காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட தீர்ப்பு!

ஒரு வழியாக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 7.5.2014 அன்று வழங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே காலந்தாழ்த்தி மார்ச்சு 2006லிருந்து 7.5.2014 வரை ஏறத்தாழ 8 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதுவும் உச்சநீதிமன்ற வழக்கு எண் 386 / 2001 மீது 27.2.1006 அளித்த தீர்ப்பையே உறுதி செய்து வழங்கியிருக்கிறது.

mullai periyar damமுல்லைப் பெரியாறு அணைவலுவாக, பாதுகாப்பாக, எல்லா விசைகளையும் தாங்கும் வண்ணம் (நில நடுக்க விசையினையும் தாங்கும் வகையில்) உள்ளது.

எனவே தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிவரை உயர்த்திக் கொள்ளலாம்.

முல்லைப் பெரியாறு அணைக்கு உரிமை கொண்டாடி அதன் அதிகப்படியான நீர்மட்டம் 136 அடிமட்டுமே என்று வரையறுத்த கேரளா அரசு இயற்றிய கேரளா பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2006 இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற ஆளுகைக்கும் எதிரானதாக இருப்பதால் அது முற்றிலுமாக இரத்து செய்யப்படுகிறது.

இனி வரும் காலங்களில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பைக் கருதி மேற்பார்வையிட மூவர் அடங்கிய குழு / மத்திய நீர்வள ஆணையப் பொறியாளர், தலைவர்; தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பாக நியமிக்கும் ஒவ்வொரு பொறியாளர் அமைக்கப்படுகிறது. இக்குழுவின் தலைமையில் கேரளாவில் அமையும்; ஆனால் இதன் எல்லாச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும்.

ஆனால் தமிழ்நாடு அரசு OSNo. 3 of 2006 (மார்ச் 2006) இல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கே - முல்லைப் பெரியாறு ஒரு பன்மாநில நதி ( (inter state water) 1886 மற்றும் 1970 இரு தரப்பு ஒப்பந்தங் களின் படி, முல்லைப் பெரியாறு தமிழ்நாட்டின் சொத்து; இதன் மீது முழு உரிமைகளும் தமிழ்நாட்டிடமே உள்ளது. கீறி 386 இல் உச்ச நீதிமன்றம் 27.2.2006 தீர்ப்பிற்கு எதிராக அதையே செயலற்ற தாக்கும் வகையில் கேரளா அரசு 18.3.2006 இல் இயற்றிய கேரள பாசனம் & நீர்ப்பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2006 முற்றிலுமாக இந்திய அரசியல் சட்டப்படி செல்லுபடி யாகாது என்று தெரிவித்து அதை ரத்து செய்து, உச்சநீதிமன்ற 27.2.2006 தீர்ப்பையும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் அன்று உச்சநீதிமன்ற தலைநீதிபதியாக இருந்த திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் (கேரளக் காரர்) அவர்கள், வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு 27.2.2006 தீர்ப்பினை நீர்த்துப் போகச் செய்யவும் இதைச் சுற்றிவிட்டு மேலும் காலதாமத்தினை ஏற்படுத்தியும் அரசியல் சட்டத்தின் ஆட்சியையும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களையும் கேலிக் கூத்தாக்கும் வகையில் அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி வைத்தார்.- முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு வலிமை- அய்யத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும். டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் என்ற முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையில் அதிகார மளிக்கப்பட்ட குழு (empower committee -EC) வையும் நியமித்து தீர்ப்பளித்தார்.

இது ஒரு மாபெரும் சூழ்ச்சி மட்டுமல்ல; உச்சநீதிமன்றத்தின் மீது இந்திய அரசியல் சட்டத்தின் மீதும் நடத்தப்பட்ட ஒரு பொய்மை நாடகம்; இதற்கு மத்திய அரசும் மிக மிக உடந்தையாகவே இருந்து செயல்பட்டுள்ளது என்பதை அறியக் கீழே விவரிக்கப்படும் 1991 இன் நிகழ்வு மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளப்படவேண்டும்.

1991 இல் நிகழ்ந்தது என்ன?

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னால்- மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் ஒன்றை நியமித்தது. அது 25.6.1991 இல் இடைக்கால தீர்ப்பாக கர்நாடகம் - காவிரியிலிருந்து தமிழ் நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடக அரசோ இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் Karnataka kaveri basin irrigation protection ordinance 1991 என்ற ஓர் அவசரச் சட்டத்தை 25.7.1991 வெளியிட்டு தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் தர மறுத்தது. காவிரி நதியின் முழுநீரும் தமக்கே சொந்தம். இதில் எந்த மாநில அரசோ, மத்திய அரசோ, பிற நீதிமன்றங்களோ கர்நாடகாவைக் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தது.

அன்று இந்திய குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த ஆர் வெங்கட்ராமன் அவர்கள் தானாகவே முன் வந்து குடியரசுத் தலைவருக்குள்ள உரிமைகள் மற்றும் அதி காரங்களின் அடிப்படையில் 27.7.1991 இல் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று கேள்விகளை எழுப்பினர். கர்நாடகாவின் காவிரி நதித் தொடர்பான 25.7.1991 அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானதா? செல்லுபடியாகத்தக்கதா? என்பது அதில் ஒன்று

கர்நாடகாவின் 25.7.1991 இன் அவசரச் சட்டம் செல்லுபடியா காது; எனவே இரத்து செய்யப்படுகிறது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு இணையான தீர்ப்பாயத்தின் தீர்ப்பை முறியடிக்கும் உள் நோக்கோடு கர்நாடக சட்டம் உள்ளது எனக் கூறியது.

