அனுபவங்கள் 1

இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்பாக யாழ்ப்பாணத் தின் பிரபல புத்தகசாலைகளில் ஏதேனும் ஒன்றிற்கு சென்றிருக் கக்கூடிய அன்பர்கள், அங்கு சஞ்சிகைகள் மற்றும் பருவகால இதழ்களிற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட பிரிவில், தமிழ் மொழியில் வெளியாகிய காமிக்ஸ்களும் தமக்கென்ற ஒரு கவுரமான இடத்தைப் பிடித்திருந்  ததை இன்று நினைவுகூர்ந்திட முடியும். புத்தகசாலைக்குச் சென்றி ருந்தவர் ஒரு சிறுவனாக இருக்கும் பட்சத்தில், சிறுவர் மனதைச் சுண்டியிழுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அட்டைப்படங் களுடன் ஒழுங்கான வரிசைகளில் கவர்ச்சி கரமாக அடுக்கி வைக்கப்பட்டி ருக்கும் அக்காமிஸ்களும், அவற்றைக் கண்குளிர மனதில் பேரார்வத் துடனும் ஏக்கத்துட னும் பார்த்திருந்த அந்த தருணங்களும் என்றும் அச்சிறுவன் மனதை விட்டு நீங்காத ஒரு நினைவாக இருந்திருக்கக் கூடும். அவ்வகையான ஒரு பாக்கியம் கிடைத்த சிறுவர்களில் நானும் ஒருவன் என்பதை மகிழ்வுடனே இன்று நான் நினைத்துக் கொள் கிறேன்.

ஆனால் இன்று நான் உலகின் எந்தப் பகுதியிலுமுள்ள ஒரு பிரபலமான தமிழ் புத்தகசாலைக்கும் செல்லும் பட்சத்தில் தமிழ் காமிக்ஸிற்கு என இருந்த அந்த கவுரமான இடத்தை எவ்வளவு தேடினாலும் கண்டுகொள்ளவே முடியாது. கவர்ச்சி யான புன்னகைகள் சிந்தும் நங்கைகளை முன்னட்டையில் ஏந்திய இதழ்களும், பரபரப்பான அரசியல் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தாங்கிவரும் இதழ்களும் இன்னும் பல இதழ்களும் ஆக்கிரமித்துக்கிடக்கும் அந்த சஞ்சிகைப்பரப்பில் காமிக்ஸைக் கேட்டுத்தான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் அதிர்ஷ்டம் உங்களுடனும், காமிக்ஸ் அப்புத்தக சாலையிலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அது சாத்தியமாகக்கூடும். (பிரான்ஸில் புத்தக நிலையங்களில் இன்று தமிழ் காமிக்ஸ் கிடைப்பதே கிடையாது. சிலவருடங்களிற்கு முன்பு ராணி காமிக்ஸின் அந்திம இதழ்களை இங்கிருக்கும் புத்தகசாலை களில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.) இவ்வரு டம் ஆரம்பித்து விரைவில் எட்டு மாதங்கள் முடிவடையும் நிலையில், தமிழகத் தில் உள்ள காமிக்ஸ் விற்பனை நிலைய விற்பனையாளர்கள் யாரிடமும் புதிதாக ஏதேனும் காமிக்ஸ் வெளியீடுகள் வந்தனவா எனும் கேள்வியைக் கேட்டால் அவர் கள் அதற்குத் தரும் பதில் ஆம் என்பதாக இருக்காது என்பது தான் இன்றிருக்கும் உண்மை.

