திரு. ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் நினைவாக ! இந்தப் பணியில் தொய்வடையாத அக்கறையுடன் வழிகாட்டிய அவரது பெருந்தன்மைக்காக.

“அந்தச் சித்தரிப்பொடு அது முடியவில்லை. எதிர்கால அரசின் கல்வி முறை மனதில் இருக்கிறது. என்னுடைய புள்ளி விவரங்களை நிரூபிக்கும்படி சவால் எழுமே என்ற அச்சமின்றியே இதனைச் சொல்கிறேன். இந்தியா ஐம்பது நூறு ண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அறியாமையில் உழல்கிறது. பர்மாவும் அதே நிலையில் தான் இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப் போனது.

பிரித்தானிய நிர்வாகத்துக்கு அந்த கிராமத்துப் பள்ளிகள் நல்லவையாகத் தோன்றவில்லை. எனவே தனது திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட அளவு கட்டிடம், தட்டுமுட்டுச் சாமான்கள் இருந்தாக வேண்டும். அந்த அளவுகோல் கொண்டு பார்க்கப்போனால் இந்தியப்பள்ளிகள் பள்ளிகளே இல்லை. தாங்கள் ஆய்வு செய்த இடங்கள் பற்றிய புள்ளி விவரங்களை பிரித்தானிய நிர்வாகம் விட்டுச் சென்றிருக்கிறது. அந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் இல்லை என்பதனால் பண்டைய பள்ளிகள் (திண்ணைப் பள்ளிக்கூடங்கள்) வாரியத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. ஐரோப்பிய மாதிரியில் உருவாக்கப்பட்ட பள்ளிகள் மக்களுக்கு அதிகச் செலவு பிடிப்பதாக இருப்பதனால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.

ஒரு நூற்றாண்டுக்குள் கட்டாயத் தொடக்கக் கல்வியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும்படி நான் சவால் விடுகிறேன். இந்த ஏழை நாட்டினால் அத்தகையதொரு செலவு மிக்க கல்வி முறையைத் தாக்குப்பிடிக்க முடியாது. எங்களது அரசு பழைய பள்ளி சிரியரைப் புதுப்பித்து ஒவ்வொரு கிராமத்திலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு பள்ளியை நிறுவி சீதனமாக அளிப்போம்.”

(மகாத்மா காந்தி இலண்டன் சாத்தம் நிலயத்தில் (Chatham HOUSE) அக்டோபர், 20 ,1931 இல் பேசியது.)


“பிரித்தானியரின் வருகைக்கு முன் கிராமங்களில் நிலவிய கல்விமுறை பற்றிய எனது தேடல் முயற்சியை நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. பல கல்வியாளர்களுடன் தொடர்ந்து கடிதமூலம் தொடர்பு வைத்துள்ளேன். எனது நிலைக்கு தரவு தெரிவித்து எழுதியவர்கள் தடையமாக/சாஆட்சியமாக ஏற்கத்தக்க வணங்களைத் தரவில்லை. முழுமையற்றதோ கேடுபயக்ககூடியதோ அல்ல எனது நிலைப்பாடு. அவை சாத்தம் நிலையத்தில் நான் பேசியவற்றுடன் இன்னும் ஒட்டிக்கொண்டு/பின்னிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹரிஜன் பத்திரிக்கையில் விட்டு விட்டு எழுத எனக்கு விருப்பமில்லை. நான் என் மனதில் வைத்திருந்த தடயங்கள் உங்களால் சவாலிக்கிழுக்கப்பட்டன என வெறுமனே நான் சொல்ல விரும்பவில்லை.”

(மகாத்மா காந்தி கஸ்ட்,1939 இல் Sir Philip Hartog அவர்களுக்கு எழுதியது.)


முகவுரை.

இந்தியக் கல்வியின் வரலாறு குறித்து ஏராளமான அறிவார்ந்த பதிப்புகள், குறிப்பாக 1930 களிலும் 1940 களிலும் வெளிவந்திருக்கின்றன. உண்மையில் இந்த விஷயம் பற்றிய எழுத்துக்கள், துவக்கத்தில் பிரித்தானிய அதிகாரிகளும் அறிஞர்களும் எழுதியவை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே வரத்தொடங்கி விட்டன. இருந்தபோதிலும் பெரும்பாலான இந்த வரலாறுகள் பண்டைய காலத்துடன் தொடர்புடையவை, சில சமயங்களில் கி.பி. பத்து அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை தொட்டுச் சென்றவை. மற்றவை பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் கல்வி வரலாறு பற்றியும் அதன் பின்னரும் பற்றிப் பேசுபவை. நாளந்தா அல்லது தக்ஷசீலா போன்ற குறிப்பிட்ட அமைப்புகள் பற்றிப் பேசும் அறிவார்ந்த படைப்புகள் மட்டுமின்றி,பண்டைய கல்வி பற்றிப் பொதுவாகப் பேசும் A.S.Altekar போன்றோரின் படைப்புகளும் இருந்தன.

