புன்னகை

இதழ் : 60
மே10
விலை. ரூ. 20.00

ஆசிரியர் குழு
க. அம்சப்ரியா
செ. ரமேஷ்குமார்

தொடர்புக்கு
புன்னகை
68, பொள்ளாச்சி சாலை
ஆனைமலை - 642 104.
04253 – 283017


முன் எப்போதையும்விட கவிதையின் தேவை கூடுதலாயிருக்கிறது. மௌன வெளிகள் உரத்த சப்தங்களாகவும், உரத்த சப்தமாய் எழ வேண்டியவை மௌன புதைகுழிக்குள் புதைந்தும் போனபின் கவிதை வீரியமாகவும் எழுச்சியோடும் ஆயிரமாயிரமாய் எழ வேண்டும்.

எல்லாத் துயரங்களையும் கொண்டாட போதுமான அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் துயரத்திற்கு எதிராக எழவேண்டிய குரல் சுயநலத்தில் கரைந்து கொண்டிருக்கிறது.

ஏதேனும் ஒரு கவிதை ஒரு மனிதனை சற்றே சிந்திக்க வைக்குமாயின், அவன் செயல்களை செம்மைப்படுத்துமாயின் அந்தக் கவிதைக்குள் இருக்கும் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் ராஜ மரியாதையை அடையாளப்படுத்துவோம். கருணையுள்ள கவிதை எவரையும் கைவிடுவதில்லை.

Pin It