2012 நவம்பர் மாதம் 12 ஆம் நாள் முதல் தருமபுரியை மையமாக வைத்து சாதி வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட வெறியாட்டங்களை எந்தவித மனசாட்சியும் இன்றி தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சினிமாக்களில் காதலர்களைக் கொண்டாடும் இளையோர் கூட்டமும் காதலின் பெயரால் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஈழத்தில் கொல்லப்படும் மக்கள்தான் தமிழர்கள் என்று அவர்கள் கண்டுபிடித்த காரணத்தினால் தமிழகத்தில் தமிழர்கள் இல்லை மாறாக எல்லோரும் சாதியர்களாக இருக்கிறார்கள் என்று அமைதியாக இருந்தார்கள். வடதமிழகம் சாதி வெறிபிடித்தவர்களால் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கிறது.

மக்களின் மனசாட்சி சாதியத்தினால் மறத்துப்போன நிலையில் இளவரசன் திவ்யா காதல் நிர்க்கதியாக நின்றது. சாதி வெறிபிடித்த வன்னியர்களின் கையில் அவர்களது காதல் கதறியழுதது. யாரும் மனம் இறங்கவில்லை.. ராமதாசின் அடிவருடிகள் குரூரத்தின் உச்சத்தில் கொட்டம்போட்டார்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல திவ்யா நீதிமன்றத்தில் நான் இளவரசனுடன் வாழ விரும்புகிறேன் என்று சொன்னார். ஆனால் திவ்யா வாழ விரும்புவதை குடிகலக்கி ராமதாஸ் விரும்பவில்லை. அவரது அடியாட்களாக இருக்கும் வழக்கறிஞர்களை ஏவினார், திவ்ய மனம் தளரவில்லை, இளவரசனும் மனம் தளரவில்லை, எதிர்ப்புகளை எதிர்கொண்டார்கள். ஆனால் ஒரு பெரிய சாதி வெறிபிடித்த கூட்டத்திடம் எவ்வளவு நாள் தாக்குபிடிக்க முடியும்.. விளைவு இளவரசன் படுகொலை செய்யப்பட்டான்.

இளவரசன் படுகொலை.. ஆனால் தற்கொலை என்று செய்தி பரப்பப்படுகிறது. ஏன் அவன் படுகொலை செய்யப்பட்டான் என்பதற்கான அடிப்படைகள்..

1. 2013 மார்ச் மாதம் 19ஆம் நாள் நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா நான் இளவரசனுடன் வாழ விரும்புகிறேன் என்று வாக்குமூலம் அளித்தார். இதனால் பாமகவினர் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணை தங்களது கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

2. 2013 மார்ச் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா தமது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இளவரசன் குடும்பத்தினர் தம்மை நன்றாக கவனிப்பதாகத் தெரிவித்தார்.

3. பிறகு இளவரசனுடன் சேர்ந்த வாழ்ந்துவந்தார். தனது அம்மாவைப் பார்க்கப்போன திவ்யா பாமகவினரால் கடத்தப்படுகிறார். ஒரு ரகசிய இடத்தில் வைத்து மிரட்டப்படுகிறார், அவர் தங்க வைக்கப்பட்ட இடம் தைலாபுரம் என்று பத்திரிக்கைகள் எழுதின.

4. பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தபோது தான் தன் அம்மாவை கவனிக்க விரும்புவதாகவும் தெரிவித்து அவருடன் சென்றார்.

