வீட்டிற்குள்ளும், வெளியிலும்
மிகுந்த எச்சரிக்கையோடும்,
பயங்களோடும்,
அடிமேல் அடியெடுத்து வைக்க
பழகிக் கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்
வாழ்வின் நுனியிலிருந்து மீண்டு வர ....
எதிர்வீட்டுக் குழந்தை
அழுது கொண்டே இருக்கிறது.
தாயிருந்தும், தந்தையிருந்தும்
சகோதரன் இருந்தும்
உணவுயிருந்தும்
பொம்மைகளிருந்தும் ...
எதிர் வீட்டுக் குழந்தை
அழுது கொண்டே இருக்கிறது.
பிறந்தது முதலே
கேட்டுக் கொண்டிருந்த
துப்பாக்கிகளின் சப்தம் வேண்டி ...
வீட்டின் முகப்பு தோட்டத்திற்குள்
பயிற்சி செய்கிறார்கள்
குழந்தைகள்
துப்பாக்கிகளோடு சண்டையிட
மொட்டவிழ்ந்து நிற்கும் பூக்களுக்கும்
நறுமணங்களுக்காகவும்
திரண்டு நிற்கிறது
துளிநீர் விழியின் விளிம்பில்