நாவலாசிரியர் பொன்னீலன் தலைவராகத் தேர்வு

புதுடெல்லியில் ஏப்ரல் 12, 13, 14 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 15-ஆவது தேசிய மாநாட்டில் அகில இந்தியத் தலைவர்களுள் ஒருவராக நாவலாசிரியர் பொன்னீலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ponneelan_400அன்றைய வெள்ளை அரசாங்கம் சுதந்திரமான சிந்தனைக்கும் வெளிப் பாட்டுக்கும் எதிராக ஏவி விட்ட அடக்குமுறைகளுக்கு எதிரான முதல் தீர்மானத் துடன் முன்சி பிரேம்சந்தைத் தலைவராகவும், சஜ்ஜாத் ஜாஹீரைச் செயலாளராக வும் கொண்டு தொடங்கப் பெற்று, முல்க்ராஜ் ஆன்ந்த், பீஷ்ம சகானி, ஒ.என்.பி. குருப்பு, அமர்த பிரீதம், கமல பிரசாத் போன்ற பெரும் படைப்பாளிகள் தலைமைதாங்கி வழிநடத்திய ஒரு பண்பாட்டு இயக்கம் இது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலிருந்தும் சுமார் 300-க்கு மேற்பட்ட எழுத் தாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாடு தில்லிப் பல் கலைக்கழக மாநாட்டு அரங்கில் “சாந்தியையும் இசைவையும் நோக்கிய எழுத்து” என்ற அறைகூவ லுடனும், சமூக அறிஞர் ஆஸ்கார் அலியின் உரை யுடனும் தொடங்கியது.

இந்தியாவும் உலகமும் சந்தித்துக் கொண்டிருக்கிற சோதனைகளையும், எழுத்தாளர்களுக்கு நேரிடுகின்ற சவால்களையும் மையப் படுத்தி 12, 13 தேதிகளில் மூன்று முக்கிய மான அமர்வுகள் நடைபெற்றன.

உலகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழும் வளர்ச்சிகளின் வெளிச்சத்தில், உருவாகி வரும் கலாசார மேலாண்மைக்கு எதிராக ஓர் அமைதியான உலகைப் படைக்க எழுத்தாளர்கள் நிகழ்த்தும் போராட்டங் களைப் பற்றி முதல் அமர்வு ஆய்வு செய்தது.

பெண்ணிய இலக்கியம், தலித் இலக் கியம், ஆதிவாசி இலக்கியம், விளிம்புநிலை மக்கள் இலக்கியம் ஆகியவற்றின் எழுச்சி களின் வெளிச்சத்தில் இந்தியாவில் வடிவம் கொள்ளுகின்ற இலக்கியப் பண்பாட்டு இயக்கங்களைப்பற்றி இரண்டாவது அமர்வு விவாதங்களை நடத்தியது.

சமகால இந்திய இலக்கியத்தில் அடிப் படை வாதம், வகுப்புவாதம், பிரிவினை வாதம் போன்ற பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வினை மூன்றாவது அமர்வு செய்தது.

தமிழில் உருவாகி வளருகிற மிகப் பிரசித்தமான நவீனப்போக்கு பற்றிப் பேசிய பொன்னீலன் குறிப்பாக, புதிய போக்குகளைச் சிருஷ்டிக்கிற, கலை நேர்த்தி யுடன் படைக்கப்பட்டுள்ள, ‘ஆழிசூழ் உலகு’, ‘ஏழரைப் பங்காளி வகையறா’, ‘தாண்டவராயன் கதை’, ‘கறுப்பு முஸ்லீம்’, ‘காவல் கோட்டம்’, ‘தாண்டவபுரம்’, ‘மறுபக்கம்’, ‘அஞ்ஞாடி’ போன்ற நாவல் களைப் பற்றிப் பெருமிதத்துடன் குறிப் பிட்டார்.