காமிக்ஸ் என்பதன் மூலம் நான் இங்கு குறிப்பிட விரும்பு வது, புராணச் சித்திரக்கதை வெளியீடுகள், உள்ளூர் கலைஞர் களின் ஆக்கத்தில் உருவாகும் காமிக்ஸ் ஆக்கங்கள், தமிழ் அல்லாத பிறமொழிக் காமிக்ஸ் படைப்புகள் போன்றவற்றை அல்ல. இன்று தமிழில் காமிக்ஸ் என்று கூறினால் அதன் தீவிர ரசிகர்கள் ப்ரகாஷ் பப்ளிஷர்ஸ் குழும காமிக்ஸ் வெளியீடு களையே தம் மனதில் கொண்டுவர முடியும். அவ்வகையான ஒரு சாதனையைப் ப்ரகாஷ் பதிப்பகத்தார் செய்திருக்கிறார் கள் என்பதை யாருமே சுலபமாக மறுத்துவிட இயலாது. கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில் பிறமொழிக் காமிக்ஸ் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவந்த பல பதிப்பகங்களில் இன்று ப்ராகஷ் பதிப்பகத்தார் மட்டுமே எஞ்சி நிற்கிறார்கள். எனவே அவர்கள் வெளீயீடுகளைப் பிரதான மாகக் கொண்டே என் எண்ணங்களைத் தொடரும் வரிகளில் பதிக்கிறேன்.

நான் படித்த முதல் காமிக்ஸ் எது என்று என்னையே நான் சுயவிசாரணைக்குட்படுத்திக் கொண்டால், தலைப்பு மறந்து போன மூகமூடி வேதாளன் கதை ஒன்றுதான் என் நினைவில் எட்டிப் பார்க்கிறது. வாசிப்பு என்பதனை முழுமையாக எட்டியணைத்துக் கொள்ளாத சிறுவயதில், கூட்டமாக நண்பர்களுடன் இருந்து வேதாளனின் அக்கதையைப் படித்தது இன்றும் நினைவிலிருக்கிறது. அந்த வயதிலிருந்து சாகசங்கள் மீது உருவான ஆர்வம் இன்றுவரை என்னில் குறையாமலே இருந்து வருகிறது.

எமது தலைமுறைக்குத் தொலைக்காட்சி என்பது எண்பது களின் ஆரம்பத்தில் அறிமுகமான ஒரு அதிசயமாகும். அதற்கு முன்பாகச் சிறுவர்களாகிய எங்கள் கனவுலகானது பெரியவர் கள் கூறும் கதைகள், சிறுவர் சஞ்சிகைகள், காமிக்ஸ்கள் என்பவற்றின் மூலமாகவே அடித்தளம் போடப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. எனவே காமிக்ஸ்கள் மூலம் அறிமுகமான எல்லா நாயகர்களின் கதைகளையும் நாம் ஆர்வத்துடன் படித்தோம். எல்லா வகையான காமிக்ஸ் நாயகர்களையும் எம் சாகச நாயகர்களாக நாம் வரிந்து கொண்டோம். அக்கால கட்டத்தில் காட்சி ஊடகங்கள்வழி எமக்கு அறிமுகமான காமிக்ஸ் நாயகர்கள் மிகச் சிலரே. ஆனால் இன்று வாசிக்கும் பருவம் எட்டும் முன்பாகவே சிறார்கள் காட்சி ஊடகத்தின் காந்தப் பிடிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இன்றைய சிறார்கள் எம்மைவிட புத்திசாலிகளாகவும், செயற்படும்திறன் அதிகரித் தவர்களாகவும், எம்மிலிருந்து வேறுபட்ட ரசனைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

காமிக்ஸ்கள் வழியாக மட்டுமே எமக்கு அறிமுகமாகி, எம் விருப்பத்திற்குரிய நாயகர் களாக ஆகிய இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரெக், லாரன்ஸ் ரூ டேவிட், மாடஸ்டி, ஜானி நீரோ மற்றும் முகமூடி வேதாளன் போன்றவர்களிற்குப் பதிலாகக் காட்சி ஊடகங்கள் வழி அவர்கள் விதவிதமான நாயகர்களைத் தம் விருப்பத்திற் குரிய நாயகர்களாக இன்று கண்டடைந்துகொள்கிறார்கள். வாசிப்பு என்பது இங்கு இதன் பின்பாகவே வந்து சேருகிறது. இக்கால சிறுவர்களின் மனநிலைகளிற்கேற்ப அந்நாயகர்கள் தோன்றும் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன அல்லது அந்நாயகர்கள் தோன்றும் படைப்புகள் வழியாகத் தமக்கென்ற ஒரு ரசனையை இன்றைய சிறார்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