அதற்கும் பிந்தைய காலம் பற்றி பல படைப்புகள் இருந்தன. Selections from educational records என்ற இரு தொகுதிகள் கொண்ட பதிப்பு சமீபத்தில் இந்திய அரசாலேயே வெளியிடப்பட்டுள்ளது. இவையன்றி S.Nurullaah மற்றும் J.P.Naik கியோரின் படைப்புகளும் குறிப்பிடத் தகுந்தவை கும். பின்னது இந்த இரு சிரியர்களாலும் (அதன் காலம் மற்றும் மனோநிலையைச் சுட்டிக் காட்டும் விதத்தில்) “கடந்த 160 ண்டுகளில் வெளிவந்த விரிவானதும் தாரபூர்வமானதுமான இந்தியக் கல்வி வரலாறு என்பதோடல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்தில் விளக்கம் செய்வதான முயற்சியும் கும்”
எனக் குறிப்பிடப்பட்டது.

ஒரு வகையில் கல்விக் கண்ணோட்டத்தில் நிறைவற்றதுவாயினும், 1939 இல் பண்டிட் சுந்தர்லால் அவர்களால் முதலில் பதிப்பிக்கப்பட்ட பெரும் நூலான இது, மிகப் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தது.( இந்தியில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’) என்று அறியப்பட்டதும் 1929 இல் வெளிவந்ததுமான இந்த நூலின் முதல் பதிப்பு ங்கிலேய அரசால் உடனடியாகத் தடை செய்யப்பட்டது. எனினும் 1780 பக்கங்கள் கொண்ட இதன் மறுபதிப்பு 1939 இல் வெளியிடப்பட்டது. 18 மற்றும் 19 ம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவல்களை தாரமாகக் கொண்டே எழுதப்பட்ட, ‘பிரித்தானிய அரசு மற்றும் 1860 வரையிலான அதன் பின் விளைவுகள்’ பற்றிய தாரபூர்வமான நூலாக விளங்கியது இது.

பண்டிட் சுந்தர்லாலின் இந்த மகத்தான படைப்பு, அது வெளியிடப்பட்ட ஐம்பது ண்டுகளுக்குப் பிறகும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய அரசியல் வாதிகளின் மூத்த தலைமுறையினர், கல்வியாளர்களிடையே பெரும் செல்வாக்கு செலுத்தியது. இந்தப் பிரபலமான படைப்பின் ‘இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு’ என்ற 40 பக்கங்கள் கொண்ட 36 வது அத்தியாயம் பல்வேறு பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்திலிருந்து தாரங்களை எடுத்துக் காட்டுகிறது. இவை ஒரு நூற்றாண்டு காலகட்டத்துக்கு நீள்கின்றன. 3, ஜூன்,1814 இல் இங்கிலாந்திலிருந்து இந்திய கவர்னர் ஜெனரலுக்கு வந்த கடிதம் தொடங்கி, மாக்ஸ்முல்லரின் அவதானிப்புகள், 1919 இல் பிரிட்ட்டிஷ் தொழிற்கஆட்சித் தலைவர் Kir Hardie இன் குறிப்புகள் என நீள்கிறது இது.

இருந்த போதிலும், இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில், அச்சிடப்படாத விரிவான வணங்களைப் பெறுவதில் இருந்த சிரமங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், இந்த சிரியர் தனது ஆய்வுகளை அச்சில் வந்த வணங்களைக் கொண்டு மட்டுமே தொடர முடிந்திருப்பது புலனாகும். இருப்பினும், ஒரு அறிமுகம் என்ற வகையில், இந்தியாவில் 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் நிலவிய உள்நாட்டு கல்வி பற்றிய சான்றுகளில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’ ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் கும்.

