பண்டைக்கால தமிழர்கள் இயற்கை வழி சென்றவர்கள், இயல்பாக வாழ்ந்தனர். மக்களின் உணவு, தொழில், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள், மனப்பாங்கு, சமய நம்பிக்கை ஆகிய அனைத்தும் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்திருந்தன. அவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நில அமைப்புகளை உருவாக்கி, சமயம் சாராத, பொருள்மய சமுதாயமாக வாழ்ந்தனர். சங்க காலச் சமுதாய வாழ்வு அகம் புறம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. இல்வாழ்க்கை நெறி அகம் எனப்பட்டது. அகவாழ்க்கைக்கு அறம் சார்ந்த இன்பம் அடிப்படை. அகத்திற்கு புறத்தே நடைபெறும் புறவாழ்க்கை நெறிபுறம்எனப்பட்டது. புறவாழ்க்கைக்கு அறமும் பொருளும் அடிப்படை.

Vallalarஅகவாழ்க்கை களவு, கற்பு என இருவகையாகப் பகுக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்னர் அமைந்த காதல் வாழ்க்கைகளவுஎனப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் அமைந்த இல்வாழ்க்கைகற்புஎனப்பட்டது.

சங்க இலக்கியங்களுள் பெரும்பாலானவை அகப்பொருளையே சுட்டுகின்றன. எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகப்பொருள் சார்புடையவை. பல வகையிலும் ஒத்த நலன்களையுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுங்காலத்துப் பிறப்பது இன்பம். அதனை இன்னதென்று சொல்லால் விளக்க முடியாது. அவர்கள் அகத்தால் அதாவது உள்ளத்தால்தான் உணரமுடியும். அத்தகைய இன்பம் அகம் எனப்பட்டது. ஏனைய இன்பங்கள்யாவும் புறம் எனப்பட்டது. அகத்தில் காதல் மலர்கின்றது.புறத்தில் வீரம் சிறக்கின்றது. ஆண் பெண் விருப்பத்தினால் அகத்தினை உண்டாகின்றது. மண்ணாசையாலும், பொன்னாசையாலும், பசியாலும் புறத்தினை உண்டாக்குகின்றது. இந்நிலையில் ஒத்த மனமும், குணமும் உடைய இருவர் இணைவதேதிருமணம்ஆகும். இது தமிழர்களின் நிலைப்பாடாக இருந்தது. காதலும், கற்பும் மண வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக கருதினர்.

சங்ககாலத் திருமணத்தில் தாலி இல்லை

சங்ககாலத் தமிழர் மண வாழ்க்கைஉலகாயத கண்ணோட்டத்தைக்கொண்டிருந்தது. ‘உலகியல் நெறியைப் போற்றி தெய்வக் கோட்பாட்டைப் போற்றாத தத்துவத்திற்குலோகாயதம்என்பது பெயராயிற்று. காலப் போக்கில்உலகாயதம்என்னும் சொல் மக்களுடைய வாழ்க்கைத் தத்துவம் எனவும் இவ்வுலக வாழ்க்கையை பற்றி ஓதுவது எனவும் கருதப்பட்டு கூல தீக்ஷீப்ஸிடூஞூம் னீன்ஸீறீலீரீடி 2015 27 வந்துள்ளது. சங்ககால மண வாழ்க்கையில் குறிஞ்சி புணர்தலையும், முல்லை இருத்தலையும், மருதம் ஊடலையும், நெய்தல் இரங்கலையும், பாலை பிரிதலையும் உரிப்பொருளாகக் கொண்டு வாழ்ந்தனர் சங்ககால தமிழர்கள். எனவே தமிழர்கள் தெளிவான, யதார்த்தமான உலகாயத கண்ணோட்டத்தோடு வாழ்ந்தனர் என்பது உறுதியாகிறது. மணம் பேசி விட்டாலே திருமணம் முடிந்துவிட்டதாகக் கருதப் பட்டது. அங்கு தாலிக்கு இடமில்லை. எனவே, சங்க காலத் தமிழரிடையே தாலி கட்டும் பழக்கமில்லை. இரு வீட்டுப் பெற்றோரே திருமணத்தை நடத்தி வைத் தனர். துணி அணியும் பழக்கம் இருந்ததேயன்றி, தாலி அணிவிக்கும் வழக்கம் இல்லை. “மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாக சங்கத்தமிழில் சான்றுகள் ஏதுமில்லை.” “ஈகையரிய இழையணி மகளிரொடு பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. ஆனால், அது திருமணத்தின் போது அணிவிக்கப்பட்டதென்பதற்குச் சான்றில்லை. ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக் காப்பணியாக அணிவிக்கும் வழக்கம் அக்காலத்தில் உண்டு. ஆனால்திருமணத்தின் போது மங்கல நாண் பூட்டும் வழக்கம் பழந்தமிழரிடையே இல்லை போலும். அவ்வழக்கம் இருந்திருப்பின் எல்லாத் திருமண சடங்குகளை குறிப்பிடும் போது தாலி கட்டுவதென்னும் தலையாய சடங்கைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆண்டாள் நாச்சியார், கண்ணன் தம்மை மணந்ததாகக் கண்ட கனவைத் தம் தோழியிடம் கூறும் போது திருமணச் சடங்குகள் அத்தனையும் கூறியவிடத்துத் தமக்குக் கண்ணன் தாலி கட்டியதாகக் கூறவில்லை. “மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்,” என்று மட்டுந்தான் தெரிவிக்கின்றார். கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்படும் திருமணங் களிலும் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாகத் தெரியவில்லை. சீவகசிந்தாமணியில் அரசியர் அணிந்திருந்தநாள்ளிட்டுச் சுடர் வீச நன் மாணிக்க நடுதாலியும் திருமணத்தின் போது கட்டப்பட்ட தென்று கொள்வதற்குச் சான்றில்லை. எனவே, திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படவில்லை, என்று கே.கே.பிள்ளை கூறுகிறார். (கே.கே. பிள்ளை தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக். 134-135).

