தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று பலமுறை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், “ தி.மு.க.வினர் பணம் கொடுப்பார்கள், வாங்கிக்கொண்டு எங்களுக்கு வாக்குகளைப் போடுங்கள் ” என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் திரும்பத் திரும்பக் கூட்டங்களில் பேசினார்கள். அவர்களின் பேச்சுகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாயின.

“ பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு 5 ரூபாயை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் ” என்று, ‘ சிறந்த பகுத்தறிவுக் கருத்தை ’ மேடையில் பேசினார் சீமான். அவர் பேச்சை ஜெயா தொலைக்காட்சி திரும்பத் திரும்பக் காட்டியது.

பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். பணம் வாங்கத் தூண்டுவது மட்டும் குற்றமில்லையோ? தேர்தல் ஆணையம் என் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

Pin It