2021 ஆம் ஆண்டுப் பிறப்பே நெருக்கடியான சூழலிலே தான் உதயமானது. 2020 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தீவிரம் காட்டிய கொரோனோ பெரும் தொற்று, அந்த ஆண்டு முழுவதும் உலகையே புரட்டிப் போட்டது. உலகின் ஏனைய நாட்டுத் தலைவர்கள் எல்லாம், ஆட்சியாளர்கள் எல்லாம் மருத்துவ அறிஞர்களையும் அறிவியலாளர்களையும் அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி, மக்களைக் காத்திடும் முயற்சியில் போராடிக் கொண்டிருந்த போதுதான், 2021 மே 2 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின.

மே ஏழாம் நாள், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்கிற உணர்ச்சிகரமான திராவிட முழக்கம் ஓங்கி முழங்கியது 6 ஆவது முறையாக சென்னை ஆளுநர் மாளிகையில்.

mk stalin 335பதவியேற்பு என்கிற படாடோபம் ஏதுமின்றி, அரை மணி நேர எளிய விழாவாக மாண்புமிகு ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்று இன்றோடு ஆண்டுகள் மூன்றும் கடந்தது.

மகளிர் இலவசப் பேருந்துப் பயணம், ஆவின் பால் விலைக் குறைப்பு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட முதலமைச்சரின் முதல் கையெழுத்துகள் தொடங்கி, மகளிர் உரிமைத்தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம் வரை தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றும் அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்குத் தமிழ்நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லக் கூடியவை..

 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல... அது, வினைச்சொல்.

 இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்" என்று இந்தியத் தலைமை அமைச்சர் அறிவித்த அறிவிப்பு.

இது தானாக வந்த அறிவிப்பு அல்ல இந்த அறிவிப்பை வெளியிடுகிற அளவிற்குப் புதுதில்லியை நெருக்கிப் பணிய வைத்தவர் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் தான்.

முதலமைச்சர் பொறுப்பேற்ற மறுநிமிடமே, "உடனடியாகத் தடுப்பூசிகளை வழங்கி நாட்டு மக்களைக் காக்கும் மகத்தானப் பணிகளுக்கு உதவுக" என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்கிற தரகு பேரத்தில் இருந்த இந்தியப் பிரதமருக்கோ தமிழ்நாட்டு முதலமைச்சரின் கடிதத்திற்குப் பதில் எழுத நேரமில்லை.

அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார். சர்வதேசத் தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களிடம் டெண்டர் கோரினார் தமிழ்நாட்டு முதலமைச்சர்.

"தமிழ்நாட்டுக்குத் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது. உங்கள் விலை நிலவரம் உள்ளிட்ட நடைமுறை விவரங்களைத் தாருங்கள்! அவசரம்!" என்றார்.

கார்ப்பரேட்டுகளின் லாபக் கணக்குகளில் இந்திய மக்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோய்க் கொண்டிருப்பது குறித்த கவலை ஏதுமின்றி இருந்த இந்தியப் பிரதமருக்கு இரண்டாவது கடிதம் எழுதினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 "நாங்களே தடுப்பூசி தயாரித்துக் கொள்கிறோம். தாம்பரம் தடுப்பூசி மையத்தைத் திறந்து விடுங்கள்!" என்பதுதான் இரண்டாவது கடிதத்தின் செய்தி. முதலமைச்சரின் கடிதத்தால் தடுமாறிப் போனார். 'திருடனைத் தேள் கொட்டிய கதை' என்று சொல்வார்களே! அப்படியொரு இக்கட்டில் சிக்கினார் இந்திய பிரதமர் மோடி.

பிரதமருக்குத் தேர்தல் பத்திரம் கொடுத்தவன் தடுப்பூசி ஒன்றுக்கு ரூபாய் 500, 600 என்று பேரம் பேசினான். சர்வதேச நிறுவனங்களோ "தமிழ்நாடு அரசுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் விதிகளைத் தளர்த்துக!" என்றன. தமிழ்நாட்டு முதலமைச்சரோ, "நாங்களே தடுப்பூசி தயாரித்துக் கொள்கிறோம் அனுமதி கொடு" என்கிறார். இப்போது என்ன செய்வது? வேறு வழியே இல்லை! இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி வழங்குவதென அந்த மன்கீபாத் அறிவித்தது.

 இப்போது, பத்தாண்டு கால ஃபாசிச நெருக்கடியில் இருந்து இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், சமூக நீதி நோக்கில் "இண்டியா" கூட்டணி என்கிற மகத்தான ஒற்றுமையைக் கட்டிச் சிதைவுகள் இன்றிப் பாதுகாத்து "இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" என்று அழைப்பு விடுத்தார்.

 குமரி முனையில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு வரையும் அரபிக் கடலிலிருந்து மணிப்பூர் மலைமுகடுகள் வரையும் ஸ்டாலினின் குரலைக் கேட்டு மக்கள் இந்தியாவைக் காக்க அணி திரண்டு நிற்கிறார்கள்! ஆம், "சொல்லுதல் யார்க்கும் எளிய" ஆனால் "செயல் ஒன்றே சிறந்த சொல்!" என்று நிரூபித்து விட்டார் திராவிடமாடல் ஆட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இவரின் ஆட்சி, சொல்லாட்சி அல்ல... செயலாட்சி!!

- காசு.நாகராசன்

Pin It