ஆதலால் சங்க காலத்தில் தாலி அணியப்பட்டது என உறுதியாகக் கூறுவதற்கில்லை.

எப்போதுதாலி வந்தது

எப்போது தமிழர்களிடையே தாலி கட்டும் வழக்கம் வந்தது என்று ஆராயும் போது சங்கம் மருவிய காலத்தில் தாலி அணியும் வழக்கம் வந்திருக்கக்கூடும் என அறியப்படுகிறது. சங்கம் மருவிய காலத்தில் திருமணம் ஆன பெண் தாலி அணியும் மரபைச் சிலம்புமங்கல அணியின் பிறிதணி அணியாள் (சிலம்பு 4-50) எனத் தெளிவாக அறிய முடிகிறது. திருமணச் சடங்கில் புரோகிதர் மறை ஓதுதல், தீ வலம் வருதல் போன்ற ஆரிய மரபுகளைச் சிலம்பு குறிப்பிடுதல் போன்று (சிலம்பு 1-52-53) சங்க இலக்கியங்களில் இம்மரபுகள் இடம் பெற்றமைக்கு சான்றுகள் இல்லை. எனவே பிராமணர் மறை வழி தாலி பூட்டும் பழக்கம் சிலப்பதிகார காலத்தில் புகுத்தப்பட்ட புதுப்பழக்கம் எனலாம்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் தாலி புனிதப் பொருளாகக் கருதப் படுவதாகக் கூறுகிறார்கள். இன்று தாலிகளின் உருவ அமைப்புகள் சாதிக்கு சாதி வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. மேலும் தற்போது மஞ்சள் கயிறுக்கு பதில், தங்கச் சங்கிலியில் தாலியை அணிந்து கொள்கிறார்கள்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதென்பது கல்யாணம் ஆனது, ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்காக என்பர். அப்படியானால் ஆண்களில் கல்யாணம் ஆனவன் ஆகாதவன் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியை எழுப்பினார் இந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவரான தந்தை பெரியார். மேலும் தந்தை பெரியார்தாலி கட்டும் வழக்கத்தை நிராகரித்தார் எனலாம்.

வள்ளலார் பார்வையில்தாலி

சங்க காலத்தில்தாலி அணியும் வழக்கமில்லை. பின்னர் தான் தமிழ்நாட்டில்தாலி அணியும் வழக்கம் வந்தது என்றும், கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதாலிபுனிதப் பொருளாகக் கருதப்பட்டு வருகிறது என்பதையெல்லாம் மேலே பார்த்தோம். வள்ளலாரின் பார்வையில்தாலி பற்றிய கருத்தினை கீழே காண்போம்.

(ஆண்களில் கல்யாணம் ஆனவன் ஆகாதவன் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியை எழுப்பினார் இந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவரான தந்தை பெரியார்.)

திருமுறைகள்

வள்ளலாரின் பாடல்கள் அனைத்தையும் தொகுத்து அவற்றை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார். அவற்றுள் ஆறாவது திருமுறையை வெளியிடக்கூடாது என்றும், தாம் தெரிவித்துள்ள கருத்துக்கள் சுத்த சன்மார்க்கிகள் மட்டுமே தெரிந்து பின்பற்ற வேண்டியவை. ஆகையால் பொது மக்கள் மத்தியிலே அவற்றை நடமாடவிட வேண்டா என்று வள்ளலார் தெரிவித்ததாகச் சொல்லப் படுகின்றது. 1867 ஆம் ஆண்டில் முதல் நான்கு திருமுறைகள் மட்டுமே அச்சிடப்பட்டு வெளியாயின. அதன் பின்னர் 1880-ல் ஐந்தாம் திருமுறை, 1885-ல் ஆறாம் திருமுறை வெளியிடப் பெற்றன. முதல் ஐந்து திருமுறைகளில் பக்திப் பாடல்கள் மட்டுமே காணப் படுகின்றன. வள்ளலார் குறிப்பாக, திருவொற்றியூர், திருத்தணிகை, கந்தகோட்டம் மற்றும் பல திருத்தலத் தெய்வங்களின் மீது பாடியுள்ள பாடல்களையே முதல் ஐந்து திருமுறைகளில் காண முடிகிறது. ஆறாவது திருமுறையை வெளியிட வள்ளலார் இசைவு தரவில்லை. முன் திருமுறைகளைப் போன்று இவை பக்தி பாடல்கள் அல்ல என்பது, காரணமாக இருக்கலாம் எனக் கருதுவர் ஆய்வாளர். முன் தோன்றிய ஞானியர் எவரிடமும் காணாத புரட்சிகரமான சமயச் சீர்திருத்தக் கருத்துகளை ஆறாந் திருமுறையில் மட்டுமே காண முடிகிறது. மூட நம்பிக்கைகள், சாதி பேதம், மதவெறி, அரசியல் கொடுமை, அறியாமை ஒழிப்பு, ஏழைகளைத் துன்புறுத்தும் வஞ்சகர்கள் வாழ்வு, இவைகளையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கும் பாடல்கள் ஆறாம் திருமுறையில் நிரம்பியிருக்கின்றன. மனித சமுதாயம் முழுவதுமே ஆறாந் திருமுறையில் காணப்படும் புதிய எண்ணங்களையேற்று முதலில் சாதகர்களாகி இறுதியில் சாத்தியர்களாக வாழ வேண்டும் என்பது வள்ளலாரின் (சுத்த சன்மார்க்க நெறிவழிச் செல்ல விரும்புவோரைசாதகர்’- ‘சாத்தியர்என இருவகையினராகப் பிரிக்கின்றார் வள்ளலார்) விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் வள்ளலாரின் மறைவுக்குப் பிறகு ஆறாந் திருமுறை பொதுமக்கள் மத்தியில் வைக்கப்பட்டது எனலாம்.