ஆனால் OSNo 3 of 2006 இன் மீது (30.3.2006) இல் கே.ஜி. பால கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி தான் என்ன?

OSNo 3 of 2006 வழக்கிலும் தமிழக அரசு எழுப்பிய கேள்வி வேண்டுகோள் இதுதான் 27.2.2006 உச்சநீதி மன்றத் தீர்ப்பிற்கு மேலாக- மாறாக கேரளாவின் பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2006 (18.3.2006 நாளிட்டது) அரசியல் சட்டத்திற்கு எதிரானது; செல்லுபடியாகாது என்று தெரிவிக்க வேண்டும் என்பதுதான். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே (22.11.1991 முதல் 30.3.2006 உச்சநீதிமன்ற, ஒரு தெளிவான, உறுதியான அதுவும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியிருக்கும் போது அதைத் தமிழ்நாடு அரசு தன்னுடைய வழக்கு எண் 3 of 2006 இல் குறிப்பிட்டிருந்தும் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏதும் அறியாதவர் போல மீண்டும் இதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர் வுக்கு அனுப்பியதிலிருந்து கேரளா வின் சூழ்ச்சி புரியும்.

உச்சநீதி மன்றம் ஒரே மாதத் தில் வழங்க வேண்டியதை 8 ஆண்டு கள் காலதாமதம் -ஆக்கியது. 7.5.2014 இத்தீர்ப்பு வேண்டுமென்றே மிக வும் காலந்தாழ்த்தி வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகும்.

கூட்டு நீர் இயக்கம்/ மேற் பார்வை தேவையில்லை - வேண்டாம்

டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் குழுவும் உச்சநீதிமன்றமும் வேண்டு மென்றே 7.5.2014 நாளைய தீர்ப்பில் தேவையற்ற மூவர் குழு அமைத் தது இதை நம் சார்பு நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன் அவர்கள் 23.4.2012 லேயே மறுத்து எதிர்த்து கைவிடப் பட வேண்டும் என்று குறித்துள்ளார்

1886 ஆம் ஆண்டு மற்றும் 1970 ஆண்டு ஒப்பந்தப்படியாகவும் முல்லைப் பெரியாறு அணை தமிழ் நாட்டிற்கு முழுமையும் சொந்த மானது; நம் கட்டுப்பாட்டில் உள்ளது; பராமரிப்பும் 1895 லிருந்து 2014 இன்று வரை தமிழ்நாடு அரசே செய்து வருகிறது. இதில் கேரளாவிற்கு எந்த உரிமையும் பங்கும் கிடையாது. இதை 27.2.2006 நாளிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பும் 7.5. 2014 நாளிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி யுள்ளன.

தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டிய போர்க்கால நடவடிக்கைகள்

1. Govt of india - Ministry of Home Affairs - Intelligence Bureau - Inspection Report Nov 9-10, 2006 இல் தமிழ்நாடு அரசுக்குத் தெரிவித்துள்ள பரிந்துரைகளின் படி முல்லைப் பெரி யாறு அணையினை நம் செலவில் நாமே தற்காலிகமாக நியமித்துள்ள கேரளாவின் காவல் துறைப் பாதுகாப் பினை விலக்கிக்கொண்டு-தமிழகக் காவல்துறையினரை உடனடியாக நியமிக்க வேண்டும். தேக்கடியிலும் குமுளியிலும் தமிழகத்தின் காவல் படையினை அணைபாதுகாப்புக் கருதி நிலைகொள்ளச் செய்ய வேண்டும். இதற்கு யாருடைய இசைவும் அனுமதி யும் தேவையில்லை.

2.     1886 ஆம் ஆண்டு ஒப்பந் ததில் தமிழக அரசுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள - கேரளாவில் நமக்கு உரிமையாக்கப்பட்டுள்ள 8391 ஏக்கர் பகுதிகளுக்கும் அணைக்கும் தங்கு தடையின்றி போய்வர நம்முடைய சோதனைச் சாவடிகளை நிறுவி நம் உரிமையினை நிலைநாட்டிட வேண் டும்.

3.     முல்லைப் பெரியாறு அணை யின் 13 மதகுகளில் மேலுள்ள அடைப்புக் கதவுகளை இறக்கி உடனடியாக 142 வரை நீரை நிறுத்திட போர்க்கால நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவையே தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு அணை மீது உள்ள சொந்தத்தை- முழு உரிமை யினை நிலை நாட்டவும், 27.2.2006 மற்றும் 7.5.2014 உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்திடவும் உடனடியாக எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் என நாங்கள் கருது கிறோம்.

தமிழக முதலமைச்சர் இத் திசையில் உறுதியான, விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

பின் குறிப்பு :Govt. of India - ministry o Home affairs Intelligence Bureau Inspectiom Report Nov 9 &10, 2006 பற்றிய விளக்கத்தைப் பின் னொரு கட்டுரையில் காண்போம்!

- -    வீரப்பன், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்

Pin It