5. 2013 சூலை 1 அன்று அதே மனு விசாரணைக்கு வந்தபோது நீதியரசர்கள் தனியாக தமது அறையில் அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறினர். வன்னியர்களின் வழக்கறிஞர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். தனியாக விசாரித்தால் அவர் சுதந்திரமாக உண்மையை கூறிவிடக்கூடும் என்று பயந்தனர். ஆனால் நீதிபதிகள் தமது அலுவலை காரணம் காட்டி மாலை 4 மணிக்கு தமது அறையில் விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

6. மாலை 4 மணிக்கு நீதியரசர்கள் விசாரித்தபோது தாம் இளவரசனுடன் வாழ விரும்புவதாகவும் ஆனால் தன் அம்மா அதை ஏற்கும்வரை அவருடன் இருக்க விரும்புகிறேன் என்றும் சொன்னார். அதை அறியாத பாமக வழக்கறிஞர்கள் இளவரசன் கட்டாயப்படுத்துகிறார், மிரட்டுகிறார் எனவே அந்தப் பெண்ணை அம்மாவுடன் அனுப்ப வேண்டும் என்று வாதிடுகின்றனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த நீதியரசர்கள் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கின்றனர். அப்போது திவ்யா / இளவரசன் ஆகிய இருவரும் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்று உத்தரவிடுகின்றனர். அப்போது மாலை 5 மணி.

7. திவ்யா நீதியரசர்களிடம் சொன்ன செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. அதைக்கண்ட பாமகவினர் கடுமையாக அதிர்ச்சியடைந்தனர். தமது நெருக்கடிகளைத் தாண்டி திவ்யா உண்மையைக் கூறிவிட்டதால் கடும் கோபம் அடைகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இளவரசன் தருமபுரிக்கு கிளம்பிப் போகிறார்.

8. 3ஆம் தேதி நீதிமன்றத்தை திசைதிருப்புவதற்காகவும், திவ்யாவின் வாக்குமூலம் பத்திரிக்கையில் வெளியானதை மறுக்கவும் அவர் கடுமையாக மிரட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அன்றைக்கு அவர் ஆஜராகத் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறிய பிறகும்கூட. நீதிமன்றத்திற்கு வந்த திவ்யா தான் இளவரசனுடன் வாழ விரும்பவில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் தழுதழுத்த குரலில் கூறிவிட்டுச் செல்கிறார், சிறிது நேரத்தில் மயக்கம்போட்டு விழுகிறார்.

9. தருமபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட திவ்யா அவ்வை நகர் என்ற இடத்தில் உள்ள தமது பெரியம்மா வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இளவரசன் ஊரில் செய்தி பரவுகிறது. இதைக் கேள்விப்பட்ட இளவரசன் திவ்யாவை சந்திக்கப் போகிறார். அங்கே படுகொலை செய்யப்படுகிறார். இளவரசன் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்திற்கு அருகில்தான் அவ்வை நகர் இருக்கிறது.

10. இளவரசனை கொலை செய்ய இரும்பு உருட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, கொலை செய்தவர்களின் கையுறையும், இரும்புத் தடியும் அருகில் கிடந்திருக்கிறது, ஆனால் அவை மாயமான விவரம் இன்னும் ரகசியம்..?

11. ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம், அல்லது அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அறிவிப்பு அத்தனையும் பொய். ஏனெனில் அவன் கொலையுண்ட நேரம் 2.15 என்று தெரியவந்துள்ளது. அவன் இறந்த நேரத்தில் எந்த ரயிலும் அந்தப் பக்கம் போகவில்லை என்று ரயில்வே அட்டவணையில் தெரியவந்துள்ளது.

12. ரயிலில் விழுந்திருந்தால் அவன் தலையில் ஒருபக்கம் மட்டும் சிதறியிருக்காது, தலை வேகமாக ஓடும் ரயிலில் மோதியிருந்தால் முழுவதும் சிதறியிருக்கும். அடித்த வேகத்தில் கற்களின் மீது விழாமல் உடல் நீண்டதூரம் தூக்கி வீசப்பட்டிருக்கும்.

13. அப்படி தூக்கி வீசப்படும்போது உடலில் கடுமையான சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டிருக்கும். போட்டிருந்த உடை கிழிந்து சின்னாபின்னமாகியிருக்கும்.

