fidel castro 449

உலகின் மிக மோசமான, அதிகாரம் மிக்க ஏகாதிபத்திய நாடான அமெரிக்க, உலகம் தழுவிய மனித உரிமைகள் பிரகடனத்தைப் பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது என்பதைப் பிடல் வெளிச்சமிடுகிறார்.

அனுபவங்கள் அளவில்லாதவை என்றபோதிலும், இந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு மட்டுமே சுற்று சூழ்நிலைமைகளைப் புறக்கணித்துவிட முடியாது. ஒரு தாயின் வயிற்றில் இரட்டையர்களாகக் குழந்தைகள் பிறந்தாலும், அவை வளரும் கைரேகைகள் வேறு வேறானவையாகவே உள்ளன. இதனாலே தான், “எல்லா மனிதர்களும் பிறக்கும் போது சுதந்திரமானவர்களாகவும், தகுதிப்பாட்டிலும் உரிமைகளிலும் சமமானவர் களாகவுமே பிறக்கிறார்கள். அவர்கள் பகுத்தறிவுடனும், உளச்சான்றுடனும், ஒருவருக்கொருவர் சகோதர வாஞ்சையுடனும் வாழ உரிமை படைத்தவர்கள்” என்ற உலகளாவிய மனித உரிமை பற்றிய வாசகத்திற்கு, உலகில் அதிகாரம் மிக்க நாடான அமெரிக்கா உரிமை கொண்டாடிய போதிலும், அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது.

எவரும் இதை மறுக்க முடியாது. பருண்மையான கருத்துகளையும், சமூகச் சூழல்களையும் கவனமெடுக்கா விட்டாலும்கூட, தெளிவான அரசியல் அர்த்தப்பாடு களைக் கொண்டுள்ள பண்புக் கூறுகளைப் பலவும் மதக் கொள்கைகளில் உள்ளன. உலகம் தழுவிய பண்பு நிலையாக, மதம் சார்ந்தவர்களின் கரங்களாலேயே உலகில் அதிகம் போற்றப்படும் கலைப்படைப்புகள் பிறந்தன.

அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மனிதர் களே விஞ்ஞான சோதனைக்கூடங்களிலும் புதுமையைப் படைக்கும் மையங்களிலும் இன்றைக்கு உயரிய பதவி களில் இருக்கிறார்கள்; மனிதர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் மருந்துகளை உற்பத்தி செய்கின்றனர்.

மிக நீண்ட தூரங்களைக் கடந்து செல்வதற்கான புத்தாக்கங்களைப் படைக்கின்றனர்; எரிசக்தி துறையில் கவனம் குவித்துள்ளார்கள்; மண்ணிலும் விண்ணிலும் பணிபுரியும் ஆராய்ச்சிக் கருவிகளைப் படைத்துள்ளனர்.

1200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியை, கடல் மட்டத்திலிருந்து வெறும் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து எப்படி பார்க்க முடியும் என்பதை நம்மில் யாரேனும் விளக்க வேண்டும். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கான அடிப்படையாகக் கூறும் பெரு வெடிப்பு கோட்பாட்டின் அடிப்படையில் நட்சத்திரங்கள் சிதறி வெடித்தது எவ்வாறு என்று சான்றுகளுடன் விளக்க வேண்டும். இது மாபெரும் தங்கப் பதக்கத்துக் குரிய விசயம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி என்ன சொல்ல இருக்கிறது? ஆயினும், கடந்த பல பத்தாண்டுகளில், உய்ர்ந்த ஆய்வுகளைச் செய்த மாபெரும் அறிவியலாளர் களின் அறிக்கைகள் மறுதலிக்க முடியவில்லை. முழுமையான வாய்ப்புகளைப் பெற்ற சில தோற்றப் பாடுகள் முடிவை எட்டியுள்ளன. தோற்ற நிகழ்வுகளின் சாத்தியப்பாடும் மிக முக்கியமான உண்மை என்பது மற்றொரு முக்கியமான விசயம்.

மதங்கள் சிறப்பான மதிப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த எட்டு அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக, குறிப்பாக மிக சமீபத்திய ஆயிரம் ஆண்டுகளில், ஆர்வமூட்டக்கூடிய வகையில் படிப்படியாக வளர்ந்துள்ள மத நம்பிக்கைகள் இருந்துகொண்டு வருகின்றன. வரம்புகளையெல்லாம் கடந்து, பல்வேறு மனித இனங்கள் படைத்துள்ள பண்டைக்கால மரபுகள் பற்றி என்ன அறிந்துள்ளோம். கிறிஸ்துவைப் பற்றிய அழகான சித்திரத்தை நான் அறிவேன். யேசு சபை நடந்திய பள்ளிகளில், பபிஸ்ட் கிறித்தவ பள்ளிகளில் எனக்குக் கற்பிக்கப்பட்டதி லிருந்தும், நான் படித்தவற்றிலிருந்தும் அந்த அழகான சித்திரத்தைப் பெற்றேன். அவர்களிடமிருந்தே ஆதாம்- ஏவாள், காயின் - ஆபேல், நோவா-பெருவெள்ளம், இசுரவேலருக்கு பாலைவனத்தில் உணவு கிடைக்காத காரணத்தால் சொக்கத்திலிருந்து விண்ணில் பொழிந்த உணவான மன்னா பற்றிய பல கதைகளைக் கேட்டுள்ளேன். இந்தக் குறிப்பிட்ட பிரச்ச்னை குறித்த மேலும் பல கருத்துகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் கூற முயல்வேன்.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவாதத்தை நம்மால் மறந்துவிட முடியாது. இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த முதலாவது விவாதம் பெருங்குழப்பமானது. தன்னைத் தானே தலைசிறந்த நிபுணராகப் பயிற்றுவித்துக் கொண்ட திருவாளர் டிரம்ப் தனது கொள்கையையும் பாரக் ஒபாமாவின் கொள்கையையும் செல்லாக்காசு ஆக்கியுள்ளார். இப்போது, அந்த இருவரும் களிமண் பதக்கம் பெறத் தகுதிவாய்ந்தவர்கள்.

பிடல் காஸ்ட்ரோ எழுதிய கடைசி கட்டுரை அக்டோபர் 8, 2016, இரவு 10:26

நன்றி: கிரான்மா

தமிழில் : க.காமராசன்

Pin It