உலகத் தலைவர்கள் வரவேற்பு

இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக 15 ஆண்டுகளாக தேடப்பட்ட - தலைமறைவாகியிருந்த முன்னாள் போஸ்னிய - செர்பிய இராணுவத் தளபதி ராட்கே மிலடிச்சை செர்பிய அரசு கைது செய்துள்ளது.

போஸ்னிய சிவில் யுத்தத்தின்போது போர்க் குற்றங்களை நிகழ்த்தினார் ராட்கே என்பது தான் அவர் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் போஸ்னியா செர்பிய யுத்தத்தின்போது - ரஷ்ய மற்றும் அமெரிக்க தூண்டுதலின் பேரில் கடந்த 1995ம் ஆண்டில் போஸ்னியாவிலுள்ள செப்ரநிட்சா என்ற கிரா மத்தைச் சேர்ந்த 8500 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைகள் ராட் கேவின் தலைமையின் கீழ் செயல்பட்ட படையினரால் நிகழ்த்தப்பட்டது. இதைத்தான் பிரதான போர்க் குற்றமாக - இனப்படு கொலை மற்றும் மனித உரிமை மீறலாக ஐக்கிய நாடுகள் சபை யின் போர்க் குற்றவியல் நீதிமன் றம் அறிவித்திருந்தது.

இதன்பின் ஐ.நா.வால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டார் ராட்கே மிலடிக். ராட்கே தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டாலும் இவரைக் கைது செய்வதில் செர்பிய அரசும், நேட்டோ நாடுகளும் போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் இதற்கு காரணமாக ஐ.நா.வின் அமைதிப் படைகள் போஸ்னியாவில் சென்று தங்களின் பணிகளை எவ்விதச் சிரமமுமின்றி துவங்குவதற்கு மிலடிக் பெரிதும் உதவிகரமாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அதனால்தான் போஸ்னியாவில் அமைதி திரும்பி வெகுகா லம் ஆன பிறகும் அவரை கைது செய்வதில் நேட்டோ படைகள் தயக்கம் காட்டியதாக காரணம் கற்பிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த 1999ம் ஆண்டு நடந்த கொசாவோ போரைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் செர்பியா தனிமைப்படுத்தப்பட்டது என்ப தும் மிலாடிக்கை கைது செய்யும் நடவடிக்கைகளில் செர்பிய அதி காரிகள் ஆர்வம் காட்டாமலிருந் ததற்கு காரணங்கள் என்றும் கூறப்படுகிறது.

2001ம் ஆண்டு முன்னாள் செர்பிய அதிபர் ஸ்லொபாதான் மிலிசோவிச்தான் ஹேக்கில் இருக் கின்ற சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு வழக்கு மாற்றப்ப டும்வரை மிலடிக்குக்கு பாது காப்பு வழங்கி வந்திருக்கிறார்.

போஸ்னிய செர்பிய இராணு வத்திலிருந்து மிலடிக் ஓய்வு பெற்ற பிறகும்கூட 2002 வரை அவர் தொடர்ந்து இராணுவ செயற்பாடுகளில் பங்கு பெற்று வந்திருக்கிறார். ஒருவகையில் இது அவரை கைது செய்யப்படு வதிலிருந்து பாதுகாத்து வந்திருக் கிறது.

மிலாடிக் மாதிரியான அதிகா ரிகளை கேள்வி கேட்கவும் செர் பிய அரசியல்வாதிகள் தயக்கம் காட்டி வந்திருக்கின்றனர். இந்த தயக்கத்திற்கு காரணம், செர்பி யாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு படைகளில் செயற்பட்டு வந்த குற்றக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற செர்பிய முன்னாள் பிரதமர் ùஸôரான் ஜிஞ்சிச்சின் கொலை தான். அதனால் அரசியல்வாதிகள் அஞ்சி நடுங்கி வந்தனர்.

இந்நிலையில் தற் போதைய செர்பிய அரசு இந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடி வெடுக்க வேண்டிய கட் டாயத்தில் இருந்தது.

ஐரோப்பிய ஒன்றி யத்தில் சேர்வதன் மூலம் செர்பியா சர்வதேச அரங்கில் தனிமைப்படுவதை தடுக்க முடியும். அதனால் ஐ.நா.வால் தேடப்பட்ட குற்றவாளியான மிலாடிக்கை கைது செய்திருக்கிறது செர்பியா.

குரோஷியா நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விரும்பிய போது அதற்கு தடைக்கல்லாக விளங்கிய ராணுவ தளபதி அண்டி கொடவினாவை பிடித் துக் கொடுத்ததைப்போல மில டிக் விஷயத்திலும் செர்பியர்கள் இந்த வழிமுறையை கடை பிடித் திருக்கிறார்கள்.

இந்தக் கைது நடவடிக்கை செர்பிய வரலாற்றின் ஒரு அத்தி யாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர் டாடிக், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து புதிய அத்தியா யத்தை துவக்க வகுக்கும் என்கி றார்.

மிலாடிக்கின் கைதை அரபு நாட்டுத் தலைவர்கள் உள்பட உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சிரபெரநிட்சா கிராமத்தில் கிறிஸ்தவப் படைப்பிரிவை மத ரீதியாக தூண்டி விட்டு போஸ்னிய முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணாச் சித்திரவதைகளை, படுகொலைகளை நிகழ்த்திக் காட்டிய ராட்கே மிலாடிக்கை ஹேக்கில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் - சர்வதேச போர்க் குற்ற தீர்ப்பாயத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக் கின்றன.

ராட்கேவைப் போலவே இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலைக ளுக்கு காரணமான ராஜபக்ஷே வும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

இவர்களைப் போன்ற மனித குல விரோதக் குற்றவாளிகள் பல ஆயிரம் உயிர்களை சாகடித்திருந்தாலும் இவர்களுக்கு இந்த உலகத்தில் அதிகபட்ச தண்டனை என்பது ஒரே ஒருமுறை உயிர் பிரிவதுதான்.

ஆனால் இவர்களைப் போன்ற கொடியவர்களுக்கு மறுமை நாளில் இறைவனின் தண்டனை எப்படி இருக்கும் என்பதை ""அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு பலமுறை சாகடிக்கப்படுவார்கள்...'' என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதுதான் சரியான நீதியாக இருக்கும் என்பதை மனித உள் ளம் மறுக்க முடியுமா?

- ஃபைஸ்

Pin It