* நிலத்துக்குத் தகுந்த கனியும், குலத்துக்குத் தகுந்த குணமும்

* நெல் விளைகிற நிலமுந்தெரியாது, நிலா காய்கிற இடமுந் தெரியாது.

* எனக்கு எதிரில்லை, நெல்லுக்குப் பதரில்லை

* உண்ட உடம்புக்கு உறுதி, உழுத கழனி நெல்லு.

* பானையிலே பதக்கு நெல் இருந்தா, மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்

* உற்ற கணவனும் ஒரு நெல்லும் உண்டா னால், சித்திரம் போல் குடிவாழ்க்கை செய்யலாம்.

* திருடின நெல்லுக்கு மத்தளம் மரக்கால்

* கல்லுப் போல கணவனிருக்க, நெல்லுச் சோத்துக்கு அழுவானேன்

* அம்பாத்தூர் வெள்ளாமை யானை கட்டத் தான், வானமுட்டும் போர்;

* ஆறுகொண்டது பாதி, தூறு கொண்டது பாதி - ‘தலவாரி’, ‘தலவாரிக்கணக்கு’ = விவசாய நிலங்கள், நெல் வயல்கள் இருக்குமிடப் பட்டியல் - அரசாங்க வரிக்கணக்கு. வரி கலெக்டர் நேரில் வந்து கிராம வெள்ளாமையை மதிப்பிடும்போது கிராம தலையாரி ஒருபாதி சொலவடையைத் தான் சொல்லுவான். அருகிலுள்ள விவசாயி விரல் மோதிரத்தைக் காட்டி வரிக்குறைப்பு செய்தால் தலையாரிக்கு மோதிரம் சன்மானமாகக் கொடுப்பேன் என்று ஜாடை காட்டுவான். இதைப் புரிந்துகொண்ட கிராம தலையாரி சொல வடையின் மிச்சப்பாதியைச் சொல்லுவான். நல்ல வெள்ளாமைதான். ஆனால் வெள்ளம் கொண்டு போனது பாதி, காத்து கொண்டு போனது பாதி, நெல்லை மிச்சம் கொஞ்சந்தான் என்று விவசாயி சார்பாகச் சொல்லிடுவான். ஏனெனில் கலெக் டரைவிட கிராம விவசாயியால்தான் அவனுக்குப் பணம் கிடைக்கும். அதிகாரி வீட்டிலே திருடி தலையாரி வீட்டிலே வைத்தான்.

* சிறுபிள்ளை செய்த வெள்ளாமை வீடு வந்து சேராது.

* குளிராத வீடும், கூத்தியாரும் உண்டானால் மயிரான வேளாண்மை விளைந்தால்தான் என்ன? விளையாமல் போனால்தான் என்ன?

* பரம்பரை ஆண்டியோ, பஞ்சத்து ஆண் டியோ?

* உரல் பஞ்சம் அறியுமா? (தாது வருஷ பஞ்சம் 1896-1897, 1899-1900)

* வேளாண்மை மாந்தரியல்பு - மன்னிறை தருதல் (வரிகட்டுதல்)

* புல்வரி, தலைவரி (ஓட்டு வரி), நிலவரி, நில வாடகை, நிலவாரம் (தரைவாரம்), நில வாடை, தண்டற்காரன், தண்டற்குறிப்பு, திறை கொடுத்தல் (புற : 97 : 19 - 20) உழவர் உழும் வகை (பெரு : 197-201) உழவுத் தொழில் முறை - (நற்: 60: 7) (குறு : 155)

* நெல் இருக்கப் பொன், எள் இருக்க மண்.

* நெல்லுக்குத் திறவளுக்குக் கல்லுப்பரீட்சை தெரியுமா?

* “குளமுங் கொட்டகாரமுங் கிடங்குங் கெணி யுங் காடுங்களரும் ஓடையும் உடைப்பும் உள்ளிட்டு நீர்பூசி நெடும் பரம்பெறிந்து”

* நெல்லுவகை எண்ணினாலும் பள்ளுவகை எண்ணக்கூடாது.