ஐந்து திருமுறைகளிலுள்ள பாடல்களைப் பாடி முடித்த பிறகே ஆறாந் திருமுறைப் பாடல்களைத் தனியாகப் பாடியிருப்பார் என்று எண்μவதற்கில்லை என்றும், அச்சிட்ட முறையில் ஆறாந்திருமுறை தனிப் புத்தகமாக இருப்பதால் அப்படி ஒரு மயக்கம் ஏற்பட இடமிருக்கின்றது. ஆனால், அது பிழையாகும் என்கிறார் சிலம்புச் செல்வர் .பொ.சி. (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, .187).

மானிட இனம் விழிப்பு நிலை பெறாமல் பகுத்தறிவைத் தடை செய்வது நமது மூடப்பழக்கங்கள் ஆகும். இந்த மூடப்பழக்கங்கள் காலப் போக்கில் மூட நம்பிக்கைகளாகப் பரிணமித்து பல்வேறு பரிமாணங்களை பெற்றன. வள்ளலாரால் அவைகளைய முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளின் போது வெளிவந்த பெண்ணியச் சிந்தனைதான், தாலி பற்றிய கருத்துரை.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா.

மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டா.”

காது குத்துதல், மூக்குக் குத்துதல் வேண்டா.

புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்ய வேண்டாம் என்பது வள்ளலார் இட்ட சமாதிக் கட்டளை, (திருஅருட்பா, உரைநடைப் பகுதி, பக் 430)

அக்காலத்தில் கணவனை இழந்த பெண்களை, ‘தாலி அறுத்தவள்முண்டச்சி, ‘விதவை என்று அழைத்தனர். கைம்மைக் கோலம் (விதவைக் கோலம்) கொடுமையிலும் கொடுங்கோலம், அலங்கோலம், விதவைகளுக்குச் சமுதாயத்தில் மதிப்பில்லை, சொந்த வீட்டிலேயே மரியாதை இல்லை, மனித சமுதாயம் தள்ளி வைத்தது, ஒதுக்கி வைத்தது. சொந்த வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சியில் அவர்களை முன்னிலைப் படுத்துவதில்லை. அவர்கள் ஒதுங்கியே இருக்க வேண்டும். கண் மறைவாக இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள், பூவிழந்து, பொட்டு, மஞ்சள் இழந்து, தாலி இழந்து, வெள்ளைப் புடவை யுடன் இருக்க வேண்டும். மொத்தத்தில் கைம்மை நோன்பு நோற்றனர். இந்நிலை வள்ளலாரின் காலமாகும்.

கணவன் இறந்த பின் பெண்கள் தாலி போன்ற மங்கலச் சின்னங்களைத் துறக்க வேண்டியதில்லை என்கிறார் வள்ளலார். கணவன் இறந்துவிட்டான் என்பதற்காகக் கட்டிய தாலியை அறுக்க வேண்டிய தில்லை. கட்டியவன் போய்விட்டான், இருப்பவர்கள் ஏன் தாலியை அறுக்க வேண்டும் என்ற வினாவினை எழுப்பினார் வள்ளலார். ‘அறுத்துப் போனவர்கள்என்ற ஓர் சமுதாயத்தையே இல்லாமல் செய்கிறார்

கணவன் இறந்த பின் பெண்கள் தாலி போன்ற மங்கலச் சின்னங்களைத் துறக்க வேண்டியதில்லை என்கிறார் வள்ளலார்.

வள்ளலார். தாலி அறுக்க வேண்டாம் என்பதால் பூவோடும் பொட்டோடும் இருக்கலாம் என்று கொள்ள வேண்டும் என்கிறார் சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் - (புரட்சித் துறவி வள்ளலார் ஓர் அறிமுகம் .107).