3ம் நூற்றாண்டிலிருந்து 19 ம் நூற்றாண்டு தொடக்கம் வரையிலான கல்வி நிலவரம் மற்றும் வரலாறு குறித்து அரிதாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஐயத்துக்கிடமின்றி S.M.Jaaffer அவர்கள் இசுலாமியக் கல்வி பற்றி எழுதியது போன்ற சில நூல்கள் உள்ளன. அவற்றுள் சில அத்தியாயங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிலவிய கல்வி வரலாறு பற்றியும் இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நசுருல்லாவும் நாயக்கும் தங்களது நூல்களின் மொத்தமுள்ள 643 பக்கங்களின் முதல் 43 பக்கங்களில் 19 ம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டுக் கல்வி நிலையின் இயல்பு மற்றும் அளவு பற்றி விவாதிக்கையில் சில சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க கால உள்நாட்டு இந்தியக் கல்வியின் நிலை பற்றிய விவாதங்களும் மாறுபடும் கருத்துக்களும் தங்களது நிலைபாட்டுக்கு தாரமாக கீழ்க்கண்டவ்ற்றை தார சாதனமாகக் குறிப்பிடுகின்றன. (அ) அதிகம் பேசப்பட்ட முன்னாள் கிருத்துவ பாதிரியாரான Adam Smith அவர்களின் 1835 - 38 ண்டு கல்வி நிலை குறித்த அறிக்கைகள். அவை வங்காளம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களில் நிலவிய சுதேசிக் கல்வி நிலை பற்றிப் பேசின. () 1820 களில் சுதேசிக்கல்வி பற்றி பம்பாய் ராஜதானியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் நடத்திய ய்வறிக்கைக் குறிப்புகள் மற்றும் (இ) சுதேசிக்கல்வி பற்றி மதராஸ் ராஜதானியில்(வடக்கே கஞ்சம் தொடங்கி தெற்கே திருநெல்வேலி வரையும் ,மேற்கே மலபார் வரையும் 1822 முதல் 25 வரை விரிவாக நடத்தப்பட்ட மற்றொறு ய்வறிக்கையின் பிரசுரிக்கப்பட்ட பகுதிகள். கிட்டத்தட்ட அதே விஷயம் பற்றிய பஞ்சாப் நிலைகுறித்து மிகவும் பின்னால் G.W.Leinter என்பவரால் நடத்தப்பட்ட ய்வறிக்கை.

மேலே சொல்லப்பட்ட தாரங்களுள், முந்தைய அரசு வணங்களை அடிப்படையாகக் கொண்டதும் தனது சொந்த ஆய்வுகளை உள்ளடக்கியதுமான G.W.Leinter அவர்களின் அறிக்கை மிகவும் வெளிப்படையாகவே பஞ்சாபின் சுதேசீயக்கல்வியின் சிதைவுக்கும் அதன் அழிவுக்கும் கூட பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் காரணம் என விமர்சித்தது. ( Leinter ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ன போதிலும் அவர் ங்கிலேயர் அல்ல என Sir.Philip Hartog குறிப்பிட்டார்.)இருந்த போதிலும், அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் கனவான்களின், மனம் புண்படாத நாசூக்கான மொழியில், Adam அவர்களின் அறிக்கையும் சென்னை ராஜதானியின் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அறிக்கையும் தத்தம் பகுதியின் இந்திய சுதேசிக் கல்வி பற்றிப் பேசின.

20,அக்டோபர் 1931 அன்று லண்டனில் ROYAL INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS கூட்டத்தில் காந்தி நிகழ்த்திய நீண்ட உரையில் கடந்த 51-100 ண்டுகளாக இந்தியாவில் கல்வி அறிவு குறைந்து விட்டது. அதற்கு பிரிட்டிஷார் தான் பொறுப்பு என்ற சில வாக்கியங்கள் Adam மற்றும் Leinter கியோரின் அவதானிப்புகளைக் கூர்மைப்படுத்தி விட்டன. அப்போதுதான், 19ம் நூற்றாண்டின் துவக்க கால சுதேசிக்கல்வி பற்றிய மேற்கண்ட தாரங்கள் மிகப் பெரும் முக்கியத்துவம் பெற்றன. ஒரு தனி நபர் என்ற முறையில் மட்டுமல்லாது, பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி என்ற முறையிலும் காந்தியை வாதுக்கு இழுத்தவர் Sir.Philip Hartog என்ற , ஒரு காலத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராயிருந்த இந்திய சட்டக்கமிஷன் துணைக்குழுவின் உதவித்தலைவராகவுமிருந்த ங்கிலேயர் வார். காந்தியின் வாதங்களுக்கு அடிப்படையான அச்சிடப்பட்ட தாரங்களை முன் வைக்குமாறு அவர் கேட்டார். திருப்தியடையாத அவர் நான்காண்டுகள் கழித்து ( இந்த காலகட்டத்தில் காந்தி பெரும்பாலும் சிறையில் இருந்தார்.) லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் காந்தியின் கூற்றுக்களுக்கு எதிராக மூன்று தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1939 இல் மூன்று சொற்பொழிவுகளையும் அவற்றுக்கான குறிப்புகளையும் சேர்த்து புத்தக வடிவில் பதிப்பித்தார்.

