தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வெளியார்மயமாகி வருகின்றன. வெளிமாநிலத்தவரே அதிகம் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என நாம் குற்றம் சாட்டினால், இங்கு திறன் மிக்கத் தொழிலாளர்கள் கிடைக்காத தாலேயே வெளிமாநிலத்தவரை எடுக்கிறோம் என்கிறார்கள்.

மேற்கண்ட கூற்றைத் திறனாய்வு செய்வதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் தொழிற்சாலைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆவடியில் மட்டும் மத்திய அரசுத் தொழிற்சாலைகளாக, 1. திண் ஊர்தித் தொழிற்சாலை, 2. என்சின் தொழிலகம் ((EFA), 3. படைத்துறை உடைத்துறை தொழிலகம் (OCF), 4. CVRDE, 5. மத்திய சேமப்படை((CRPF), 6. விமானப் படை பயிற்சித் தளம் (AIR FORCE), 7. படைக்கலன் கிடங்கு (ODD), 8. படைத்துறைப் பொறியியல் நிறுவனம் (MES).

மேற்கண்ட தொழிற்சாலைகளில் 1995 வரை திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே ஆட்களை வேலைக்கு எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் திணி ஊர்தித் தொழிற்சாலையில் தொழிற்பழகுநர் பள்ளியில் (HVE Training School), தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களே அதிகம் பயின்றதால், திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதை விட்டு, இந்த தொழிற்பழகுநர் பள்ளியிலிருந்து நேரடியாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

இந்நிலையில் 2007 -ஆம் ஆண்டு வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு “இந்திய அளவிலும் ஆட்களை எடுக்க" ஆவன செய்தது.இந்திய ஒன்றிய அரசு - எதிர் - எம். சபரிநாதன் (slp No: 2145/ 2008) அதாவது Regional Employment வழியாக Group C & D பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வதுடன். (வெளிப்படையான அழைப்பு) Open Call லிலும் ஆட்களை எடுக்கலாம் என்று உறுதி படுத்து கிறது. இதனை தவறாக புரிந்து கொண்ட அரசு எந்திரங்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந் தும் ஆட்களை தேர்வு செய்வதற்கு பதில் இந்திய அளவில் மட்டுமே ஆட்களை தற்போது எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் மூன்றாயிரம் பேர் மேற்கண்ட மத்திய அரசு பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய அளவில் திறந்த அறிவிப்பில் வந்தவர்கள். மருந்துக்கும் திருவள்ளூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

ஒருவர் திறன் மிக்கவரா அல்லது திறன் இல்லாதவரா என்பதை எந்த அடிப்படையில் ஆய்வு செய்ய முடியும்? அவருக்கு நேர்காணல் (அ) எழுத்துத் தேர்வு வைத்தால்தானே அவரை ஆய்வு செய்ய முடியும்?

நேர்காணல் (அ) எழுத்துத் தேர்வுக்கே அழைக்கப்படாதவரை எப்படி திறன் இல்லாதவரென சொல்ல முடியும்? ஆகவே அடிப்படையே இல்லாமல் போகிற போக்கில் இங்கிருக்கிற தொழிலா ளர்களை திறன் இல்லாதவர் என்று சொல்கிறார்கள். சரி இட ஒதுக்கீட்டைப் பற்றி பார்ப்போம்.

‘பாபாசாகேப் டாக்டர் அம் பேத்கர், நூல் தொகுப்பு : தொகுதி 18 பக்கம் எண் : 537 1946-ம் ஆண்டு’ அதன்படி,

“அகில இந்திய அடிப்படையில் அல்லாமல், ஸ்தல (மாநில) அடிப் படையில் அல்லது வட்டார அடிப் படையில் இரயில்வே, தபால், தந்தி, சுங்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றில் கீழ்நிலை பணி களுக்கு ஆட்களை எடுக்கும் போது ஷெட்யூல்டு வகுப்பினருக்கு மொத் தத்தில் 12.5% இடங்களை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு பிரதேசத்தில் (அ) வட்டாரத்தில் மாகாண அரசாங்கம் ஆட்கள் எடுப்பில் கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இதனைச் செய்ய வேண்டும்".

