எகிப்து நைல் நதியின் மகள் என்று குறிப்பிடப் படுகிறது. இது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எகிப்து இருவேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டுமே பாரோவா என்கிற வலிமையான ஒரே பேரரசின் கீழ் ஆட்சி செய்யப்பட்டன. இந்த பாரோக்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள். இவர்கள் சூரியக் கடவுளிடமிருந்து தோன்றினார்கள் என்று நம்பப்பட்டது. இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் சர்வ அதிகாரங்களுடனும் வாழ்ந்து வந்தனர்.

pyramid 600

எகிப்திய சமுதாயத்தில் பாரோக்கள், மத்திய தர வகுப்பினர், அடிமைகள் என்று மூன்று பிரிவுகள் இருந்தன. மற்றபடி வேறு சாதிப்பிரிவுகள் இல்லை.

மத குருமார்கள், பிரபுக்கள் ஆகியோர் சமுதாயத்தின் உயர்ந்த இடத்தில் இருந்தனர். வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் நடுத்தர வகுப்பைச் சார்ந்த வர்கள். ஒருதார மணமும் பின்பற்றப்பட்டு வந்தது.

எகிப்தின் அரசியல், பொருளாதாரம், சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் சமயம் ஆதிக்கம் செலுத்தியது. பல தெய்வங்களை இவர்கள் வணங்கி வந்தனர்.

மிக விரிவான இறுதிச் சடங்கு முறைகளை எகிப்தி யர்கள் பின்பற்றி வந்தனர். இறந்த பின்னும் மனிதன் அழிந்து விடுவதில்லை; அமரத்துவம் எய்துகிறான் என்ற நம்பிக்கை கொண்ட இவர்கள், உடல் கெடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இறுதிச் சடங்கை நடத்தி வந்தார்கள். சடலங்களை மம்மிகள் எனப்படும் ஒரு வகையான மண்பானைகளில் வைத்துப் புதைத்து வந்தனர். எகிப்தின் மன்னர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு மம்மிகளில் பாதுகாக்கப் பட்டன. பாரோவாவின் கல்லறைகள் 481 அடி உயரம் உடையவை. இறந்தவர்களின் உடலைப் பாதுகாக்க பிரமிட் வடிவ கோபுரங்களும் அமைக்கப்பட்டன.

மம்மிகள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு பாலைவனக் குழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டு வந்தன. சடலங்கள் மம்மிகளில் வைத்துப் பாதுகாக்கப் படும் பழக்கம் உருவான பிறகும் பாலைவனங்களில் புதைக்கும் பழக்கம் மக்களிடையே தொடர்ந்தது. விரிவான சடங்குகளுடன் மம்மிகளில் புதைக்க முடியாத ஏழை மக்களுக்குப் பாலைவனம் ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. மிகவும் வசதி படைத்த எகிப்தியர்கள் தங்களின் உறவினர்களின் உடல்களை மம்மிகளில் வைத்து, கல்லாலான கல்லறைகளைக் கட்டினர். இதில் புதைப்பதற்கு முன் உடலின் உள்ளுறுப்புகளை எடுத்து விடுவர். உடலில் இருந்து இதயம், நுரையீரல், சிறுநீரகம், குடல், மூளை போன்றவற்றை வெளியில் எடுத்து விடுவார்கள். அப்படி எடுத்த உறுப்புகளை பறவை, நரி, கோமாரி, மனிதத்தலை போன்ற உருவ அமைப்பு கொண்ட ஜாடிகளில் போட்டு பத்திரப்படுத்துவார்கள். மூளையை அந்தக் காலத்தில் உபயோகம் இல்லாத ஒரு பொருளாகத்தான் நினைத்திருந்தார்கள். அதனால் மூளையை மட்டும் தனியாக எடுத்து குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தனர்.

