(இத்தாலிய பாசிச எதிர்ப்புப் பாடல் சாவ் பெலா ராகத்தில் பாடவும்)

மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை
நாங்கள் காத்திடுவோம்
பாஜக போ போ போ
ரஹிமும் நாமே, ராமும் நாமே
நாங்கள் பிரிய மாட்டோமே....

இஸ்லாமியத் தோழர், ஈழத் தமிழர்
இந்நாட்டின் குடிமக்கள்
பாஜக நீ போ போ
அவரெம் சொந்தம், எங்களின் ரத்தம்
நாங்கள் பிரியமாட்டோமே....

குடியுரிமைச் சட்டம் மனு நீதித் திட்டம்
நாங்கள் தீவைப்போம்
பாஜக போ போ போ
சமூகநீதி எங்கள் உரிமை
நாங்கள் பாதுகாப்போமே...

கைபர் போலன் திறந்திருக்கு
பாஜக போய்விடு போய்விடு
போ போ போ
போகாமல் நீயே அடம்பிடித்தால்
நாங்கள் துரத்தி அடிப்போமே....

இளையவரும் இங்கே, முதியவரும் இங்கே
இணைந்து போராடுவோம், போராடுவோம்
போராடுவோம்...
மரணபயம் எங்களுக்கு இல்லை
நாங்கள் போராடி வெல்வோமே!
நாங்கள் போராடி வெல்வோமே....

- செம்போத்து

Pin It