முதல்நாள் தொடக்கத்தில் அருமை யான இன்னிசைப் பாடல்கள் அரங் கேறின. இரவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடை பெற்றது. இந்தக் கவியரங்க மேடையில் அறந்தை பாவா “சூரியனும் சந்திரனும் சாதி கேட்குதா” என்று தன் வெண்கலக் குரலில் பாடியபோது தாய்த்தமிழும் அரங்கேறி யது. இரண்டாவது நாள் காலையில் பத்துக்கு மேற் பட்ட புத்தக வெளியீடுகள் நடைபெற்றன. இரவில் ஒரு நாடகம் அரங்கேறியது.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பாகிஸ்தான், எகிப்து, ஜப் பான் ஆகிய நாடுகளிலிருந் தும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ் நாட்டி லிருந்து நாவலாசிரியர் பொன்னீலன், கலை இலக் கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் தி.சு. நடராஜன், மாநிலப் பொருளாளர் செ. இரத்தினவேலு, அறந்தாங்கி கலை இலக்கியப் பெரு மன்றத் தலைவர் எஸ். இரா ஜேந்திரன், சிறுகதை எழுத் தாளர் கோயில் குணா, வழக் கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி. லோக நாதன், மக்கள் இசைப் பாடகர் அறந்தை பாவா, எஸ்.கே. கங்கா ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டார்கள்.

சங்கத்தின் கௌரவத் தலைவர்களாக ஒ.என்.வி. குருப்பு, நம்வார் சிங் ஆகி யோர் தெரிவு செய்யப் பட்டனர். அகில இந்தியத் தலைவராக நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களும் பொதுச் செயலாளராக டாக்டர் அலி ஜாவட் அவர் களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வி.என். திரிபாதி, கஜேந்திர தாக்கூர், கீதா சர்மா, சுகதேவ் சிங் ஆகியோரைக் கொண்ட தலைமைக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மண்டலச் செயலாளர்களாக இராஜேந்திர ராஜன், அமித்துவா சக்கரவர்த்தி, லெட்சுமி நாராயணா ஆகியோரும், பொருளாளராக அர்ஜு மாண்ட் அராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய நிர்வாகக்குழு உறுப்பின ராக டாக்டர் இரா. காம ராசுவும், தேசியகுழு உறுப் பினராக தி. சு. நடராஜனும் தெரிவு செய்யப்பட்டனர்.

75 ஆண்டுக்கால பாரம் பரியமும் பெருமையும் மிக்க அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு முதன் முறையாக ஒரு தமிழ் எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

***

தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான பொன்னீலன் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலுக்கு அருகிலுள்ள மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, கல்வி அலுவலராகப் பணிநிறைவு பெற்ற பொன்னீலன் சிறு வயதிலேயே மார்க்ஸியத்தில் ஈடுபாடு கொண்டார். அவர் மார்க்ஸிய ஆய்வாளர் நா. வானமாமலையுடனும், அவர் நடத்திய ‘ஆராய்ச்சி’ இதழுடனும் கொண்ட தொடர்பு அவரை மேலும் எழுத்துப் பணியில் உந்தித் தள்ளியது.

பொட்டல் கதைகள், அத்தாணி மக்கள், நித்தியமானது, புதிய மொட்டுகள், ஊற்றில் மலர்ந்தது, தேடல், இடம் மாறி வந்த வேர்கள், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, உறவுகள், புல்லின் குழந்தைகள், அன்புள்ள ஆகிய சிறுகதைகளையும், புவி எங்கும் சாந்தி நிலவுக, தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும், முற்போக்கு இலக்கிய இயக்கங்கள், சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள், சாதி மதங்களைப் பாரோம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு, ஜீவாவின் சிந்தனைகள், ஜீவாவின் பன்முகம், ஜீவா என்றொரு மானுடன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மிக வழிகாட்டி, தெற்கிலிருந்து, தொ.மு.சி. ரகுநாதன் வாழ்வும் பணியும், மார்க்ஸிய அரசியலின் அடிப்படைகள், எங்கள் ரகுநாதன் ஆகிய நூல்களையும், கொள்ளைக்காரர்கள், கரிசல், புதிய தரிசனங்கள், மறுபக்கம் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார். புதிய தரிசனங்கள் புதினம் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற நூல். பொன்னீலன் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

Pin It