காந்தியையும் முந்தைய தாரங்களையும் மறுத்தலில், Sir.Philip Hartog உண்மையில் அசலாக இருக்கவில்லை. பிரிட்டிஷ் சட்டங்களையும் கொள்கைகளையும் பாதுகாக்கும் தேய்ந்த பழகிய பாதையையே பின்பற்றினார் என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ‘விக்டோரியா கால இங்கிலாந்தின் தந்தை’ என பிற்காலத்தில் அறியப்பட்ட William Wilberforce அவர்களால் 125 ண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட பாதையைத்தான் தொடர்ந்தார். தனது காலத்திலே கூட இது போன்றதொரு முயற்சியில் அவருக்கு முன்னதாக; “அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்து பாட்டாளிகளுக்கு இப்போது இருப்பதைவிட அதிகமாகவே உண்பதற்குக் கிடைத்தது” என்று சொன்ன Vincent Smith அவர்களின் கூற்றை மறுத்த W.H.Mooreland இருக்கத்தான் செய்தார். இந்த சவால்தான் மூர்லேண்ட் அவர்களை ஓஆய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியின் பாத்திரத்திலிருந்து, இந்தியாவின் பொருளாதார வரலாற்றாசிரியர் நிலைக்கு உயர்த்தியது எனத் தோன்றுகிறது.

தற்போதைய தலைமுறைக்கு இவர்களது பாத்திரம் கடந்து போன விஷயம் எனத்தோன்றுவது புரிந்து கொள்ளக்கூடியது தான் எனினும், இவர்களைப் போலல்லாது,1940 வரை இருந்த பிரிட்டிஷார்கள் அர்ப்பணிப்பு உணர்வைச் சுமந்திருந்ததால், இயற்கையாகவே , அவர்களது இருநூறு ண்டு கால ஆட்சியின் போது இந்தியாவிலும் மற்று எங்காயினும் தாங்கள் வேண்டுமென்றே செய்திருப்பினும் வேறு எவ்வாறு செய்திருப்பினும் அவற்றின் மீதான கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை.

இந்த நூலில் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் வணங்களின் பெரும்பகுதி சென்னை ராஜதானியின் உள் நாட்டுக் கல்வி பற்றிய ஆய்விலிருந்து முதன் முதலாக இதன் சிரியரால் 1966 இல் தரிசிக்கப்பட்டவை. மேலே சொல்லப்பட்ட இந்த ஆய்வின் மேற்கோள்கள் 1831-32 வாக்கிலேயே House of commons Papers இல் சேர்க்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பல அறிஞர்கள் Madras Presidency district recods மற்றும் Presidency Revenue Records இல் இந்த வணங்களைக் கண்டிருக்கக்கூடுமாயினும் விவரிக்க இயலாத காரணங்களால் அவர்களின் கல்விரீதியிலான கவனத்திற்குத் தப்பியிருக்கிறது. (பின்னது சென்னையிலும் இலண்டனிலும் இருக்கிறது.) சமீப காலத்திய சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ய்வேடுகள் கூட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் பற்றி ஆய்வு செய்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வி குறித்த சில குறிப்புகளைத் தந்த போதிலும், இந்தத் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்தவில்லை.