* மேலைக்கு உழுவார் கூலிக்கு அழுவார்

* உழவிற்கு ஏற்ற கொழு (ஓரேருழவர் (குறுந் 131) சில்லேருழவர் (பதிற் 76)

* உழவின் மிகுந்த ஊதியம் இல்லை

* உழவும் தரிசும் ஓரிடத்திலே, ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே

* உழவுமாடு என்றால் ஊரிலே விலைபடாதா?

* உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக் கிற நாளில் ஆள் தேவையில்லை. - அரு மொழி தேவ வாய்க்கா - ஆற்றுக்கால்

* உழுகிற மாடு பரதேசம் போனால்

 அங்கொருவன் கட்டி உழுவான்

 இங்கொருவன் கட்டி உழுவான்

* உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழக் கேனும் மிஞ்சாது

* உழுவானுக்கு ஏற்றகொழு, ஊரார்க்கு ஏற்ற தொழு.

* அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.

* உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தது போல்

* ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்

* தம்பி உழுவான் மேழி எட்டாது

* அதிகாரியும் தலையாரியும் கூடி, விடியு மட்டும் திருடலாம்

* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா?

* அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி

* தன் பெண்சாதியைத் தான் அடிக்கத் தலை யாரியைச் சீட்டுக் கேட்கிறதா?

* அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க, அதிகாரியைக் கேட்க வேண்டுமா?

* விலங்கு வேண்டாம் தொழுவில் இருக் கிறேன்

* பருத்திக்கு உழும் முன்னே தம்பி எட்டுமுழம் என்கிறான்

(ரஜ்ஜுகர் : நிலத் தீர்வை விதிக்கும் அதிகாரி)

* எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது;

 பறையன் கொழுத்தால் பாயில் இரான்

* உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.

* தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழு கிறான்,

 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்கிறான்

* தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது

* தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன் னாற்போல்

*      தவிட்டுக்கு வந்த கைதான் தனத்துக்கும்           வரும்

*      தவிட்டை நம்பிப் போக சம்பா அரிசியைக் காகம் கொண்டு போயிற்று

*      கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.

*      கலம் பதரைக் குத்தினாலும் அரிசி ஆகுமா?

*      அரிசி என்று அள்ளுவாளும் இல்லை; உமியென்று ஊதுவாளும் இல்லை

*      அரிசிப் பகையும் அகமுடையான் பகையும் உண்டா?

*      அரிசி உண்டானால் வரிசையுமுண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.

விளக்கக் குறிப்புகள்:

*      நிலப்பிரபுத்துவத்திற்கு முற்பட்ட ‘கொடை’ வரிகளின் நீடிப்பும் விளைச் சலில் சரிபாதிப் பங்குப் பகிர்வும்

*      நிலப்பிரபுத்துவ காலத்திற்குரிய அதிகாரி களின் சம்பளங்கள் வாரிசுரிமை பெறப் பட்ட நிலங்களாக ஒதுக்கீடு செய்த வழக்கம்.

*      கிராமத்துத் தொழில் வினைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள்.

*      ஒரேகுல ரத்த உறவு வகுப்பினரின் நிலக் குடியுரிமை.

*      பெருவாரியான நிலங்கள் கோயில் உடைமைகள்.

*      நில ஒப்படைப்புகளும் பகிர்வுத் திருத்தமும்

*      தீயின் உதவியால் திருத்தப்பட்ட நிலங்கள்

*      காடுகளுக்குத் தீயிட்டுப் புதிய நிலக்குடி யேற்றங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

*      பெரும்பாலான சமயங்களில் நிலம் என் பது ஒரு தனியார் சொத்துரிமையாக இல் லாததால்.

*      சீதா - ‘உழுசால்’ : ஒரு அரசுரிமையின் கீழ் அடங்கிய நிலக்குடியேற்றம். நீண்டகால அரசுப் பணிகளை மெச்சி அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட துண்டு நிலங்கள்; ஆனால் ஒரு நிலப்பிரபுத்துவ நில உரிமைகள்.

