நாள்தோறும் கொலைகளையும், இரத்த வாசத்தையும் ,வெடித்து சிதறும் குண்டுகளையும் எதிர்கொண்டு போர்க்களத்தில் மனம் கருகி வாழும் ஒரு அச்சமான, இருகிய மன நிலையை, இன்றைய ஊடகங்கள் வீட்டில் இருந்தபடியே நமக்கு தருகிறது.

காலையில் எழுந்து  நாம் பார்க்கும் செய்தித்தாள்கள் முதல் இரவு கண் மூடும் முன் வரையிலும் நமக்குள் பதியவைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், தேடிப்போய் பார்க்கும் திரைப்படங்கள் தரும் பண்பாட்டு,கலாச்சார அழிப்புகளும் நம்மை வேறு ஒரு வடிவத்திற்கு உருமாற்றம் செய்கின்றது.

முழுக்க முழுக்க சுய நினைவினை இழந்த ஒரு சமுகத்தை அது படைத்துக் கொண்டிருக்கின்றது. மனிதனை தன் விருப்பபடி ஆட்டி படைக்கும் இந்திய ஊடகங்கள். மனிதனின் மனநிலையை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இதைத்தான் பேச வேண்டும், இதைத்தான் பார்க்க வேண்டும்  இதைத்தான் வாங்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று எங்கிருந்தோ நாம் இயக்கப்படுகிறோம்.

இந்தியாவின் வளங்களை, மக்களின் உழைப்பினை சுரண்டி, பன்னாட்டு முதலாளிகளின் நிழல்களில் வாழும் முதலாளித்துவ சிந்தனை அடிமைகளும், சாதிய வர்க்க வேறுபாடுகளை கூர்மையாக்கி பிரிவினை காழ்ப்புணர்சிகளால் அரசியல் புரியும் சாதிய பார்பானியமும் இயல்பாகவே அதிகாரவர்கத்தின் அங்கமாகி இருப்பதால் இவர்களின் கைகளில் இந்திய ஊடகங்கள் சமுக கலாச்சார கொலை கருவிகளாக செயல்பட்டு வருகிறது.

உலக ஊடகங்களை ஒரு வலிமை மிக்க ஆயுதமாக உபோயோகிக்கும் சியோனிஸ யூதர்களைப் போலவே இந்தியாவின் யூதர்களாகிய பார்பனர்களும், மேல் தட்டு பார்பானிய சிந்தனையாளர்களும் தாங்கள் காலம் காலமாக  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடைபிடித்து வந்த மனுதர்ம,முதலாளித்துவ, ஃபாசிச கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கவும் தங்களது பொது எதிரிகளை அழிப்பதற்குமாக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிறது.ஆசியாவின் காஜர் சமுக கூட்டத்திலிருந்து தோன்றிய யூத-பார்பன சகோதர உறவு ஊடகத்துறையிலும் திட்டமிட்டபடி இனைந்தே செயல்படுகிறது.

மீடியா ஸ்டடி குரூப் என்ற அமைப்பும்  -   ஊடக ஆரச்சியாளர்கள் CSDS (Centre for the Study of Developing Societies)   இனைந்து நடத்திய ஆய்வுகள் பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி,மற்றும் இனையதள ஊடகங்கள் எல்லாம் உயர் சாதிய இந்துக்களின் கட்டுபாட்டில் இருப்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

பெரும்பான்மையாக 81% விழுக்காடு மக்கள் தொகை கொண்ட இந்துக்களின் ஊடக ஆதிக்கம் 97%  விழுக்காடாக உள்ளது ,உன்மையில் சாதி வாரியாக பார்க்கப்படும் போது பிற்படுத்தப்பட்டோர், தாழ்தப்பட்டோர் ,பழங்குடியின மக்கள் என இந்து மதத்தை பங்கிட்டு பார்த்தால் உயர் சாதி இந்துக்களின் (Brahmins, Kayasthas, Rajputs, Vaishyas and Khatris) கைகளில் தான் முழு ஆதிக்கமும் உள்ளது, அதிலும் பார்பனர்கள் மட்டுமே 49% விழுக்காடு ஊடகங்களை ஆதிக்கம் செய்கின்றனர்.