மிக வேகமாக வளர்ந்து கொண்டேயிருக்கும் காட்சி ஊடகத் துறை மூலம் தமிழ் மொழி அல்லாத ஒரு மொழியில் உலகில் எங்கோ ஒரு பகுதியில் உருவாகும் நாயகன்கூடத் தமிழ்ச் சிறார் களின் மனங்களைத் தமிழ் அல்லாத ஒரு பிறமொழியில் உதாரணமாக ஆங்கிலத்தில். கொள்ளைகொண்டுவிடுகிறான். வாசிப்பு என்பதைத் தமக்குப் பரிச்சயமாக்கிகொள்ள முயலும் இச்சிறார்கள் தம் விருப்பத் திற்குரிய இந்நாயகர்கள் தோன்றும் படைப்புக்களையே வாசிக்கவும் விரும்புவார்கள் என்பது தவிர்க்க இயலாதது. இந்நிலையில் லக்கி லூக் எனப்படும் காமெடிக் கௌபாய் பாத்திரத்தைத் தவிர வேறு எந்த நாயகர்கள் இன்றைய சிறுவர்களைத் தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளில் கவர முடியும் என்பது இங்கு எழும் ஒரு கேள்வியாகும். உலகில் பல மொழி களிலும் வெளியாகிய சிறுவர்களிற்கான படைப்புகளான அஸ்டெரிக்ஸ் (Asterix),  டின்டின் (TINTIN) போன்றவர்களின் சாகசங்கள் இன்றுவரை தமிழில் மொழி பெயர்க்கப்பட வில்லை எனும் அவல நிலையை நாம் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

எம்மை ஆட்டிப்படைத்த நாயகர்களான இரும்புக்கை மாயாவி மற்றும் மந்திரவாதி மாண்ட்ரெக் போன்றவர்களின் சாகசக்கதைகள் இன்றைய சிறார்களை எவ்விதத்திலும் கவர்ந்திடப் போவதில்லை என்பது தெளிவான ஒன்றாகும். முகமூடி வேதாளனின் கதைகள் தமிழில் இப்போது வெளிவரு வதில்லை, அவரின் சாகசங்கள் இன்றைய சிறுவர்களையும் தம் வசம் வசீகரித்திடக்கூடிய சில கூறுகளைத் தம்மில் கொண்டிருக்கின்றன. ஆனால் நாயகர்களிற்கு மேலாகவும் நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. இன்று சிறுவர் களிற்குத் தமிழில் வாசிக்கும் ஆர்வம் எந்தளவில் இருக்கிறது என்பதுதான் அது. காட்சி ஊடக ஆக்கிரமிப்பே வாசிப்பை முடக்குகிறது எனும் சப்பைக்கட்டை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. மேலைநாடுகளில் காட்சி ஊடகங் களைத் தாண்டியும் காமிக்ஸ் வெளியீடுகள் என்றுமில்லாத வகையில் சிறப்பான நுட்பங்களுடன் வெளியாகிவருகின்றன.

காமிக்ஸ் நாயகர்களின் கதைகள் வெள்ளித்திரைக்குத் தழுவப்படுவது முன்னெப்போதுமில்லாத அளவில் இன்று அதிகரித்து இருக்கிறது. காட்சி ஊடகங்கள் காமிக்ஸ§களுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயற்படுவதைத் தான் நான் இதில் காணக்கூடியதாக இருக்கிறது. பொதுவாகவே தமிழில் காமிக்ஸ் வாசிப்பானது அருகி வருவதன் பிரதான காரணங் களாக, 1. தமிழில் காமிக்ஸ் குறித்த போதிய தெளிவின்மையும், 2. தமிழில் காமிக்ஸ் வாசிப்பதை ஊக்கப்படுத்த விரும்பா மனநிலையும், 3. காலத்திற்கேற்ற வகையில் தம்மைப் புதுப்பித் துக் கொள்ளாமல் சீரற்ற கால இடைவெளியில் வெளியாகும் காமிக்ஸ் படைப்புகளும் இருந்து வருகின்றன.

