india gate 450நியூ செஞ்சுரி புத்தக நிறுவன  நூல் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் பேசிய உரையிலிருந்து...)

1984ம் ஆண்டு சோவியத் நாட்டுக்கு செல்லும் பெரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, இந்திய சோவியத் பண்பாட்டுக்கழகத்தின் செயலாளராக இருந்த நா.வானமாமலை அவர்கள் முலமாகவே எனக்கு வந்த வாய்ப்பு கிடைத்தது இந்திய சோவியத் நட்புறவு பற்றி நான் அறிந்துகொள்ள விரும்பியபோது, பல நூலகங்களுக்கும் சென்று தேடியபோது புதிது புதிதாக பல செய்திகள் கிடைத்ததுசோவியத் நாட்டில் அஷ்காபாத்தில் கார்க்கி பல்கலைக்கழகத்தில் உரை யாற்றும் நல்வாய்ப்பு கிடைத்தது. அந்தக்கூட்டத்தில் பேசும்போது சொன்னேன்.

சோவியத் நாட்டுக்கு வெளியே முதன்முதலாக அக்டோபர் புரட்சியை இனம்கண்டு அதனை யுகப்புரட்சி என்று வர்ணித்த மகாகவி பாரதி பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னபோது அங்கு திரண்டிருந்த மக்கள் எழுந்து நின்று கைதட்டினர். சோவியத் மண்ணில் பாரதியின் மதிப்பை உணர்ந்து மகிழ்ந்தேன்.

ஈரோட்டில் நடந்த இந்திய சோவியத் கழகத்தின் மாநாட்டில் பேசும்போது எனக்குக் கிடைத்த குறிப்புகள் அடிப்படையில் சோவியத் இந்தியப் பண்பாட்டு உறவு குறித்து பேசினேன். உடனே அந்த மேடையிலேயே தோழர் நல்லகண்ணு அவர்கள் இந்தத் தகவல்களையெல்லாம் ஒரு நூலாக வெளியிட வேண்டும் எனக் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பின் காரணமாக ஒத்துக்கொண்டேன். பிறகுதான் ஆழந்தெரியாமல் காலை வைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன்.

இது எவ்வளவு ஆழமான வரலாறு என்பதை ஓரளவு அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக 30 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் என்று சொல்லமுடியாது. நேரங் கிடைக்கும் போதெல்லாம் இதற்காக செலவிட்டிருக்கிறேன். இந்தியாவின் பல்வேறு நூலகங்கள் புத்தகங்கள் என்று தேடித்தேடி குறிப்புகளை சேகரித்தேன்.

அப்போது சோவியத் நாட்டிலிருந்து வெளிவந்த சோவியத் நாடு பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றிய தி..சி அவர்கள் அந்த நூலகத்தை முழுமையாக நான் பயன் படுத்திக்கொள்ளும் உரிமையை எனக்குக் கொடுத்தார். மேலும்மேலும் பல்வேறு தகவல்களைச் சேகரித்தேன்.

இந்த நூலுக்கு தோழர். நல்லகண்ணு வழங்கி யிருக்கிற அணிந்துரை என்பது இந்த நூலுக்கு மகுடம் சூட்டுவது போன்ற சிறப்பானதாகும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிரிட்டிஷாரை விட ரஷ்யாவிலிருந்து ஆதரவு கிடைக்கும் எனஇந்திய மக்கள் கருதியது இயற்கையானது. இந்திய மக்கள் நம்பினார்கள். ரஷ்யாவில் கொடுங்கோலாட்சி செய்த ஜார் மன்னனின் ஆட்சி நம் விடுதலைப் போராட்டத்திற்கு துணையாக நிற்கும் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் பல்வேறு நிலைகளில் நம்பிக்கைகள் இருந்தன.

அப்போதைய புரட்சிப் போராட்டத்தின் மூளையாக செயல்பட்ட நானாசாகிப் எல்லாப் பிரிவினரையும் ஒன்றிணைத்து செயல்பட்டார். அப்போது அஜ்மல்கான் என்ற அவரது நண்பரை ரகசியமாக ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தார்.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்தி யர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது ரஷ்யா வெளியிலிருந்து தாக்கினால் சுலபமாக ஆங்கிலேயரை விரட்டிவிடலாம் என்ற திட்டத்தை ரஷ்ய மன்னரிடம் சொல்லி ஏற்பாடு செய்வதற்காக அஜ்மல்கான் ரஷ்யா சென்றது வரையிலான தகவல்கள் உள்ளன. அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்ற மற்ற எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

நானாசாகிப் என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை. பகதூர்ஷா பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தாந்தியா தோபே துக்கிலிடப்பட்டார். ஜான்சிராணி போரில் மடிந்துவிடுகிறார். எல்லோரையும் ஆங்கிலே யர்கள் ஒழித்துக்கட்டிவிட்டார்கள். ஆனால் நானா சாகிப் என்ன ஆனார் என ஆங்கிலேயருக்குத் தெரிய வில்லை. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கண்டுபிடித்துத் தருபவருக்கு பெரும்பரிசு தரப்படும் என தம்பட்டம் அடித்து அறிவித்தனர் ஆங்கிலேயர்கள். ஆனால் இந்திய மக்கள் மத்தியில் நானாசாகிப் ரஷ்யப் படையோடு வருவார்; இந்திய மக்களை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை தொடர்ந்து இருந்ததைப் பார்க்கமுடிகிறது.

