விலங்கின் உயிருக்கும் மனித உயிருக்கும் வித்தியாசம் தெரியாமல், பசுக்களை கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண் டும் என்று பெரும்பான்மை மக்களுக்கு எதிராக நாடெங்கும் இயக் கம் நடத்தி வரும் இந்துத்துவ பாசிசத்தின் அடையாளமான பாபா ராம்தேவ் என்ற சாமியார் கறுப்பு பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் என்ற நாடகத்தை தலைநகரில் அரங்கேற்றியிருந் தார்.

‘ஊழலை தடுக்கும் லோக்பால் மசோதா வேண்டும்; அதுவரை எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன்' என்று அறிவித்து, அதே தலைநகரில் பட்டினிப் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே - இந்துத்துவா சக்திகளைத் தாங்கிப் பிடித்ததால் ஆரம்பத்தில் அவரது ஊழல் போராட்டத்திற்கு துணை நின்ற மேத்தா பட்கர் போன்ற சமூக ஆர்வலர்கள் கூட இந்துத்துவாவினரை புகழும் அன்னாவை விமர்சிக்கத் தொடங்கினர்.

மக்கள் மத்தியிலும் அன்னா ஹசாரேவின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் வலுவிழந்து போன அன்னாவின் போராட்டம் மத்திய அரசோடு சமரசம் என்ற நிலையை அடைந்து இன்று லோக்பால் மசோதா குப்பைத் தொட்டிக்கு செல்லும் நிலையில்...

அப்போதே அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் சேர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பாபா ராம்தேவ், ஹசாரேவின் பிரபலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

லோக்பால் போராட்டத்தில் தான் மக்கள் மத்தியில் பேசப் படாமல் போன ஆதங்கத்தில் இருந்த ராம்தேவ், நாடு முழுவ தும் தன்னைத் திரும்பி பார்க்க வேண்டும் என்று எண்ணி, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மத்திய அரசு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்ததுதான் டெல்லி ராம் லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் எனப் படம் காட்டியுள்ளார்.

இவர் டெல்லிக்கு வந்து இறங்கியவுடன் மத்திய அமைச்சர்கள் இவரை வரவேற்க விமான நிலையத்திற்கு ஓடுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து முக்கியத் தலைவர் வரும்போது தரும் வர வேற்புக்கு நிகராக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் ராம்தேவிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தந்து அசத்தியிருக்கி றார்கள். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க வந்த அவருக்கு பெரிய அளவிலான அரசு மரியாதை தரப்பட்டுள்ளது!

ராம்தேவே இந்தளவுக்கு அரசு மரியாதையை எதிர்பார்த் திருக்க மாட்டார்.

"கறுப்புப் பணம் குறித்து நாட்டு மக்கள் மிகவும் கோப மாக இருக்கிறார்கள்; இதற்கெதி ராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லஞ்சமாக கொடுக் கப்பட்ட பணத்தை முழுமை யாக வெளிக் கொண்டு வந்தால் அதன் பிறகு நாட்டில் யாருமே பசியோடு இருக்க மாட்டார்கள்; வேலையில்லாத் திண்டாட் டத்தை ஒழித்து விட முடியும்...'' என்றும் போராட்டக் களத்தில் பேசியுள்ளார் ராம்தேவ்.

நாட்டு மக்கள் மீது ரொம் பவே கரிசனம் காட்டுகிறார் ராம் தேவ். கறுப்புப் பணம் என்றால் என்னவென்றே தெரியாமல் நாட்டின் 80 சதவீத மக்கள் இருக்கும் நிலையில் கறுப்புப் பணத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்வதாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார் ராம்தேவ்.

மக்கள் நலன் குறித்து உண்மையிலேயே ராம்தேவிற்கு கவலையிருந்தால் அம்மக்களை ஏமாற்றும் சாமியார் வேஷத்தைத்தான் முதலில் அவர் கலைக்க வேண்டும். இதுவே மக்களுக்கு அவர் செய்யும் பெரிய சேவையாக இருக்கும்.

காவி உடையை அணிந்து கீழ்த்தர அரசியலில் அவர் ஈடுபடுவதே மக்கள் விரோதப் போக்கு என்பதற்கு சான்று.

கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று ராம்தேவ் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவுடன், கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்துதான் துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்.

ராம்தேவ் யோகி என்ற பெய ரில் உலவும் பெரு வியாபாரி. அவரது யோகா வகுப்பில் முன் வரிசையில் அமருபவருக்கு ரூ. 50 ஆயிரம், அடுத்த வரிசையில் அமருபவருக்கு ரூ. 30 ஆயிரம் என மெகா வசூல் செய்து வருகிறார்.

