கீற்றில் தேட...

இன்றைய இளைஞர்கள் நாங்கள்
இணையதளத்தில் இணையும் எங்கள் உலகம்
ராக்கும், ஜாசும் எங்கள் தேசிய கீதம்
கடலை வறுப்போம், கல்வி மறப்போம்
இதுவே எங்கள் வேதம்

ஆண் பெண் உறவு பற்றி
கவலையில்லை எங்களுக்கு
என் பிள்ளையும், அவள் பிள்ளையும்
எங்கள் குழந்தைகளோடு விளையாடும் வரை

கலாச்சாரத்தை கூடிய சீக்கிரம்
காட்சிப் பொருளாக்கி விடுவோம்
வரலாற்றுப் பதிவுகளில்
பண்பாட்டை படுகுழியில் தள்ளி
பூச்செடி நட்டுவிடுவோம் மேலே

ஐந்திலக்க சம்பளமும், அமெரிக்க வாழ்வும்
வேண்டும் எங்களுக்கு
அம்மா, அப்பாவை
அன்பில்லத்தில் விட்டுவிட்டு

- சு.சுபமுகி