modi and vijay cartoonரூ.12,698 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.3,923 கோடி: தென் மாநிலங்களை ஓரம்கட்டும் ஒன்றிய அரசு. ஒட்டுமொத்த நிதியில், தமிழ்நாடு இதுவரை 10 சதவீத பங்கைப் பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாட்டின் பங்கு 4.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எதிர்கால நிதி உரிமை, ஒரேயடியாக பாதிக்கும் கீழ் சரிந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

இதுமட்டுமின்றி, ஜிராம்ஜி திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு 8.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் 4.20 சதவீதமும், கேரளாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.38 சதவீதமும், தெலங்கானாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.17 சதவீதமும் குறைப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

ஆனால் பாஜ ஆளக்கூடிய உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9.67 சதவீதத்தில் இருந்து 17.62 சதவீதமும், பீகாருக்கான நிதி 6.10 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமும், மராட்டிய மாநிலத்திற்கு நிதி 3.99 சதவீதத்திலிருந்து 6.44 சதவீதமும், குஜராத்துக்கு அளிக்கப்படும் நிதி 1.49 சதவீதத்தில் இருந்து 3.76 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிலுவைத் தொகையான ரூ.4,034 கோடியை (கூலி மற்றும் பொருட்கள் பங்கு) ஒன்றிய அரசு நீண்ட நாட்களாக தமிழ்நாட்டிற்கு வழங்காமல் இழுத்தடித்தபோது திமுக சார்பில் மாநிலம் தழுவிய பிரமாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கல்வி நிதியை சமக்ர சிக்‌ஷா அபியான் முடக்குவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை தராமல் தாமதிப்பது மற்றும் வரிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு தகுந்த பங்களிக்காமல் புறக்கணிப்பது என பல்வேறு தளங்களில் ஒன்றிய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையைமு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

தமிழக முதல்வர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவாரா அல்லது போராட்டங்களை முன்னெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அமைதியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 வருடத்தில் ரூ.87 ஆயிரம் கோடி நிதி

கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடமிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.87,639 கோடியை பெற்றுள்ளது.

நாட்டின் மொத்த நிதியில் 10 சதவீதம் பங்கினை தமிழ்நாடு மட்டுமே பெற்று வந்த நிலையில், தற்போதைய புதிய சட்ட மாற்றங்கள் இந்த நிதிப் பகிர்வை பாதியாகக் குறைத்துள்ளன. கடந்த காலங்களை பொறுத்தவரை 2023 -24 நிதியாண்டில் ரூ.12,698 கோடி, 2024-25 நிதியாண்டில் ரூ.10,156 கோடி, 2025-26 நிதியாண்டில் ரூ.5,878 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை இராசேந்திரன்