இந்தப் படைப்பு பிரிட்டிஷ் ஆட்சியை கிண்டல் செய்வதற்காக எழுதப்படவில்லை. மாறாக, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய இந்திய நிகழ்நிலை, அந்த சமுதாயம், அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்க வழக்கங்கள் - நிறுவணங்கள், அவற்றின் பலம்- பலவீனம் கியவை பற்றி விரிவாகப் புரிந்து கொள்ளுமுகத்தான், இத்தரவுகளைப் பயன்படுத்த இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான் இவை. ஏற்கனவே இந்நூலாசிரியர் எழுதிய 18ம் நூற்றாண்டு அறிவியலும் தொழில் நுட்பமும், ஒத்துழையாமை இயக்கம் கிய இரு நூல்களைப்போலவே இதுவும் இந்தியாவின் மற்றொரு அம்சத்தைப் பற்றிப் பேசுகிறது. அதுவுமன்றி முன்னுரையில் அந்த காலகட்டத்தின் உலகளாவிய சுதேசிக்கல்வி நிலை குறித்த செய்திகளை பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த நோக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இங்கிலாந்தில் நிலவிய கல்வியின் நிலை குறித்து சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில ண்டுகளில் பல நண்பர்கள் இந்த வணத்தின் மீது ர்வம் செலுத்தி மதிப்பு மிக்க கருத்துகளையும் லோசனைகளையும் வழங்கி இருக்கின்றனர்.அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களது ஊக்குவிப்பும் தரவும் இன்றி இந்தப் பணி முழுமை அடைந்திருக்காது. பத்தொன்பதாம் ண்டின் துவக்கத்திய கல்வித்துறைகள் பாடத்திட்டங்கள் பற்றிய எனது ஐயங்களுக்கு விடை தேட க்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பண்டைய வணங்களைப் பார்வையிட அனுமதித்தமைக்கு அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அது போலவே, India Office &Records (IOR) நிறுவணத்துக்கும், காந்தி - ஹார்டாக் இடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றத்தை வழங்கியமைக்கு Mr.Mortin Moir அவர்களுக்கும்,1971-72 இல் எனக்கு Sr.Fellowship வழங்கிய Patna, A.N.Sinha Institute of Social Studies, Gandhi Peace Foundation,New Delhi, காந்தி சேவா சங்கம், சேவாகிராமம், மற்றும் Association of Voluntary Agencies for Rural Development , New Delhi அமைப்புகளுக்கும் தேவைப்படும் போதெல்லாம் இந்த முயற்சியில் ர்வமும் அக்கறையும் செலுத்தியமைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

சென்னை ராஜதானி வணங்களை (பின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது).இதனை நான் முதலில் India office Library இல் பார்த்தேன் என்ற போதும் தமிழ் நாடு வணக்காப்பகத்தில் இருந்து (முன்பு இது மதராஸ் ரெகார்ட்ஸ் பீஸ் என அழைக்கப்பட்டது.) வேலைப்பளுவினைச் சுமந்து கொண்டிருந்த போதிலும் இந்த வசதியை எனக்களித்து அன்பு காட்டிய ஊழியர்களுக்கு என் நன்றி. Alexander Walker அவர்களின் குறிப்பும் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது அது ஸ்காட்லாண்ட்டின் எடின்பர்க் தேசீய நூலகத்தின் Walker of Bowland papers என்ற வணத்தில் இருந்து எடுக்கபட்டது. எனக்கு அனுமதியும் வசதியும் செய்து கொடுத்த அந்த தேசீய நூலகத்துக்கும் ஸ்காட்டிஷ் ரெகார்ட்ஸ் பீஸ் எடின்பர்க் பலகலைக்கழகம், உ.பி. மாநில வணக்காப்பகம், அலஹாபாத் கியோருக்கும் இத்தகைய வசதிகளும் அனுமதியும் அளித்தமைக்கு நன்றி.

இறுதியாக சேவாகிராமம் ஸ்ரம் பிரதிஸ்தானுக்கு, என்னை அழைத்து, இந்த நூலினை சிரமத்தில் வைத்து எழுத வசதி செய்து கொடுத்து, தங்களில் ஒருவனாக கவுரவித்ததற்காக நன்றி. காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்து இந்தப் பணியை முடித்தது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரும் கவுரவம்.

இந்த நூலின் தலைப்பு லண்டன் சாத்தம் நிலையத்தில் 20 ,அக்டோபர்,1931இல் காந்தி ற்றிய உறையிலிருந்து எடுக்கப்பட்டது. “பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப்போனது.” என்று அவர் பேசினார்.

துணைத் தலைப்புகளும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நூலின் பெரும்பகுதி சென்னை ராஜதானியில் 1822-25 காலகட்டத்தில் திடட்டப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்ட போதிலும் இந்தத் தரவுகள் மிகவும் பழங்காலத்திய கல்வி அமைப்பு பற்றியவை கும். 18 ம் நூற்றாண்டுக்குப்பின் கல்வி விரைவாக சீரழியத் தொடங்கிய போதிலும் அது தான் அந்தக்காலம் வரை பிரதான அமைப்பாக இருந்து வந்தது. தம் அவர்களின் அறிக்கை இந்தச் சீரழிவு பற்றி 19 ம் நூற்றாண்டின் நான்காம் பத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுகையில் பேசுகிறது.

தரம்பால்.

19,பிப்ரவரி,1981,
ஆஸ்ரம் பிரதிஸ்தான்.

- புதுவை ஞானம்

Pin It