ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் செயல் பாடுகளை அனைவரும் அறிவீர்கள். 1994இல் சிகாகோ பல்கலைக்கழகம் ரோஜா முத்தையா அவர்களின் சேகரிப்பைத் தருவித்துப் பாதுகாக்கச் சென்னையில் ஒரு தனி நூலகமாக நிறுவியது. தற்பொழுது முறையாகப் பதிவு செய்யப்பட்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்ட ளையின் பாதுகாப்பில் இயங்கி வருகிறது. தொடர்ந்து 18 ஆண்டுகளாக நூல்களைச் சேகரித்தும், பாதுகாத்தும், ஆய்வாளர்களுக்குக் குறிப்புதவி சேவைகளைச் செய்து வருகிறது இந்நூலகம். இந்நூலகத்தில் நூற்பட்டிய லிடும் துறை, ஆவணப்படுத்தும் துறை, குறிப்புதவித் துறை, சிந்துவெளி ஆராய்ச்சி மையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர, இந்நூலகம் மாதமொருமுறை சிறப்புச் சொற்பொழிவு, அவ்வப் போது அரிய ஆவணங்கள் தொடர்பான கண்காட்சி களையும் நடத்தி வருகிறது.

நூற்பட்டியல் மட்டுமல்லாமல் இதழ்களுக்கான பட்டி யலும் அவற்றிற்கான அடைவுகளும் கணினி மயமாக்கப் பட்டுள்ளதால் ஆய்வாளர்ளின் தேடும் நேரத்தைக் குறைத் துப், படிப்பதற்கு எளிதாக ஆவணங்களை எடுத்துக் கொடுக்கிறது. ஆய்வாளர்களுக்கு உதவும் வண்ணம் தொலை பேசி, மின்னஞ்சல் மூலமும் தகவல்கள் அளிக்கப்படுகின்றன. நுண்படச் சுருள்களில் உள்ள ஆவணங்களைப் பார்வை யிடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களுக்கான பிரதிகள் (ஸ்கேன்) ஆய்வா ளர்களின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்படுகின்றன.

இந்நூலகச் செயல்பாடுகள் அனைத்தும் நூலகப் பாதுகாப்பிற்காகத் தருவிக்கப்பட்ட திட்டப்பணிகள் (project Grants) மூலமே செயல்பட்டுவந்தன. அரசு மானியமோ, தனியார் நிறுவனங்களின் மானியமோ இதற்கு இல்லை. தற்போது திட்டப்பணிகளும் எதுவும் இல்லாத காரணத்தி னால் நூலகத்தின் பல செயல் பாடுகள் பாதிக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. இச்சேவைகளைத் தொடர்ந்து தடையின்றி நடத்த அரசு, தொண்டு நிறுவனங்கள், புரவலர்கள், தமிழாய்வாளர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரிடம் பொருளுதவியை இந்நூலகம் நாடுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் பொருளுதவிக்கு 80-ஜி வருமானவரி விலக்கு உண்டு.

நன்கொடை அளிக்க விரும்புவோர் Rojamuthiah Research Library Trust என்ற பெயரில் வங்கி வரைவோலை / காசோலையை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் தகவல்களுக்கு நூலக இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி : 044-22542551 / 52.

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It