புதைப்பதற்கு முன் உடலின் உள்ளுறுப்புகளை எடுத்துவிட்டு, லெனின் துணியைக் கொண்டு உடலைச் சுற்றி, செவ்வக வடிவ சார்க்கோண்போகஸ் என்கிற கற்பெட்டியில் அல்லது மரத்தாலான சவப்பெட்டிகளில் புதைத்தனர். இவற்றில் மறு உலகிற்குத் தேவையான உணவு, உடை, பிற பொருட்கள் ஆகியவை பாது காப்பாக வைக்கப்பட்டன. ஒரு சில உறுப்புகளை மட்டும் தனியாகப் பாதுகாக்கும் பழக்கமும் ஏற்பட்டது.

மிகச் சிறந்த தரம் கொண்ட ஒரு மம்மியைப் பதப்படுத்த 70 நாட்கள் பிடித்தன. நாட்ரோன் என்ற உப்புக்கலவையில் உடலைக் கெடாமல் பாதுகாத்தனர்.

மனிதன் இறந்தால் மீண்டும் சில காலம் கழித்து திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில், மரணத்தை நம்ப மறுத்தது இந்த இனம். இக்காலத்தில் சமாதியாகும் முன் தமக்கு சமாதி கல்லறை கட்டி பரலோகம் சென்று சுகமாக வாழ்வதற்குரிய வசதிகளை உள்ளடக்கிய பிரமிடுகள் ஒவ்வொரு பாரோவும் தன் ஆயுள் காலத்திலேயே நிர்மாணித்து விடுவது வழக்கம்.

இறந்த மன்னரின் ஆவி சொர்க்கம் சென்று திரும்பி வரும் போது, முன்பு குடியிருந்த தன் பழைய உடலிலேயே மறுபடியும் புகுந்து கொள்ளும். எனவே அந்தக் காலம் வரை இறந்த உடலைக் கெடாமல் பாது காப்பது அவசியம் என்று எகிப்தியர் நம்பினார்கள். எனவே இறந்த மன்னனின் உடலை தைலமிட்டு, பதப்படுத்தி, பட்டு பீதாம்பரங்களால் வரிந்து சுற்றி, பிரமிடுகளின் அடியில் அமைந்துள்ள மண்பாண்டங் களில் தங்கப் பேழையில் பாதுகாத்து வந்தனர்.

உடல் மம்மியாக பாடம் செய்த பின்பு மக்களின் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைத்து, மதச் சடங்குகள் நடைபெறும். மம்மியையும் உறுப்புகள் இருக்கும் ஜாடிகளையும் பிரமிடுகளுக்குள் வைத்து விடுவார்கள். அவற்றுடன் நகைகள், பணம் போன்ற உயர்ந்த பொருட்களையும் வைப்பார்கள். இறந்த பிறகு வாழும் வாழ்க்கைக்கு இது எல்லாம் தேவைப்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளாக மம்மி செய்யும் பழக்கத்தை விடாமல் கடைபிடித்து வந்தனர். மொத்தம் 70 லட்சம் மம்மிகள் செய்யப்பட்டிருக் கின்றன. (இதில் நிறைய மம்மிகள் நகைக்காகவும் பணத்துக்காகவும் திருடர்களால் தோண்டப்பட்டு, திருடப்பட்டு பாழாகிவிட்டன) தற்போது பாரோ மன்னர்களின் மூன்று மம்மிகள்தான் முழுமையாக கிடைத்திருக்கின்றன.

அரசாட்சிகள் மாறிய போது, ரோமானிய ஆட்சியில் உடல் பாதுகாப்பை விட அதிகமான கவனம் மம்மிகளின் வெளித்தோற்றங்களுக்கு அளிக்கப்பட்டன. இதன் விளைவாகவே மம்மிகளும் பிரமிடுகளும் அற்புத மான முறையில் நிர்மாணிக்கப்பட்டுப் பாதுகாக்கப் பட்டன.

பிரமிடு ஒன்றில் எழுதப்பட்டுள்ள வரிகள், ஓரையன் (மீன் கூட்டம்) மறுவாழ்வை அளிப்பவன் என்ற செய்தியைத் தருவதாகக் கூறப்படுகின்றது.