கணவன் இறந்தால்மனைவிகைம்மை நோன்பு நோற்கிறாள். ஆனால் மனைவி இறந்தால் கணவன் மறுதார மணம் செய்து கொள்கிறான். மனைவி இருக்கும் போதே, பிள்ளையில்லை என்பதற்காக மறுமணம் செய்கின்றனர். பிள்ளை இல்லை என்பதினால் முதல் மனைவியே தன் கணவனுக்கு மறுமணம் செய்கிறாள். மனைவியை இழந்த ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றபடி மறுமணம் செய்வதில் வள்ளலாருக்கு உடன்பாடு இல்லை. கைம்பெண் மணத்தை ஆதரிக்கிறார். அதே சமயம் ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் கொடுமைகளையும் கண்டிக்கிறார் வள்ளலார். சன்மார்க்கத்தில் ஏகதாரமே. பலதார மணம் இல்லை என்பது வள்ளலார் கட்டளை. இதுவே சன்மார்க்க பண்பாடு.

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கைம்மைக் கோலத்தின் கொடுமை நிலவிய காலத்தில் வள்ளலார்கணவன் இறந்தால் மனைவி தாலியை துறக்க வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம் என்ற தன்னுடைய கருத்தினை வலியுறுத்தி வந்தார்.

மேலும், பெண்கள் காது குத்துவதையும், மூக்கு குத்துவதையும் வள்ளலார் கண்டிக்கிறார். அதில் வள்ளலாருக்கு μஅளவு கூட உடன்பாடு இல்லை. சித்தி வளாகத்தில் செய்த பேருபதேசத்தில், சில வரிகளைக் காணலாம்.

இப்படியே காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வரவிடுத்தவர் μக்குக் கடுக்கனிடுதலும் பெண்μக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்கு சம்மதமானால் காதிலும், மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாராÓ என்கிறார் வள்ளலார்.

-திருவருட்பா, உரைநடைப் பகுதி பக்கம் 358

பெண்களுக்கு, வள்ளலார் காலத்திலும் நகையின் மீது மோகம் அதிகமாக இருந்தது. இதில் ஆண்களும் விதிவிலக்கு அல்ல. பெண்கள், காது, மூக்கு, கால் ஆகியவற்றில் நகைகளை அணிவதை பழங்காலத் தொட்டே கொண்டிருந்தனர். ஆண்கள் முத்துமாலை, மதாணி, கை வளையல்களையும் அணிகலன்களாக அணிந்திருப்பதை அறிகிறோம். வள்ளலார் இதற்கெல்லாம் இயற்கையான விளக்கம் இல்லை என்கிறார். “காதில் கம்மலும், மூக்கில் மூக்குத்தியும் அணிவது தமக்குச் சம்மதமானால், இறைவன் காதுகளிலும் மூக்கிலும், பொத்தல்கள் அமைத்திருக்க மாட்டாரா என கேள்வியை எழுப்பி, அதன் தேவையின்மையை வலியுறுத்துகிறார் வள்ளலார்.

கணவன் இறந்த பின் பெண்கள் தாலி போன்ற மங்கலச் சின்னங்களைத் துறக்க வேண்டியதில்லை. காது குத்துதல், மூக்குக் குத்துதல் போன்ற வழக்கங்கள் அனாவசியமானவை. இந்த வழக்கங்களுக்கும், ஆன்மீகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வலியுறுத்தினார் வள்ளலார்.

மேலும் பொன் போன்ற விலை உயர்ந்த அணிகலன்களை அணிவது, சமுதாயப் பொருளா தாரமும் மனநிலையும் பாதிக்கப்படும் என்பது வள்ளலாரின் சீரிய சிந்தனையாகும்.

துணை புரிந்த நூல்கள்

கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், . வெங்கடேசன், முற்கால தமிழ்நாட்டு வரலாறு

. இராமகிருட்டிணன், தமிழக வரலாறு தமிழர் பண்பாடும்

. பார்த்தசாரதி, உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம்.

B. சுப்ரமணி, இந்திய வரலாறு, சீவக சிந்தாமணி பாடல், 2697 அகநானூறு, பாடல்கள் 86, 136 புறநானூறு பாடல், 127

சிலப்பதிகாரம் பாடல்கள் 152-53, 450

செல்வ கதிரவன், கட்டுரைபெரியார் பார்வையில் தாலி

நியூ செஞ்சுரியின்உங்கள் நூலகம், வெளியீடு மாத இதழ், மார்ச், 2015.

பெரியார் களஞ்சியம் (பெண்μரிமை பாகம் (4))

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு,

. வெள்ளை வாரணனார், திருவருட்பாச் சிந்தனை.

. மெய்யப்பன், வள்ளலார் வரலாறு.

.பொ. சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு சாமி. சிதம்பரனார், வடலூரார் வாய்மொழி, ஊரன் அடிகள், புரட்சித் துறவி வள்ளலார் ஓர் அறிமுகம்

பா.சு.ரமணன், அருட்பிரகாச வள்ளலார்.