மேற்கண்ட கருத்தே பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு கீழ்கண்ட DOP&T ஆணைகளாக வெளி வந்தது.

1. Employment Exchange (Compulsory Notification of vacancies) Act 1956

2. DOP&T OM G.I Dept of Per & A.R. OM No: 36022/4/76-Estt (SCT) தேதி : 7/8/1976

3. DOP&T OM நெ : 14024/2/96 - Estt (D) தேதி : 18/5/1998

4. DOP&T OM No: 14024/1/2004 Estt (D) தேதி 10/12/2004

அதாவது...

1. அந்தந்த மாநில உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் வழியா கவே ஆட்களை எடுக்க வேண்டும்.

2. அந்த வேலைவாய்ப்பு அலு வலகத்தில் தகுந்த ஆட்கள் இல்லை என்றால், அந்த அலுவல கத்திலிருந்து ஆட்கள் இல்லை என்று Non Availability Certificate (NAC) சான்றிதழை அந்த நிறுவனம் பெறவேண்டும்.

3. அதன்பிறகே நடுவண் வேலை வாய்ப்பு அலுவலகம் வழி யாக ஆட் களை எடுக்க வேண்டும்.

4. அத்துடன் அகில இந்திய வானொலியிலும் அறிவிக்க வேண் டும்.

5. Employment News லும் மற்றும் அந்தந்த பகுதி (மாநில) நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும்.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு “மேற்கண்ட நடைமுறை களை பின்பற்றுவதுடன் இந்திய அளவிலும் ஆட்களை எடுக்க" ஆவன செய்கிறது. அதாவது உள்ளூர் வேலை வாய்ப்பகம் வழியாக Group C & D பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். அதே வேளையில் திறந்த அழைப்பிலும் ஆட்களை எடுக்கலாம் என்று உறுதிபடுத்துகிறது.

நடந்தது என்ன? தேர்வும் பின்னணியும்

கடந்த காலங்களில் நடை பெற்ற பணியாளர் தேர்வுக்கு ஆட்கள் தேவையென திண் ஊர்தி ஆலை சார்பாக திருவள்ளூர் வேலைவாய்ப்பகத்துக்கு 5 கடிதங் கள் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் பதில் அனுப்ப வில்லை என்றும் HVF நிர்வாகம் தகவல் அறியும் சட்டம் வழியாக தகவல் தந்திருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் கேட்டதற்கு ‘HVF யிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை’ என்ற ‘உண்மையை போட்டு உடைத்து விட்டது’.

ஒருவர் கடிதம் அனுப்பியுள்ள தாகவும், சம்பந்தபட்டவர் கடிதம் வரவில்லை என்றும் சொல்கிறார் கள். யார் சொல்வது உண்மை? என அறிய வேலைவாய்ப்பு அலுவலகத் திற்கு, அனுப்பப்பட்ட கடிதங்களில் நகல்களை திண்ஊர்தி நிர்வாகத் திடம் கேட்டோம் கொடுத்தார்கள். அனுப்பப்பட்ட கடிதங்களின் அஞ்சல் அனுப்புகை எண்ணையும் கொடுத்தார்கள் அடுத்து கேட்ட தற்கு பல பல்டிகளை HVF நிர் வாகம் அடித்துள்ளது. அதில் சிலஞ்

1. ஒரு கடிதம் தவறுதலாக அதாவது தவறாக தட்டச்சு செய்து எழுதப்பட்டுள்ளதாம்.

2. அடுத்து இரண்டாவது மற்றும் 3 வது கடிதங்களை சேர்ந்து ஒரே பதிவு அஞ்சலில் அனுப்பியுள் ளார்களாம். அதுவும் 14 நாட்கள் கழித்து அனுப்பியுள்ளதாக சொல் கிறார்கள்.

