தீபாவளிக்கு ரிலீசான நடிகர் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் அவரது ரசிகர்களை ஒருபுறம் குழிபடுத்திக் கொண்டிருக்க... படத்தை இயக்கிய முருகதாஸ், தயாரிப்பாளர் தானு, நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை என படத்தின் முக்கிய யூனிட் கடந்த வாரம் வரை பீதியில் உறைந்து கிடந்தது.

இதற்கு காரணம், துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை நீக்க வேண்டும் என்று துப்பாக்கி படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் கிளர்ந்தெழுந்ததுதான்.

ரகசியமாக இயங்கும் ஒரு தீவிரவாத அமைப்பு 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து குண்டு வைக்க பயிற்சி அளிக்கிறது. 12 நபர்களுக்கும் ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல் தனித் தனியே பயிற்சி அளிக்கிறது அந்த தீவிரவாத அமைப்பு. அதன்பின் அவர்களை மும்பையில் 12 இடங்களில் குண்டுகளை வைக்க (தனித்தனியே) அனுப்பி வைக்கிறது. இவர்கள் சீலிப்பர் செல் என்று படத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சிலீப்பர் செல் என்றால் ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் மீது வெறுப்பில் உள்ளவர்கள். இவர்கள் மக்களுடன் மக்களாக கலந்திருப்பவர்கள்.

எங்கிருந்தோ தீவிரவாத அமைப்பிடமிருந்து வருகின்ற கட்டளையை ஏற்று இவர்கள் காரியத்தை முடிப்பார்கள். இவர்களுக்கு தங்கள் தலைவன் யார் என்பது கூட தெரியாது.

துப்பாக்கி படத்தில் வரும் இந்த சிலீப்பர் செல்கள் ஒவ்வொருவரும் தனக்கு மட்டும் தான் குண்டு வைக்க அசைண்ட் மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என நினைக்கின்றனர்.

ஆனால் 12 பேரும் ஒவ்வொரு இடங்களில் குண்டு வைக்க பணி க்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் இவர்களுக்குத் தெரியாது. அதே சமயம் ஒரே நாளில் மும்பையில் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து மும்பையைத் தகர்க்க வேண்டும் என்பதுதான் தீவிரவாத அமைப்பின் நோக்கம். இதனை துப்பாக்கியில் மும்பைத் தமிழனாக வரும் விஜய் முறியடிப்பதுதான் கதை.

குண்டு வைக்க தீவிரவாத அமைப்பினால் தேர்வு செய்யப் படும் 12 நபர்களையும் முஸ்லிம் அடையாளங்களுடன் படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

இவை சர்ச்சைகளாக வெளிப்பட துப்பாக்கியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் தயாராக...

இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, மு.லீக், தேசிய லீக், பாப்புலர் பிரண்ட், ஜமாஅத்தே இஸ்லாமி உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது.

இத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன், முதலில் துப்பாக்கி படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்; படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் இருந்தால் அதனை நீக்கும் நடவ டிக்கைகளில் இறங்குவோம்; பின்னர் போராட்டம் குறித்து பரிசீலிப் போம் என முடிவு செய்த கூட்ட மைப்பினர், படக் குழுவினரைத் தொடர்பு கொண்டு படத்தை நாங்கள் பார்க்க வேண்டும் எனக் கூற, கடந்த 14ம் தேதி சென்னை தேவி திரையரங்கில் கூட்டமைப்பைச் சேர்ந்த 20 உறுப்பினர்களுக்கு தனியாக படம் பார்க்க ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர் படக் குழுவினர்.

படத்தைப் பார்த்த கூட்ட மைப்பினர் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை குறிப்பெடுத்துக் கொண்டனர். திரைப்படத்தில் ஆங்காங்கே முஸ்லிம்களைத் தீவி ரவாதிகளாகவும், பயங்கரவாதச் செயல்களோடும் சம்மந்தப்ப டுத்தி காட்சிகள் அமைக்கப்பட் டிருப்பதை உறுதி செய்த கூட்ட மைப்பினர் மீண்டும் கூடி ஆலோ சனை செய்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கின்ற ஆட்சேப கரமான காட்சிகளை நீக்க வேண் டும்; படக் குழுவினர் இதற்காக முஸ்லிம்களிடத்தில் பகிரங்க மாக மன்னிப்பு கேட்க வேண் டும்; இந்த இரண்டு நிபந்தனை களை படக் குழுவினர் ஏற்றுக் கொள்ள மறுக்கும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் துப்பாக்கி திரையிடப்படும் திரையரங்கு களை முற்றுகையிடுவது எனத் தீர்மானித்தனர்.