கணக்கில் வராத கறுப்புப் பணம் அவரிடம்தான் அபரித மாக இருக்கும் என்பதை எவ ரும் விளங்க முடியும். இவை யெல்லாம் மத்திய அரசுக்குத் தெரியாமல் இல்லை. இருந்தும் மத்திய காங்கிரஸ் அரசு இரட்டை ஆட்டம் ஆடுகிறது.

பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரûஸ தாங்கிப் பிடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளும் கருப்புப் பணத்தை வெளிநாடு களில் பதுக்கி வைத்திருப்பவர் கள்தான். அதனால்தான் காங்கி ரஸ் பிரமுகர்களான பிரணாப் முகர்ஜி, கபில் சிபில், டி.கே. பன் சால் போன்றவர்களை விட்டு ராம்தேவுடன் சமரசம் பேசும் மத்திய காங்கிரஸ் அரசு, மறு புறம் திக் விஜய் சிங் போன்றவர் களை விட்டு ராம்தேவின் வியா பார நிறுவனங்களைக் குறித்து மிரட்டல் பாணியில் விமர்சனம் செய்து வருகிறது.

ராம்தேவ் சமரசத்துக்கு பணி வாரா? மிரட்டலுக்குப் பணி வாரா என்பதை ஆராய்ந்துப் பார்த்தோமானால் மிரட்டலுக்குப் பணி யும் நிலையில்தான் ராம்தேவின் நிலை யிருக்கிறது.

அன்னா ஹசாரேயுடன் சேர்ந்து கொண்டு மத்திய அரசை மிரட்டும் வகையில் லோக்பால் மசோதாவை ராம் தேவ் வலியுறுத்தியபோதே - ராம்தேவ் மீது கண் வைத்த மத்திய அரசு, அவர் மீதான கடந்த கால வழக்குகளை துருவ ஆரம்பித்தது.

ராம்தேவிற்குச் சொந்தமான திவ்ய யோக பார்மசி என்கிற மருந்து தயாரிப்பு நிறுவனம் மிகப் பெரும் மூலதனத்துடன் இயங்கி வருகிறது. ஆயுர்வேத மருந்து என்ற பெயரில் கோடிக்க ணக்கில் மல்டி லெவல் வியாபாரத்தை நடத்தி வருகிறார் ராம்தேவ்.

கடந்த 2006ம் வருடம் அவரது நிறு வனம் தயாரித்த மருந்துகளில் விலங்கு களின் பாகங்களும், மனித மண்டை ஓட்டின் துகள்களும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரைக் கைது செய்யச் சொல்லி கம்யூனிஸ்ட் கட்சி யின் பிருந்தா காரத் அப்போதைய மத் திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்பு மணியிடம் கோரிக்கை வைத்தார்.

மத்திய சுகாதார அமைச்சகம், ராம் தேவின் கம்பெனி தயாரித்து விற்பனை செய்த மருந்தை ஆயுஷ் என்கிற மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி பரிசோதிக்கச் சொன்னது. அங்கு செய் யப்பட்ட ஆய்வில், விலங்குகளின் பாகங் களும், மனித மண்டை ஓடுகளும், எலும் புகளும் அம்மருந்துகளில் கலந்திருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் ராம்தேவ் மீதோ அவரது நிறுவ னத்தின் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

இதுபோன்ற ரிப்போர்ட்டுகளை மத் திய அரசு கைவசம் வைத்துக் கொண்டி ருந்த வேளையில், லோக்பால் மசோதா வில் ராம்தேவ் பிஜேபியின் தூண்டுத லால் ஆர்வம் காட்டியவுடன் ராம்தே விற்கு எதிரான பழைய கோப்புகளை தூசு தட்ட ஆரம்பித்தது மத்திய அரசு.

இதை உணர்ந்த ராம்தேவ், தன்னை தற்காத்துக் கொள்ளவே ராம் லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் என்ற புது "பிட்'டைப் போட்டிருக்கி றார்.

அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்பி ஒருபுறம் சமரசம் பேசுகிறது மத்திய அரசு. இன்னொறு புறம் அவ ருக்கு எதிராக வரிந்து கட்ட திக் விஜய் சிங்கையும் தூண்டி விடுகிறது.

இரண்டையும் பார்க்கும் நாட்டு மக்கள் ஒன்றும் புரியாமல் குழம்புகின்றனர். இதுபோன்ற அரசியல் விளையாட்டுகள் காங்கிரஸýக்குப் புதிதல்ல. நரேந் திர மோடி விஷயத்திலும் அப்படித்தான் தனக்கு எதிராக பாஜக குரலெழுப்பும் போதெல்லாம் கோத்ரா வழக்கு, சிபிஐ விசாரணை என்று பழைய கோப்புகளை கையில் எடுக்கும் காங்கிரஸ், ராம்தேவ் விஷயத்திலும் ஆடிய இந்த ஆட்டம் மத்திய அரசை கலங்கடிக் கலாம் என நினைத்திருந்த இந்துத்துவா - ராம்தேவ் கூட்டணியை கதிகலங்கவைத்திருக்கிறது.