34% விழுக்காடு மக்கள் தொகை உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்கள் ஊடகங்களில் வெறும் 4% விழுக்காடு தான் இருக்கின்றனர். 16% விழுக்காடு மக்கள் தொகை உள்ள அட்டவனை மக்களும் ,8% விழுக்காடு உள்ள பழங்குடியின மக்களும் இந்த கணக்கெடுப்பில் அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் பின் தங்கியுள்ளதாக கூறுகிறது. இது பார்பனர்களால் பிற சாதிய இந்துக்கள் வஞ்சிக்கப் படுவதையே காட்டுகிறது, நிச்சயமாக பார்பனர்களின் ஆழுமையில் உள்ள ஊடகங்களினால் மற்ற இந்து சாதிய மக்களின் குரலாக ஒலிக்க முடியாது.           13% விழுக்காடு மக்கள் தொகை உள்ள இசுலாமியர்கள் வெறும் 3% விழுக்காடு மட்டுமே ஊடகத்துறைகளில் உள்ளனர். 2% விழுக்காடு மக்கள் தொகையுள்ள கிருஸ்துவர்கள் 13% விழுக்காடு பத்திரிக்கை துறையில் உள்ளனர்.  தலைசிறந்த 37 தேசிய செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுறியும் 300 மூத்த நிருபர்களில் 71% பேர் உயர் சாதி இந்துக்கள் என தெரியவருகிறது.  இந்த பார்பன ஊடக ஆக்ரமிப்புகள் இருக்கும் வரையிலும் நாம் ஊடகத்துறைகளில் சம நீதி கருத்துக்களையும்,சார்பற்ற செய்திகளையும் காணவே முடியாது.

நடு நிலை நாளேடுகள் என்று சொல்லக்கூடிய ஒரு சில ஊடகங்கள் கூட சுயமாக தனது கருத்துக்களை பதிவு செய்ய முடிவது இல்லை. ஆளும் வர்கத்தினரின், அடக்குமுறையாளர்களின், கருத்துக்களை பிரதிபளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய நாளேடுகள் இருக்கின்றன. அமெரிக்க யூத ஊடகங்களின் கருத்து கட்டமைப்பையே இந்திய ஊடகத்தின் தார்மீகமாக கொண்டு செயல்படும் நிலைதான் இந்தியாவில் தொடர்கிறது.

மக்களின் வளமான வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும், ஆரோக்கியமான சிந்தனை வளத்தை உருவாக்கும் நேர்மறை கருத்துக்கள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. பெரும்பான்மையான எல்லா ஊடகங்களிலும் வக்கிரங்களை விளைவிக்கும் செய்திகளும்,மனதை ஊனப்படுத்தும் கருத்தாக்கங்களாலும் எதிர்மறை கருத்துக்களை மக்கள் மனங்களில் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படுகிறது.

வேடிக்கை பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பண்பாடுகளும் கலாச்சாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தில் தொலைக்காட்சிகளில் கணவன் ,மனைவி நெருக்கமான பாடல் காட்சிகள் வந்தாலே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறு அலைவரிசையை மாற்றுவார்கள், ஒரு வித முகச்சுழிப்பும் குறைந்தபட்ச வெட்க உணர்வும் இருக்கும்.

ஆனால் இன்று பாலுணர்வை தூண்டும் மிகவும் அருவருக்க தக்க காட்சிகளையும் பாடல்களையும் நாம் தாராலமாக நம் வீடுகளுக்குள் அனுமதிக்கிறோம். நம் குழந்தைகளுக்கும் ஆடல் பாடல் என உற்சாகமூட்டி வளர்த்துவிடுகிறோம், இன்று குறைந்தபட்ச கூச்ச உணர்வுகள் கூட நம்மிடம் இல்லாமல் போய்விட்ட்து. இது குழந்தைகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற அச்ச உணர்வுகள் இன்று பெற்றோர்களிடமும் மங்கி விட்டது. நம்மை எதற்கும் பழக்கப்படுத்தி கொள்ளவைத்தது  தான் ஊடகங்களின் முதல் வெற்றியாகும்.

பொழுதுபோக்கு காட்சிகள் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் மிகவும் வெட்க கேடானது,ஆண்,பெண்  பாலின வேறுபாடுகளை மறந்து ஆடல், பாடல்கள் போட்டிகள், ரியால்டி ஷோக்கள் என்று மனிதனை போதையின் உச்சத்திற்கு கொண்டு செல்வதில் ஒவ்வொரு தொலைக்காட்சி நிருவனங்களும் போட்டி போடுகின்றன.

போதைகளின் உச்சத்தில் நம் சுயம் இழந்து சமுக அக்கறை குறைந்தவர்களாக வாழ்கிறோம்.அதனால் தான் பக்கத்தில் நம் இனம் கொன்று குவிக்கப்படும் போதும் கூட எந்த உணர்வும் இல்லாமல் டீ.வி பொட்டிக்குள் மானாட மயிலாட நிகழ்சிகளும் டீலா நோ டீலாவும் பார்த்து கொண்டு ஆத்மாவை அடகு வைத்துவிட்டு திரிந்தோம்.