தமிழ் மொழியானது விரும்பியே புறக்கணிக்கப்படும் இன்றைய நாட்களில் என்றும் போல பெரியவர்கள்தான் சிறுவர்களிடம் தமிழில் வாசிப்பதைக் கொண்டு செல்லவும் ஊக்குவிக்கவும் வேண்டும். தமிழில் வாசிப்பதன் சுவை தெரிந்த சிறுவர்கள் பின்பு அதனைத் தாமே பிடிவாதமாகப் பிடித்துக் கொள்வார்கள். ஆனால் தமிழ்ச் சித்திரக்கதைகளில் எவற்றை இன்று சிறுவர்களிற்குப் பெரியவர்கள் அறிமுகப்படுத்தலாம் எனில் மீண்டும் லக்கிலூக், சிக்பில், இஸ்னோகுட் போன்ற சில நாயகர்களே கையிருப்பில் இருக்கிறார்கள். அவர்களும் பெரியவர்களின் கைக்கு இலகுவில் எட்டிவிடாத நிலையில் தான் தமிழ் காமிக்ஸின் இன்றைய விநியோகத்திறன் உள்ளது என்பது எவ்வளவு அவலமான ஒன்று. இரும்புக்கை மாயாவியின் கதைகளிற்கு இன்றைய சிறுவர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு எப்படியான தட்டையான ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை.

jim_370ஆனால் சலிக்காது இன்றும் இரும்புக்கை மாயாவி கதைகள் வெளியாகி வருகின்றன. மிகத்தீவிரமான மாயாவி ரசிகர்களைத் தவிர்த்து தரமற்ற அச்சில் வெளியாகும் அக்காமிக்ஸ் படைப்புக்கள் புதிய வாசகர்களையோ அல்லது புதிய தலைமுறை வாசகர் களையோ தமிழ் காமிக்ஸைப் படிக்கத் தொடர்ந்து தூண்டுமா என்பதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருக்கிறது. சென்ற வருடம் வெளியாகிய தமிழ் காமிக்ஸின் கடைசி இதழான இரும்புக்கை மாயாவியின் களிமண் மனிதர்களின் சந்தாப் பிரதி எனக்குக் கிடைக்கப்பெற்றும் இன்றுவரை அக்கதையைப் படித்திடும் ஆர்வம் எனக்கு ஏற்படவேயில்லை என்பதை இங்கு வேதனையுடன்தான் எழுதவேண்டி உள்ளது. ஆக இன்றைய சிறார்களிற்கு தமிழில் காமிக்ஸ் படிப்பது என்பது தொலைந்து போன ஒன்றாகும் என்பதை யார்தான் மறுத்திட முடியும். புதிய தலைமுறை ஒன்று அதன் தாய்மொழியில் அதற்கு கிடைக்கக்கூடிய அற்புத அனுபவமொன்று இல்லாதவாறே தன் நாட்களை நகர்த்துகிறது என்பதை நினைவில் கொள்ளு வோமாக.