பின்னர் அரவிந்தர் மூலம் ரஷ்ய உதவியை நாடுகிறார். ரஷ்யா ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரஷ்யாவில் வைத்துக் கொடுக்கமுடியாது. ஆனால் சுவிட்சர்லாந்தில் வைத்து பயிற்சியளிக்கலாம். அதற்கான நிதியை ரஷ்யா வழங்கலாம் என ஆலோசிக்கப் பட்டதாக தகவல்களெல்லாம் கிடைத்தது. ஆங்கிலேய எதிர்ப்புக்காக பல இந்திய மன்னர்கள் ரஷ்ய மன்னருக்கு கடிதம் எழுதுகிறார்கள். திலகரும் அரவிந்தரும் மாதவராவ் மற்றும் சிலரை ரஷ்யாவுக்கு அனுப்புகிறார்கள்.

அதற்குப்பின் அவர்கள் திரும்பி வந்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்தியாவுக் கான பாதையைக் கண்டறிய வேண்டும் என்று வாஸ்கோடகாமா என்ற ஐரோப்பியர் அங்கு சிந்தித்துக் கொண்டிருந்தபோது அபனாசி என்ற ரஷ்யப்பயணி மலபார் கடற்கரையில் பயணம் செய்துகொண் டிருந்தார். இந்திய மண்ணில் காலடி வைத்த முதல் பயணி ஒரு ரஷ்யர்தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

விவேகானந்தரை இந்துத்துவ அடையாளமாக மாற்ற இந்துத்துவவாதிகள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவரது மறுபக்கத்தைப் பலரும் மறுக்கப் பார்க்கிறார்கள். அக்டோபர் புரட்சிக்கு முன்னாலேயே தான் ஒரு சோஷலிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்தவர் விவேகானந்தர். ரோலந்துக்கு எழுதிய கடிதத்தில் தான் ஒரு சோஷலிஸ்ட் என்று தெளிவாக தெரிவித்தார்.

ரஷ்யப் புரட்சியாளர்களோடு முன்று நான்கு முறை சந்தித்துப் பேசுகிறார். ஒருமுறை பாரீஸிலும் ஒருமுறை லண்டனிலும், ஒருமுறை அமெரிக்காவிலும் கலந்துரை யாடுகிறார். சோஷலிசம் என்பதை உள்வாங்கி இருந்தார் விவேகானந்தர். அவரது கட்டுரையில் இதற்கான நிறைய குறிப்புகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது ஆன்மிகத் தோடு மாறாகவும் சோஷலிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டு இந்திய விடுதலைக்கான உதவிக்காக முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் ஒரு புரட்சி வெடிக்கும். அது என் மரணத்துக்கு முன்பாகவே நடக்கலாம் என்று எழுதியிருக்கிறார். உலகில் ரஷ்யா அல்லது சீனாவில் புரட்சி வெடிக்கும் என்றும் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.

ராமசேஷன் என்ற ஒரு இந்தியப் பத்திரிகையாளர் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ஆங்கிலேயர்களின் கொடுமைகள் தாங்க வில்லை. இதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் எழுதிய டால்ஸ்டாய்ஹிண்டு குரல்என்று குறிப்பிடுகிறார். திருக்குறள் என்பதைத்தான் அவர் அப்படிக் கூறியுள்ளார்அதில் இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தின் ஆறு குறட்பாக்களைக் குறிப்பிட்டு எழுதி அறவழியில் போராடுங்கள். அதுதான் உங்கள் மண்ணுக்கு ஏற்றது என்று டால்ஸ்டாய் கூறியுள்ளார்

டால்ஸ் டாயை காந்தி தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். டால்ஸ்டாய்க்கு அறவழியில் குரு நம் வள்ளுவர். காந்திக்கும் டால்ஸ்டாயிக்கும் கடிதத் தொடர்புகள் இருந்ததுஒருவருக்கொரு புரிந்து கொள்ளும்படி இருந்தது.  இந்தியாவிலிருந்து பல பேர் டால்ஸ்டாய்க்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் டால்ஸ்டாய் பதில் அனுப்பி யிருக்கிறார். ரஷ்ய அரசால் தடை செய்யப்பட்ட டால்ஸ்டாயின் நூல்கள் இந்திய மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது.

லெனின் அவர்கள் அனைவருக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என வலியுறுத்தியபோது இந்தியாவிலும் நம்பிக்கை அதற்கான ஆதாரமாக இருந்திருக்கிறதுபண்பாட்டு வகையிலும். வணிகரீதியிலும். இலக்கிய உணர்வுகளிலும், பல்வேறு விதங்களில் எனக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்நுலைத் தொகுத்திருக்கிறேன்.

எதிர்காலத்தில் இளையவர்கள் யாரும் இதனைத் தொடர முன்வந்தால் மேலும் சில ஆதாரங்கள் கிடைக்கலாம். அப்போது இன்னும் விரிவாக இந்த உறவு பற்றிய விவரங்கள் வரவேண்டும். இப்படியான ஒரு பெரும்வாய்ப்பை எனக்கு வழங்கிய தோழர் நல்லகண்ணு, தா.பாண்டியன் மற்றும் செயலாளர் சண்முகம் சரவணன் ஆகியோருக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும் எனது நன்றி.

 10-1- 2015 சென்னையில் நியூ செஞ்சுரியின் 100 புத்தக வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் உரையின் எழுத்துவடிவம் ஜி.சரவணன்.

Pin It