அடிமைகளை முதலீடாக கொண்டு வணிபம் செய்த காலணியாதிக்கவாதிகள் நம்மை ஊடக அடிமைகளாக்கி பெரும் வணிகம் செய்து வருகின்றனர். ஊடகங்களின் ஒவ்வொரு அசைவுகளுக்கு பின்னாலும் வணிகத்தின் போட்டி இருக்கிறது,. இந்தியா போன்ற பெரும் சந்தைகளை தனதாக்கி கொள்ளும் பண்னாட்டு முதலாளிகளின் வர்த்தக வெறி இருக்கிறது.

ஆண்களை விட தொலைக்காட்சி ஊடகங்கள் பெண்கள் மீது மிகவும் மோசமானதொரு தாக்குதல்களை நடத்திகொண்டுள்ளது, ஒவ்வொரு வீட்டையும் தொலைக்காட்சி ஊடகங்கள் இழவு விழுந்த வீடாக மாற்றி கொண்டு வருகிறது ..தொடர்சியாய் அலுப்பு தட்டாமல் பார்க்கப்படும் சீரியல் நாடகங்களால் கூட்டு குடும்ப கலாச்சாரத்திற்கு வேட்டு வைக்கப்படுகிறது. நுகர்வு கலாச்சாரங்களை அதிகப்படுத்தியுள்ளது.

பண்பாடு காக்கப்படுவதாய் சொல்லப்படும் கிராமங்களில் கூட திருமணத்திற்கு முன்பே தனிக்குடித்தனம் போவதை பற்றி பேசுவது இயல்பாகிவிட்டது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் செத்து கொண்டு இருக்கிறது.

மனித உறவுகளை வெறுக்க வைக்கும் உக்திகளையும் கலாச்சார சீரழிவுகளையும் இந்த தொடர் நாடகங்கள் மூலமாகவும், பல ரியால்டி ஷோக்கள் (Reality show)மூலமாகவும் வீடு தேடி நுழைந்து பெண்களை சீரழிக்கின்றது. இன்னும் மனமுறிவுகளின் விகிதங்கள் எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக நடக்கின்றது.

ஊடகங்களின் பெரும் பிடிக்குள் இளைஞர்கள்  மாய உலகங்களில் வசித்து வருகின்றனர். ஆரோக்கியமான நட்பு வட்டாரங்கள் குறைந்து கொண்டே வருவதும் , தொடர்சியாய் இண்டெர்னெட், வீடியோ கேம்ஸ் என உட் புகுந்தவன் பின்பு நிரந்தரமாக மாய உலகத்தில் (3D -virtual world – online virtual community, Digital abuse  ) அவனுக்கு உறவுகள் உண்டாக்கப்படுகிறது .அங்கு தன் மனதில் இருக்கும் வக்கிரங்களையெல்லாம் ஒரு கற்பனை பாத்திரத்தின் மூலம் நிறைவேற்றி கொள்வதும் ,பின் அதனாலே மன நிலை பாதித்தவன் போல் திரிவதையும் நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்சியாகிவிட்டது.

இந்த இளைஞர்களின் செயல்பாடுகள் எல்லாம் பெற்றோர்களுக்கே புதிராகவே இருக்கும்.இந்த மனித சமுக உறவுகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து நிரந்தரமாக சமுக கேடுகள் புரிபவர்களாக மாறிவருகின்றனர்.

டீ.வி சீரியல் பார்க்கும் பெற்றோர்கள் பிள்ளைகளின் உள்ளுணர்வுகளை புரியும் திறனை இழந்து விடுகின்றனர். அவன் இருக்கும் இடமே தெரியாது, வருவான், போவான் அவ்வளவுதான், ரொம்ப கூச்ச சுபாவம் என முடித்து கொள்வார்கள். கற்பழிப்பு, கொலை, திருட்டு, போதை பழக்கம் என்று எல்லா குற்ற செயல்களிலும் ஈடுபடுவது 30 வயதிற்கும் குறைவான இளைஞர்கள் தான்..அதிலும் எந்த நோக்கமே இல்லாமல் குற்றங்களில் ஈடுபடுவதும் வேடிக்கை மற்றும் சாகசத்திற்காக குற்றங்கள் புரிவதும் இளைஞர்களிடம் அதிகமாகி உள்ளது இதற்கு முக்கிய காரணம் இந்த ஊடகங்கள் தான்.

