மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீறியும், வன்முறையைத் தூண்டியும் அரசியல் நடத்தி வருகி றார் நவநிர்மாண் சேனா கட்சி யின் தலைவரான ராஜ் தாக்கரே.

பீகாரிகள் குற்றம் செய்பவர் கள்; அவர்கள் மஹாராஷ்டிரா விற்குள் ஊடுறுவுகிறார்கள் எனப் பேசி சமீபத்தில் பீகாரிகளை கொந்தளிக்க வைத்தார் தாக்கரே. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “மலிவான அரசியல் செய்யும் ராஜ்தாக்கரேவிற்கு விளம்பரப் பசி அதிகம். அதனால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார்'' என தாக்கரேவை விமர்சித் ததோடல்லாமல், “மஹாராஷ்டிரா அரசு, ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. வெளிப்படையாக சட்டத்தை மீறி வன்முறையை தூண்டி வரும் தாக்கரேவை கட்டுப்படுத்த முடியாத அரசு, பயங்கரவாதத்தை எப்படி சமாளிக்கும்...'' என்றெல் லாம் மஹாராஷ்டிரா அரசையும் ஒரு பிடி பிடித்தார்.

வன்முறைப் பேச்சுக்கள் மூலம் மராட்டிய மக்கள் மத்தியில் தம்மை மராட்டியர்களின் பாது காவலராக காட்டிக் கொள்ள முயற்சிக்கும் தாக்கரே - கடந்த வாரம் மீடியாக்களையும் கடுமை யாக மிரட்டியிருந்தார். தனக்கு எதிரான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை, “என்னைப் பற்றிய "பிரேக்கிங் நியூஸ்' போடும் சேனல்கள் உரிய விளைவுகளைச் சந்திக்கும். இந் தச் சேனல்கள் எல்லாமே எப் பொழுதும் பிரேக்கிங் செய்தியை (?!) மட்டுமே போட வேண்டிய நிலை ஏற்படும்...'' என்றும் மிரட் டியிருந்தார்.

தாக்கரேவின் அராஜகம் எல்லை மீறிப் போவதாக நினைத்த லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் அன்ஷூமன் மிஷ்ரா என் பவர், தாக்கரேவுக்கு செருப்பு மாலை போடுபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு தருவேன் என கடந்த வாரம் அறிவிப்புச் செய்திருக்கிறார்.

அன்ஷூமன் மிஷ்ரா பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள அறிக் கையில், தாக்கரேவுக்கு செருப்பு மாலை போடுபவர்களுக்கு மட்டு மல்ல... இராக்கில் முன் னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை விசியெறிந்த ஒரு பத்திரி கையாளரைப் போன்று ராஜ் தாக்கரே மீது ஷூவை வீசு பவருக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்படி ராஜ் தாக்கரே மீது ஷூவை வீசு பவருக்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ப நியூ யார்க் கிலோ அல்லது லண்டனிலோ வேலை வாய்ப்பையும் ஏற்படுத் தித் தருவேன். தாக்கரே மீது ஷூவை வீசுபவரின் வாழ்நாள் முழுவதற் குமான பாதுகாப்பை உறுதிப்ப டுத்தும் வகையில் இந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அன்ஷூமன் மிஷ்ரா, மஹாராஷ் டிராவிலிருந்து பீஹாரிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று மிரட்டி வரும் ராஜ்தாக்க ரேவை கடுமையாக கண்டித்துள் ளார்.

ராஜ் தாக்கரேவின் மிரட்டல் பீஹாரிகளுக்கு மட்டும் விடுவிக்கப்பட்டதல்ல... மாறாக, இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் விடுவிக்கப் பட்ட மிரட்டல் அது என்றும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் மிஷ்ரா.

இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் விடுப்பட்ட சவால்தான் ராஜ் தாக்கரேவின் அச்சுறுத்தல் என்று வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் உணருகிறார்.

ஆனால், நமது மத்திய அரசோ, மஹாராஷ்டிரா மாநில அரசோ இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் ராஜ் தாக்கரே மீது இந்த அரசு கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றன.

மும்பையில் மிகப் பெரும் கலவரம் நிகழ்ந்து பல உயிர்கள் பலியாகும்வரை தாக்கரேவை இந்த அரசுகள் விட்டு வைத்திருக் கும் என்றுதான் தெரிகிறது.

மத்திய, மாநில அரசுகள் தாக்கரேவைக் கண்டு பயப்படு கின்றன என்று நினைத்தாலோ என்னவோ அப்படியாவது தாக்க ரேவை மக்கள் மத்தியில் அவமா னப்படுத்தி, செருப்பால் அடி வாங்கத் தகுதி பெற்ற அரசியல் வாதிதான் தாக்கரே என்று உணர்த்துவதற்காக மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கி றார் அன்ஷூமன் மிஷ்ரா.

- அபு

Pin It