3. இன்னொரு கடிதத்தை சாதாரண தபாலில் அனுப்பி யுள்ளதாக சொல்கிறார்கள். அப் படியெனில் நமக்கு சில கேள்விகள் மனதில் எழுகின்றன.

4 அல்லது 5 பேர் எழுத்தர் முதல் துணை பொதுமேலாளர் பார்த்து அனுப்பப்படும் கடிதம், நாம் தகவல் அறியும் சட்டவிதி கேள்வி கேட்டவுடன் தட்டச்சு செய்ததில் தவறு என்றும், அந்த கடிதத்தையும் அதற்கான பதிவுத் தாபால் அனுப்புகை எண்ணையும் தற்போது மூடி மறைப்பது ஏன்?

பதிவுத்தபால் அனுப்பியிருந் தால்தானே அனுப்பிய எண் இருக் கும்?

எப்படி 2 கடிதங்களையும் ஒரே பதிவு அஞ்சல் அனுப்புகை எண் ணில் அனுப்ப முடியும்?

சுமார் ரூ43 இலட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட, ஒரு தேர் வில், சம்பந்தபட்ட ஒரு கடிதத்தை மட்டும், சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? அல்லது அந்தவொரு தபாலை மட்டும் பதிவுத்தபாலில் அனுப்ப நிர்வாகத்திடம் பணம் இல்லையா?

அனைத்து தபால்களையும் பதிவு அஞ்சல் அனுப்பும் போது இந்தவொரு தபாலை மட்டும் சாதராண அஞ்சல் அனுப்ப வேண் டிய அவசியம் என்ன?

இப்படி சாதராண தபாலில் அனுப்பப்படும் கடிதங்களை பதி வேட்டில் எழுதுவதில்லை என் றால், அந்த கடிதம் அனுப்பப் பட்டதா அல்லது இல்லையா?

இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுந்தன. இந்த கேள்வி களுக்கு விடை தேடும் விதத்தில், சம்பந்தப்பட்ட தபால்துறையிடம் RTI கேட்டதற்கு தகவல் தராமல் ‘மழுப்பலானா’ பதிலையே தந்துள்ளது தபால் அலுவலகம். ஆக மேற்கண்ட கடிதங்கள், HVF நிர்வாகத்திடம் இருந்து திருவள்ளூர் வேலைவாய்ப்பகத்துக்கு அனுப்பப் பட்டதா? அல்லது இல்லையா? என்றால் கேள்விக்குறியே பதிலாக வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில்தான் ஆட்களை எடுக்க வில்லை. குறைந்தபட்சம் மாநில அளவிலான இடஒதுக்கீட்டையாவது HVF நிர்வாகம் பின்பற்றி யதா?

மாநில அளவிலான இட ஒதுக்கீடு

DOP&T OM No: 36017/1/2004-Estt (Res) தேதி: 05/07/2005 ஆணையின் படி “…total reservation for SCs, STs and OBCs did not exceed the limit of 50% in any case. It has been decided to revise the quantum of reservation for SCs, STs and OBCs incase of direct recruitment to Group ‘C’ and ‘D’ posts normally attracting candidates from a locality or a region , keeping in view the figures of the 2001 census”.

இதன் சாரம்சம், குரூப் ‘C’ & ’D’ பதவி இடங்களுக்கு, இட ஒதுக்கீடு 50% க்கு மிகாமல் இருக்க வேண்டும், (ஷிசி, (SC, ST & OBC) தாழ்த்தப் பட்டோர் , பழங்குடினர் & பிற்படுத்தப் பட்டோர் பதவியிடங்களுக்கு, அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்களையே கவருவதால், அவர்களையே பணியில் அமர்த்த வேண்டும். அதுவும் 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி இருக்க வேண்டும். இதையே OFB கடித எண்: INST/A/REV(SCT) தேதி: ஏப்ரல் 2011யும் உறுதிபடுத்தியுள்ளது. மாநில வாரியான இட ஒதுக்கீடு அட்டவணை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