எண்பதுகளின் ஆரம்பத்தில் லயன், திகில் என புதிய பெயர்களில் ப்ராகஷ் பதிப்பகத்தினரிடமிருந்து காமிக்ஸ்கள் வெளிவர ஆரம்பித்தன. அக்காலத்தைத் தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலம் என்கிறார்கள். பல புதிய நாயகர்களை அக்கால கட்டத்தில் தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் கண்டறிந்து கொண் டார்கள். இரும்பு மனிதன் ஆர்ச்சி, குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் போன்ற நாயகர்களை மிகுந்த ஆச்சர்யங்களுடன் படித்த காலமது. இன்று அவர்கள் கதைகளை அதே ஆச்சர்யத் துடன் படிக்க முடியாது என்பதையும் இங்குச் சொல்லியாக வேண்டும். மாறாகத் திகிலில் வெளியான கேப்டன் பிரின்ஸ் கதைகள் கதைக் களத்திலும் சித்திரங்களிலும் வாசகர் மனதில் மிகப்பெரிய மலைப்பை உருவாக்கின. சிலவருடங்கள் முன்பாக க்ரவுண் காமிக்ஸ் எனும் காமிக்ஸ் அறிமுகமான போது அக்காமிக்ஸ் பிரபலமான ஒரு பிரின்ஸ் கதையையே மீண்டும் வெளியிட்டது.

பிரின்ஸ் போன்ற நாயகர்களின் தொடர்ச்சியாக, அதிரடிக் கௌபாய்கள் டெக்ஸ்வில்லர் மற்றும் ப்ளுபெரி போன்றவர்கள் வாசகர்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தார்கள். ரத்தப்படலம் கதை வழியாக அறிமுகமான தன் கடந்த கால நினைவுகளைத் தொலைத்த நாயகனான மக்லேன் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் சிறப்பான ஒரு இடம்பிடித்த நாயகன் ஆவார். இவ்வகையான நாயகர்களின தும் கதைகளினதும் அறிமுகமே இன்று தமிழில் எஞ்சியிருக்கும் காமிக்ஸ் ரசனைக்கும் காதலிற்கும் பிரதான காரணம். எல்லா வயதினர் மத்தியிலும் தமிழில் காமிக்ஸிற்கு இக்கதைகள் வரவேற்பை இன்றும் உருவாக்கிட முடியும். ஆனால் வரவேற்பை உருவாக்க வேண்டியவர்களிற்கு அதில் ஆர்வம் இல்லை என்பதைத்தான் இன்றைய நாளில் என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. நான் எழுதியது தவறு என்பதை அவர்கள் நிரூபிப்பார்களே யெனில் அதில் என்னைவிட அதிகம் யாரும் உவகை கொள்ள முடியாது. மேலும் சிறப்பான கதைகளை வெளியிடுவதாக அறிவித்து இலங்கையில் ஆரம்பிக் கப்பட்ட ஐஸ்பெர்க் காமிக்ஸ் சில இதழ்களின்பின் வெளிவரா மல் போனதும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் துரதிர்ஷ்டமே.

எந்த ஒரு பொருளும் விளம்பரம் வழியாகவே நுகர்வோனைச் சென்றடையும் காலமிது. தொடர்ச்சியாகச் செய்யப்படும் விளம்பரங்கள் ஒரு பொருளைக் குறைந்தது ஒரு தடவையேனும் நுகர்வோனைக் கொள்வனவு செய்யத் தூண்டும். அதுதான் விளம்பரங்களின் நோக்கம். இன்று தமிழில் காமிக்ஸ் வெளி வருகிறது என்பதற்கு எந்த விளம்பரங்களும் பொதுவெளியில் இல்லை எனலாம். மர்ஜென் சட்ராபி எழுதி வரைந்து விடியல் பதிப்பகம் வெளியிட்ட “ஈரான்- குழந்தைப்பருவம்”, மற்றும் “திரும்புதல்” போன்ற பிரபலமான கிராபிக் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெற்றி பெறாமைக்கு அப்பிரதிகள் குறித்த விளம்பரங்கள் இன்மையும் மிக முக்கியமான ஒரு காரணம். இன்று ப்ரகாஷ் குழும வெளியீடுகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களிற்குத் தெரிந்த அளவிலேயே தமிழ் காமிக்ஸிற்கான விளம்பரங்கள் நின்றுவிடுகின்றன. வலைப் பக்கங்கள் வழியாக காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் குறித்த அறிமுகங்களைத் தந்தபடி இருக்கிறார்கள். ஆனால் இந்த விளம்பர யுகத்தில் ஒரு நுகர்வோர் சமூகத்தில் இவை ஏற்படுத் தும் பாதிப்பின் அளவுதான் என்ன. புதிதாக வாசகர்கள் இல்லை என்ற புலம்பல் வந்தபடி தான் இருக்கிறது. இந்த புலம்பலை விடுத்துச் சிறப்பான பலன் தரும் விளம்பர முயற்சி களில் தமிழ் காமிக்ஸ் கள் இறங்காவிடில் அவை என்றும் நுகர்வோரால் அறியப் படாப் பொருளாகவே இருக்கும்.

