செஞ்சேனையின் கட்சி ஸ்தாபனம் கண்மூடித்தனவாதத்திற்கு எதிராக ஏற்கனவே போராட்டங்கள் தொடுத்துள்ளது. ஆனால் அவை இன்னும் போதுமானவை அல்ல. எனவே, இந்தத் தத்துவத்தின் மிச்சசொச்சங்கள் செஞ்சேனையில் இன்னும் இருக்கின்றன. அவற்றின் வெளிப்பாடுகள் பின்வருமாறு:

1. அக - புற நிலைமைகளைப் பொருட்படுத்தாத குருட்டு நடவடிக்கை.
2. நகரங்களுக்கான கொள்கைகளைப் போதிய அளவிலும் உறுதியாகவும் அமுல் நடத்தாமை.
3. தளர்ந்த இராணுவக் கட்டுப்பாடு, சிறப்பாக, தோல்வியடைந்த சமயங்களில் இத்தன்மையிருப்பது.
4. சில படைப்பிரிவுகளின் வீடு கொளுத்தும் செய்கைகள்.
5. படையை விட்டு நீங்குவோரைச் சுடுவது, உடற் தண்டனை விதிப்பது போன்ற நடைமுறைகள். இவை இரண்டும் கண்மூடித்தனவாதத்தின் தன்மை உடையவை. கண்மூடித்தனவாதத்தின் சமுதாய ஊற்றுமூலம் உதிரிப் பாட்டாளி வர்க்கத் தத்துவம், குட்டி பூர்ஷ்வா வர்க்கத் தத்துவம் இரண்டின் சேர்க்கையாகும்.

இவற்றைத் திருத்தும் வழிமுறைகள் பின்வருமாறு:

1. சித்தாந்த ரீதியில் கண்மூடித்தனவாதத்தை ஒழித்துக் கட்டுவது.
2. விதிகள், கொள்கைகள் மூலம் கண்மூடித்தனவாத நடவடிக்கைகளைத் திருத்துவது.

 - மாசேதுங்

(கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களை திருத்துவது எப்படி?)

அகநிலைவாதம் பற்றி...

சில கட்சி உறுப்பினர் மத்தியில் அகநிலைவாதம் நெடுமளவிற்குப் பரவியிருந்து, அரசியல் நிலைமையை ஆராய்வதற்கும் வேலைக்கு வழிகாட்டுவதற்கும் பெரும் தீங்கு விளைவிக்கின்றது. காரணம், அரசியல் நிலைமை பற்றிய அகநிலை ஆராய்வும், வேலை பற்றிய அகநிலை வழிகாட்டலும் தவிர்க்க முடியாதபடி சந்தர்ப்பவாதத்தில் அல்லது கண்மூடித்தனவாதத்தில் முடிவடையும்.

-          மாவோ

Pin It