*      உடலுழைப்பைத் தவிர வேறெதையும் அளிக்க முடியாதவர்களுக்குப் பொது வாக, சாகுபடிக்குரிய தரிசு நிலங்கள் பாதிக் குப் பாதி என்ற பங்கு விகிதத்தில் (குடிவார அடிப்படையில்) ஒப்படைவு செய்து கொடுக்கப்பட்டன. பங்கில் விதை நெல் லுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டது.

இவ்வாறு பாதிக்குப் பாதி பயிரைப் பிரித்துக் கொள்ளும் குடிக்காணி வழக்கம் பின்னர் நிலப் பிரபுக்களின் குடிவார உரிமைகளாக, ஆங்கிலேய ராட்சி ஊர்ஜிதப்படுத்தியது.

*      சீதா நிலங்களில் அளிக்கப்பட்டு வந்த ஒரே சலுகை, ஐந்தில் ஒரு பங்கு என்ற விதிப்பைக் கூட அளக்கமுடியாத படைவீரர்களுக்கு இந்த விகிதாச்சாரம் மேலும் தளர்த்தப் பட்டது.

*      சீதா கிராமவாசி. ஒரு குடியானவர். வரி விதிப்பிற்குட்பட்ட கிராமத்தை விட்டு வரி விலக்குப் பெற்ற கிராமங்கள் - ராஷ்டிரா வகை, குருகுல ஆசிரம வகை - அங்குக் குடிமாற்றம் செய்துகொள்ள முடியாது.

*      காடு திருத்தி பயிர் நிலமாக்கும் பகுதிகள் ராஷ்டிரா அல்லது சீதா தீர்வைக்குட்பட்ட நிலப்பரப்பிலடங்கியிருக்குமேயானால் விகிதங்களுக்கேற்றவாறு வரி செலுத்த வேண்டும்.

*      ரயத்து - ரயித்து : நிலத்தைப் பண்படுத்து வோன் (உழவன், விவசாயி)

(அரபு)

ரயித்துவாரி : வருடாந்திர ஒப்பந்தப்படி ஒவ் வொரு ரயத்தின் பட்டா வழங்கப்படுதல்.

மூவகைச் சுமை

1.     1939- 40 - இல் உப்புவரியால் கிடைத்தது 87 லட்சம் பவுன்கள் - நிலவரியில் ஐந்தில் இரு பங்கு இது.

2.     விவசாயிகள் அரசாங்கத்துக்கு வரி செலுத் துவதுடன் நிலச்சுவான்தாருக்கு குத்தகை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் பிரிட் டிஷ் இந்தியாவின் விஸ்தீரணத்தில் பாதி ஜமீன் தார் முறைக்குட்பட்டிருந்தது. ரயத்துவாரி ஏரி யாவில் உள்ள பண்ணைகளில் மூன்றில் ஒரு பகுதி குத்தகைக்கு அல்லது வாரத்துக்கு விடப்படு கின்றன.

3.     மிகப் பெரும்பான்மையான விவசாயிகள் (80ரூ) லேவாதேவிக்காரனுக்கு வட்டி கொடுக்க வேண்டியிருக்கிறது. நிலவரிக்கு மேல் குத்தகை, மேல்வாரம் ஆகிய இனங்களில் தொகையும் கடனுக்கான வட்டியின் கன பரிமாணத்தையும் அறிய, நிலவரியைப் போல 1ஙூ மடங்கே நிலச் சுவான்தாருக்கு அதிகபட்சமாக சேரலாம் என்று சென்னையில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோ தாவின்படி ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்கள் லேவாதேவிக்காரனுக்கும், நிலச்சுவான்தாருக்கும் நிலவரிக்கும் உப்புவரிக்கும் கட்டுகிறார்கள் விவசாயிகள்.

*      நிலவரி, கலால்வரி, பொருள்வரி, வட்டி, கிராமத்திலில்லாத மிராசுதார்களின் குத்தகை ஆகிய ஐட்டங்கள் மூலம் நிகர வருமானத்தில் மூன்றில் இரு பங்கு கிரா மத்தைவிட்டு வெளியேறுகிறது.

“உன்னுழைப்பின் பலனை உன் கண்முன்னே                             கொண்டு போகிறார்

உனக்கோ ஒரு மணி தானியமும் விடுவ தில்லை

எழுந்திரு வீரவிவசாயியே! போராடு!”