சாமி. சிதம்பரனார், வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி

பண்டைக்கால தமிழர்கள் இயற்கை வழி சென்றவர்கள், இயல்பாக வாழ்ந்தனர். மக்களின் உணவு, தொழில், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள், மனப்பாங்கு, சமய நம்பிக்கை ஆகிய அனைத்தும் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்திருந்தன. அவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நில அமைப்புகளை உருவாக்கி, சமயம் சாராத, பொருள்மய சமுதாயமாக வாழ்ந்தனர். சங்க காலச் சமுதாய வாழ்வு அகம் புறம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. இல்வாழ்க்கை நெறி அகம் எனப்பட்டது. அகவாழ்க்கைக்கு அறம் சார்ந்த இன்பம் அடிப்படை. அகத்திற்கு புறத்தே நடைபெறும் புறவாழ்க்கை நெறி Ôபுறம்Õ எனப்பட்டது. புறவாழ்க்கைக்கு அறமும் பொருளும் அடிப்படை.

அகவாழ்க்கை களவு, கற்பு என இருவகையாகப் பகுக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முன்னர் அமைந்த காதல் வாழ்க்கை ÔகளவுÕ எனப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் அமைந்த இல்வாழ்க்கை Ôகற்புÕ எனப்பட்டது.

சங்க இலக்கியங்களுள் பெரும்பாலானவை அகப்பொருளையே சுட்டுகின்றன. எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகப்பொருள் சார்புடையவை. பல வகையிலும் ஒத்த நலன்களையுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுங்காலத்துப் பிறப்பது இன்பம். அதனை இன்னதென்று சொல்லால் விளக்க முடியாது. அவர்கள் அகத்தால் அதாவது உள்ளத்தால்தான் உணரமுடியும். அத்தகைய இன்பம் அகம் எனப்பட்டது. ஏனைய இன்பங்கள்யாவும் புறம் எனப்பட்டது. அகத்தில் காதல் மலர்கின்றது.புறத்தில் வீரம் சிறக்கின்றது. ஆண் பெண் விருப்பத்தினால் அகத்தினை உண்டாகின்றது. மண்ணாசையாலும், பொன்னாசையாலும், பசியாலும் புறத்தினை உண்டாக்குகின்றது. இந்நிலையில் ஒத்த மனமும், குணமும் உடைய இருவர் இணைவதே Ôதிருமணம்Õ ஆகும். இது தமிழர்களின் நிலைப்பாடாக இருந்தது. காதலும், கற்பும் மண வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக கருதினர்.

சங்ககாலத் திருமணத்தில் தாலி இல்லை

சங்ககாலத் தமிழர் மண வாழ்க்கை Ôஉலகாயத கண்ணோட்டத்தைக்Õ கொண்டிருந்தது. Ôஉலகியல் நெறியைப் போற்றி தெய்வக் கோட்பாட்டைப் போற்றாத தத்துவத்திற்கு Ôலோகாயதம்Õ என்பது பெயராயிற்று. காலப் போக்கில் Ôஉலகாயதம்Õ என்னும் சொல் மக்களுடைய வாழ்க்கைத் தத்துவம் எனவும் இவ்வுலக வாழ்க்கையை பற்றி ஓதுவது எனவும் கருதப்பட்டு கூல தீக்ஷீப்ஸிடூஞூம் னீன்ஸீறீலீரீடி 2015 27 வந்துள்ளது. சங்ககால மண வாழ்க்கையில் குறிஞ்சி புணர்தலையும், முல்லை இருத்தலையும், மருதம் ஊடலையும், நெய்தல் இரங்கலையும், பாலை பிரிதலையும் உரிப்பொருளாகக் கொண்டு வாழ்ந்தனர் சங்ககால தமிழர்கள். எனவே தமிழர்கள் தெளிவான, யதார்த்தமான உலகாயத கண்ணோட்டத்தோடு வாழ்ந்தனர் என்பது உறுதியாகிறது. மணம் பேசி விட்டாலே திருமணம் முடிந்துவிட்டதாகக் கருதப் பட்டது. அங்கு தாலிக்கு இடமில்லை. எனவே, சங்க காலத் தமிழரிடையே தாலி கட்டும் பழக்கமில்லை. இரு வீட்டுப் பெற்றோரே திருமணத்தை நடத்தி வைத் தனர். துணி அணியும் பழக்கம் இருந்ததேயன்றி, தாலி அணிவிக்கும் வழக்கம் இல்லை. “மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாக சங்கத்தமிழில் சான்றுகள் ஏதுமில்லை.” “ஈகையரிய இழையணி மகளிரொடு பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. ஆனால், அது திருமணத்தின் போது அணிவிக்கப்பட்டதென்பதற்குச் சான்றில்லை. ஐம்படைத் தாலியும், புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக் காப்பணியாக அணிவிக்கும் வழக்கம் அக்காலத்தில் உண்டு. ஆனால்திருமணத்தின் போது மங்கல நாண் பூட்டும் வழக்கம் பழந்தமிழரிடையே இல்லை போலும். அவ்வழக்கம் இருந்திருப்பின் எல்லாத் திருமண சடங்குகளை குறிப்பிடும் போது தாலி கட்டுவதென்னும் தலையாய சடங்கைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆண்டாள் நாச்சியார், கண்ணன் தம்மை மணந்ததாகக் கண்ட கனவைத் தம் தோழியிடம் கூறும் போது திருமணச் சடங்குகள் அத்தனையும் கூறியவிடத்துத் தமக்குக் கண்ணன் தாலி கட்டியதாகக் கூறவில்லை. “மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்,” என்று மட்டுந்தான் தெரிவிக்கின்றார். கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்படும் திருமணங் களிலும் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாகத் தெரியவில்லை. சீவகசிந்தாமணியில் அரசியர் அணிந்திருந்தநாள்ளிட்டுச் சுடர் வீச நன் மாணிக்க நடுதாலியும் திருமணத்தின் போது கட்டப்பட்ட தென்று கொள்வதற்குச் சான்றில்லை. எனவே, திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படவில்லை, என்று கே.கே.பிள்ளை கூறுகிறார். (கே.கே. பிள்ளை தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக். 134-135).

