இஸ்லாமிய நாடு என்று சொல்லப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டத் தடை உள்ளது. பாரம்பரியமாக இந்தத் தடை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தடையை நீக்க வேண்டும்; எங்களுக்கும் வாகனம் ஓட்ட அனும தித்து, ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என சவூதிப் பெண்ணுரிமைவாதிகள் அவ்வப்போது குரல் எழுப்பி வருகின்றனர்.

சவூதியைத் தவிர்த்த ஏனைய அரபு நாடுகளில் பெண்கள் வாகனம் ஓட்டத் தடையில்லை. பல்வேறு அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சவூதிப் பெண்கள், அந்த நாடுகளில் பெண்கள் வாகனம் ஓட்டுவதைப் பார்த்து தாங்களும் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற மன உந்து தலுக்கு ஆளாவதால் இந்த உரி மைக் குரல் சமீப காலமாக சவூதி அரேபியாவில் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது.

மாறிவரும் காலச் சூழல், உலகியல் மாற்றம், அரபுலகின் ஜனநாயகக் குரல்கள் போன் றவை வாகனம் ஓட்டும் உரிமைக் காக குரலெழுப்பி வருகின்ற சவூ தியப் பெண்களுக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி வருகிறது.

சவூதி அரசுக்கு எதிராக உரி மைக் குரல் எழுப்புவதே ஜனநா யகத்தின் கூறுகளை சவூதி அரசும் அனுமதித்திருக்கிறது என்பதற்கு சான்றாக இருந்தாலும், வாகனம் ஓட்டும் உரிமைக்கு மட்டும் அது தொடர்ந்து "நோ' சொல்லியே வருகிறது.

சவூதி அரேபியாவின் ஜெத்தா வைச் சேர்ந்த நஸீமா அல் சதா என்கிற பெண்மணி, பெண்க ளுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க மறுக்கப்படுவதற்கு எதிராக சவூதி யின் உள்துறை அமைச்சகத்தை எதிர்த்து கடந்த வாரம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நஸீமாவைச் சேர்த்து இது வரை 3 பெண்மணிகள் இதே போன்று வழக்கு தொடர்ந்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியான தம்மாம் நீதிமன்றத் தில் உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்துத் துறைக்கு எதிரா கவே இந்த வழக்கை நஸீமா தொடர்ந்திருக்கிறார் என்கிற ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம்.

நஸீமாவைப் போன்றே சமர் பதாவி, மனால் அல் ஷரீஃப் ஆகிய பெண்ணுரிமை ஆர்வலர்க ளும் இதேபோன்ற வழக்கை தொடர்ந்திருக்கின்றனர்.

சவூதி போன்ற நாடுகளில் பெண்ணுரிமைக் குரல்கள் எழு வது அபூர்வம். இருப்பினும் நஸீமா, சமர், மனால் போன்றவர் கள் சவூதி அரசுக்கு எதிராக உரி மைக் குரல் எழுப்புவதே ஜனநாய கத்தின் கூறுகளை சவூதி அரசு அனுமதித்திருக்கிறது என்பதற்கு சான்றாக, சவூதிப் பெண்களின் நீண்ட போராட்டத்திற்கு பின் வாக்குரிமை அளிக்கப்பட்டிருப் பதை சொல்லலாம். ஆனால் பெண்கள் வாகனம் ஓட்ட மட் டும் தொடர்ந்து சவூதி அரசு "நோ' சொல்லியே வருகிறது.

வாகன உரிமை கேட்டு, சவூதி அரசு தராததால் தானே அந்த உரிமையை எடுத்துக் கொண்டு வாகனம் ஓட்டிய மனால் அல் ஷரீஃப், தடைச் சட்டத்தை மீறி னார் என்று கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த கைது இவரது உரிமைக் குரலை நசுக்க முடிந்ததா என் றால் அதுதான் இல்லை! கைதுக் குப் பின்னர் பெண்களுக்கு வாக னம் ஓட்டும் உரிமை வேண்டும் என்கிற பிரச்சாரத்தின் சின்ன மாக வலம் வருகிறார் மனால்.

வாகனம் ஓட்டும் உரிமையை ஏன் சவூதி அரசு மறுத்து வருகி றது என்பதற்கு தெளிவான, ஏற் கத் தகுந்த காரணங்கள் எதையும் சவூதி அரசாலோ அல்லது போக் குவரத்து துறையாலோ சொல்ல முடியவில்லை.