என் வரிகளில் முன்பே எழுதியுள்ளபடி கடந்த எட்டுமாதங் களாகப் ப்ரகாஷ் குழுமத்திலிருந்து எந்த காமிக்ஸ் வெளியீடு களும் வெளிவரவில்லை. தமிழ் காமிக்ஸ் என்றால் இன்று லயன் அல்லது முத்து என்றே கருதப்படக்கூடிய நிலையில் இந்த எட்டுமாத இடைவெளிக்கு இன்றுவரை எந்தக் காரணமும் சாதாரண வாசகன் ஒருவனை வந்து சேரவில்லை. வாசகர்களிற்கும் காமிக்ஸிற்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டு செல்வதற்கு இவ்வகையான நீண்ட மௌனங்களும் ஒரு காரணமே. வாசகனுடன் இன்று உரையாடுவதற்கு இணை யத் தொழில்நுட்பம் சுலபமான வழிகளைத் தந்திருக்கும் போதும்கூட காமிக்ஸில் வெளியாகும் ஆசிரியர் பக்கம் வரும்வரை வாசகன் காத்திருக்க வேண்டியது என்பதுதான் அவன் விசுவாசத்திற்கு வழங்கப்பட்ட பரிசு. தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் மிகவும் பொறுமை கொண்டவர் கள் என்பது அதன் கடந்தகால அனுபவம் தெளிவாக்கும் ஒரு உண்மை யாகும். ஆனால் இவ்வகையான தொடர்ச்சியான நீண்ட இடைவெளிகளும், இடைவெளிகள் ஏன் என்பது குறித்த உண்மையான விளக்கங்கள் அளிக்கப்படாமையும் தொடர்ந்து அருகிவரும் காமிக்ஸ் வாசகர்கள் எண்ணிக்கை யையும், அதன் வாசிப்பையும் மேலும் மோசமான ஒரு நிலைக்கு மட்டுமே உந்தி செல்லக்கூடும். இது குறித்த அக்கறை இன்று பதிப்பகத் தார்களிடம் இல்லையே என்ற ஒரு உணர்வு வாசகர்கள் மனதில் மேலோங்கி நிற்பது மிகவும் வேதனைக் குரிய ஒன்றாகும்.

ப்ரகாஷ் குழுமத்திலிருந்து இறுதியாக வெளிவந்த காமிக்ஸ் இதழ்களில் (வெள்ளையாய் ஒரு வேதாளம்) தமிழ் காமிக்ஸ் களில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி தோன்றுவதற்குரிய சில அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. தமிழ் காமிக்ஸ் வாசகர் களில் பெரும்பான்மையினர்க்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த அறிவிப்புகள் அவை. புதிய நாயகர்களின் அறிமுகம், இதழின் தரத்திற்கேற்ற விலையேற்றம், முழு வண்ணத்தில் சித்திரங்கள் என இதுவரை நம் மனதில் கொண்டிருந்த ஏக்கங்களை ஓரளவிற்கேனுமாகிலும் சாந்தி செய்யும் வகையில் அந்த அறிவிப்புகள் அமைந்திருந்தன . ஆனால் அந்த அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே இன்றுவரை நிற்கின்றன. தமிழ் காமிக்ஸில் இந்த வருடம் ஜூலை மாதத்தில் உதயமாகியிருக்க வேண்டிய வசந்தம் இன்னமும் வரவேயில்லை. வாசகன் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றங்களை ஒரு ஜென் துறவிபோல் ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டான் என்பதுதான் இதில் கிடைத்த ஒரு நன்மை. வரும் ஆனால் வராது என்பதுதான் ஜென் துறவி களின் இன்றைய பெரும் தத்துவமாக மாறிவிட்டிருக்கிறது.