‘எழுதற்காகவே உறங்குகிறாய் - மீண்டும்

வாழ்வதற்கே இறந்து பட்டாய்’

[Pyramid Texts, Quoted in Sellers, p.127]

என்ற வரிகள் ஓரையன் மீன் கூட்டத்தின் சிறப்பைக் கூறும் பிரமிடுக் குறிப்புகளாகும். (பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே - பெரும் இடு என்ற தமிழ் சொல்லே பிரமிடு எனத் திரிந்தது - வானியலும் தமிழரும் ம.சோ.விக்டர் ப.149 - 150).

கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிடுகள் ஒரு பெரிய அதிசயம்தான். அன்றைய கிரேக்கர்கள், ஒரு மனிதன் எப்படி அடக்கம் செய்யப்படுகிறானோ அதை வைத்து அவனின் சமூக அந்தஸ்தை எடை போட்டார்கள். இறந்தவன் மன்னனாக இருந்தால் பெரிய பிரமிடுகள் கட்டுவார்கள். மன்னனின் உடலுடன் தங்கம், வைரம் முதற்கொண்டு சகலமும் சேர்த்து அடக்கம் செய்வார்கள். இறந்தவன் சாதாரணமான வறியவனாக இருந்தால் அடுத்த நாளுக்கு தேவையான உணவு மட்டும் அவனோடு சேர்த்து அடக்கம் செய்யப்படும். இந்த பிரமிடுகள் புரியாத புதிராகவே இருந்தன. பிரமிடுகளை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் இறங்கினார்கள்.

புராதன காலத்தின் அடையாளங்களாக விளங்கும் பிரமிடுகளுக்குள் இருக்கும் பிரமிப்பை ஆராய வேண்டும் என்ற நோக்கில் ஹார்வர்ட் கார்ட்டர் என்ற ஆங்கிலேயர் தீவிரமாக இறங்கினார்.

கி.மு 1350-ம் ஆண்டு இறந்து போன டியூடன் கமேன் என்ற 18 வயது எகிப்து மன்னனின் பிரமிடு எங்கு இருக்கிறது என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை. எகிப்தில் வீசிய மணல் புயலில் இந்த பிரமிடு புதைந்து போயிருக்கலாம், அதனால் கொள்ளையர்களிடமிருந்து அந்த பிரமிடு தப்பியிருக்கலாம் என்ற தகவல் மட்டும் கார்ட்டருக்கு கிடைத்தது. இந்த தகவலை வைத்து எப்படியாவது டியூடன்காமேனின் பிரமிடை கண்டு பிடித்தே தீருவது என்ற வெறியோடு கிட்டத்தட்ட 30 வருடங்களாக பிரமிடுகளை சுற்றிச் சுற்றியே வந்தார். கடைசியில் 1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எகிப்தின் புகழ் பெற்ற லக்சர் கோவில்களுக்கு மேற்குப் புறத்தில் பாலைவன மணலில் புதைந்து போயிருந்த ஒரு பிரமிடைக் கண்டுபிடித்தார். அந்த பிரமிடின் கதவும் உடையாமல் இருந்தது. கார்டன் அந்த பிரமிடுக்குள் இறங்கிய போது விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க நெக்லஸ், மோதிரம் போன்ற ஆபரணங்களில் ஆரம்பித்து நாற்காலிகள், மேஜை என்று அனைத்துப் பொருட்களும் தங்கத்தில் பளபளத்தன.

இதை ஒட்டியிருந்த மற்றொரு அறையில் ஒரு சவப்பெட்டி இருந்தது. மன்னன் டியூடன்காமேனின் உடலைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கார்ட்டர் சவப்பெட்டியைத் திறக்க, சவப்பெட்டிக்குள் இன் னொரு தங்க சவப்பெட்டி இருந்தது. அதைத் திறந்தால் அதற்குள் ஒரு பெட்டி, அதை திறந்தால் இன்னொரு பெட்டி என்று கடைசிப் பெட்டியை பொறுமையிழந்து வேகமாக திறக்க உள்ளுக்குள் மன்னன் டியூடன் காமேன் உடல் ஒரு தங்க முகமூடியை மாட்டிக்கொண்டு இருந்தது. பிரமிடுக்குள் எகிப்திய மன்னர்கள் எப்படி அடக்கம் செய்யப்பட்டார்கள் என்ற உண்மை அப்போதுதான் உலகுக்கே ஆதாரத்தோடு தெரிய வந்தது.

