உலக அளவில் மார்க்சியத்தைத் துறைதோறும் வளர்த்தவர்களுள் கிறிஸ்டோபர் காட்வெல், ஜார்ஜ் தாம்ஸன், ஜே.டி. பெர்னால் ஆகியோர் முதன்மையானவர்களாவர். இயங்கியல் கண்ணோட்டத்தில் கவிதை, கலை, இலக்கியம், விஞ்ஞானம் என அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர்களாவர். இவர்களுள் பேரா ஜார்ஜ் தாம்ஸனிடம் பயின்றதன் மூலம் அத்தகைய கண்ணோட்டத்தைப் பெற்று இறுதி வரை தமிழ்ச் சமூகத்துக்கும், தமிழ் ஆய்விற்கும் பெரும் பங்காற்றியவர்கள் கலாநிதி.

karthikesu sivathambiக. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி ஆகிய இருவருமாவர். தமிழ்ச்சமூகமே இவர்களால் பெரும் பேறு பெற்றது எனலாம். இளமையிலேயே க. கைலாசபதி மறைந்து போனது பெரும் இழப்பாக அமைந்தது. அந்நிலையில் தனது இறுதி மூச்சு வரை சிவத்தம்பி தனியொருவராய் இருந்து பார்வை இழந்து நடையில்லாது போன நிலையிலும் தனது இறுதி மூச்சு வரை மார்க்சிய நெறி நின்று ஆய்வுப் பணியினை மேற்கொண்டவர். கைலாசபதி மறைவுக்குப் பிறகு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தலை கீழான மாற்றங்கள் நிகழ்ந்தன. சோவியத் தகர்வுக்குப் பிறகான பின் நவீனத்துவம், அடையாள அரசியல் வழி இன வாதங்கள், தலித்தியம், பெண்ணியம் போன்ற எண்ணற்ற போக்குகள் மேற்கிளம்பின. சிவத்தம்பி அவற்றுடன் எல்லாம் ஒத்துப் போனார்; சமரசம் செய்து கொண்டார் என்பது போன்ற தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அவர் இறுதிமூச்சு வரை இயங்கியல் கண்ணோட்டத்தி லிருந்து வழுவாமல் பிறழாமல் அதனைப் பின்பற்றியே அனைத்தையும் எதிர்கொண்டார்; நிறுவினார் என்பதை அவரது “ஈழத்தில் தமிழ் இலக்கியம்” என்ற நூல் புலப்படுத்துகிறது.

பண்டைக்காலம் முதலே ஈழத் தமிழிலக்கியத் திற்கு என்று தனித்த வரலாறு உண்டு என்பதை வரலாற்றியல் பார்வையில் விளக்குவதுடன், உரை நடை இலக்கியத்தின் வளர்ச்சியானது இலங் கையின் பூர்வீகக் குடிகளான இலங்கைத்தமிழர், இலங்கை இசுலாமியத் தமிழர், வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து குடியிறக்கம் செய்யப் பட்ட மலையகத்தமிழர் என்ற வேறுபாடுகள் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. தனித்தன்மை களுடன் அவரவர் வாழ்நிலைமைகளை உள்ளடக்கி யதாக ‘மண் வாசனை’ இலக்கியங்களாக அவை அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது. இலங்கைத்தமிழ் மக்கள் மலையகம், மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் என்ற மையப் புள்ளிகளில் புவியியல் பொருளாதார நடவடிக்கைகள்,

சமூக கட்டிறுக்கம் ஆகியவற்றின் ஒருமித்த கண் ணோட்டத்தைப் பெற்றிருக்காத நிலையில் அவற்றை ஒருங்கிணைக்கும் முகமாக “ஈழத் தமிழிலக்கியத்தில் மண்வாசனை” கோஷம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டது.

ஈழத்திலே தோன்றும் தமிழ் இலக்கியம் எதுவாக இருந்தாலும் ஈழ மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை, போராட்டங்களை அடிப்படை யாகக் கொண்டு படைக்கப்பட்டன. ‘புதுமை இலக்கியம்’ ‘மறுமலர்ச்சி’ முதலிய இதழ்கள் அந்தந்தப் பங்களித்துள்ளன. க. கைலாசபதி ‘தினகரனில்’ இத்தகைய இலக்கியங்களை ஊக்கு வித்தார்.