ஆதலால் சங்க காலத்தில் தாலி அணியப்பட்டது என உறுதியாகக் கூறுவதற்கில்லை.

எப்போதுதாலி வந்தது

எப்போது தமிழர்களிடையே தாலி கட்டும் வழக்கம் வந்தது என்று ஆராயும் போது சங்கம் மருவிய காலத்தில் தாலி அணியும் வழக்கம் வந்திருக்கக்கூடும் என அறியப்படுகிறது. சங்கம் மருவிய காலத்தில் திருமணம் ஆன பெண் தாலி அணியும் மரபைச் சிலம்புமங்கல அணியின் பிறிதணி அணியாள் (சிலம்பு 4-50) எனத் தெளிவாக அறிய முடிகிறது. திருமணச் சடங்கில் புரோகிதர் மறை ஓதுதல், தீ வலம் வருதல் போன்ற ஆரிய மரபுகளைச் சிலம்பு குறிப்பிடுதல் போன்று (சிலம்பு 1-52-53) சங்க இலக்கியங்களில் இம்மரபுகள் இடம் பெற்றமைக்கு சான்றுகள் இல்லை. எனவே பிராமணர் மறை வழி தாலி பூட்டும் பழக்கம் சிலப்பதிகார காலத்தில் புகுத்தப்பட்ட புதுப்பழக்கம் எனலாம்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் தாலி புனிதப் பொருளாகக் கருதப் படுவதாகக் கூறுகிறார்கள். இன்று தாலிகளின் உருவ அமைப்புகள் சாதிக்கு சாதி வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. மேலும் தற்போது மஞ்சள் கயிறுக்கு பதில், தங்கச் சங்கிலியில் தாலியை அணிந்து கொள்கிறார்கள்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதென்பது கல்யாணம் ஆனது, ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்காக என்பர். அப்படியானால் ஆண்களில் கல்யாணம் ஆனவன் ஆகாதவன் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியை எழுப்பினார் இந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவரான தந்தை பெரியார். மேலும் தந்தை பெரியார்தாலி கட்டும் வழக்கத்தை நிராகரித்தார் எனலாம்.

வள்ளலார் பார்வையில்தாலி

சங்க காலத்தில்தாலி அணியும் வழக்கமில்லை. பின்னர் தான் தமிழ்நாட்டில்தாலி அணியும் வழக்கம் வந்தது என்றும், கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ÔதாலிÕ புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வருகிறது என்பதையெல்லாம் மேலே பார்த்தோம். வள்ளலாரின் பார்வையில்தாலி பற்றிய கருத்தினை கீழே காண்போம்.

(ஆண்களில் கல்யாணம் ஆனவன் ஆகாதவன் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியை எழுப்பினார் இந்தியச் சிந்தனையாளர்களில் ஒருவரான தந்தை பெரியார்.)