14, ரத்தம் உறைத்து கருத்துப்போவதற்கான கால அவகாசம் அங்கு இல்லை, காய்ந்த ரத்தமே அங்கு இருந்தாக தெரியவந்துள்ளது..

15. ரயில் ஓடும்போது உருவாகும் புழுதி அவன் மீது இல்லை.

16. இளவரசன் இறந்த செய்தி கிடைத்த உடனே அனைத்து ஊடகங்களும் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று 3 மணிக்கே அறிவித்தன. காவல் துறையும் உறுதி செய்கிறது. முக்கால் மணி நேரத்திற்குள் தமது கண்டுபிடிப்பை உறுதி செய்த அதிசயம் இளவரசன் கொலையில் தான் நடந்துள்ளது.

17. இளவசரன் கொலை செய்யப்பட்டதின் மூலம் திவ்யாவின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது.. அதற்கு யார் பொறுப்பு? தமது சொந்த குடும்பத்தின் நலனுக்காக, சாதி வெறிக்காக அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை சூறையாடிய குடிகலக்கி ராமதாஸ் தான் காரணம்.

- கௌதம சன்னா

Comments

16 comments

16
கோ பிரிண்ஸ்
அற்புதமான படைப்பு... மனித கறி தின்னும் இந்த குரூரர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்...
ravi.k
இது உண்மையென்றால் இதைஒரு புகராக காவல் துறையிடம் தந்து விசாரிக்கசெய்யமல், கட்டுரை எழுதுவதி பரப்புவதேன்? ஒரு பெண்னின் ஆதரவு அற்ற தனிப்பட்ட வாழ்கையில் விலையாடுவது ராமதாசு/அவரை எதிர்து அரசியல் செய்ய விரும்புபவர்கலுக்கு வாடிக்கையாகிவிட்டது.
vaiththiyanaathan.m
இயல்பாய் காதல் திருமனம் செய்துகொன்டவர்களை பிடித்துக்கொன்டு அதை சாதி மறுப்பு திருமணமாய்காட்டி அரசியல் பிழைப்பு நடத்தினால் அதைப்பார்த்து இளம்வயதினர் பயந்துபோய் சாதிமாறுபட்ட இணைகொள்வதை தவிர்த்து விடுவார்கள். ஆக்கபூர்வமாக சாதிஒழிப்பிற்கு ஏதேனும் திட்டம் வகுத்து செயல்படுஙள். அதைவிடுத்து காட்டிலிருந்து திசைதப்பிவந்த மான் இணையரை பிடித்துகசாப்பு போட்டு அரசியல் விழாவில் பந்திவைப்பதை நிறுத்துங்கள்.
KUMAR
VERY GOOD INVESTIGATIVE JOURNALISM...... YES u r very rite.........this is not suicide definitely…… plz see all the photos…..if this boy hitted by train while committing suicide…..he cant fall after train engine hitted him, exactly where he was sitting just before minites and exactly nearby his belongings such as bag/liquor/matchbox/cigar/bannana kept on the culvert where he was sitting……it is an arrangement the culprits made after killing………..
chinna, thalaivar, kaathal ila
இந்த கொலையை வன்னியர்கள்தான் செய்தார்கள் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் குருவுக்கும் இதில் தொடர்பு உண்டு . தமிழ் நாடு கவல்துறையோ நீதிபதியோ விசரிக்கக்கூடது ஒபாமாதான் விசாரிக்கவேண்டும்.
ARUL
-""3. தனது அம்மாவைப் பார்க்கப்போன திவ்யா பாமகவினரால் கடத்தப்படுகிறார். ஒரு ரகசிய இடத்தில் வைத்து மிரட்டப்படுகிறார், அவர் தங்க வைக்கப்பட்ட இடம் தைலாபுரம் என்று பத்திரிக்கைகள் எழுதின.""- அடடா...இதைவிட அற்புதமாக உண்மையை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே 'ஸ்காட்லாந்து யார்டு, சி.ஐ.ஏ, இண்டர் போல், கே.ஜி.பி - எல்லாத்துக்கும் தகவல் சொல்லிடுங்க...!
