book sinthanayalanசென்னையில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விடுமுறையில் புத்தகக் காட்சி நடைபெறும். 37ஆவது ஆண்டான இப்புத்தகக் காட்சி இவ்வாண்டு 10.1.2014 முதல் 22.1.2014 முடிய 13 நாட்கள் சென்னை YMCA உடற்பயிற்சிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

முதல் முறையாக 2011ஆம் ஆண்டிலும், 2-ஆவது முறையாக 2014ஆம் ஆண்டிலும் புத்தகக் கடையில் என் பொங்கல் விடுமுறை நாட்கள் முழுவதும் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இம்முறை அரங்கு எண்.265இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்ட ளை சார்பில் நம் கட்சி நூல்களும் தோழமை அமைப்பு களின் வெளியீடுகளும் இடம்பெற்றன. குறிப்பாகத் தோழர் வாலாசா வல்லவனின் தமிழ்க்குடியரசு பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அத்தனை நூல்களும் புத்தம் புதியனவாய் புத்தக அரங்கில் அமைந்தன. இவைதவிர பேராசிரியர் மு. நாகநாதன் பதிப்பித்த வெளியீடுகள், தோழர் கலசத்தின் புதுவாழ்வுப் பதிப்பக நூல்கள், கவிஞர் தமிழேந்தியின் நூல்கள் உள்ளிட்ட வற்றையும் குறிப்பிடலாம். தமிழ்த்தேசிய நாள்காட்டி கள், பெரியார் அமைப்புகள் சார்பில் வெளிவந்த நாள் காட்டிகள், குறுந்தகடுகள், குறுவெளியீடுகள் அரங்கை அணி செய்தன.

கீழ்ப்பென்னத்தூர் தோழர் வி.தேவராசனுடன் இணைந்து நான் விற்பனைப் பணியில் ஈடுபட்டேன். தோழர் வாலாசா வல்லவன் தொடர்ந்து வந்து புதிய புதிய நூல்களாகக் கொண்டுவந்து நிரப்பினார். தோழர் கள் இரா. பச்சமலை, தமிழேந்தி இருவரும் அவ்வப் போது வந்து எங்களை ஊக்கப்படுத்தினர்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு மனிதர்களைச் சந்திக் கிறோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் தாம் வாங்கும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று கருதி, என்னிடம் பெரியாரின் கொள்கைகள் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல் லுங்கள் என்று கேட்டார்கள். அப்பொழுது மார்க்சின் மூலதனத் தொகுப்பு, பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பு, அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நூல், தோழர் ஆனைமுத்துவின் கருத்துக்கருவூலம் தொகுப்பு, திராவிட இயக்கத் தலைவர்கள், கட்டுரைகள் போன்ற கொள்கை சார்ந்த நூல்களைப் பற்றி விளக்கிச் சொன்ன போது, மிக ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்கள். இவற்றில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூல் கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை விற்பனை யில் அதிகம் சாதித்தது. இப்புத்தகக் கடை வைப்பது என்பது கொள்ளை சார்ந்த பிரச்சாரமாகவே நான் உணர்கிறேன். பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளும், தோழர் ஆனைமுத்து கருத்துக்கருவூலம் தொகுப்பும் பார்வையாளர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்று விற்பனையாயின.

2007ஆம் ஆண்டு முதல் “சிந்தனையாளன் பத்திரிகையைத்” தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு திருப் பத்தூர் தோழர் இரவி மூலம் கிடைத்தது. மா.பெ.பொ.க. கொள்கையால் ஈர்க்கப்பட்ட நான் கல்லூரிப் படிப்பு முடித்து, முதல் மாத ஊதியத்தில் 2008-லிருந்து சிந்தனையாளன் வாழ்நாள் உறுப்பினரானேன். பிறகு 2011 சனவரி மாதம் விடுமுறையில் என் சொந்த விருப்பத்தின் காரணமாக பொங்கல் மலர் பணிக்கும், கட்சிச் சார்பில் புத்தகக் கடை அமைப்பதற்கும் தோழர் தமிழேந்தி அவர்களால் தோழர் ஆனைமுத்துவிடம் அறிமுகமானேன். அன்று முதல் பல நாட்கள் தோழ ருடன் தங்கியிருக்கிறேன். 16.1.2014 அன்று தோழர் ஆனைமுத்து அவர்கள் மலேசியா செல்வதற்குக் காலை 5 மணிக்கு நான் விமான நிலையம் வரை சென்று வழி அனுப்பியதில், மிக்க மனமகிழ்ச்சி அடைந் தேன். இதுபோன்று தோழர்களுக்கு உதவியாக இருப் பதை ஒரு சுமையான வேலையாக நான் நினைக்க வில்லை. மிக அரிய வாய்ப்பாகவே கருதுகிறேன். நிற்க.

இப்புத்தகக் காட்சியில் எனக்குத் தேவையான நூல்களைத் தோழமைக் கட்சித் தோழர்கள் கடையில் மிக அதிகக் கழிவு விலையில் கொடுத்து உதவி னார்கள். தோழர் வல்லவன் தனது பதிப்பக நூல் களில் எனக்குப் பிடித்த பல நூல்களை மிகக் குறைந்த விலையில் கொடுத்தார்.

இவை எல்லாம் எனக்கு மிக நல்ல அனுபவத் தையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தன. புத்தகக் காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் படித்த நடுத்தர வகுப்பு மக்களே அதிகம். திரைப்படம், தொலைக் காட்சி, வெற்றுப் பொழுதுபோக்குகளில் இருந்து விடுபட்டு, ஆண்டுதோறும் நடத்தப்பெறும் இத்தகையப் புத்தகக் காட்சிகளுக்கு மக்கள் ஆர்வத்துடன் வருவது வரவேற் கத்தக்கது. புத்தகக் காட்சியோடு இணைந்த அரங்கில் புதிய புதிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும், பல்துறை சார்ந்த பெருமக்களின் உரைகளும், குறும்படங்கள் திரையிடலும் நாள்தோறும் இடம்பெற்றது கூடுதல் சிறப்பு.

தோழர் ஆனைமுத்து மலேசியா புறப்படுவதற்கு முந்திய நாள் அரங்கிற்கு வருகை தந்தார். வேலூர் கட்சித் தோழர்கள் க.முகிலன், சா. குப்பன், மா. தசரதன், பொ. காளியப்பன், து. அரங்கநாதன், இரா. சுந்தர், ச.ந.ச.மார்த்தாண்டன், காஞ்சி தோழர்கள் சி. நடராசன், நாராயணமூர்த்தி, வாலாசா ப.வெங்கடேசன் டாக்டர் விமுனா மூர்த்தி, க. கோதண்டன், சென்னை கோ.மு. கருப்பய்யா, நாஞ்சில், சூலூர் புலவர் செந்தலை ந. கவுதமன் வருகைதந்தது மகிழ்ச்சி. சிறப்பு வருகை புரிந்தோருள் கவிஞர் கலிபூங்குன்றன், அறிவுமதி, ஓவியர் மருது, பேராசிரியர் தங்கராசு, சென்னை மாநகரக் காவல் துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இதே போல் புத்தகக் கடை அமைக்க வேண்டும். இதன் மூலம் பல அரிய நூல்களை நாம் மக்களிடம் கொண்டு செல்லவும், கொள்கைகளைப் பரப்பவும் முடியும் என்று நினைக்கிறேன். இதுபோலவே தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் எப்பொழுதும் எனக்குக் கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.

Pin It