இப்போதுள்ள பிரமிடுகள் இருக்கும் இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாக மாவீரன் நெப்போலியன் குறிப்பிட்டிருக்கிறார். அவரும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறியீடுகளின் குறிப்புகளை வைத்தே இதைத் தெரிந்துகொண்டதாகவும் ஒருமுறை தனது குருவிடம் சொல்லியிருக்கிறார்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூபூ என்ற கிரேக்க மக்களுக்கும், தியோப்ஷ் என்ற அரசனுக்கும், சினிஸ்பூ என்ற அரசனுக்கும் ஏற்பட்ட பூசல் காரணமாக எப்பொழுதும் ஒருவரை ஒருவர் தங்களுக்கு தாங்களே அடித்துக்கொண்டு இறந்திருக்கிறார்கள்.

அப்படியும் தங்களின் கொலைவெறி தீராத அரசர்கள் இருவரும் வீட்டிற்கு இருவர் என்ற கணக்கில் பல லட்சம் மக்களை ஒரே இடத்தில் சங்கிலியால் பிணைத்து தினம் பல ஆயிரம் வீரர்களை விட்டு உயிருடன் ஒவ்வொருவராக சவப்பெட்டிக்குள் அடைத்துக் கொன்றிருக்கிறார்கள்.

சில நாட்களில் இறந்தவர்களின் பிணங்கள் அழுகிய நிலையில் அதிக வாடை ஏற்படவே. சங்கிலி யால் பிணைக்கப்பட்ட பல லட்சம் மக்களையும் விடுதலை செய்யாமல் அங்கிருந்து அனைவரும் ஓடிவிட்டார்களாம்.

ஆனால் அதில் ஜியா என்கிற மக்கள் மட்டும் எங்கும் செல்லாமல். அங்கு இறந்து போன மனிதர்களின் பிணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அகற்றி இந்த GIZA என்கிற இடம் மக்கள் வாழும் இடமாக மாற்றி இருக்கிறார்கள். அதன்பின் மலை அடிவாரத் திலேயே மக்களைக் குடியேற்றி வாழும் திட்டம் அமைத்து மக்களைக் குடியேற்றியுள்ளார்கள்.

இந்த இடம்தான் இன்றுவரை உலக மக்கள் வியப்பாகப் பார்த்து வரும் GIZA .‘கிஸா’ (GIZA) தென் கெய்ரோ மாவட்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.   

கிஸா பிரமிட் பகுதியில் சியோப்ஸ் என்ற மன்னனின் பிரமிடு எல்லாவற்றையும் விட பெரியதாக உள்ளது. இது கி.மு 26-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1953-ம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் ஆய்வு செய்து, அந்த பிரமிட் ஒரு சூரிய கடிகாரம் என்பதை கண்டுபிடித்தார்.

பிரமிடின் அளவும், அதன் உருவமும், நாள், மணி, பருவம் ஆகியவற்றைக் கணக்கிட உதவும் வகையில் அமைந்திருப்பது தெரிய வந்தது.

மையப் பகுதிக்குள் செல்லும் படிக்கட்டுகள் துருவ நட்சத்திரத்தைக் காணும் வகையில் சரியாக 26 டிகிரி 17 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமிடுகள் கல்லறையாக மட்டுமின்றி வானியல் ஆய்வுக் கூடமாகவும் பயன்பட்டதை கண்டுபிடித்தனர்.