இந்நிலையில் இ.மு.எ.சங்கம் சார்ந்திருந்த பொதுவுடைமைக் கட்சியும், சம சமாஜக் கட்சியும் 1970இல் பதவியேற்ற அரசில் பங்கேற்று கூட்டாட்சி நடத்தினர். இந்நிலையில் இலங்கையில் ஒன்று பட்ட பல்லின தேசியம் மற்றும் ஒன்றுபட்ட இலங்கையில் சிங்கள- தமிழ் ஒற்றுமை குறித்துப் பேசப்பட்ட நிலையில் இமுஎச சிங்கள- தமிழ் எழுத்தாளர் ஒற்றுமை மாநாடு நடத்தியது. அது ஈழத்து இலக்கியத்தைச் சமய, இனப்பாகுபாடு களுக்கு அப்பாலான ஒரு முயற்சியாகக் கருதி வளர்த்தெடுத்தது. 1965 முதலே இடதுசாரிகள் மொழிக் கொள்கையில் சிங்களத்துக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டினை எடுத்து வந்திருந்த நிலையில் 1977ல் இடதுசாரிகள் அரசியல் வலு இழந்தனர். இதனால் தேசிய ஒருமைப்பாடு கைவிடப்பட்டு ‘தேசிய இனங்களின் ஒருமை’ எனும் கருத்து நிலை யினை மேற்கொண்டனர் ‘தேசிய சுயநிர்ணய உரிமை’ கோரினர். இந்நிலையில் வெள்ளைய ராட்சியில் மேனாட்டுமயமாகும் நிலையினை எதிர்த்து இயக்கம் நடத்திய அனகாரிக தர்ம பாலவும், ஆறுமுக நாவலரும் சிங்கள, தமிழ் தீவிரவாத அமைப்புகளால் கொண்டாடப் பட்டனர்.

இ.மு.எச ஆறுமுக நாவலரை தேசிய போராட்டத் தலைவராக முன்வைத்து மாநாடுகள் நடத்தி முடித்திருந்த நிலையில், சைவமும் தமிழும் கோஷத்தை முன்வைத்து நாவலரைக் கொண்டாடி யவர்கள் இசுலாமியத்தமிழ், மலையகத் தமிழ் இலக்கியத்தைத் தவிர்த்து முற்றும் சைவ மயப் படுத்தியே இலக்கியம் வளர்த்தனர். இதனால் சிங்கள பௌத்தத்திற்கு எதிராக ‘சைவமும் தமிழும்’ என்ற நிலை உருவானது. 1980களில் சிங்கள பௌத்தத்திற்கு எதிராகச் சைவமும் தமிழும் என்ற நிலை உருவானது. 1980களில் சிங்கள தாக்குதலுக்கு ஒடுங்கி இலங்கை முழுதும் இருந்த தமிழர்கள் பெரும்பான்மையோர் வசித்த வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கமே தமிழர்களுக்கு எதிராகப் படைகளை ஏவிட கொரில்லா போர் முறையில் தீவிரவாத இளைஞர்கள் போராடினர். இது சிங்கள பேரின வாதத்துக்கு எதிராக தமிழ் மக்களைக் காக்கும் போராட்டமாக அமைந்தது. இக்காலத்தில் உலக நாடுகளெங்கும் தமிழர்களின் புலம்பெயர்வு அதிகரித்தது. அவர்களின் இலக்கியமும் இக் காலத்தே முழுவீச்சுடன் வெளிப்பட்டது. இவை யெல்லாம் இலக்கியம் உருவானதற்கான சமூகப் பின்புலமாக அமைந்தது. இத்தகைய படைப்புக் களை இந்நூல் ஆய்கிறது.

‘பண்டைத்தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ பற்றி ஆய்வு மேற்கொண்ட இவர் இக்காலத்து நாடக வளர்ச்சி, பங்களிப்பினைக் கூறுவதுடன் நில வுடைமைச் சமுதாயத்தின் கலைவடிவமான நாடகம் நிலவுடைமைச் சமுதாயம் நீடிக்கும் வரை நிலைத்திருக்கும் எனக் குறிப்பிடுகின்றார். பம்மல் சம்பந்த முதலியார் இலங்கையில் தங்கி நாடகம் வளர்த்ததும், அவருடைய நவீன நாடகத்திற்கு மத்திய நிலவுடைமை வர்க்கத்தின் ஆதரவு இல்லாததால் கிராமிய நாடகமாக மீண்டும் மாறியதையும் எடுத்துக்காட்டுகின்றார். அதே போல, தமிழகத்தில் உள்ளதைப் போன்ற சாதி முறை நிலவாத ஈழத்தில் தலித்திய இலக்கியம் சோபிக்காது என்பதையும் இந்நூலில் விளக்கி யுள்ளார்.

இந்நூல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மறு அச்சிடப்பட்டுள்ள நிலையில் இன்று ஈழத்தமிழர் வாழ்க்கை சிதைந்து நெருக்கடியில் சிக்கி நிற்கிறது. இன்று ஈழம் கிடைக்குமெனில் அவர்கள் பௌத்தத்தை ஏற்கவும் தயார். ஆனால் பௌத்தத்தைத் தழுவி விட்ட பிறகு மதத்தாலும் ஒரே நாடு என்ற நிலை தான். எனவே, பௌத்த சிங்களத்திற்கு எதிராக ‘வைணவமும் தமிழும்’ என்று இந்தியாவில் பாஜக ஆட்சியை நம்பி இறங்குவதை அறியமுடிகின்றது. இந்நிலையில் இடதுசாரிகள் எழுச்சி ஏற்பட வேண்டும். சமய மதவாத நடவடிக்கைகளால் தீர்வு காண முடியாது. ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய ஆவணம் இந்நூல்.

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஆசிரியர்: கார்த்திகேசு சிவத்தம்பி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600098

விலை: 240/-

Pin It