"இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம் " என்று தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் முன்னர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தில் சொல்லி இருந்தார்.

செய்ய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தட்டிக்கழிக்கக் காரணம் சொல்லிக் கொண்டு இருக்கிறது மோடி அரசு.

சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதை மோடியின் இந்த ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றத் துடிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

அதற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மை இருக்க வேண்டும். பாஜகவுக்கு  மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை இல்லை. அத்துடன் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். இதற்கு இப்போது வாய்ப்பும் இல்லை.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தலால் செலவு குறையும் என்றும் மோடி சொல்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. அதானி, அம்பானி களுக்கு மோடி கடன் தள்ளுபடி செய்ததனால் அரசுக்குக் கூடுதல் நிதி இழப்பு என்பது அவருக்குத் தெரியாதா?

மக்களுக்குப் பயன்தரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற 'கோஷத்தை'க் கைவிட வேண்டும் என்பதும் மக்களின் வேண்டுகோள்.