கிஸா பிரமிட்டை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று சொல்லும் போது, அதை பலர் நம்புவதில்லை. அந்த அளவுக்கு, மர்மங்களையும் ஆச்சர்யங்களையும் தனக்குள் உள்ளடக்கிய பிரமிட் அது. 146 மீட்டர் உயரமான அந்த பிரமிட், 4500வருடங்கள் பழமை யானது. இந்த பிரமிட் இரண்டரை மில்லியன்கள் சதுரகற்களால் கட்டப்பட்டிருக்கிறது. அந்த இரண்டரை மில்லியன் கற்களும், 25 டன்களிலிருந்து 80 டன்கள் (ஒவ்வொரு கல்லும்) வரை எடையுள்ளவை.

இதில் உள்ள ஆச்சரியமான விசயம் என்ன வென்றால் அனைத்துக் கற்களும் 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தனை கற்களையும் சதுரமாக வெட்டுவதற்கே, ஆயிரம் பேர் சேர்ந்தாலும் 100 வருடங்கள் தேவை.

சதுரமாக செதுக்கப்பட்ட இரண்டரை மில்லியன் கற்களையும், 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வர, 5000 பேர் சேர்ந்து உழைத்தாலும் 500 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை. 4500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பிரமிடு குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது. (குறுகிய காலம் என்று குறிப்பிட்டது, மனிதனால் கட்டப்படக்கூடிய கால அளவை விட குறுகிய காலம் என்பதை) நம்பவே முடியாத ஒரு காலத்தில் இப்படி ஒரு அறிவுபூர்வமான கட்டிடத்தை கட்டுவதற்கு எப்படிச் சாத்தியம் ஆனது என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இன்றும் கூட பிரமிடுகளைப் பற்றிய ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. 1898-ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமைமிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது.

தொல்பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃபிரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருத்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது.

கெய்ரோ அருங்காட்சியத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாச மானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப் பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது.

எகிப்து அமர்னா நகரில் தொல்லியல் ஆய் வாளர்கள் நடத்திய ஆய்வில் 3,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அப்பெண் 70 சவுரி முடிகளுடன் வித்தியாசமான சிகையலங்காரத்தைப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

அந்த சடலம் ‘மம்மி’ முறையில் பதப்படுத்தப் படவில்லை. ஒரு விரிப்பில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அமர்னா நகரில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் ஆய்வாளர் ஜோலந்தா போஸ் கூறும் போது, ‘அப்பெண் மிகவும் சிக்கலான சிகையலங் காரத்தைக் கொண்டிருந்தார். இதற்காக 70 சவுரி முடிகளை அடுக்கி தலையின் உயரம் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. அவரின் இறுதிச் சடங்குக்காக மட்டும் இதுபோன்ற சிகையலங்காரம் செய்யப்பட்டதா என்பதுதான் எங்களின் முக்கிய ஆய்வாகும்.

அந்த பெண் இறந்த பிறகு, கூந்தல் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், இந்தவகை சிகையலங்காரம் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமர்னா பகுதி மக்கள் சவுரிமுடியைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றார். அப்பெண்ணின் மற்ற விவரங்கள் தெரியவில்லை.

அமர்னா நகரம், எகிப்தை கி.மு 1353 - 1335 காலகட்டத்தில் ஆண்ட அகெனாடென் என்ற அரசரால், நிர்மாணிக்கப்பட்டு தலைநகராக அறிவிக்கப் பட்டுள்ளது. அகெனாடெனின் இறப்புக்குப் பிறகு அந்நகரம் கைவிடப்பட்டது. (பி.டி.ஐ)

அதேபோல், எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கு பகுதியில் கி.மு 1100 ஆம் காலத்தைச் சேர்ந்த கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கல்லறை பழங்காலத்தில் ராணுவப் பெட்டகங்களைப் பாதுகாக்கும் காவலாளி ஒருவனுடையதாகும். குறித்த காவலாளி பல்வேறு நாடுகளுக்கு அரசதூதராகவும் இருந்துள்ளார். அதற்கான குறிப்புகளும் அந்தக் கல்லறையின் கல்வெட்டில் காணப்படுகின்றன. இங்குதான் பல படிக்கட்டு அமைப்புகளைக் கொண்ட பிரமிடுகளில் அமைந்துள்ளது. இங்குள்ள சக்காரா என்ற மிகத் தொன்மையான கல்லறைப் பகுதியானது மெம்பில் நகர அரசர்கள் பலரையும், உயர் குடியினரையும் அடக்கம் செய்த இடுகாட்டுப் பகுதியாகும்.

