மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் சட்டத்திற்கான பாதுகாப்பு அமைப்பை "நீதியின் குரல்' என்ற பெயரில் நிறுவியிருக்கும் "நீதியின் குரல்' சி.ஆர். பாஸ்கரன், கடந்த 09-09-2012 அன்று சென்னை தியாகராய நகரில் தமிழகம் தழுவிய தகவல் அறியும் ஆர்வலர்களின் ஆலோசனைக் கூட் டத்தை நடத்தி, தமிழக தகவல் ஆணையம் முழுமை யாக செயல்படவும், அது தொடர்பாக செய்ய வேண் டிய மாற்றங்கள் குறித்தும், தமிழக தகவல் ஆணைய மும் அரசும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய நடவ டிக்கைகள் குறித்தும் பல தீர்மானங்களையும், ஆலோ சனைகளையும் அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் துவக்கம் முதலே ஈடுபாடு காட்டி வரும் சி.ஆர். பாஸ்கரன் தமிழகத்தில் செயல்படாமல் முடங்கிப் போயிருந்த தகவல் அறியும் ஆணையத்தை இயங்க வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தலைமை தகவல் ஆணையர் உட்பட 10 ஆணையர்கள் இருக்க வேண்டிய தகவல் அறியும் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையராக ஸ்ரீபதியும், ஆணை யர் சீனிவாசனும் மட்டுமே பதவி வகித்து வந்தனர். போதிய அள விற்கு தகவல் ஆணையர்கள் இல் லாததால் மேல் முறையீட்டு மனுக்கள் ஆயிரக்கணக்கில் தேங் கிக் கிடக்கின்றன.

1 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான மேல் முறையீட்டு மனுக்கள் நிவர்த்தி செய்யப்படா மல் கிடப்பில் போடப்பட்டுள் ளன என்ற தகவலை எழுத்துப் பூர்வமாகவே மாநில தகவல் அறியும் ஆணையத்திடமிருந்து கடந்த ஆண்டு மத்திய தகவல் அறியும் ஆணையத்திற்குச் சென்றது.

ஆயினும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படாமல் இருந்தது. தகவல் அறியும் ஆணையம் முடங்கிப் போயிருப்பது குறித்து மத்திய தகவல் ஆணையமோ, மாôநில தகவல் ஆணையமோ அலட்டிக் கொள்ளாத நிலையில், நீதியின் குரல் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந் திருக்கிறார் சி.ஆர். பாஸ்கரன்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன் றம், தகவல் அறியும் ஆணையத்தி டம் பல வினாக்களை எழுப்பிய தோடு இதற்கு உடனடியாக தீர்வு காணுமாறு உத்தரவிட்டது.

இதற்கிடையில், 9 தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீண்டும் "நீதியின் குரல்' - நீதிமன்றத்தில் குரலெ ழுப்ப... "நீதியின் குரலை' செவிம டுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான யூசுஃப் இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 4 வாரங்களுக்குள் தகவல் அறியும் ஆணையர்களை நிய மிக்க வேண்டும் என உத்தரவிட் டுள்ளது.

இதனையடுத்து துரித கதியில் இயங்கிய தமிழக அரசு 5 தகவல் ஆணையர்களை நியமனம் செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நியமனம் தொடர்பாக தமிழக ஆணைய ருக்கு பரிந்துரைகள் செய்யப் பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.

இன்னும் நான்கு ஆணையர் கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த நியமனங் களை தமிழக அரசு எப்போது செய்யும் என்று தெரிய வில்லை.

“நீதிமன்ற உத்தரவை யடுத்து தமிழக அரசு விழித்துக் கொண்டு 5 ஆணையர்களை நியமித்துள்ளது. ஆனால் மீதமுள்ள 4 ஆணையர்களின் நிய மனம் குறித்து எதிர் கட்சியோ ஏனைய கட்சிகளோ அக்கறை செலுத்துவதாகத் தெரி யவில்லை...'' என்று அதிருப் தியை வெளிப்படுத்தும் "நீதியின் குரல்' சி.ஆர். பாஸ்கரன்,

“9 ஆணையர்கள் நியமனம் செய்யப்பட வேண்டிய இடத்தில் 5 ஆணையர்கள் நியமனம் செய் யப்பட்டிருப்பது வரவேற்கத் தகுந்ததுதான் என்றாலும் இதில் தமிழக அரசு பாதி கிணறைத் தான் தாண்டி இருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத்தான் பல உண்மைகளும், ஊழல்களும் அம்பலமாகி வருகின்றன. ஆனால் தகவல் அறியும் ஆணை யம் முடங்கிக் கிடந்தால் ஊழல் கள் வெளிப்பட வாய்ப்பே இருக் காது. எனவே ஆணையம் முழு மையாக செயல்பட வேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஆணை யர்களும் நியமிக்கப்பட வேண்டி யது அவசியமாகும்.

ஆணையர் நியமனம் குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் இருப்பதாகத் தெரிகிறது. சட்ட வரம்பிற்குட்பட்டு, பரிசீலனை செய்து மீதமுள்ள ஆணையர்க ளையும் தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்...'' என்கிறார்.

தமிழக சட்டமன்றத்தில் தகவல் அறியும் ஆணைய ஆண் டறிக்கையை வருடந்தோறும் சபையில் விவாதத்திற்கு வைத்து ஏற்றுக் கெள்ள வேண்டும் என்கிற நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய அதி முக ஆட்சியிலும் பின்பற்றப்பட வில்லை.

6 வருடங்களாகவே இது குறித்து தமிழக சட்டமன்றம் அலட்டிக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதை யும் சுட்டிக் காட்டி தமிழக முதல் வருக்கும், தலைமைச் செயலாள ருக்கும் "நீதியின் குரல்' அமைப் பின் சார்பில் கடிதம் எழுதப் பட்டதைத் தொடர்ந்து,

2006-07ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை மட்டும் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஏனைய ஆண்டுகளின் ஆண்டறிக்கைகள் இதுவரை வைக்கப்படாததன் மர்மம் என்ன? என்று கேள்வியெ ழுப்புகின்றனர் தகவல் அறியும் ஆர்வலர்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள தகவல் அறி யும் சட்ட அலுவலர்கள் சரியான தகவல்களை வழங்க மறுப்பது அல்லது அலட்சியமாக பதில ளிப்பது என்ற வகையில்தான் செயற்படுகின்றனர்.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொ ருவருக்கும் அரசு மற்றும் அரசுத் துறைகளின் வெளிப்படையான தன்மை குறித்து தெரிந்து கொள்ள முழு உரிமை அளித்துள் ளது தகவல் பெறும் உரிமைச் சட்டம். இது ஏட்டளவில்தான் இருக்கிறது. குடிமக்களுக்கான இந்த உத்தரவாதத்தை மட்டும் கொடுத்து விட்டு அந்தத் தகவல்க ளைத் தரும் ஆணையத்தை முடக்கி வைப்பது குடிமக்களை ஏமாற்றும் செயல் என்பதில் சந் தேகமில்லை.

ஜனநாயகத்தன்மையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கார ணிகளில் தகவல் அறியும் உரி மைச் சட்டம் முக்கியமானது. எனவே ஜனநாயகத் தன்மைக்கு இடையூறு ஏற்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமி ழகத்தில் தகவல் ஆணையம் சீராக செயல்பட அத்தனை நடவ டிக்கைகளையும் எடுக்க வேண்டி யது தமிழக அரசுக்குத்தான் முதல் கடமையாக உள்ளது.

- ஹிதாயா

Pin It