அகவாழ்வு, புறவாழ்வு - தொழில், பொது நலனைத் தன்னகத்தே கொண்ட புறவாழ்வு - இரண்டிலும் மனிதன் தன்னை - பன்முகம் கொண்ட தன் முழு ஆளுமையை - வெளிப்படுத்த நிறைவான கருத்துப் பரிமாற்றம் இன்றியமை யாதது. இந்தக் கருத்துப் பரிமாற்றம் என்னும் தொடர்பாடலில் அடிப்படையானது மொழித் திறன். அம்மொழித் திறனையும் தொடர்பாடல் திறனையும் தாமே சுலபமாக வளர்த்துக் கொள் வதற்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது சாஃப்ட்/கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (Soft/Communication Skills) என்னும் நூல். முனைவர் டி.ஜெய சுதா, திருமதி எம்.ஆர்.வஜிதா பேகம் இருவரும் இணைந்து தொகுத்தளித்துள்ள இந்நூலில் வழக்கமான கவனித்தல், உரையாடுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன் அலகுகள் மட்டுமின்றி, சொல்வளம், இலக்கணம், கற்கும் உத்திகள், பன்முக அறிவுத் திறன்கள் உள்ளிட்ட திறன் அலகுகளும் நுணுக்கமாக விளக்கியுரைக்கப் பட்டுள்ளன.

மொழியைக் கற்பதற்கான கோட்பாடுகள் என்னும் முதல் இயலில், புறநிலைத் தூண்டல் கோட்பாடு, உள்ளார்ந்த இயல்புசார் கோட்பாடு, எதிர்வினை சார் கோட்பாடு ஆகிய கோட்பாடுகள் வகுப்பறையின் உள்ளும், புறமும் மொழியைக் கற்பதில் உள்ள சிக்கல்களைப் பகுத்தாயும் தொழிற்பாட்டை நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆசிரி யர் உரிய உடல்மொழியுடன் கற்பிக்கையில் மாண வர்கள் துல்லியமான மொழிப் பயன்பாட்டை வசப்படுத்திக்கொள்ள முடியும் என்பது புறநிலைத் தூண்டல் கோட்பாட்டாளரின் வாதம்; இதற்கு எதிர்வினையாக, உள்ளார்ந்த இயல்புசார் கோட் பாட்டாளர் எடுத்து வைக்கும் இயல்புசார் திறனுக் கான வாதம்; எதிரெதிர்ச் செயல்விளைவுகளால் உருவாக்கும் திறனைப் பற்றிய வாதம். இவற்றின் அடிப்படையில் மொழியைக் கற்பதற்கான கோட் பாடுகள் விளக்கப்படுகிறது.

அடுத்து, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துகிற வேளையில் அந்தப் பாட மொழியின் மூலம் தெரிவிக்கும் கருத்தின் இயல்புக்கேற்ப உடலை அசைத்தல், கண்களாலும் முகத்தின் பல் வேறு அசைவுகளாலும் நேருக்கு நேராகத் தம் உணர்ச்சியைத் தெரிவித்தல், தலையை அசைத்தல் என எப்படியெல்லாம் தனது கருத்தை மாணவர் களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று உரைக்கிறது இரண்டாவது இயல்.

ஐம்பது, அறுபது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் பாடம் கற்பிக்கிற வேளையில், மாணவர் களுக்கு அந்தக் கற்பித்தல் போதுமானதாக இருக் காது. எனவே, தனி மாணவராக, இரட்டையராக, அல்லது சிறு குழுவாகத் தத்தமது இருப்புநிலை யிலிருந்து பாடத்தைக் கற்கும்போது சுயேச்சை யாகப் புரிந்து, விரும்பிப் படித்துப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியும். இந்த முறையியல் மாணவர் களுக்கு எப்படிப் பலன் கொடுக்கும் என்பதையும் இந்த இயலில் அறிந்து கொள்ள முடிகிறது.