அமெரிக்காவில் கருப்பின இளைஞர்களின் தன்னெழுச்சி அதிகமாகி கொண்டிருந்த நேரத்தில் அவர்களின் எழுச்சியை கட்டுபடுத்த உளவுத்துறை கருப்பின இளைஞர்களுக்கு போதை பழக்கங்களை உருவாக்கி பின் அதன் விளைவுகளால் அவர்கள் பல சமுக குற்றங்கள் புரிந்து குற்றவாளிகளாய் ஒதுக்கப்பட்டார்கள். அவர்களின் இன எழுச்சியும் அடங்கிபோனதாக வரலாறு.

அதே போல் தான் நம் இளைஞர்களையும் திட்டமிட்டு கலாச்சார சீரழிவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வீரியம் இழந்த குற்ற உணர்வுள்ள அடிமைகளாக உருவாக்கபடுகின்றனர்.

இளம் பெண்களை பற்றி கேட்கவே வேண்டாம்.. சினிமா, இனையதளங்கள் என ஊடகங்கள் காட்டும் நாகரிக மோகத்தில் அவர்களுக்கு எல்லைகளே கிடையாது. தமிழகத்தின் சிற்றூர்களின் பெண்கள் கூட இனையதளங்களிலும், அலைபேசி பதிவிறக்கங்களிலும் நிர்வாண படங்களாகவும், கிளிப்புகளாகவும் உலா வருகின்றனர். அதிக பாய் ஃபிரண்டஸ் இருப்பது தான் மிகவும் கவுரவமாகவும், அவர்களுடன் மிகவும் தாராளாமாக இருப்பதுதான் நாகரிகமாகவும் கருதுகின்றனர். எதிர்காலங்களில் அதிக மன உளைச்சல்களுக்கு ஆளாகி அவர்களின் வாழ்க்கை பரிதாபதற்கு உரியதாகி போகிறது. (தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லும் பெண்கள் கருக்கலைப்பு செய்துவருவது மிகவும் அதிகரித்து வருகிறது).

மேடைகளில் அறைகுறை ஆடைகளுடன், பிற ஆன்களுடன் நெருங்கி ஆடும் போது தன் பிள்ளைகள் இன்னும் அதிகமான உணர்சிகளை காட்டியிருந்தால் நிச்சயம் அவள் போட்டியில் தேர்வாகியிருப்பாள் என சொல்லி வருத்தப்படும் மன நிலை கொண்ட பெற்றோர்களை இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் உருவாக்கி வருகிறது. வீட்டுகுள்ளே ஆபாசம் வந்துவிட்ட்து.இந்தியாவை தூக்கி நிறுத்தும் இளம் தலைமுறையினறை, இந்த ஊடகங்கள் உருவாக்கி வருகிறது.

பத்திரிக்கை ஊடகங்களின் தரத்தை என்னவென்று சொல்வது?, இலவச ஆண்மீக இனைப்புகளும்,இராசி பலன்களும் இல்லாத பத்திரிக்கைகளே இல்லை என்று சொல்லாம்,பகுத்தறிவை பாடையில் ஏற்றி கற்காலத்திற்கே கொண்டு செல்லும் அவநிலை உள்ளது. ராசி பலன்களின் அமைப்புகள் சரியாக இருந்தால் ராக்கெட் மட்டுமல்ல பாறங்கல் கூட பறக்கும் என்று நம்பும் அளவிற்கு பத்திரிக்கையின் தரம் உள்ளது. புத்தி பேதளிக்கும் அளவிற்கு ஆண்மிக குப்பைகள், வெறுப்பு விளைவிக்கும் கருத்து திணிப்புகள், பத்திரிக்கையாளரின் மன நிலைக்கு ஏற்ப சார்பு நிலை செய்திகள்,கருத்துக்கள் உருமாற்றம், கருத்து புறக்கணிப்பு, பதட்டம் விளைவிக்கும் விளம்பரங்கள், மறக்கடிக்கும் மூளையை பழுதாக்கும் செய்திகள், அதிகமாய் சினிமா செய்திகள், நடிகை நடிகர்களின் அந்தரங்கங்கள் என்று குப்பை கலவைகளை தான் பெரும்பான்மையான செய்தி ஊடகங்கள் கடை விரித்து உள்ளது.

