் மருத்துவ சேர்க்கையில் eligibility இல்லை என்று கூறி OBC/SC/ST மாணவர்களுக்கான இடங்களை பொது பிரிவுக்கு மாற்றிவிடுவது பார்பனர்களின் தாத்தா காலத்து டெக்னிக் ஆகும்.

எடுத்துக்காட்டாக 50% க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே போட்டிக்குத் தகுதியானவர்கள் என்று ஒரு விதியை வைத்துவிடுவார்கள். பிறகு நுழைவுதேர்வுக்கு பின் 50% மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் OBC/SC/ST பிரிவில் குறைவாக உள்ளனர். ஆகையால் இத்தனை சீட்டுகளை பொதுப் பிரிவுக்கு மாற்றுகிறோம் என்று மாற்றி விடுவார்கள் . இது கற்பனையானது அல்ல. மத்திய அரசு நடத்தும் Aiims, DNB உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் இது வழக்கமாக நடைபெறும் உண்மையாகும்.

3. மாநிலங்களில் மாணவர்கள் பெரும்பாலும் மாநில கல்வி முறையில் படித்து வருகின்றனர். அது அவர்களின் தவறல்ல. ஆனால் அவர்களை திடீரென CBSE பாடப் புத்தகத்திலிருந்து வைக்கப்படும் தேர்வை எழுது என்று நிர்பந்திப்பது மோசடியாகும்.

4. CBSE என்பது தமிழ்வழியிலும், இதர மாநில மொழிகளிலும் இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்? தமிழ் வழியில் படித்த ஒருவருக்கு ஆங்கில வழியில் தேர்வு நடத்துவது நியாயமில்லை.

ஒருவேளை தமிழில் கேள்வித்தாள் மொழி பெயர்க்கப்படும் என்ற சொன்னாலும் அதனை மாணவர்கள் இப்படித்தான் கேள்வி கேட்கப்பட்டுள்ளது (Nuances) என்று சரியான அர்த்தத்தில் எப்படி புரிந்து கொள்ள இயலும் ??

5. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசால் கட்டப்பட்டு இயக்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்குகிறது. அதற்கு தேர்வு மட்டும் நடத்த மத்திய அரசுக்கு என்ன உரிமை? கல்வி என்பது பொதுப் பட்டியிலில் தான் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. ஆகவே மாநில அரசின் கல்லூரிகளுக்கு மத்திய அரசு நுழைவுத் தேர்வு நடத்துவது உரிமை மீறலாகும். இது இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கே எதிரானதாகும்.

6. இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு நடத்தும் AIIMS, PGI, AFMC, Jipmer உள்ளிட்ட கல்லூரிகள் தனித்தனியாக தேர்வு நடத்துகின்றன. இதனை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்த மத்திய அரசுக்குத் துப்பு இல்லை. தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளுக்குத் தேர்வு நடத்த வந்துவிட்டார்கள் இந்த மோசடி மன்னர்கள்.

7. தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைகழகங்கள் இத்தனை ஆண்டுகளாக கொள்ளை அடித்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பலமுறை தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முறை கூட எந்த நீதிமன்றமும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு உத்தரவு கூட வழங்கவில்லை என்பது முகத்தில் அறையும் உண்மையாகும்.

ஆனால் இப்போது சம்மந்தமில்லாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கின்றனர், இந்த நியாயம் பேசும் கனவான்கள். இதனை உச்சிக் குடுமிமன்றம் என்பதில் ஒரு தவறும் இல்லை.

8. அனைவரும் NEET UG எனும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான (MBBS) பிரச்சனையாக மட்டும் இதனைப் பார்க்கின்றனர். ஆனால் இதில் NEET PG அதாவது MD, MS படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்த பிரச்சினையும் அடக்கம்.

தமிழக அரசில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சிறப்பு கோட்டாவும் கூடுதல் மதிப்பெண்களும் PG நுழைவுத் தேர்வில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த NEET PG தேர்வில் அது வழங்கப்படாது. இதனால் தமிழக சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் பணிபுரியும் ஆர்வம் குறைந்து போகும்.

அரசு மருத்துவமனையி்ல் வேலை செய்தால் பயன் இல்லை , அதனால் NEET PG தேர்வுக்காகவாவது படிப்போம் என்று சிந்தனை தோன்றுவது இயல்பானது. இதனால் மாநில பொது சுகாதாரத் துறை பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். இதனால் எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

9. இந்தியா முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்பதில் மற்றொரு மோசடியும் உள்ளது. அதாவது வடஇந்திய மாநிலங்கள் பல நுழைவுத் தேர்வு முறைகேட்டிற்குப் பெயர் போனவை.'வியாபம்' ஊழல் நமக்குத் தெரிந்த பெரிய ஊழலாகும். அதனால் இந்தத் தேர்வு எல்லாப் பகுதிகளில் நேர்மையாக நடக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. வட இந்திய மாநிலங்களில் பெரிய அளவு முறைகேடுகள் நடந்து அது நம் மாணவர்களைப் பாதிக்கும் வாய்ப்பு கடுமையாக உள்ளது.

10. அதனால் இது வெறும் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை அல்ல, மாறாக OBC/SC/ST மக்களுக்கு எதிரான, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிரான சதி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டு்ம்.

பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC/BC/MBC) ஆண்ட பரம்பரை சூரியனிலிருந்து வந்தவர்கள் என்று வெற்றுக் கதை பேசிக்கொண்டிருந்தால் வீழ்த்தப்படுவது உறுதி.

- சட்வா சாக்யா

Pin It