“இந்து மதத்தில் பிறந்த காரணத்தால் மட்டுமே நான் ஓர் இந்துவாக இருக்கவில்லை. அதைநான் விரும்பித் தேர்ந்தெடுத்த நம்புகின்றவன் என்பதால் நான் ஓர் இந்து. என் கருத்துக்களின்படி இந்து மதத்தில் உயர்வு தாழ்வு கிடையாது. வருணாசிரமத்தையே எதிர்த்துப் போராட வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கர் விரும்புகின்றபோது நான் அவருடைய அணியில் இருக்க முடியாது. ஏனெனில் இந்து மதத்தில் பிரிக்க முடியாத கூறு வருணாசிரமம் என்று நம்புகிறவன் நான்''

– மகாத்மா காந்தி

இவர் ஒரு மகாத்மாவா? இவரைப் போய் மகாத்மா என்று அழைப்பது நியாயமா? இவரை ஏன் வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் மகாத்மா என அழைத்தார்?

காந்தி மக்களின் பொது நலனுக்காகப் பாடுபட வந்தாலும் அவர்களுக்கு மன ஆறுதல் தருபவராகவும், பொதுமக்கள் அனைவரையும் ஒன்றாகக் கருதுபவராகவும் இவர் இருப்பார் என்பதால் தாகூர் இவரை மகாத்மா என்று அழைத்திருப்பார். ஆனால் இவரோ, காலகாலமாய் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடியலுக்காகப் பாடுபட முன் வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களைத் தனது எதிரியாகப் பாவித்த அதோடு, இந்து மதத்தில் “வருணாசிரமம்'' பிரிக்க முடியாத ஒரு கூறு என்று கருதுகிற ஒருவரை நாம் மகாத்மா என்று அழைக்கலாமா?

*** 

வள்ளலார் மதவாதியா?

வள்ளலார் மதங்களை ஏற்றுக் கொள்ளாத இறை நெறியாளர். அவரது இறை நெறியாகிய சுத்த சன்மார்க்கம், சமுதாயச் சிந்தனையை உள்ளடக்கியது. சாதி, மத, சமய, கோத்திர, குல, இன, மொழி நிற வேறுபாடுகள் உள்ளிட்ட எவ்வித வேறுபாடும் இல்லாத உலக சமுதாய அமைப்பே அவரது சமுதாயக் கோட்பாடு ஆகும்.

***** 

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதும், மலையைச் சுற்றி முள்வேலி அமைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்தலாமா என ஆந்திர அரசு ஆராய்ந்து வருகிறது.

"தினகரன்', 06.01.2011

மலையைச் சுற்றி முள்வேலி அமைத்துப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு முன், ஆந்திர அரசு ஏழுமலையானோடு உட்கார்ந்து பேசி, அவரின் அனுமதியைப் பெற்ற பிறகே பாதுகாப்புப் பணியைச் செய்வதே நல்லது. ஏனெனில் பொதுமக்கள் ஏழுமலையான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை இந்த நடவடிக்கை மூலம் குறைய வாய்ப்பு உண்டு.

Pin It