மும்பை போலீஸின் கொடூர முகம்

அஸ்ஸாம் மற்றும் மியான்மர் முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து மும்பை யில் கடந்த ஆகஸ்டு 11ம் தேதி ரஸா அகாடமி என்ற அமைப்பு நடத்திய பேரணி வன்முறையில் முடிந்த செய்தி மக்கள் ரிப்போர்ட் வாசகர்கள் அறிந்ததே! இதன் ஃபாலோ அப் செய்தியாக கடந்த செப்டம்பர் 01-07, 2012 தேதியிட்ட இதழில் "முஸ்லிம்கள் மீது வழக்குகளை ஜோடித்த மும்பை போலீஸ்' என்ற தலைப்பில் வெளியான செய்திக் கட்டு ரையில், மும்பை வன்முறை நிகழ்ந்தபோது அவ்வழியே சென்ற முஸ்லிம்க ளைக் கைது செய்து - கலவரத்திற்கு காரணமான வர்கள் என்று அவர்களை மும்பை போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தியதையும், அதில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் அப்பாவி கள் என்பதையும் எழுதியிருந்தோம்.

இந்தத் தகவலை உறுதிப்படுத் தும் வகையில், அதாவது அப் பாவி முஸ்லிம்கள் மீது மும்பை போலீஸ் பொய்யாக வழக்கு களை ஜோடித்திருக்கிறது என்ப தற்கு சாட்சி சொல்கிறது இங்கே வெளியாகியிருக்கும் புகைப்படக் காட்சி.

இப்புகைப்படத்தில் மும்பை போலீஸார் ஒருவரைப் பிடித்து தாக்குகிறார்கள். இந்தத் தாக்கு தல் ரஸா அகாடமி நடத்திய பேரணியின்போது நிகழ்த்தப் பட்ட தாக்குதல்தான்.

போலீஸாரால் தாக்கப்படுபவர் கலவரத்தில் ஈடுபட்டவரல்ல... அவர் ஒரு புகைப்படக் கலைஞர். "மிட் டே' என்கிற ஆங்கில பத்திரி கையின் மூத்த புகைப்படக் கலை ஞர் அதுல் கும்ளேதான் அவர். இவரைத்தான் கொடூரமாகத் தாக்கியது மும்பை போலீஸ். தாக்கிய தோடல்லாமல் அவரது கேமிராவை சேதப்படுத்தி, அதை அவரிடமிருந்து பிடுங்கியிருக்கிறது.

கேமிராவை பிடுங்குவதற்கான முயற்சியில் போலீஸ் ஈடு பட்டதற்கு காரணம் சொல்லத் தேவையில்லை. அப்பாவி மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் கேமிராவில் பதிவாகி விட்டால் அது பின்னர் தங்களுக்கு எதிரான ஆதரமாக அமைந்து விடும் என்ப தில் போலீஸ் கண்ணும் கருத்து மாக இருந்துள்ளது.

"தடியடி மூலம் கும்ளேவைத் போலீஸ் தாக்கியதில் அவருக்கு தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. கேமி ராவை பிடுங்கி அதன் லென்சு களை நொறுக்கியுள்ளது போலீஸ். தான் ஒரு பத்திரிகையாளர் என்று விளக்கம் தருவதற்குக் கூட அதுல் கும்ளேவிற்கு போலீஸ் அவகாசம் அளிக்கவில்லை...' என தனது புகைப்படக்காரர் தாக்கப் பட்டிருப்பது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது "மிட் டே' நாளிதழ்.

ஆனால், அதுல் கும்ளே தாக் கப்பட்டது குறித்து மும்பை போலீஸ் அளித்துள்ள விளக்கம் தான் மும்பை போலீஸின் முஸ் லிம் விரோதப் போக்கு எந்தள விற்கு தீவிரமாக உள்ளது என் பதை அம்பலப்படுத்துவதாய் உள்ளது.

“அதுல் கும்ளே அடையாளம் தெரியாத நிலையில் தாக்கப் பட்டு விட்டார். கும்ளே தாடி வைத் திருந்த காரணத்தால் அவர் முஸ் லிமாகத் தெரிந்தார். அதனால் அவரை தாக்கி விட்டோம்...” என கொஞ்சமும் குற்ற உணர்வோ, கடமை உணர்வோ இல்லாமல் கூறி யிருக்கிறது மும்பை போலீஸ்.

மும்பை போலீஸின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது இந்த விளக்கம். கலவரத்தில் ஈடு பட்டவர்கள் மீது தடியடித் தாக் குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தை விட கண்ணில் படும் முஸ்லிம்களை அடித்து நொறு க்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான் போலீஸாரின் எண்ணமாக இருந்திருக்கிறது.

இந்த அடிப்படையில்தான், கலவரம் குறித்து விசாரித்து வரும் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீஸ், வன்முறை நிகழ்ந்த தினத்தில் கடைத் தெருவுக்குப் போன அப்பாவி முஸ்லிம்களை யும், ரஸா அகாடமி நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர் கள் வன்முறை களேபரத்தின் போது தவறவிட்ட செல்போன் களில் இருந்த முஸ்லிம் பெயர்க ளைக் கண்டறிந்து அவர்களிடம், “உங்கள் நண்பரின் செல்போனை பெற்றுச் செல்லுங்கள்” என்று காவல் நிலையத்திற்கு அழைத்து அப்படி வந்த - கலவரம் குறித்தே அறியாத முஸ்லிம்களையும் கைது செய்து கணக்கு காட்டி இருக்கிறது.

