இன்றைய நிலையில் மனித இனத்தில் சமூக நலனை அக்கறையுடன் பார்க்கக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்த அளவே. காரணங்கள் பல உள்ளன. அதில் சில வெளிப்படையானவை.

1. வாழும் சூழல் : வாழும் இடத்தில் நல்ல பண்புள்ள வர்கள் இருக்கமாட்டார்கள். குடிப்பவர்கள், திருடுபவர்கள், வளர்ச்சியைக் கெடுப்பவர்கள் போன்ற செயல்களைச் செய்பவர்கள் உள்ள இடத்தில் வாழ்பவர்கள் தானும் வாழ முடியாது. தன்னுடைய சமுதாயத்தையும் வாழ வைக்க முடியாது. தொற்றுநோய் போல் தீயகுணங்கள் நல்ல மனிதர்களுக்கும் பரவிவிடும். கேடு அதிகமாகிறது.

2. ஊடகங்கள் : இன்றைய நிலையில் ஊடகங்கள் சமூக நலனை அதிகம் கெடுத்துள்ளன. ஒருவனுடைய உழைப்பின் நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் வீணா கிறது. மனநிலை பாதிக்கப்படுகிறது. கேடான செயல்கள் எளிதில் பரவிவிடுகின்றன. பொய்யான செய்திகளை உ ண்மை போல் காட்டுவது, சிறிதாக உள்ள செய்திகளை ஊதிப் பெரிய செய்தியாக்கிக் கட்சிச் சண்டை, சாதிச் சண்டை, மதச் சண்டை போன்றவைகள் உருவாக முன்னிலையில் உள்ளது ஊடகம். நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் தாய்மொழி வளர்ச்சிக்கும், கல்வி, பொது அறிவு வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும், உடல்நலன் காப்பதற்கும் ஊடகங்களின் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும்.

மது அருந்துவதைக் காட்டும் பொழுது மட்டும் “கேடு” என்று காட்டிவிட்டு, குடிப்பதை ரசிக்கும்படி காட்டுவது உண்மையில் ஊடகத்தினால் பெரும் தீமையே ஏற்படுகிறது. குடிப்பதை அருவருப்பாகவும், இனி மது அருந்தினால் அது அவமானம் என்றும் ஒரு மனிதன் மனத்தில் தைக்கும்படி ஊடகத்தைச் சமூக நலனுக்கான கருவியாக மாற்ற வேண்டும்.

3. அரசு ஊழியர்கள் : அரசு ஊழியர்கள் மட்டும் தமக்குக் கிடைக்கும் ஊதியம் போதும். கையூட்டுத் தேவையே இல்லை என்று எப்பொழுது நினைக்கின்றனரோ அன்றே கேடான அரசியல்வாதிகள், கேடான சமூக விரோதிகள் குறையத் தொடங்குவர். அனைத்துத் துறை அரசு ஊழியர் களும் கையூட்டு வாங்குவதை ஒரு அவமானமாக நினைக்க வேண்டும்.

கட்டாயமாக நேர்மையாக நடக்க வேண்டும். தான் வாங்கும் ஊதியம் அனைவருடைய உழைப்பில் உருவானது. அனைவரும் வரி செலுத்தித்தான் பொருள்களை வாங்கு கின்றோம். உழைப்பு, வரிக்கும் சேர்த்துதான் உழைக்க வேண்டியுள்ளது. அரசு ஊழியர்கள் எவருக்கும் அடிமை யில்லை. தன் வேலையை நிறைவாகச் செய்தாலே போதும். எடுத்துக்காட்டு ஐ.ஜி. அருள் அவர்கள். எந்த அரசியல்வாதிக் கும் காரின் கதவைத் திறந்ததில்லை. ஆனால் பாதுகாப்பாக வும் தவறு நடக்காமலும் பணியாற்றினார்.

உண்மையாக நம் சமுதாயம் நலன்பெற வேண்டு மென்றால் கல்விதான் பெரிய மாற்றம் செய்யும். ஒரு உழவர் தோட்டத்தில் பயிர் செய்யும் பொழுது களை எடுப்பார். பூச்சிகள், புழுக்கள் அண்டாமல் பார்ப்பார். நேரத்துக்கு நீர் ஊற்றி வளர்த்து, விளையும் பொருள்களை தானும் உண்டு, சந்தையிலும் விற்பார். கவனமாகப் பார்த்தால் விளைச்சல் அதிகம். ஏனோதானோ என்று பார்த்தால் விளைச்சல் குறைவு. குறுகிய காலப் பயிர்களுக்கே கவனம் செலுத்திப் பார்த்தால் பலன் அதிகம் என்றால், நம்முடைய இளைய தலைமுறையை அக்கறையுடன் நல்ல பண்புகளுடன் வளர்த் தால் சமூக நலன் அதிகம் உருவாகும்.

இந்த இளைய தலைமுறையைச் சீர்ப்படுத்த வலிமை யான கருவி ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் அதுவும் அடிப்படை கல்வி கற்றுத் தரும் ஆசிரியர்கள் மிகவுமி கவனமாகக் கல்வியைக் கற்றுத்தர வேண்டும். தானும் ஒழுக்கத்தில் உயர்ந்திருந்து தன்னிடம் படிக்கும் பிள்ளை களையும் வாழ்நாளில் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்கும் கல்வியைக் கற்று கொடுக்க வேண்டும்.

நாட்டுப் பற்றும், சமுதாய அக்கறையும் என்று அதிகரிக்கின்றதோ அன்றே அரசியல் கேடர்களின் ஆணவ போக்குக் குறையும். ஆசிரியர்களே சமுதாய சிற்பிகளாவர். அடுத்தக் கருவிகள் பெற்றோர் களும் அரசும்தான். எந்த ஒரு பெரிய பதவியிலிருந்தாலும் தனக்குக் கல்வி கற்றுத் தந்த (முதல் வகுப்பு முதல், பெரிய படிப்பு வரை) ஆசிரியர்கள் வந்தால் தன்னையறியாமலே எழுந்து நின்று மரியாதை கொடுத்து மகிழுவது நல்ல மனிதர்களின் பண்பு. அந்த மரியாதையைப் பெறுபவர்தான் சமூக மாற்றத்திற்கு வலிமையான கருவியாக இருப்பார் என்பது உண்மை.

Pin It