ஊடகத்துறையில் 90% ஆக்கரமிப்பு செய்துள்ள பார்பன ஆதரவு, பார்பன மனநிலை-ஊடுறுவல்கள்  நியாயமான சமுக நீதிக்கான குரல்களை புறக்கணிக்கிறது. சொல்லப்படும் வார்த்தைகளில் ”உருத்தலான” வார்த்தைகளை மட்டும் தனியாக கோடிட்டு காட்டியும், பார்பன தந்திரங்களால் கருத்துக்கள் உருமாற்றம் செய்யப்பட்டு சமுகத்திற்கு எதிரான கருத்தாக திருப்பி விடுதல் என்பதெல்லாம் நிச்சயமாக ஊடக தீவிரவாதம் தான்.

சினிமா ஊடகங்களை பற்றி சொல்லத் தேவையே இல்லை, ஒரு இலக்கியவாதி நண்பர்  சொல்வது போல், இந்திய திரைப்படங்கள் புறாணங்களின் தொடர்சியாக தான்  இருக்கிறது, இங்கு திரைப்பட நாயகர்கள் கடவுளராக காட்டப்படுகிறார்கள்.

”நான் அவரோட ஃபஸ்ட் டைம் பன்னும் போது கொஞ்சம் டிஃபிக்கள்டா இருந்தது, தென் நெக்ஷ்ட் டைம் பன்னும் பொது ஈசியா இருந்தது, எனக்கு நிறைய சொல்லி தருவார், என்ன அவர் ரொம்ப  என்கெரேஜ் பன்னுவார், இப்ப எல்லாம் நான் யார் கூட வேண்டுமானாலும் பன்னுவேன் “ என்று தன் அனுபவங்களை ததும்பி ததும்பி பகிர்ந்துகொள்ளும் நடிகைகளின் பேட்டிகள். சுதந்திர தினமாகட்டும், விழாக்காலமாகட்டும் தொலைகாட்சிகளை அடைத்து கொண்டிருக்கும் இந்த ரிகாட் டான்ஸ் குருப்ஸ். இவர்கள் எல்லாம் சுதந்திரப்போராட்ட தியாகிகளா ஏன் இந்த முக்கியத்துவம்?

24 மனி நேரமும் சிரிக்க  அலைவரிசைகள், 24 மனி நேரமும் ஆடல் பாடல் என அலை வரிசைகள், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஒரு 24 மனி நேர அலைவரிசை....அடுத்து முதியவர்களுக்கு..எல்லாருக்கும் ஒவ்வொரு அலைவரிசைகள் வந்துகொண்டு இருக்கிறது.

தமிழக மக்கள் நாடகத்தின் மீது கொண்ட தீராத வெறியால் டீ.வி சீரியல் பார்பதற்கென்றே தனி சேனல்களை விரைவில் தொடங்கிவிடுவார்கள். அப்படியே நம் வீட்டு பென்களையும் டீ.வி பொட்டிக்குள் போட்டு அடக்கம் பண்ணிவிடலாம். நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள், உங்களிடம் பேசுவது கனவா, நினைவான்னே தெரியல, உங்க வாய்ஸ் ”சோ ஸ்விட்” என்று வெட்டியாய் தொலைபேசியில் குழைந்து கொண்டிருக்கும்  நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் ..( வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுடன் ஒரு நாள் கூட இப்படி பேசி உபசரிப்பு செய்திருக்க மாட்டார்கள்). ஆதிக்க சக்திகளின் விரும்பிய படி இங்கு மனிதர்கள் வார்க்கப்படுகிறார்கள்.

நம் பண்பாட்டு கலாச்சாரங்களை நம் சொந்த செலவிலேயே குழி தோண்டி புதைக்கிறோம். அமெரிக்க யூத பார்பனர்களின் கருத்தாக்கங்கள் நம் மூலைக்குள் நம்மையும் அறியாமல் திணிக்கப்படுகிறது. நம் வரலாறு நமக்கே தெரியாமல் அழிக்கப்படுகிறது.அடுத்த தலைமுறைக்கான சமுக உரிமைகளை ஏகாதிபத்திய சியோனிஸ- பார்பனர்களின் திட்டமிடல் படியே நடக்கும் அவலம் உள்ளதால் , இப்பொழுதே நாம் விழிப்படைய வேண்டும்.

இந்த தலைமுறையும் ,இனி வரும் தலைமுறையும் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் வாழ்வதற்கும், கலாச்சார பண்பாட்டு வரலாற்றினை காப்பதற்கும், அன்பினை வளர்க்கும் ஆரோக்கியமான குடும்ப சூழல்கள் உருவாகுவதற்கும் நாம் ஊடகங்களை மறு வார்ப்பு செய்ய வேண்டும், இந்திய ஊடகங்களில் நமது ஆளுமை அவசியமாகிறது. 

- மால்கம் X ஃபாருக் இராஜகம்பீரம்

Pin It