*      1928-29 பொருளாதார நெருக்கடி

*      1930 நீர்ப்பாசன கமிட்டி ரிப்போர்ட்

*      1931 ஸென்ஸஸ் ரிப்போர்ட்

*      1931-இல் சென்ட்ரல் பாங்கிங் விசாரணை கமிஷன்

*      விவசாயக் கடன் நிவாரண சட்டத்தைப் பற்றி தக்காண கமிஷன் : “ஒரு விவசாய தேசத்தில் நிலத்தின் அபிவிருத்திக்கு ஒன்றும் செய்யாத, வாடகைப் பேராசை கொண்ட அயலார்களுக்கு நிலம் மாற்றப் படும் உண்மையைக் கசந்துகொண்டே குறிப்பிட்டது. பொறுப்பற்ற நிலச்சுவான் தார், லாயக்கற்ற நிலச்சுவான்தார், அக் கிரம வட்டிக்காரன் என்றும் குறிப்பிட்டது.

*      கடனுக்காக நிலம் பறிமுதல் செய்யப் படுவதை அரசாங்க சட்டம் ஆதரிக்கிறது.

*      குத்தகை கொடுக்க முடியாமல் நிலத்தை விட்டோடிய விவசாயிகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேர். பலாத்காரமாக நிலவரி வசூல் செய்யும்படி 256, 284 உத்தரவுகள் போடப்பட்டன.

*      1921-இல் மொத்த விவசாயக் கடன் 50 கோடி ரூபாய்

 1931-இல் மொத்த விவசாயக் கடன் 900 கோடி ரூபாய்

 1937-இல் மொத்த விவசாயக் கடன் 1800 கோடி ரூபாய்

ரிஸர்வ் வங்கி விவசாயக்கடன் துறையின் முதல் ரிப்போர்ட்.

*      அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடி யானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்

*      வலியான் எடுத்ததே வாய்க்கால், வலவான் ஆடினதே பம்பரம்

*      உட்சிறு வாய்க்கால்களும், இடைவாய்க் கால்களும், கண்ணாறுகளும்

*      அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது மேல்

*      வரப்போ தலையணை வாய்க்காலோ பஞ்சு மெத்தை

*      காணி கவிழ்ந்து போகிறதா?

*      கோணி கோடி கொடுப்பதிலும், கோணா மல் காணி கொடுப்பது நல்லது.

*      காணிக்குச் சோம்பல், கோடிக்கு வருத்தம்

*      காணி ஆசை, கோடி கேடு

*      கொட்டிக் கொட்டி அளந்தாலும், குறுணி பதக்கு ஆகாது.

*      நூற்றைக் கெடுத்தது குறுணி

*      உழுகிறதை விட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற் போல

*      கூலிக்கு அறுத்தாலும் குறுணிக்கு அறுக் கலாம்;

       வீணனுக்கு அறுத்து வெளியே நிற் பானேன்.

*      கூலிக்கு நாற்றுநட வந்து எல்லைக்கு வழக்கா?

*      சிவசொத்து குல நாசம்.

விளக்கக் குறிப்புகள்

*      “தொன்றுதொட்டு, ஆசியாவில் மூன்று அரசாங்க இலாக்காக்களே இருந்திருக் கின்றன. நிதி இலாகா அல்லது உள்நாட் டைக் கொள்ளையடிக்கும் இலாகா; யுத்த இலாகா அல்லது வெளிநாட்டைக் கொள் ளையடிக்கும் இலாகா; மூன்றாவதாக, பொது மராமத்து (வேலை) இலாகா... இந்தியாவில் பிரிட்டிஷார் தங்களுக்கு முந்தியிருந்த ராஜ்யாதிகாரிகளிடமிருந்து யுத்த இலாகாவையும் நிதி இலாகாவையும் சுவீகரித்துக் கொண்டனர். ஆனால் பொது மராமத்து இலாகாவை முட்ட முழுக்கப் புறக்கணித்து விட்டனர். ஆகவே தான் பிரிட்டிஷ் கொள்கையான போட்டி சுதந்திரத்தாலும் வர்த்தக சுதந்திரத்தாலும் நடத்த முடியாத விவசாயம் க்ஷீணித்து வருகிறது”

       - மார்க்ஸ் : “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” 1853

*      பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் முதன் முதலாக நிலம் தனிநபர்களின் உடைமை யாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு வரி நிர்ண யிக்கப்படுகிறது. இந்த வரியைப் பணமாகக் கட்ட வேண்டும். நேரடியாக சாகுபடி செய்யும் விவசாயிகள், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் மீது இவ்வரிகள் விதிக்கப்பட்டன.