திருமுறைகள்

வள்ளலாரின் பாடல்கள் அனைத்தையும் தொகுத்து அவற்றை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார். அவற்றுள் ஆறாவது திருமுறையை வெளியிடக்கூடாது என்றும், தாம் தெரிவித்துள்ள கருத்துக்கள் சுத்த சன்மார்க்கிகள் மட்டுமே தெரிந்து பின்பற்ற வேண்டியவை. ஆகையால் பொது மக்கள் மத்தியிலே அவற்றை நடமாடவிட வேண்டா என்று வள்ளலார் தெரிவித்ததாகச் சொல்லப் படுகின்றது. 1867 ஆம் ஆண்டில் முதல் நான்கு திருமுறைகள் மட்டுமே அச்சிடப்பட்டு வெளியாயின. அதன் பின்னர் 1880-ல் ஐந்தாம் திருமுறை, 1885-ல் ஆறாம் திருமுறை வெளியிடப் பெற்றன. முதல் ஐந்து திருமுறைகளில் பக்திப் பாடல்கள் மட்டுமே காணப் படுகின்றன. வள்ளலார் குறிப்பாக, திருவொற்றியூர், திருத்தணிகை, கந்தகோட்டம் மற்றும் பல திருத்தலத் தெய்வங்களின் மீது பாடியுள்ள பாடல்களையே முதல் ஐந்து திருமுறைகளில் காண முடிகிறது. ஆறாவது திருமுறையை வெளியிட வள்ளலார் இசைவு தரவில்லை. முன் திருமுறைகளைப் போன்று இவை பக்தி பாடல்கள் அல்ல என்பது, காரணமாக இருக்கலாம் எனக் கருதுவர் ஆய்வாளர். முன் தோன்றிய ஞானியர் எவரிடமும் காணாத புரட்சிகரமான சமயச் சீர்திருத்தக் கருத்துகளை ஆறாந் திருமுறையில் மட்டுமே காண முடிகிறது. மூட நம்பிக்கைகள், சாதி பேதம், மதவெறி, அரசியல் கொடுமை, அறியாமை ஒழிப்பு, ஏழைகளைத் துன்புறுத்தும் வஞ்சகர்கள் வாழ்வு, இவைகளையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கும் பாடல்கள் ஆறாம் திருமுறையில் நிரம்பியிருக்கின்றன. மனித சமுதாயம் முழுவதுமே ஆறாந் திருமுறையில் காணப்படும் புதிய எண்ணங்களையேற்று முதலில் சாதகர்களாகி இறுதியில் சாத்தியர்களாக வாழ வேண்டும் என்பது வள்ளலாரின் (சுத்த சன்மார்க்க நெறிவழிச் செல்ல விரும்புவோரை Ôசாதகர்Õ- Ôசாத்தியர்Õ என இருவகையினராகப் பிரிக்கின்றார் வள்ளலார்) விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் வள்ளலாரின் மறைவுக்குப் பிறகு ஆறாந் திருமுறை பொதுமக்கள் மத்தியில் வைக்கப்பட்டது எனலாம்.

ஐந்து திருமுறைகளிலுள்ள பாடல்களைப் பாடி முடித்த பிறகே ஆறாந் திருமுறைப் பாடல்களைத் தனியாகப் பாடியிருப்பார் என்று எண்μவதற்கில்லை என்றும், அச்சிட்ட முறையில் ஆறாந்திருமுறை தனிப் புத்தகமாக இருப்பதால் அப்படி ஒரு மயக்கம் ஏற்பட இடமிருக்கின்றது. ஆனால், அது பிழையாகும் என்கிறார் சிலம்புச் செல்வர் .பொ.சி. (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, .187).

மானிட இனம் விழிப்பு நிலை பெறாமல் பகுத்தறிவைத் தடை செய்வது நமது மூடப்பழக்கங்கள் ஆகும். இந்த மூடப்பழக்கங்கள் காலப் போக்கில் மூட நம்பிக்கைகளாகப் பரிணமித்து பல்வேறு பரிமாணங்களை பெற்றன. வள்ளலாரால் அவைகளைய முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளின் போது வெளிவந்த பெண்ணியச் சிந்தனைதான், தாலி பற்றிய கருத்துரை.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா.

மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டா.”

காது குத்துதல், மூக்குக் குத்துதல் வேண்டா.

புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்ய வேண்டாம் என்பது வள்ளலார் இட்ட சமாதிக் கட்டளை, (திருஅருட்பா, உரைநடைப் பகுதி, பக் 430)

அக்காலத்தில் கணவனை இழந்த பெண்களை, ‘தாலி அறுத்தவள்முண்டச்சி, ‘விதவை என்று அழைத்தனர். கைம்மைக் கோலம் (விதவைக் கோலம்) கொடுமையிலும் கொடுங்கோலம், அலங்கோலம், விதவைகளுக்குச் சமுதாயத்தில் மதிப்பில்லை, சொந்த வீட்டிலேயே மரியாதை இல்லை, மனித சமுதாயம் தள்ளி வைத்தது, ஒதுக்கி வைத்தது. சொந்த வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சியில் அவர்களை முன்னிலைப் படுத்துவதில்லை. அவர்கள் ஒதுங்கியே இருக்க வேண்டும். கண் மறைவாக இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள், பூவிழந்து, பொட்டு, மஞ்சள் இழந்து, தாலி இழந்து, வெள்ளைப் புடவை யுடன் இருக்க வேண்டும். மொத்தத்தில் கைம்மை நோன்பு நோற்றனர். இந்நிலை வள்ளலாரின் காலமாகும்.

கணவன் இறந்த பின் பெண்கள் தாலி போன்ற மங்கலச் சின்னங்களைத் துறக்க வேண்டியதில்லை என்கிறார் வள்ளலார். கணவன் இறந்துவிட்டான் என்பதற்காகக் கட்டிய தாலியை அறுக்க வேண்டிய தில்லை. கட்டியவன் போய்விட்டான், இருப்பவர்கள் ஏன் தாலியை அறுக்க வேண்டும் என்ற வினாவினை எழுப்பினார் வள்ளலார். Ôஅறுத்துப் போனவர்கள்Õ என்ற ஓர் சமுதாயத்தையே இல்லாமல் செய்கிறார்

கணவன் இறந்த பின் பெண்கள் தாலி போன்ற மங்கலச் சின்னங்களைத் துறக்க வேண்டியதில்லை என்கிறார் வள்ளலார்.

வள்ளலார். தாலி அறுக்க வேண்டாம் என்பதால் பூவோடும் பொட்டோடும் இருக்கலாம் என்று கொள்ள வேண்டும் என்கிறார் சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் - (புரட்சித் துறவி வள்ளலார் ஓர் அறிமுகம் .107).

