கீற்றில் தேட...

தொடங்கிய இடத்திலேயே
முடிந்ததும் பின் தொடங்கியும்
ஓடிக் கொண்டிருக்கிறது
கடிகாரம்
காலத்தைக் கடத்திக் கொண்டு...

நடந்தவைகளை
மறக்க முயலும் முயற்சிகளும்
தோற்றுக் கொண்டே இருக்கிறது
ஒரு நாளுக்கு இருமுறை
என் ஆடைகளிலிருந்து
நூலெடுத்துத் தயாராகிவிட்டேன்
எண்ணங்கள் அம்மணமாய்...
காலத்தைக்
குத்திக் கிழிக்கும்
கடிகார முட்களில்  நூலேற்றி
வாழ்க்கை கிழிசல்களைத்
தைத்துக் கொள்ள வேண்டுமினி...

- ஒளியவன்