*      “வர்த்தகத்தின் நாசகார செல்வாக்குக்கு, பழைய பொருளுற்பத்தி முறையும் அதன் உள்நாட்டு ஒற்றுமையும் போடும் தடை களை, இந்தியாவுடனும் சீனாவுடனும் பிரிட்டிஷாருக்கு இருந்த உறவு சுட்டிக் காட்டுகிறது. சிறு விவசாயமும் குடிசைத் தொழிலும் சேர்ந்து நிற்கும் ஒற்றுமையே இந்த உற்பத்தி முறையின் அடிப்படை. இத்துடன் இந்தியாவில் நிலத்தின் பொதுச் சொத்துரிமை அடிப்படையில் கம்யூன்கள் இருந்தன. (சீனாவிலும் கம்யூன் ரூபத்தில் தான் உற்பத்தி உறவுகள் முதலில் வடி வெடுத்தன) இந்தியாவில் இந்தச் சிறிய பொருளாதார ஸ்தாபனங்களை உடைப் பதற்காக பிரிட்டிஷார் ராஜ்யாதிகாரிகள் என்ற முறையிலும் நிலப்பிரபுக்கள் என்ற முறையிலும் தங்களுடைய நேரடியான அரசியல் அதிகாரத்தையும் பொருளாதார அதிகாரத்தையும் உபயோகப்படுத்தி னார்கள்” - மார்க்ஸ்

*      சீரைத்தேடின் ஏரைத் தேடு

*      முன்னே ஒரு குறுணி பின்னே ஒரு முக் குறுணி

*      ஏர் பிடித்தவன் ஏழை; பானை பிடித்தவன் பாக்கியசாலி

*      ஏரை அடித்தேனோ; கூழை அடித்தேனோ

*      ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்

*      உமையாண்டி ஊருணி, அரவத்துடை யான் தண்ணீர் ஊருணி

*      வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்;

       நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயரும்

*      வரிசையும் இல்லை; அரிசியும் இல்லை.

*      விளைவது அரிசியானாலும், மேல் உமி போனால் விளையாது.

*      ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே

*      முதுகிலே அடித்தால் ஆறும், வயிற்றில் அடித்தால் ஆறுமா?

*      கூலி குறைத்தாயோ, குறைமரக்கால் இட்டாயோ?

*      உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்குப் பம்பரம்

*      எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

*      கடனில்லாத கஞ்சி கால் வயிறு.

*      இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?

*      கடன்பட்டும் பட்டினியா?

*      கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும். கண்மூடித் துரைத்தனமாச்சே

*      ஊர் எங்கும் பேர், வீடு பட்டினி

*      அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளை யுமா?

*      அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை

*      அரண்மனைக்கு ஆயிரம் செல்லும்; குடி யானவன் என்ன சொல்வான்

*      கல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டாதா? (அரிசி தட்டுப்படாதா)

*      ஏழை அடித்தேனோ, கூழை அடித் தேனோ?

*      பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போகிறான்

*      பாடுமில்லை, பலனுமில்லை

*      பள்ளத்தில் இருக்கிறவன், பள்ளத்திலே இருப்பானா?

*      பருத்திக் காட்டை உழுவதற்கு முன்னம் பொம்மனுக்கு ஏழு முழம்; திம்மனுக்கு ஏழு முழம்.