பதின்ம வயதினருக்கும், அதற்கு மேற்பட்ட வயதில் உள்ள மாணவர்களுக்கும் இடையே பாடத்தைப் புரிந்துகொள்வதில் வேறுபாடு உண்டு. அதற்கேற்ப, குறிப்பாக, பதின்ம வயதைக் கடந்த மாணவர்களுக்கு ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்த வேண்டும் என்று தொடங்கும் நான் காவது இயலில், ‘பதின்ம வயதைக் கடந்தவர்கள் நடைமுறையை உணர்ந்தவர்கள்; அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய வற்றைப்பற்றியே கவனத்தில் கொள்வர், எனவே, வகுப்பறைத் தொழிற்பாடுகள் எல்லாம், மாணவர் களின் வாழ்க்கைத் தேவைகள், எதார்த்த அனுபவங் களையொட்டியே இருக்க வேண்டும்’ என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு தனி மாணவரும், வெவ்வேறு கற்கும் விருப்ப முறைகளை உடையவராக இருப் பர். எனவே, அவரது உள்ளார்ந்த இயல்பு, சமூகச் சூழல், பண்பாட்டுச் சூழல் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது, ஐந்தாவது இயல்.

ஆறாவது இயல், மொழிபெயர்ப்பினை எடுத் துரைக்கிறது. அடுத்து, பன்முக அறிவுத்திறன்கள் என்னும் இயல் மொழித்திறன்; வண்ணம், வடிவம், கலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்; இயற் கைப் பரிணாமங்களை அறிதல்; பிறரையும், அவர் களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளுதல்; தன்னுடைய உணர்ச்சி, எது தன்னை மகிழ்விக்கும், எது தன்னைத் துயருறுத்தும் என்று அறிந்து தெளி தல், கணித அறிவு பெறுதல், இசைக் கூறுகளை அறிந்துகொள்ளுதல் எனப் பல்வேறுபட்ட அறிவுத் திறன்களை விளக்குகிறது.

அடுத்து வரும் இயல்களில், முறையே, கவனித் தல் / கேட்டல், உரையாடுதல், வாசித்தல், எழுது தல், சொல்வளம், இலக்கணம், பகுத்தாய்தலும் முடிவெடுத்தலும் ஆகியவை பொருத்தமான வரையறைகளுடன் எடுத்துரைக்கப்படுகின்றன. அடுத்து வரும் இயல்கள் கற்றலின் விளைவுகளை எவ்வாறு நுகர்வது, கற்கும் கலையை எவ்வாறு அறிவது என்ற அடிப்படைக் கூறுகளை விரித் துரைக்கின்றன.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள Soft/Communication Skills என்னும் இந்நூல் ஆங்கில மொழியைப் பற்றியது அன்று; இந்நூலில் கவனித் தல்/கேட்டல், உரையாடுதல், வாசித்தல், எழுது தல், சொல்வளம், இலக்கணம் ஆகிய இயல்களில் உரைக்கப்பட்டுள்ள செய்திகளும் ஆங்கிலம் சார்ந் தவை அல்ல. இவை மானிடன் மொழியும் எல்லா மொழிகளுக்கும் பொருத்தமானவை; இன்றி யமையாதவை. இந்நூலில் உள்ள அடிப்படைக் கூறுகளைப் பயன்பாட்டாளர் தம் விருப்பம் போலத் தாய்மொழியிலோ, மாற்றுமொழியிலோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடிய அள வுக்கு எளிய ஆங்கில நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மட்டு மின்றி சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் உரியது. தொடர்பாடலில் பெறும் தேர்ச்சி என் பது உள்ளம் கவர்ந்த காதலன்/காதலியுடன் சொல்லாடுவதற்கும் உதவும்; உலகை மாற்றும் காத்திரமான சிந்தனைப் பரப்பலிலும் செவ்வழி வகுக்கும்.

Soft/Communication Skills

Edited by : Dr.T.Jayasudha

Mrs.M.R.Wajida Begum

Published by : NCBH

Price : Rs.140/-

Pin It