mani
Our kolaiyum seithu athulayum arasial pannum talent engal party PMK ku matume iruku thaliva Mr. Ramathas nee valka VallarKA un pugal. Itharakaka thalavarai seruppala adikathinga plz...........
சிலம்பரசன்
இந்தியாவின் முதல் குடிமகன் பெயர் ப்ரனாப் 'முக்கர்ஜி'. இதிலு முக்கர்ஜி என்பது மேற்குவங்கத்திலுள்ள ஒரு சாதியின் பெயர். சாதி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலாய் உள்ள சாதியை வெரும் 60 ஆண்டில் அழித்து விடமுடியாது. அழித்தே தீருவேன் என கலம் இரங்கினால் தமிழகத்தில் பல உயிரை கொடுக்க தயாராக வேண்டும். அது அந்த உயிர் எந்த சாதியாக வேண்டமானாலும் இருக்கலாம்.
thennavan
கடந்த ஜுனியர் விகடன் இதழில்..........இளவரசன் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் அந்த இதழ் அச்சேரும் போதுதான் அதன் ஆசிரியர் இலாகாவுக்கு தெறியுமாம்.என்ன கொடுமை இது.அப்படியென்றால் அங்கு பணி புரிபவர்கள் எல்லாம் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் வேறு உலகத்தில் இருக்கிறார்களோ.....பேசாமல் அவர்கள் இந்த செய்தியை சுட்டி விகடனில் பதிவு செய்திருக்கலாம். தின மலர்........எப்போதும் வன்னிய தலைமைகளை எதிர்ப்பது போல காட்டிகொள்ளும்.ஆனால் இளவரசன் மரணத்தை,தற்கொலையாக வாசகர்கள் மனதில் பதிய வைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.இவர்களின் நிருபர்கள் உண்மையாக செய்திகளை சேகரிக்கிறார்களா இல்லை யாரோ ஒருவர் இப்படிதான் ஒத வேண்டும் என்பதை கேட்டு ஓதுகிறார்களா.......ஒன்று மட்டும் புரிகிறது ...தாழ்த்த பட்ட மக்களுக்கு எதிராக அரசு,அரசியல்வியாதிகள்,காவல்துறை,அதிகாரிகள் மற்றும் லாப நோக்கோடு செயல்படும் நடுனிலை பத்திரிகைகள் என அனைவருமே ஒர் அணியில் தான் நிற்பார்கள்.
villavan
நட்டுல இன்னம யார் செத்தாலும் அதுக்கு காரனம் ராமதாசு தான்? ஒக்கேவா? போ,போ, ஜன்னி அதிகமாயிடுச்சி.
Sakthi
இளவரசனின் சகோதரர் வி.சி. கட்சியினரிடம் ஆவேச வாக்குவாதம்! Posted Date : 14:17 (09/07/2013)Last updated : 18:46 (09/07/2013) தர்மபுரி: இளவரசன் மரணம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களுக்கு என்ன உதவி செய்தது என்று இளவரசனின் அண்ணன் பாலாஜி அக்கட்சி நிர்வாகிகளுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த இளவரசனின் அண்ணன் பாலாஜியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் குழுவினர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த பாலாஜி என் தம்பி மரணம் தொடர்பாக உங்கள் கட்சி ஆரம்பத்தில் இருந்து என்ன உதவி செய்தது. மறு பிரேத பரிசோதனை வேண்டும் என்று ஒரு முறையும், வேண்டாம் என்று ஒரு முறையும் மாற்றி மாற்றி பேசி குழப்பம் தான் ஏற்படுத்தினீர்கள். இளவரசனின் மரணத்தை