*      நீரின்று அமையா யாக்கை

*      உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

-புற: 18

ஏறாமடைக்கு நீர்பாய்ச்சுகிறது போல

நிலத்தியல்பால் நீர் திரிந்து அற்றாகும்

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்

நீரின்றி அமையாது உலகு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

உழுவார் உலகத்தார்க்கு ஆணி

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

உழந்தும் உழவே தலை

நிலம் என்னும் நல்லாள்

உழவினார் கைம்மடங்கின்

*      உயிர் போகாமல் தண்ணீர் குடித்துக் கொண்டு வருகிறோம்

*      சுற்றத் துணியுமில்லை, நக்கத் தவிடு மில்லை

*      சோற்றுக்குக் காற்றாய்ப் பறக்கிறது

*      சோத்துப்பானை உடைந்தால் மாத்துப் பானை இல்லை

*      பறையன் பொங்கவிட்டால் பகவானுக்கு ஏறாதா?

*      மறைத்துக் கட்ட மாத்துப்புடவை இல்லை

*      வயிறார போஜனமுமில்லை, இடுப்பார புடவையுமில்லை

*      பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப் பயிர் இட்டது போல்

*      பஞ்சத்தில் பிள்ளை விற்கிறது போல

*      தாயைக் கொல்லும் பஞ்சம்

*      ஆசாரித்த தெய்வமெல்லாம் கட்டோடே மாண்டது

விளக்கக் குறிப்புகள்

*      பஞ்ச விசாரணைக் கமிஷன் ரிப்போர்ட் பஞ்சத்தில் மாண்டது 35 லட்சம் ஜனங்கள். இந்தப் பஞ்சம் மனிதனால் சிருஷ்டிக்கப் பட்ட பஞ்சம். பெரிய வியாபாரிகள் பஞ்ச காலத்தில் 200 கோடி ரூபாய் கள்ள மார்க்கட் லாபம், உபரிலாபம் அடித்தார் கள்.

உணவு ஸ்டாக் ஜமீன்தார்கள், வியாபாரிகள், அரசாங்க ஏஜண்டுகள், பாக்டரி முதலாளிகள் ஆகியோரிடமிருந்து ஏழை விவசாயிகளைப் பஞ்சம் முதலில் தாக்கியது.

அதன்பின் நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப் பட்டனர் நிலப்பிரபுக்களிடமும் லேவாதேவிக் காரர்களிடமும் அதிகப்படியான நிலம் குவிந்தது. ஒரு வருஷ பஞ்ச காலத்தில் தங்கள் நிலத்தை முழுவதையும் விற்றுவிட்டனர் அல்லது அட மானம் வைத்துவிட்டனர் நெல் விளைவிக்கும் குடும்பங்கள். இவர்களில் யாரும் நிலத்தைச் சட்ட நடவடிக்கைகளின் மூலம்கூடத் திரும்பப் பெற வில்லை. பஞ்ச காலத்தில் நிலம் மாத்திரம் விற்கப் படவில்லை. தாய் தந்தையர் தங்களது அருமைக் குழந்தைகளையும் பச்சிளம் சிறுவர் சிறுமியரை யும் தெருக்களிலே விட்டுச் செல்லும்படியான நிலைமை ஏற்பட்டது. ‘ஸாம்பிள் ஸர்வே’ கணக்குப்படி 1944-இல் 15 லட்சம் அகதிகள் இருந்தனர். யுத்தத்தால் பாதி பஞ்சத்தால் பாதி பேர் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். பஞ்சத்தின் கொடுமை கடன் கொடுமையாக்கியது. 1943-44 கடன்பட்ட குடும்பங்களில் வேளாண் குடும்பங் கள் 66ரூ பல்வேறு கைத்தொழிலாளர் 56ரூ கிராமத்திலுள்ள இதரர் 46ரூ கடன் தொல்லை யால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் ஒரு லட்சம் பேர். விவசாய கமிஷன் ரிப்போர்ட். விவசாயி இயக்கத்தின் வளர்ச்சி தீவிரம். ஸாந்தால்களின் எழுச்சியும் கலகமும் தக்காண கலவர எழுச்சியும் அகில இந்திய கிஸான் சபை முன்னெடுப்பில் பெரும் ‘விவசாயிப் புரட்சி’ சொல் வழக்கு உலகெங்கும் வீதியில் ஓங்கி ஒலிக்கிறது.

Pin It