இஸ்லாமியக் கோட்பாடுக ளின்படி பெண்கள் வாகனம் ஓட்ட எவ்விதத் தடையும் இல்லை. பிறகு ஏன் இஸ்லாமிய நாடு என்று சொல்லிக் கொள் ளும் சவூதி அரேபியா பெண்க ளுக்கு வாகனம் ஓட்ட அனுமதி மறுக்கிறது?

இந்தக் கேள்விக்கு நாம் விடை தேடினால் நமக்கு புரிவது இது தான்...

சவூதிப் பெண்களுக்கு வாக னம் ஓட்ட அனுமதித்தால் அத னால் டிராஃபிக் பிரச்சினை வர லாம் என்று சவூதி அரசு நினைக் கக் கூடும். இந்த டிராஃபிக் பிர ச்சினை இன்னொரு சர்ச்சையை உருவாக்கும் என்றும் அது நினை க்கக் கூடும்.

என்ன டிராஃபிக் பிரச்சினை என்கிறீர்களா?

வாகனம் ஓட்டுபவர்கள் போக் குவரத்து விதிகளை மீறினால் - டிராஃபிக் சிக்னல் கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கின்ற காமி ராக்கள் மூலமாக போக்குவரத்து விதிகளை மீறிய வாகனம், அந்த வாகனத்தின் நம்பர் மற்றும் அந்த வாகனத்தை ஓட்டியவர் யார் என்ற அடையாளம் துல்லியமாக போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும். இதை வைத்து வாகன ஓட்டிக்கு அபரா தம் விதிக்கப்படுகிறது.

சவூதிப் பெண்களைப் பொருத்தவரை 95 சதவீத சவூதிப் பெண்கள் முகத்திரை அணியும் பழக்கம் உள்ளவர்களாகவே இருப்பதால் - இவர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் வாகன ஓட்டியை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக, வாகனம் ஓட்டும்போது பெண்கள் முகத்திரை அணியக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டி வரும். அப்படி விதித்தால் அது மார்க்க ரீதியான, இஸ்லாத்தின் சட்ட விதிகள் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தும்.

இஸ்லாமியப் பெண்கள் முகத்தையும் மறைக்க வேண்டும் என்றும், இஸ்லாம் முகத்தை மறைக்கச் சொல்லவில்லை என்றும் இரு வேறு கருத்துகள் இஸ்லாமிய உலகில் உண்டு. சவூதியைப் பொருத்தவரை முதல் கருத்து தான் மார்க்கத்தின் நடைமுறையாக பின்பற்றப்படுகிறது.

ஆக, இதுபோன்ற காரணத் தால்தான் சவூதி அரசு பெண்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கி றதோ என்றே நம்மால் யூகிக்க முடிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் காலத்தில் ஆயிஷா (ரலி) உள் ளிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள், ஏனைய பெண்மணிகள் ஒட்டக (வாகன)ப் பயணம் செய்திருக்கி றார்கள். ஏன் ஓட்டகப் போரே நடத்தியிருக்கிறார்கள். அதே போல, முகத்தை மட்டும் வெளிக் காட்டியவர்களாகவும் நபி (ஸல்) காலத்துப் பெண்மணிகள் இருந் திருக்கிறார்கள் என்பதற்கு ஆதா ரப்பூர்வமான சான்றுகள் இருக் கின்றன.

அதே சமயம், திருக்குர் ஆனோ, நபி வழியோ பெண்கள் வாகனம் ஓட்டத் தடை விதித்த தாக எவ்வித சான்றாதாரங்களும் இல்லை.

இந்நிலையில், சவூதி அரசு பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை மறுப்பது என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஏற்கத் தகுந்ததல்ல.

பெண்கள் முகத்தை மறைப்பதுதான் மார்க்கத்தின் தீர்ப்பா என்பதில் சவூதி அரசு நடுநிலையோடு மார்க்க அறிஞர்களின் ஆலோசனையோடு ஒரு முடிவெடுத்தால் சவூதிப் பெண்களின் வாகனம் ஓட்டும் ஆசை நிறைவேறும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

- ஃபைஸ்

Pin It