நண்பர்களே!

கீற்று மீண்டும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் அனைவரும் நன்கொடையாக வழங்கிய சுமார் 2,20,000 ரூபாய் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே செலவாகிவிட்ட நிலையில், கடந்த 10 மாதங்களாக மிகுந்த பொருளாதார நெருக்கடியிலேதான் இதனை நடத்தி வருகிறேன். ச‌ம்ப‌ள‌த்திற்கு ஆள் வைக்க‌ முடியாத‌ நிலையில், மொத்த‌ கீற்று வேலைக‌ளையும் த‌னியொருவ‌னாக‌வே செய்து வ‌ருகிறேன்.

கீற்றிற்கு மாத‌ம் ஆகும் செல‌வு ரூ.9500; ஆண்டுக்கு ரூ.114000. ஓர் அமைப்புக்கு அல்ல‌து நிறுவ‌ன‌த்திற்கு இச்செல‌வு சிறிய‌ தொகைதான். ஆனால் ஒரு த‌னிந‌ப‌ருக்கு இது பெரிய‌ தொகையாக‌ இருக்கிறது. அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு, தின‌மும் 4 அல்ல‌து 5 ம‌ணி நேர‌ம் கீற்றிற்காக வேலை பார்ப்ப‌து கூட‌ சுமையாக‌த் தெரிய‌வில்லை. ஆனால் அதையும் தாண்டி மாத‌மாத‌ம் ஒரு தொகையை செல‌வழிப்ப‌துதான் பெரிய சுமையாக இருக்கிறது. இவ்வேளையில் கீற்றிற்கு தங்க‌ளால் முடிந்த‌ நிதியை தொடர்ந்து அளித்து வ‌ரும் பிர‌பாக‌ர‌ன், ந‌ரேந்திரன், பாஸ்கர், முத்து ஆகியோரையும், தொழில்நுட்ப உதவிகளை எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்து வரும் ஜெயன், சண்முகசுந்தரம் ஆகியோரையும் மிகுந்த நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.

அலுவ‌ல‌க‌ வேலை, கீற்று வேலை இவ‌ற்றைத் தாண்டி விள‌ம்ப‌ர‌ங்க‌ள் தேடி அலைய‌ முடிய‌வில்லை. அத‌னால், படைப்பாளிகளாகவும், வாசகர்களாகவும் கீற்று தளத்தை வளர்த்தெடுக்கும் த‌ங்க‌ளிட‌மே மீண்டும் வ‌ந்து நிற்கிறேன்.

த‌ங்க‌ளாலான‌ நிதியைக் கொடுத்து உத‌வுங்க‌ள்; கீற்று தொட‌ர்ந்து வெளிவ‌ர‌ ஆத‌ர‌வு தாருங்க‌ள்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:

ICICI வங்கிக் கணக்கு எண்: 603801511669

IFSC code - ICIC0001393

Account holder name: Ramesh.R

Branch - Tambaram West, Chennai.

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். 

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994

Comments

1 comment

1
Poovai Ansary
வடமாநிலங்கள் அனைத்தும் காவி கறை படிந்து கொண்டிருக்கும் இச்சூழலில் கீற்று இணையத்தளம் செய்து வரக்கூடிய பணி மிகவும் சிறப்பானது, பாராட்டுக்குரியது. தந்தை பெரியார் அவர்கள் பிறந்த இந்த மண்ணில் காவிகளின் கைகள் மெல்ல ஒங்க ஆரம்பித்துள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல வாழ்ந்து வந்த இந்த பன்முக சமூகத்தில் இனவெறி, ஜாதிவெறி, மதவேரிஎன்று மக்களுக்கு தீவிரமாக போதிக்கும் வேலையை ஆர். எஸ்.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புக்கள் செய்து வருகின்றன. மூளை சலவை செய்து தமிழகத்தில் இருக்கும் மக்களை மதவெறி பிடித்த மிருகங்களாக மாற்றிட நினைக்கும் இவ்வாறான சூழலில் சமூக நல்லிணக்கத்திற்கும், சிறந்த ஒற்றுமையும் எடுத்து காட்டிடும் சிறந்த கட்டுரைகளை கீற்று வெளியிட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தங்களுடைய ஓய்வு நேரங்களையும் மக்களுக்காக ஒதுக்கி பணியாற்றிடும் உங்களின் சேவை மனப்பான்மையை எந்த விருது கொடுத்தும் கவுரவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இந்த விருதுகளும் கறை படிந்தவைகளாக மாறிவிட்டன. தாங்கள் இந்த இணையதளத்தை நடத்த படும் சிரமங்களை எங்களோடு பொது அறிவிப்பின் மூலம் பகிர்ந்துள்ளீர்கள். இறைவன் நாடினால் உதவிகள் உங்களை தேடி வரும் நண்பரே.
அன்புடன்
பூவை அன்சாரி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.