ஒவ்வொரு
பத்தடிக்கிடையிலேயும்
ஒரு ட்யூப் லைட்.
மாடிகளிலும்
மரங்களிலும்
கலர் கலராய் ஜொலித்தது
சீரியல் செட்.
தெரு முனைகளிலும்
கோயிலைச் சுற்றிலும்
சோடியம் லைட்.
மின்சாரம் தடைபட்டால்
தொடர் வெளிச்சத்திற்கு
தயாராய்
'பெட்ரோ மாக்ஸ்கள்'
மஞ்சள் பகலாய்
மாறியிருந்தது இரவு.
இலவச இணைப்பாக
நிலவொளி.
சடங்காக
அம்மன் ஊர்வலத்தில்
முன்னால் பிடித்துச் செல்கிறாள்
பெண்ணொருத்தி
தீப்பந்தம்.
- பொன்.குமார் (