தமிழில் காமிக்ஸ்களை இன்று வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அத்துறை குறித்து நன்கு பரிச்சயமான நண்பர்கள் எழுதியும் கூறக்கேட்டும் அறிந்திருக்கிறேன். இன்று தமிழ் மொழியில் காமிக்ஸ் வெளியிடல் என்பது ஒரு லாபம் ஈட்டித்தரும் தொழில் அல்ல. மிகவும் கசப்பான உண்மைதான் இது. லாபம் தராத தொழில் ஒன்றை தொடர்ந்து நடத்திட யார்தான் விரும்பிடக்கூடும். வாசகர்களின் எண்ணிக்கை அருகி வருதல், வெளியிடப்படும் இதழ்களிற்கு கிடைத்திடும் மந்தமான வரவேற்பு, சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்லுதல், புதிய கதைகளின் உரிமைகளை வாங்கு வதற்குத் தர வேண்டிய விலை, அச்சுத் தொழிலில் கச்சாப் பொருட்களிற்கு ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் என காரணங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றன. இக்காரணங்களும் இங்கு கூறப்பட்டிராத பிற காரணங்களும் தமிழ் காமிக்ஸ் என்பது இன்னமும் சில வருடங் களில் சந்தையிலிருந்து மறைந்துபோக உதவிடலாம். ஆனால் ஒரு நல்ல நிர்வாகி என்பவன் தடைகளை உடைத்து வெற்றி காண்பவன்தானே ஒழிய லாபம் கொல்லை மரத்தில் காயாக காய்க்கும், நிதானமாகப் பறித்துக் கொள்ளலாம் என்று தூங்குபவன் அல்ல. பெயரில் சிங்கம் இருப்பதைவிட அது செயலில் சிங்கமாக இருப்பதுதான் சிங்கத்திற்கு லட்சணமான ஒன்று.

தகுந்த வினியோகம், விளம்பரம், நவீன சந்தைப்படுத்தும் நுட்பங்கள், வாசகருடனான சுமுகமான உறவு போன்றவற்று டன் குறைந்தது ஒரு ஒரிரு வருடங்களிற்காவது லாபத்தை ஒரு நோக்காகக் கொள்ளாது தமிழில் தரமான காமிக்ஸ்களை யார்தான் வெளியிட முடியும் எனும் கேள்விக்கு இன்று கிடைக்கக்கூடிய பதிலில் இருக்கும் இருள்தான் தமிழ் காமிக்ஸின் எதிர்காலத்தின் வண்ணம். என் தலைமுறையில் என் மொழியில் எனக்குக் கிடைத்த ஒரு சிறப்பான அனுபவ மொன்று இன்று இல்லாமல் ஆகிக்கொண்டிருப்பதை கையாலாகாமையுடன் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப் புத்தகசாலை ஒன்றில் தமிழ்க் காமிக்ஸ்கள் வகித்த அந்த கவுரவமான இடம் என் நினைவுகளில் மட்டுமே இனி இருக்கக்கூடும். வெகு அருகில் உள்ள எதிர்காலம் ஒன்றில் தமிழ் காமிக்ஸ் என்பது காற்றில் கலந்துவிட்ட ஒன்றாகவே அறியப்படக்கூடும் அதுவரையில் தமிழ் காமிக்ஸ் எனும் அற்புதத்தின் சட்டகங்கள் கால மணலின் சீரான விழுகை யுடன் கரைந்து கொண்டே இருக்கின்றன.

Pin It