எப்போது பார்த்தாலும் நாடாளுமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நாடுடுக்குத் தான் என்ன செய்தார் என்று சொல்லவே இல்லை. மாறாக நேரு என்ன செய்தார்? அவர் ஒன்றுமே செய்யவில்லை, அவர்காலத்தில் நாடு வளரவே இல்லை என்றே பேசிக்கொண்டு இருக்கிறார்.

அன்றைய பிரதமர் நேரு ஒன்றும் செய்யவில்லையா?

1948-பெங்களூரில் இந்தியத் தொலைபேசித் தொழிலகம்,

1948-ஒரிசாவில் டால்மியா சிமென்ட் ஆலை

1950-சித்தரஞ்சன் இரயில் இஞ்சின் தொழிற்சாலை,

1950-அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம்,

1952-பீகார் பல்கலைக் கழகம்,

1952-சென்னை, பெரம்பூர் இரயில்பெட்டித் தொழிற்சாலை,

1953-ஏர் இந்தியா, ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள்,

1955-ஹசாரிபாக் மாவட்டத்தில் ‘கொணர்’ அணை,

1960-நாகார்ஜுனா சாகர் அணை.

- இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம், ஜவகர்லால் நேரு செய்த சாதனைகளை, அப்பட்டியல் நீளமானது.

இன்றையப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்குச் செய்த சாதனைகள் என்ன?

விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், இரயில்வே இவை போன்றவைகளை தனியார் முதலாளிகளுக்குக் கொடுத்து விட்டார்.

பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களைப் பார்க்க மாட்டார், வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டே இருப்பார், காசி-ராமேஸ்வரம் தீர்த்தயாத்திரை போவார், நாட்டின் முக்கிய பிரச்சனைகளின் விவாதம் என்றால் நாடாளுமன்றம் பக்கமே போகமாட்டார். பிரதமர் மோடியின் சாதனைகள் இவை.

முன்னனவர் சாதனையாளர், பின்னவர் வேதனையாளர்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It