இதில் அப்பாவி முஸ்லிம்கள், பேரணியில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் என்று மாத்திரமல்ல - முஸ்லிம் பத்திரிகையாளராக இருந்தாலும் அவர் போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பார் என்பதைத்தன் அதுல் கும்ளே மீதான தாக்குதல் உணர்த்துகி றது.

மீண்டும் புகைப்படத்தைப் உற்று நோக்குங்கள்... அதுல் கும்ளே கேமிரா பையை வைத்தி ருக்கும் நிலையில்தான் போலீ ஸாரிடம் போராடுகிறார். ஆக, அவர் பத்திரிகையாளர் என்று தெரிந்தேதான் அதுவும் முஸ்லிம் பத்திரிகையாளர் என்று தெரிந் தேதான் அவர் மீது வெறி நாய்க ளாகப் பாய்கின்றனர் மும்பை போலீஸார்.

நாம் அவ்வப்போது எழுதி வருவதைப்போல நாட்டின் ஒட்டுமொத்த காவல்துறையின் மண்டையில் காவிச் சிந்தனை அல்லது முஸ்லிம் விரோதப் போக்கு குடிகொண்டிருக்கிறது. இந்த போக்குதான் இது போன்ற வன்முறை வெடிக்கும் காலங்க ளில் பயங்கரமாக வெளிப்படுகி றது. முஸ்லிம்களை இலக்கு வைத் துத் தாக்க வன்முறைச் சூழல் களை தவற விடாமல் பயன்படுத் திக் கொள்கிறது காவல்துறை.

ரஸா அகாடமி பேரணியில் நிகழ்ந்த வன்முறைக் காட்சிகளை நேரடியாக படம் பிடித்தன மீடி யாக்கள். இதில் காவல்துறையி னர் எவ்வித முன்னெச்சரிக்கை யையும் கையாளாமல் காட்டுமி ராண்டித்தனமாக முஸ்லிம்க ளைத் தாக்கியதையும், துப்பாக்கி யால் சுட்டதையும் வெளிப்படுத் தாத மீடியாக்கள், முஸ்லிம் இளைஞர்கள் கல் வீச்சில் ஈடுபடு வதையும், வாகனங்களைக் கொளுத்துவதையுமே படங்க ளாக வெளியிட்டு - முஸ்லிம்கள் வன்முறைவெறி பிடித்தவர்கள் என்று மட்டும் நிறுவி, காவல்து றையினர் கொடூரமாக முஸ்லிம்க ளைத் தாக்கிய புகைப்படங்களை பிரசுரிக்காமல் வசதியாக தவிர்த் துக் கொண்டன.

மிட்டே நாளிதழும் தனது புகைப்படக் கலைஞர் தாக்கப் பட்டதால்தான் இந்த புகைப்ப டத்தையும் வெளியிட்டு போலீ ஸின் முகத்திரையை கிழித்திருக் கிறதே தவிர, முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் அந்தப் படம் பத்திரிகையில் இடம் பெற் றிருக்காது என்று நம்பலாம்.

பெரும்பாலான மீடியாக்கள் செய்தியில் நேர்மையை கடைபி டிப்பதே இல்லை. உள்ளதை உள்ளபடியே வெளியிட அவை முன் வருவதில்லை.

அஸ்ஸாம், மியான்மரில் முஸ் லிம்கள் மீதான தாக்குதல்களை போதிய அளவிற்கு மக்கள் மத்தி யில் மீடியாக்கள் கொண்டு போய் சேர்க்கவில்லை என்கிற கோபம்தான் "ரஸா அகாடமி' நடத்திய பேரணியில் இருபதாயி ரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் கள் குவிந்ததற்கு காரணம் என்று சொல்லப்படுவது உண்மைதான்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமது நிருபர்கள் குழுவினரை அனுப்பி வைத்த பிரபல முன்னணி ஊடகங்கள், மியான்ம ருக்கோ, அஸ்ஸாமுக்கோ அனுப்பி வைத்து தகவல்களைத் திரட்ட முன் வரவில்லை என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஆக, இந்திய காவல் துறையினரின் முஸ்லிம் விரோதப் போக்கிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இந்திய மீடியாக்களும்!

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்க்கண்டேய கட்சு தனது கட்டுரை ஒன்றில், “இந்திய மீடியாக்கள் பிரச்சினையே இல்லாதவற்றை உண்மையான - தீவிரமான பிரச்சினையாகவும், உண்மையான முக்கியமான பிரச்சினைகளை ஒன்றுமே இல்லாத விஷயமாக - முக்கியத்துவம் இல்லாத செய்தியாகவும் சித்தரிக்கும் வேலையை அடிக்கடி செய்து வருகின்றன...” என குறிப் பிட்டிருந்தார்.

மீடியாக்கள் மீதான மார்க்கண்டேய கட்சுவின் விமர்சனம் உண்மைதான் என் பதற்கு அஸ்ஸாம், மியான்மர் விஷயத்தில் மீடியாக்கள் நடந்து கொண்ட விதமும், வட கிழக்கு மாநில மக்கள் ஓட்டமெடுத்த நிகழ்வை வெளிப்படுத்திய விதமும் சமீபத்திய உதாரணங்கள்தான்.

மீடியாக்களின் இதுபோன்ற ஒருதலைப் பட்ச செயல்பாடுகளையும் தாண்டி, காவி பயங்கரவாதத்தையும், காக்கி பயங்கரவாதத் தையும் அவ்வப்போது அம்பலப்படுத்தும் ஒரு சில மீடியாக் களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கத்தான் வேண்டும்!

- ஃபைஸல்

Pin It