தான் முதல்வராக இருப்பதால் சேலம் மாவட்டத்திற்குப் பெருமை என்று தம்பட்டம் அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

உண்மைதான்! இல்லையென மறுக்கவில்லை.

சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கப் போகிறோம் என்று கிளம்பிவிட்ட பாஜகவிற்குக் காவடி தூக்கியது பெருமைதான்.

எட்டுவழிச்சாலை என்ற பெயரால் மரங்கள் வெட்டப்பட்டன. விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. இந்தப் பெருமையெல்லாம் எடப்பாடியைச் சேரும்.

நான் உயிரைக் கொடுத்தாவது நாட்டைக்காப்பேன் என்று மோடி சொன்னாராம். புளகாகிதப்பட்டுப் போன எடப்பாடி, மோடியைப் பிரதமர் ஆக்கவேண்டும்
என் கிறார்.

நாட்டை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது ரஃபேல்  விமான பேர ஊழல்.

அது குறித்த நீதிமன்ற விசாரணையின் போது ரஃபேல் விமான முக்கிய ஆவணங்கள் காணாமல் போய்விட்டன என்று மத்திய அரசு சொல்லியதே...

இப்படித்தான் நாட்டையும் இனி காப்பாற்றுவாரா மோடி.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பத்திரமாகப் பாகிஸ்தானிடமிருந்து மீட்டாராம் மோடி. வாய்கூசாமல் இப்படிச் சொல்கிறார் எடப்பாடி.

அபிநந்தனை வைத்துப், போர் மேகத்தை உருவாக்கி, இந்திய நாடளுமன்றத் தேர்தலைத் தள்ளிப்போட நினைத்த மத்திய அரசுக்குப் பட்டை நாமத்தைச் சாற்றியதோடு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தானே முன்வந்து அபிநந்தனை விடுதலை செய்தார் என்பது உலகறிந்த செய்தி.

இது கூடத்தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர்கள் சுட்டுக்கொலை...

நீட் மருத்துவத் தேர்வுக்கு மறைமுக ஆதரவு...

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் அறிவித்து, மாதக் கணக்காக வங்கியின் வாசல்களிலும், ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்னாலும் நிற்கவைத்து...

- இப்படி மாறி மாறி நாட்டைச் சீர்கெடுத்த பெருமை மோடிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் சேரும்.

 இப்படிபட்ட பெருமைகளுக்காக இவர்களை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவதே இனி மக்களுக்குச் சேரும் பெருமையாக இருக்கும்.

Pin It