அன்பிற்குரியீர்! வணக்கம்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அரசியல் - கருத்தியல் நிலைப்பாடுகளையும் நடைமுறைச் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்து வருவீர்கள் என நம்புகிறேன். தமிழ்த் தேசிய விடுதலைக்கும் சமூக நீதிக்குமான கொள்கைவழியைத் தொடர்ந்து பற்றி நிற்கிறோம். பதவி அரசியலைப் புறந்தள்ளிப் போராட்ட அரசியலை உறுதியாகக் கடைப்பிடிக்கிறோம். மக்கள் நலன் கருதி ஒன்றுபட்ட இயக்கங்களில் தொடர்ந்து எங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து வருகிறோம். உணர்வு அரசியலில் மயங்காமல் அறிவார்ந்த அரசியல் களத்தில் ஊன்றி நிற்கிறோம். தமிழீழம் உள்ளிட்ட தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட அரசியலில் எமது இடம் சிறிதென்றாலும் இன்றியமையாத ஒன்றென்னும் அறிந்தேற்புப் பெற்றுள்ளோம்.

எம் கொள்கை நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் திங்கள்தோறும் வெளிவரும் உரிமைத் தமிழ்த்தேசம் மின்னிதழில் உங்கள் பார்வைக்குப் படைத்து வருகிறோம். அறிவுக்குரல் வாயிலாகவும் புரட்சியச் சிந்தனைகளை விரிய விதைத்து வருகிறோம். எம் விடாமுயற்சியின் பயனாக இயக்கம் சீராகவும் உறுதியாகவும் வளர்ந்து வருகிறது. அறிவியல் நோக்கும் ஈகவுணர்வும் உழைப்பார்வமும் கொண்ட புதிய ஆற்றல்களை இயக்கத்தின் பால் ஈர்த்துள்ளோம்.

ஆனால், இன்றைய அரசியல் சூழலின் தேவைகளை நிறைவு செய்ய எமது வலிமையும் வளர்ச்சியும் போத மாட்டா என்பதை உணர்ந்துள்ளோம். இயக்கத்தின் பரவலான வளர்ச்சிக்கும் மக்கள்-பணிக்கும் மேலும் முழுநேர, பகுதிநேர ஊழியர்களைக் களமிறக்க வேண்டும். சமூக ஊடகங்களை இன்னும் விரிவாகப் பயன்படுத்தவும், மெய்ந்நிகர் அரசியல் செயல்நிரலைக் கடைப்பிடிக்கவும் தொடர்ச்சியான பொருள்வளம் தேவைப்படுகிறது. இதற்கென எம் தலைமைக் குழுவில் பேசி முடிவெடுத்து இந்தத் திங்கள் பங்களிப்புத் திட்டத்தை அறிவிக்கிறோம்:

எம் இயக்கப் பணிகளில் உங்களுக்கு நம்பிக்கையும் அக்கறையும் இருக்குமானால் தொடர்ந்து ரூ.100/- முதல் 2000/-க்குள் திங்கள் பங்களிப்பாகத் தாருங்கள். இது ஓராண்டுக்கான திட்டமாகும். இதற்கான படிவம் நிரப்பித் தந்து இத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுகிறேன். சிறுதுளி பெருவெள்ளம்!

தமிழர் விடுதலைப் போர்முழக்கம்! சமூகநீதித் தமிழ்த்தேசம்!

            நன்றி! தோழமையுடன்

பொதுச்செயலாளர்: தியாகு / சென்னை /04/05/2020

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திங்கள் பங்களிப்புப் படிவம்

பெயர்:

 

 

ஊர் / முகவரி:

 

 

 

தொலைபேசி / புலனம் எண்:

 

 

மின்னஞ்சல் முகவரி:

 

 

திங்கள் பங்களிப்பு:

 

ரூ.

திங்கள்தோறும் பங்களிப்பு நாள்:

 

 

பங்களிப்பு வழி (நேரில்/ வைப்பகக் கணக்கு/ ஏனைய வழி)

 

 

இயக்கத்திடம் உங்கள் எதிர்பார்ப்பு:

 

 

 

கையொப்பம்

          நாள்

Pin It