1943ஆம் ஆண்டிலும் கூட, குடந்தை அரசினர் கல்லூரியில், பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாகவும், பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் குடிதண்ணீர்ப் பானைகள் வைக்கப் பட்டிருந்தன. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியே அந் நிலையை மாற்றியது.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறையிலே மரணமடைந்த தாளமுத்துவின் சடலத்தை இராஜா சர் முத்தையா (செட்டியார்), முன்னாள் மேயர் பாசுதேவ் ஆகியோர் தங்கள் தோள்களிலே சுமந்து சென்றனர். தமிழகத்தில் திராவிட இயக்கம் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சியல்லவா இது.

திராவிடர் யார்? - பெரியார்

முஸ்லிம்களும், கிறித்தவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும் ஆகிய எல்லோரும் திராவிடர்கள் என்ற தலைப்பின் கீழ் வருவார்கள். - பெரியார், குடிஅரசு 26.11.1939

நான்தான் திராவிடன் என்று    நவில்கையில்
தேன்தான் நாவெலாம்!    வான்தான் என் புகழ்!!
மனிதருள் நீயும் ஒரு மனிதன்     மண்ணன்று
இமைதிற எழுந்து நன்றாய்     எண்ணுவாய்
தோளை உயர்த்து சுடர்முகம் தூக்கு
மீசையை முறுக்கி மேலே எற்று

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

Pin It