தயவு செய்து அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள். வேதனையில் தவிக்கும் எங்கள் குடும்பத்தாரை மேலும் காயப்படுத்தாதீர்கள் என்று ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு பேச முடியாமல் பின்வாங்கியதோடு மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியேறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. http://news.vikatan.com/article.php?module=news&aid=17011#.UdvkXE4Umg0.facebook
saarathi
ஜுனியர் விகடனுக்கு நாட்டுல இருக்கிர சைக்காலஜி தெரியில, 90 வயது பரயர் குலிரில் செத்தாலும் அவர் வன்னியராலதான் கொலைசெய்யபட்டிருக்கிரார் என்றும், இந்த கொலையை ஓபமாதான் விசாரிக்குனும் என்று எழுதனும். அப்படி எழுதலைன்னா அது ஆதிக்க சாதி பத்திரிக்கைன்னுதான் சொல்லப்படும். அப்பாடி இந்த சய்க்காலஜி எங்க கொன்ண்டுபோய்விடுமோ?
linkani
தரும புரி கலவரத்தை பயன்படுத்தி ஊதிப்பெருக்கி பேனை பெருமலாக்கி தாங்கலே உன்மையான பறயர் பட்றாலர்கள், வன்னிய விரோதிகள் என்று காட்டிக்கொள்ளமுயலும் பகுஜன் கட்ச்சி, இதன் மூலம் சிறுத்தைகளை ஓரங்கட்ட முயற்ச்சிப்பதன் ஓரஙமே சக்தியின் பின்னூட்டம்.
nalanntha
ராமதாஸ் கொலை செய்திருப்பார் என்று நம்புவதற்கு இல்லை. ஏனெனில் அவர் எதையும் நேரடியாக செய்பவர் இல்லை, அவரது அடியாட்கள்தான் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். ஆனால் திவ்யாவை நினைத்தால்தான் பரிதாபம் அதிகமாகிறது, மனது கனக்கிறது. ராமதாசின் அரசியல் விளையாட்டில் அந்த அப்பாவிப் பெண்ணின் காதல் மட்டும் சிதைந்துப் போகவில்லை, ஒட்டுமொத்த எதிர்காலமே மண்ணாகிப் போய்விட்டது. அந்த பெண் தன் தந்தையை இழந்தார், கணவனை இழந்தார், தன் குடும்பத்தை இழந்தார், எதிர்காலத்தை இழந்தார்.. இவரைப் போன்ற அப்பாவிப் பெண்களும் ஆண்களும் தமது வாழ்க்கையை இழப்பதால்தான் 100 ஏக்கர் நிலத்தில் செயற்கை மருந்தில்லாமல் பயிர்செய்து குடும்பத்தோடு சந்தோசமாய் அவரால் இருக்க முடிகிறது. 400 ஏக்கரில் வன்னியர் அறக்கட்டளைக்கு நிலத்தை அபகரிக்க முடிகிறது, நிலம் வன்னியர் அறக்கட்டளைப் பெயரில் இருந்தாலும் அறக்கட்டளை ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பெயரில் இருக்கும்.. நாடகக் காதலைக் காரணம் காட்டி நாடக வன்னிராக ராமதாசு இருக்கும்வரை திவ்யாக்கள் மட்டுமல்ல, இளவரசன்களும் உயிரை கொடுக்க வேண்டியிருக்கும்...
vimal
ஆகவே, வாழ்க பகுஜன் சமாஜி, வாழ்க விடுதலை சிறுத்தைகள், வளர்க அவர்களின் சாதி ஒழிப்பு புரட்ச்சிகள்! ஒழிக ரமதாசு ஒழிக வன்னியர்கள். தனி ஒரு பறயருக்கு உயர்சாதி பெண் இல்லயெனில் ஜகத்தினை அழித்திடுவோம்! நாங்களெல்லாம் யோக்கியருங்கோ!
karthikeyan
வன்னியர்களுக்கு ரத்தம் வந்தால் அது உஙளுக்கு தக்காளி சட்டினி தலித்துக்கு ரத்தம் வந்தால் அது தான் உஙளுக்கு ரத்தம் **** **** ******.....!!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.