எகிப்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக அபிடோஸ் நகரில், அமெரிக்காவின் பென்சில் வேனியாவை சேர்ந்த பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் கி.மு 1650 முதல் 1600ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்தை ஆட்சி செய்த மன்னர் வாசரிபர் செனப்கையின் கல்லறை கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அரச குடும்பத்தினரின் கல்லறைகள் அடங்கியுள்ள பகுதியில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த கல்லறை பழுதடைந்த நிலையில் காணப் பட்டது. அபிடோஸ் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அரச குடும்பத்து ஆதாரம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

இது போன்ற ஆய்வுகள் பழங்கால எகிப்து மக்களின் சடங்கு மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை அறிய உதவுகின்றன. எகிப்தில் மட்டு மல்லாது சூடான், நைஜீரியா, கிரீஸ், இந்தோனேசியா, மெக்சிகோ உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும் கூட பிரமிடுகள் உள்ளன.

நாம் வாழும் இந்த நிலப்பரப்பில் இருக்கும் பிரமிடு களைப் பற்றி அறிந்த நமக்கு செவ்வாய் கிரகத்தில் இன்று நாம் பூமியில் பார்க்கும் பிரமிடுகளை ஒத்த தோற்றம் கொண்ட அதிசயம் இருப்பதாக சொல்லப் படுகிறது.

எகிப்து நாட்டில் பிரமிடுகளுக்கு அருகில் ஸ்பிங்க்ல் என்ற ஒரு பெண் தேவதையின் உருவச் சிலை உண்டு. அந்த உருவச்சிலை பெண்ணின் தலையையும், சிங்கத்தின் உடலையும் கொண்டதாக இருக்கிறது.

இதே போன்ற ஒரு உருவச்சிலை செவ்வாய்க்கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாக செவ்வாய்க் கோளில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் அமைப்புகள் ஒரு நாகரிக முன்னேற்ற மடைந்த சமூகத்தினால் கட்டப்பட்டவையாக இருக்க லாம் என்று சோதனை நடத்தி வருகிறார்கள் சோவியத் ஆராய்ச்சியாளர்கள்.

செவ்வாய்க் கோளில் காணப்படும் சிறிய பிரமிடுகள் எகிப்தில் கிஸா பகுதியில் உள்ள பெரிய பிரமிடுகளையும் பெர்முடா தீவுகளின் அடியில் உள்ள கடலுக்கு அடியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமிடுகளையும், பிரேசில் நாட்டுக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமிடுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் இவை அனைத்தையும் ஒன்றுபோல் வடிவமைத்து இருக்கும் வியப்பு தெரிய வந்திருக்கிறது.

இதில் மிகப் பெரிய மர்மம் என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் இது போன்ற அதிசயங்கள் எப்படி சாத்தியம் என்ற மர்மம் மட்டும் இன்னும் யாருக்கும் விளங்காத புதிராக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது மட்டும் இல்லாது இறுதியாக கிடைத்த ஆராய்ச்சிகளின் முடிவில் பூமியில் கட்டிடங்களின் நிழலைப் போல் மிகவும் தெளிவான நிழல் செவ்வாய் கிரக பிரமிடுகளில் காட்சி தந்திருக்கிறது. இந்த பூமியில் செவ்வாய்க் கோளில் உள்ளது போன்ற அவ்வளவு பிரம்மாண்டமான கட்டிடம் எதுவும் கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் சிறந்தவையாக, இன்றும் அழியாமல் இருக்கும் எகிப்திய பிரமிடுகள் கல்லறை மட்டுமல்ல. அது பழங்கால மனிதனைப் பற்றிய புரிதலை நமக்கு உணர்த்துகிறது.

Pin It