திண் ஊர்தி ஆலையின் ஸ்டோர் கீப்பர் தேர்வு முறை

மேற்கண்ட DOP&T ஆணை யின்படி குருப் C & D பதவி களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது இடஒதுக்கீடு (SC:ST:OBC ல், அந்தந்த மாநில மக்களையே (Locality/region) வேலைக்கு எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு தமிழ் நாட்டிற்கு 19:1:27 (SC:ST:OBC) எனவும் நாகலாந்துக்கு 0:45:0 எனவும் ஒரிசாவிற்கு 16:22:12 SC:ST:OBC ஆட்களை எடுக்க வேண்டும்.

அதாவது, ஒரிசாவில் எடுக்கப் படும் பணியாளர் தேர்வில் 16+22+ 12=50% இடங்களுக்கு, ஒரிசாவி லிருந்துதான் எடுக்க வேண்டும். மீதமுள்ள 50% இடங்களுக்கு ஒரிசா உட்பட இந்தியா முழுவது ஆட்கள் வரலாம்.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் 19+1+27=47% இடங்களுக்கு, தமிழ் நாட்டிலிருந்துதான் எடுக்க வேண்டும். மீதமுள்ள 53% பொது இடங்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ஆட்கள் வரலாம்.

எனில் அந்தந்த மாநில மக்களுக்கான இடஒதுக்கீடு காப்பாற்ற படுகிறதா?

ஸ்டோர் கீப்பர் தேர்வு செய்யப் பட்ட இறுதி பட்டியல், 12/11/2013 அன்று சென்னை ஆவடி நடுவண் அரசு திண்ணூர்தித் தொழிற் சாலை (HVF) யில் வெளியிடப் பட்டது. அதில் பொதுப்போட்டி 24, 24, OBC - 10, SC – 7 என 41 நபர்களைத் தேர்வு செய்துள்ளது. தமிழக இட ஒதுகீடான 19:1:27 SC:ST:OBC) சதவீத கணக்கின்படி இது சரியா? கணக்கிடுவோம்.

41 19% = 7.79 = 8 (SC), 41X27% = 11.07 = 11 (OBC), 41X1% = 0.41 = 0 (ST)

பழங்குடி ஆனது 0.5க்கும் குறைவாக இருப்பதால் இதை விடுத்து, 8 - SC, 11-OBC,, 22 பொது என தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் 1 SC, 1 OBC குறைவாக தேர்வு செய்து வெளியிட்டுள்ளனர் என்பது புலனாகிறது.

மேலும் 19:1:27 விகிதாச் சாரத்தின்படி 8-SC, 11-OBC, 19 பேரும் தமிழகத்தை சார்ந்தவர்களையே தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த 19 பேரில் 7 பேர் வட மாநிலங்கள் சார்ந்தவர்களை ‘தமிழக SC & OBC இட ஒதுக்கீட்டில் ‘நிர்வாகம் பணியமர்த்தியுள்ளது. ஆகக் குறைவாக எடுத்த 1 SC, 1 OBC மற்றும் வட மாநிலத்த வருக்கு கொடுக்கப்பட்ட 7 பணி யிடங்கள் என மொத்தம் தமிழகத் திற்கு கிடைக்க வேண்டிய 9 பணியி டங்கள் திட்டமிட்டே மறுக்கப் பட்டுள்ளது.

இவ்வளவு நடந்த பின்பும் HVF இல் இருக்கிற SC & ST நல சங்கம் மற்றும் OBC சங்கங்கள், இந்தியாவிலிருந்து எந்த SC & ST மற்றும் OBC தமிழகத்திற்கு வந்தா லும், அவர்கள் SC & ST மற்றும் OBC அந்தந்த மாநிலத்தின் மட்டுமே இட ஒதுக்கீட்டை கோர முடியும்.