- அபு ஹிதாயா

பாக்ஸ் 1 : ஹீரோவாக காட்டிக் கொள்ள...

கடந்த 4ம் தேதி அன்று 5 ஆயிரம் பேரைத் திரட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் யோகா பயிற்சி நடத்தப் போவதாக டெல்லி போலீசாரிடம் அனுமதி வாங்கிய ராம்தேவ், பின் னர் பட்டினிப் போராட்டக் களமாக அதை மாற்றி னார். இதனால் டெல்லி போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு சமாதானம் பேசினர். அதற்கு சற்று அவகாசமும் அளித்தனர்.

ராம்தேவ் மறுத்துவிடவே, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைத்ததோடு, ராம்தேவை டேராடூனுக்கு பேக்அப் செய்தனர். டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் காத்திருந்த அம்மாவட்ட எஸ்.பி. ஜி.எல். மல்ஹேத்ரா அவரை அவரது பத்ரிநாத் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார்.

ராம் லீலா மைதானத்திலிருந்து ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட் டதை பிஜேபி சங்பரிவார அமைப்புகள் சர்ச்சையாக்கி வரு கின்றனர். வடநாட்டு டி.வி. சேனல்களும் இந்தப் பிரச்சினையை தேசிய விவாதமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

லோக்பால் மசோதா வரைவு குறித்து அன்னா ஹசாரே டீமும், மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளை யில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நான்தான் ஹீரோ - ஹசாரே அல்ல என்பதை காட்டிக் கொள்ளவே ராம் லீலா போராட் டத்தை மேற்கொண்டார் ராம்தேவ் என்கிறார்கள் தலைநகர அரசியல் பார்வையாளர்கள்.

பாக்ஸ் 2 : ஆர்.எஸ்.எஸ். நடத்திய போராட்டம்

      ம்தேவ் என்கிற சாமி   யார் பக்காவான இந்துத்துவா சிந்தனை கொண்டவர் என்பது பல ருக்குத் தெரியாமல் இருந் தது. பட்டினிப் போராட்டத் தின் மூலம் அதை ராம் தேவே வெளிப்படுத்தி விட் டார்.

ராம்தேவின் போராட்டக் களத்தில் பொது மக்கள் என்ற போர்வையில் திரண்டவர்கள் இந்துத்துவாவின் பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொண் டர்கள். தங்கள் தொண்டர்கள் இந்த பட்டினிப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்று ஆர்.எஸ். எஸ். அறிவித்திருந்ததே இதற்குச் சான்று.

இந்தப் போராட்டத்திற்கு பந்தல் அமைத்தது முதல் ஆட்களைத் திரட்டி வந்ததுவரை பம்பரமாகச் சுழன்று பணி யாற்றியவர்கள் ஆர்.எஸ்.எஸ். தொண் டர்கள்தான். பட்டினிப் போராட்ட மேடை யில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ராம்தேவ் அறிவித்தி ருந்தார். ஆனால் இந்துத்துவா தலைவர் களான அசோக் சிங்கால், சாத்வி ரிதம் பரா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்று போராட்டக் களத் தில் அறிவிப்புச் செய்யப்பட்டது.

ஆக, ராம்தேவின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.தான் இந்தப் போராட் டத்தை நடத்தியுள்ளது.

இந்திய நாட்டு நிர்வாகத்திலும், பொறி யியல், மருந்துவ படிப்புகளிலும் பயன் படுத்தப்படும் ஆங்கில மொழியை தூக்கி எறிந்து விட்டு இந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக் கையும் வைத்திருக்கிறார் ராம் தேவ். இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைத் திட்டத்தில் உள்ள விஷயம்.

பட்டினிப் போராட்டத்தில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொள்ப வர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் வகையில் தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்கூட கலந்து கொள்ளாமல் அக் கவுண்டர்கள் காலியாகவே இருந்தி ருக்கிறது.

ஆக, ஆர்.எஸ்.எஸ்.தான் இந்தப் பட்டினிப் போராட்டத்தின் சூத்திரதாரி என்பதை தென் மாநில மக்கள் புரிந்து கொண்டு புறந்தள்ளியிருக்கிறார்கள்.

இந்தியாவை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு ஆரம்ப முயற்சிதான் ராம்தேவின் பட்டினிப் போராட்ட நாடகம் என்பது உறுதியாகவே தெரிகிறது.

- அபு

Pin It