இந்த செய்தி பட குழுவின ருக்கு தெரிவிக்கப்பட்டபின் திமுக பிரமுகரான வக்கீல் முஹம் மது அலி ஜின்னா மூலம் பேச்சு வார்த்தைக்கு தயாராய் இருப்ப தாக படக் குழுவினர் கூட்டமைப் புக்கு தகவல் தர, அதன்படி இரு தரப்பினரும் சவேரா ஹோட்ட லில் சந்தித்துப் பேசுவது என முடிவானது.

அதன்படியே கடந்த 15ம் தேதி சவேரா ஹோட்டலில் இரு தரப்பு சந்திப்பு நிகழ்ந்தது. நாமும் அங்கு ஆஜராகியிருந்தோம். கலைப்புலி தாணு, சந்திர சேகர், முருகதாஸ் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் ஒரு குழுவாகவும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முஹம்மது முனீர், தமுமுக வின் அப்துல் சமது, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீபா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் பக்ருத்தீன், தேசிய லீக் பஷீர் அஹமது, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் ஃபாரூக் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஒரு குழுவாகவும் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர்.

முந்தைய நாள் திரைப்படத் தில் பார்த்த ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் குறித்து படக்குழுவினருக்கு விளக்கினர் கூட்டமைப் பின் பிரதிநிதிகள்.

அவர்களிடம் பேசிய பாப்பு லர் பிரண்ட் ஃபக்ருத்தீன், “மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புகள் அனைத்தும் இந்துத்துவா அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டது. ஆனால் அப்பாவி முஸ்லிம்கள் அதில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முஸ் லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்ப டங்களும் காரணம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீவிரவாத முத்தி ரையை நீக்கும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், துப்பாக்கி போன்ற திரைப்படங் கள் எங்கள் முயற்சியை சிதைக் கும் வகையில் அமைந்துள்ளது...” என்றார்.

தமுமுகவின் அப்துல் சமது பேசும்போது, “திரைப்படங் களில் முஸ்லிம்களைத் தீவிரவாதி களாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி திரைப்படத்தில் கூட இராணுவத்தில் ஒரு முஸ்லிம் அதிகாரி பணியாற்றுவதாக காட் டப்பட்டிருந்தும், அவர் தீவிரவா திகளுக்கு உதவி செய்வதாக காட்சி அமைப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இராணுவம் போன்ற அரசுத் துறைகளில் முஸ் லிம்கள் இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகளுக்குத்தான் உதவி செய்வார்கள் என்பது போன்ற தோற்றத்தை இதுபோன்ற காட்சி கள் ஏற்படுத்துகின்றன. துப்பாக் கியில் இஸ்லாமியர்களின் அடை யாளங்கள் தீவிரவாதிகளோடு சம் மந்தப்படுத்தி காட்டப்பட்டிருக் கிறது...” என்று நீண்ட விமர்ச னத்தை முன் வைத்தார்.

அவரையடுத்துப் பேசிய இந் திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர் முருகதாஸ் பார்த்தப டியே, “தமிழகத்தில் இருந்தவரை சரியாக இருந்த முருகதாஸ் மும்பை திரையுலகத்திற்கு சென்றவுடன் இந்துத்துவா சிந்தனைக்கு மாறியிருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. "ஸ்லீப்பர் செல்' என்ற வார்த்தை பொதுவாக பரிச்சயமில்லாத வார்த்தை. இந்த வார்த் தையை மதிய உளவுப் பிரிவான ஐ.பி., வெளிநாட்டு விவகாரங்களை உளவு பார்க்கும் இந்தியா வின் "ரா' அமைப்பு மற்றும் இந் துத்துவாவாதிகள்தான் பயன்ப டுத்துவார்கள். அது இந்தப் படத்தில் பயன்படுத்தப் பட் டிருப்பது இந்துத்துவா வின் சதி என்றே நாங் கள் பார்க்கிறோம்.