வேறு மாநிலத்தில் வேலை வாய்ப்புக்கு செல்லும் போது பயணப்படி. வயது தளர்வு ஆகிய வற்றை மட்டும் கோரிட முடியும் என்ற அடிப்படையை மறந்து அடுத்த மாநிலத்திலிருந்து வந்தா லும் அவர்கள் ஷிசி & ST மற்றும் OBC தான் என்று இந்திய தேசியம் பேசுகிறார்கள்.

அப்படியெனில் தமிழகத்தில் இருக்கிற SC & ST மற்றும் OBC தொழிலாளர்கள், மற்ற மாநிலங் களில் இட ஒதுக்கீட்டில் வர முடி யுமா என்றால், குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் முளைக்கலாம். ஆனால் தமிழகத்தைச் சார்ந்தவர் கள் மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு கோர முடியாது என்பதே உண்மை.

ஏனெனில் மற்ற மாநிலங் களில் தேர்வு எழுதி உயிரோடு திரும்பி வருவதே அரிதாக இருக் கும் போது, இடஒதுக்கீட்டில் நம்ம வர்கள் எப்படி வருவார்கள்? 2004 ஒடிசா மாநிலம் பொலாங்கீரில் மத்திய அரசுப் பணிக்கான எழுத் துத் தேர்வுக்கு சென்று அடி உதை பட்டு உயிர் பிழைத்ததே போதும் என்ற அனுபவத்தை பெற்றவன் என்ற முறையில் எழுதுகிறேன்.

இட ஒதுக்கீட்டைத்தான் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். தமிழகத்தில் நடந்த தேர்வு பணிக்கு தமிழில் தேர்வு எழுதப்பட்டதா?

மாற்றம் தரும் தேர்வு முறையா?

HVF க்கான தொழிற்பழகுநர் தேர்வில் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தியில் கேள்வித்தாள் கொடுக்கப் பட்டது. கடந்த தொழிலாளர் தேர்விலும், 3 மொழிகளில் கேள் வித்தாள் கொடுக்கப்பட்டது. அதே போல் Staff Selection Commission (SSC) theervil தாள் - 2 (Theory) தமிழிலும் எழுத முடியும். அவ்வளவு ஏன் ? IAS, IPS & IOFS க்கான தேர்வான UPSC முதன்மை (Theory) தேர்வையும், தமிழில் எழுத முடியும். அரசாங்கம் அனுமதியளித் திருக்கிறது.

அதாவது HVF மேலாளராக வருபவர் எழுதும் IOFS தேர்வையே அவரவர் தாய்மொழியில் எழுத அரசாங்கம் அனுமதி அளிக்கும் போது, ஏன் Group C ல் வரும் ஸ்டோர் கீப்பர் தேர்வு தமிழில் எழுத, HVF நிர்வாகம் அனுமதி யளிக்கவில்லை. ஏன்?

தமிழில் எழுதினால் தமிழ னை தேர்வு செய்ய வேண்டும். அதற் காக தேர்வு எழுதும் போதே திட்ட மிட்டே வடிகட்டிவிட்டு, தப்பித் தவறி தேர்வாகும் தமிழனை இட ஒதுக்கீட்டில் காலி செய்து வட நாட்டவனை பணியமர்த்துகிறது HVF நிர்வாகம்.

இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் இந்திய தேசியம். இது உடை படாமல் தமிழனுக்கு வாழ்வு இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசுப் பணிகளில் 80% தமிழர் களைப் பணியமர்த்த வேண்டும். அதற்குமுன் ஏற்கெனவே தமிழ் நாட்டுக்கான இடஒதுக்கீ டாக நடுவண் அரசால் அங்கீகரிக்கப் பட்ட 47% (SC:ST: OBC - 19:1:27 = 47) விழுக்காட்டு இடங்களில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையே பணியமர்த்த வேண்டும்.

Pin It