மனம்போன போக்கில் பள்ளிக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடித்து வந்த தனியார் பள்ளிகளுக்கு மூக்கணாங்கயிறு போடும் முயற்சியில் ஈடுபட்ட கடந்த திமுக அரசு, கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து கட்டண நிர்ணயம் செய்யப் பணித்தது.

பள்ளிகளின் ஆய்வை மேற்கொண்ட கோவிந்தராஜன் கமிட்டி குறிப்பிட்ட அளவு கட்டணத்தை நிர்ணயித்தது. இக்கமிட்டி நிர்ணயித்த பள்ளிக் கட்டண உச்ச வரம்பு பெற்றோர் களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக வும், தனியார் பள்ளி நிறுவனங் களுக்கு அதிருப்தியளிப்பதாக வும் இருந்ததால் - கோவிந்த ராஜன் கமிட்டி அறிவித்த கட் டண அறிவிப்பை ஏற்க முடி யாது; இதை ஏற்றுக் கொண் டால் பள்ளிகளை நடத்த முடி யாது; ஆசிரியர்களுக்கு ஊதி யம் வழங்க முடியாது என்றெல் லாம் காரணங்களைக் கூறி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்குகளைத் தொடுத்து, தமிழக அரசுக்கு எதிராக வரிந்து கட்டின தனியார் பள்ளிகள்.

இந்நிலையில் இப்பிரச்சி னைக்கு முடிவு கட்ட நினைத்த அரசு, நீதிபதி ரவிராஜ பாண்டி யன் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை நியமித்து, மீண்டும் பள்ளிக் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

ரவிராஜ பாண்டியன் தலை மையில் செயல்பட்ட குழுவினர் கோவிந்த ராஜன் கமிட்டி நிர்ண யித்த கட்டணத்தைக் காட்டி லும் கூடுதலான கட்டணத்தை நிர்ணயித்தது. இக்கட்டண அறிவிப்பை பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொண்டன. ஆயினும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமான கட்ட ணத்தை பல தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன. இப்படி வசூலிக்கும் பள்ளிகள் எது என்று பார்த்தால் அரசு நிர்ணயித்த கட் டணத்தை எதிர்த்து வழக்குகளைத் தொடு த்த பள்ளிகள்தான்.

அரசு சொன்னா லும் சரி, நாங்கள் வைத்தது தான் சட்டம் என மார் தட்டும் இப்பள்ளிகள் கட்டண அராஜகத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு - அராஜகப் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை செலுத்தி விடுகின்ற னர். ஆனால் பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு காட்டி போராடி வருகின்றனர்.

பெற்றோர் எதிர்த்துக் கேட்கும் போது, அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை வசூலித்தால் எங்களால் பள்ளியை நடத்த முடியாது என்று கூறும் சில பள்ளி நிர்வாகங்கள், அவர்கள் கேட்கும் கட்டணத் தைக் கொடுத்தால் - அந்த குறிப் பிட்ட மாணவர்களுக்கு மட்டும் தரமான வகுப்பு எடுப்பதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் சல்லி காசு கொடுக்க முடி யாது என்று கட்டண மறுப்பு செய்யும் பெற்றோர்களின் பிள் ளைகள் மட்டும் தனியாக உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு நாட் டமில்லாமல் வகுப்பு எடுப்பதாக வும் பெற்றோர்கள் மத்தியில் குமு றல் எழுகிறது.

அரசாங்கமோ, கல்விக் கட்ட ணத்தை நிர்ணயித்து அறிவிப்பும் செய்து விட்டோம்; இனி பெற் றோர் - தனியார் பள்ளிகள் எப்ப டியாவது கட்டி புரளட்டும் என்ற நிலையில் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச் சரோ, அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை விட கூடுதலாக கட்ட ணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என வாய் மொழி உத்தரவாக - அது வும் கேள்வி கேட்கும் செய்தியா ளர்களிடம் சொல்லி வருகிறார்.

கூடுதல் கட்டணங் களை வசூலிக்கும் பள்ளிகள் மீது எவ்வித நேரடி நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை. அமைச்சரின் வாய்மொழி உத்தரவை காது வழியாக வாங்கி, காற்றில் பறக்கவிட்டு - தங்கள் வசூலில் உறுதி யுடன் நடைபோட்டு வருகின்றன பல பள்ளி கள்.

குறைந்தபட்சம் கூடு தல் கட்டணம் வசூலிக் கும் பள்ளிகளைக் கண் டறியும் முயற்சியைக் கூட கல்விய மைச்சர் முடுக்கிவிடவில்லை.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்க ளும் - இதே பாணியைப் பின் பற்றி அதிக கட்டணம் வசூலிக் கும் முயற்சிகளில் இறங்கும்.

அப்புறம் பெற்றோர் எதிர்ப்பு காட்டினால், “முதல்ல அவங்களை நிறுத்தச் சொல்லுங்க! பிறகு நாங்க நிறுத்தறோம்'' என்ற முரண் பாடு தலை தூக்கி - போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று பிரச்சினை கள் உருவானால் அரசுக்குத்தான் கெட்டப் பெயர் ஏற்படும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு மவுனச் சாமியாக இருக்காமல் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அதிக கட்டணம் வசூலிக் கும் பள்ளிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் ஏனைய பள்ளிக ளுக்கு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதுதான் பெற் றோர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை தமிழக அரசு விரைந்து செய்யுமா?

- ஃபைஸ்

Pin It