மத்திய அரசு நிய மித்த நீதிபதி ராஜேந் திர சச்சார் கமிட்டி, இரா ணுவத்திலும் "ரா' மற்றும் ஏனைய பாதுகாப்பு துறைகளி லும் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய் திருக்கும் இவ்வேளையில், உங் கள் படத்தில் முஸ்லிம் அதிகாரி தீவிரவாதிகளுக்கு உதவி செய்வ தாக காட்டிருப்பது, இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை யில் முஸ்லிம்களுக்கு இடமளித் தால் அவர்கள் தீவிரவாதிகளாக நாட்டை காட்டிக் கொடுப்பவர்க ளாகத்தான் இருப்பார்கள் என் கிற மெúஸஜை சொல்வதாகத் தான் எங்களுக்குப்படுகிறது...” என்றவர்,

எஸ்.ஏ. சந்திரசேகரன் பக்கம் திரும்பி, "நேற்றுவரை முஸ்லிம் சமுதாயம் விஜய்யை பார்த்த பார்வை வேறு! இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்புக்குரியவராக மாறியிருக்கிறார் விஜய். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் அரசியல் களம் நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருப்பவர்.

முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் அவரது அரசியல் கேள்விக்குறியாகி விடும் சூழல் துப்பாக்கி மூலம் ஏற்பட் டுள்ளது என்பதை நீங்கள் கவ னிக்க வேண்டும்...” என்றெல்லாம் கூற...

குழப்பம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இந்த விமர்சனங்களை உள் வாங்கிக் கொண்டிருந்த படக் குழுவினர் தரப்பிலிருந்து முதலில் முருகதாஸ் பேசினார்.

“சார்... முதலாவதாக இந்தப் படத்திற்குப் பின்னணியில் எந்த விதமான உள்நோக்கமுமில்லை. இந்த எண்ணத்தை நீங்கள் மனதி லிருந்து தயவு செய்து அகற்றிக் கொள்ள வேண்டும். இஸ்லாமி யர்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என் தாயின் மீது, என் குழந்தை கள் மீது சத்தியமாகச் சொல்கி றேன். உங்கள் மனம் புண்பட்டி ருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் காலைப் பிடித்துக் கேட்கிறேன். நீங்கள் என்ன தண்டனை வேண்டுமா னாலும் கொடுங்கள்...” என்றெல் லாம் உணர்ச்சிவசப்பட்டார்.

இயக்குனர் சந்திர சேகரோ, "முஸ்லிம்களின் வெறுப்புக்கு விஜய் ஆளாகியிருக்கிறார் என்று நீங்கள் சொல்வது எனக்கு பெரும் வேதனையைத் தருகிறது. கொஞ்சம், கொஞ்சமாக விஜயை நான் செதுக்கிக் கொண்டிருக்கி றேன். விஜயை வைத்து அடுத்த படம் முஸ்லிம்களுக்கு நண்ப னாக, முஸ்லிம்களைப் பெருமைப் படுத்தும் வகையில் எடுக்கிறேன்...” என்றார்.

இறுதியாகப் பேசிய கலைப் புலி தாணு, "நான் திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவன். முஸ் லிம்களைப் பற்றி தவறான படம் எடுப்பேனா? என்னுடைய நண் பர்கள் நிறைய பேர் முஸ்லிம்கள்; எனக்கு உதவி செய்தவர்கள் முஸ்லிம்கள். உதாரணத்திற்கு சொல்லனும்னா... ரஹ்மத் பதிப்பகத்தின் உரிமையாளரான முஸ்தஃபா எனக்கு நெருங்கிய நண்பர். எனக்கு பல உதவிகளை செய்த வர். அவர் வெளியிட்டுள்ள நூல் களில் கூட என் பெயரை குறிப்பிட்டிருப்பார். சீமா பஷீர் என் நெருங் கிய தோழர். இப்படி இஸ்லாமிய நண்பர்க ளைப் பெற்றிருக்கும் நான் அவர்கள் காயப் படும்படி எப்படி படம் எடுப்பேன்...” என தன் பங்கிற்கு தன்னிலை விளக்கம் கொடுத் தவர்,