கணவன் இறந்தால் ÔமனைவிÕ கைம்மை நோன்பு நோற்கிறாள். ஆனால் மனைவி இறந்தால் கணவன் மறுதார மணம் செய்து கொள்கிறான். மனைவி இருக்கும் போதே, பிள்ளையில்லை என்பதற்காக மறுமணம் செய்கின்றனர். பிள்ளை இல்லை என்பதினால் முதல் மனைவியே தன் கணவனுக்கு மறுமணம் செய்கிறாள். மனைவியை இழந்த ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றபடி மறுமணம் செய்வதில் வள்ளலாருக்கு உடன்பாடு இல்லை. கைம்பெண் மணத்தை ஆதரிக்கிறார். அதே சமயம் ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் கொடுமைகளையும் கண்டிக்கிறார் வள்ளலார். சன்மார்க்கத்தில் ஏகதாரமே. பலதார மணம் இல்லை என்பது வள்ளலார் கட்டளை. இதுவே சன்மார்க்க பண்பாடு.

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கைம்மைக் கோலத்தின் கொடுமை நிலவிய காலத்தில் வள்ளலார்கணவன் இறந்தால் மனைவி தாலியை துறக்க வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம் என்ற தன்னுடைய கருத்தினை வலியுறுத்தி வந்தார்.

மேலும், பெண்கள் காது குத்துவதையும், மூக்கு குத்துவதையும் வள்ளலார் கண்டிக்கிறார். அதில் வள்ளலாருக்கு μஅளவு கூட உடன்பாடு இல்லை. சித்தி வளாகத்தில் செய்த பேருபதேசத்தில், சில வரிகளைக் காணலாம்.

இப்படியே காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வரவிடுத்தவர் μக்குக் கடுக்கனிடுதலும் பெண்μக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்கு சம்மதமானால் காதிலும், மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாராÓ என்கிறார் வள்ளலார்.

-திருவருட்பா, உரைநடைப் பகுதி பக்கம் 358

பெண்களுக்கு, வள்ளலார் காலத்திலும் நகையின் மீது மோகம் அதிகமாக இருந்தது. இதில் ஆண்களும் விதிவிலக்கு அல்ல. பெண்கள், காது, மூக்கு, கால் ஆகியவற்றில் நகைகளை அணிவதை பழங்காலத் தொட்டே கொண்டிருந்தனர். ஆண்கள் முத்துமாலை, மதாணி, கை வளையல்களையும் அணிகலன்களாக அணிந்திருப்பதை அறிகிறோம். வள்ளலார் இதற்கெல்லாம் இயற்கையான விளக்கம் இல்லை என்கிறார். “காதில் கம்மலும், மூக்கில் மூக்குத்தியும் அணிவது தமக்குச் சம்மதமானால், இறைவன் காதுகளிலும் மூக்கிலும், பொத்தல்கள் அமைத்திருக்க மாட்டாரா என கேள்வியை எழுப்பி, அதன் தேவையின்மையை வலியுறுத்துகிறார் வள்ளலார்.

கணவன் இறந்த பின் பெண்கள் தாலி போன்ற மங்கலச் சின்னங்களைத் துறக்க வேண்டியதில்லை. காது குத்துதல், மூக்குக் குத்துதல் போன்ற வழக்கங்கள் அனாவசியமானவை. இந்த வழக்கங்களுக்கும், ஆன்மீகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வலியுறுத்தினார் வள்ளலார்.

மேலும் பொன் போன்ற விலை உயர்ந்த அணிகலன்களை அணிவது, சமுதாயப் பொருளா தாரமும் மனநிலையும் பாதிக்கப்படும் என்பது வள்ளலாரின் சீரிய சிந்தனையாகும்.

துணை புரிந்த நூல்கள்

கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், . வெங்கடேசன், முற்கால தமிழ்நாட்டு வரலாறு

. இராமகிருட்டிணன், தமிழக வரலாறு தமிழர் பண்பாடும்

. பார்த்தசாரதி, உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, உலகாயதம்.

B. சுப்ரமணி, இந்திய வரலாறு, சீவக சிந்தாமணி பாடல், 2697 அகநானூறு, பாடல்கள் 86, 136 புறநானூறு பாடல், 127

சிலப்பதிகாரம் பாடல்கள் 152-53, 450

செல்வ கதிரவன், கட்டுரை,

பெரியார் பார்வையில் தாலி

நியூ செஞ்சுரியின்உங்கள் நூலகம், வெளியீடு மாத இதழ், மார்ச், 2015.

பெரியார் களஞ்சியம் (பெண்μரிமை பாகம் (4))

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு,

. வெள்ளை வாரணனார், திருவருட்பாச் சிந்தனை.

. மெய்யப்பன், வள்ளலார் வரலாறு.

.பொ. சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு சாமி. சிதம்பரனார், வடலூரார் வாய்மொழி, ஊரன் அடிகள், புரட்சித் துறவி வள்ளலார்ஓர் அறிமுகம்

பா.சு.ரமணன், அருட்பிரகாச வள்ளலார்.

சாமி. சிதம்பரனார், வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி

Pin It