1

தான் ரசித்ததை ரசனையோடு காட்சிப்படுத்துகிற பக்குவம் கவிஞர் ப.மதியழகனுக்கு வாய்த்திருக்கிறது. இன்னும் கவிதையில் கடந்து போக வேண்டிய தூரத்தை தான் அறிந்து வைத்திருப்பதின் மூலம், மேலும் கவி உச்சத்தை அடைய வாய்ப்பிருக்கிறது.
பயணங்களை காதலிப்பவர்கள்
எவரும்
கைபேசி எடுத்துவரமாட்டார்கள்
இப்படியான கவித்துவ வரிகள் கவிஞரை அடையாளம் காட்டுகின்றன. "கை" என்னும் தலைப்பிலான கவிதை சிறப்பான வெளிப்பாடு!
சதுரங்கம், ப.மதியழகன், வெளியீடு : ஸ்ரீ லெட்சுமி பதிப்பகம், 115, வள்ளலார் சாலை, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி - 614001
9597332952

2
ஆழ் மனதில் எல்லோர்க்குள்ளும் பதுங்கிக் கொண்டிருப்பதும், எப்போது வேண்டுமானாலும் வெளியேறி தன்னை அடையாளப்படுத்துவதுமாக இருப்பது பால்யம். அந்த நினைவுகளின் ஈரத்தோடு பூச்செடிகளையும், நிலாவையும், ஆறுகளையும், குளங்களையும் அதீதமான அளவில் நேசிக்கிற பா.உஷாராணி கவிதையில், மென்மையின் மையச் சரட்டில் பயணிக்கிறார். இடையிடையே மனிதர்களின் நிலைக்காக வருந்துகிறார். அண்மைக்கால கவிஞர்களில் நம்பிக்கைக்குரியவராய் அறியப்படும் கவிஞருக்கு இத் தொகுப்பு அடுத்தகட்ட நகர்வுக்கு துணைபுரியும்.
மரம் வைத்த வீடுகள், பா. உஷாராணி, வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011. பேச...

Pin It