“சென்சார் போர்டில் முஸ்லிம் சமூகத் தின் சார்பில் 2 உறுப்பினர் களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வையுங் கள். நாங்களும் அதற்கு ஆதரவளிக்கிறோம். அப்போது, தொடக்கத்திலேயே பிரச்சினை கள் முடிவுக்கு வந்து விடும்.

அதே மாதிரி, உங்கள் அமைப்புகளின் சார்பாக பிரதிநிதிகள் அடங்கிய குழுவை, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக் குனர்கள் சங்கத்திற்கு அனுப்பி - முஸ்லிம் களை பாதிக்கும் வகையிலான காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை வையுங்கள். இதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்...” என்று முஸ்லிம் அமைப் புகளுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை யும் சொன் னார்.

முருகதாஸின் உதவியாளர்கள் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் சொன்ன ஆட்சேபத் திற்குரிய காட்சிகளை குறிப்பெடுத்துக் கொண்டனர்.

விமர்சனம், குற்றச்சாட்டு, தன்னிலை விளக்கம் என அமைந்த இந்த சந்திப்பின் இறுதியில் முஸ்லிம் பிரதிநிதியின் கோரிக் கையை ஏற்றுக் கொண்ட படக் குழுவினர், ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை ஓரிரு நாட் களில் நீக்கி விடுவதாக உறுதியளித்ததுடன், சவேரா ஹோட்ட லுக்கு வெளியே திரண்டி ருந்த செய்தியாளர்களிடமும் இதனையே தெரிவித்து, நடந்துவிட்ட தவறுக்காக முஸ் லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்...” என சொல்லி விட்டு புறப் பட்டனர்.

நேர்மையான அவர்களின் ஒப்புக் கொள் ளலை நாம் பாராட்ட வேண்டியுள்ளது. அதே சமயம், முஸ்லிம் அமைப்புகளின் இதுபோன்ற அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர் வமான அணுகு முறையும் நிச்சயம் பாராட் டத்தான் வேண்டும்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களை தீவிர வாதிகளாக சித்தரித்து திரைப்படங்கள் எடுக் கப்பட்டபோது அமைதியான பார்வையா ளராக முஸ்லிம் சமுதாயம் இருந்ததன் விளைவு, இன்று முருகதாஸ் சொல்வதைப் போன்று உள்நோக்கத்துடன் துப்பாக்கி எடுக்கப்படவில்லை என்றாலும், முஸ்லிம் களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது திரைத் துறையின் மரபாகவே மாறிப் போயிருக்கி றது என்பதை விளங்க முடிகிறது.

அந்த மரபின் நீட்சியாகத்தான் துப்பாக் கியும் நீண்டிருக்கிறது.

தொலைபேசியில் மன்னிப்பு!

பேச்சுவார்த்தை நடந்த அன்றைய தினமே இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கரைத் தொடர்பு கொண்ட படக் குழுவின ரான கலைப்புலி தாணு, ஏ.ஆர். முருகதாஸ், எஸ்.ஏ. சந்திர சேகரன் ஆகியோர் ஓரிரு நாட்களில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கி விடுவ தாகவும், நடந்து விட்ட தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தனித்தனியே பேசியதுடன் பிரச்சினையை சுமூகமாக முடித்ததற்காக நன்றி யையும் தெரிவித்தனர்.

திருக்குர்ஆன் அன்பளிப்பு!

அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களைச் சந்திக்கும்போது திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதியை அவர்களுக்கு வழங்குவதை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த வகையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரனுக்கு ஐஎன்டிஜே துணைத் தலைவர் முஹம்மது முனீர் திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதியை வழங்கினார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது கலைப்புலி தாணுவும், முருகதாசும் அவசரமாக வெளியேறி விட்டதால் திருக்குர்ஆன் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

Pin It